Thursday, November 24, 2005

அமேரிக்காவின் பொய்களும் அதன் பின் புலங்களும் - 2

வியாட்நாமிற்கு படைகளை அனுப்ப அமேரிக்கா சொன்ன காரணம், அமேரிக்க கடற்படைகள் மீது வியாட்நாம் டோர்பிடோ படகுகள் தாக்குதல் நடத்தின என்று. அது முழுக்க முழுக்க பொய் என்பது பிற்காலத்தில் தெரிய வந்தது.

வியாட்நாமை களோபரப் படுத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வியாட்நாமிற்கு சுதந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறோம் என்ற பெயரால் நடத்திய படுகொலைகளுக்கு இன்றுவரை என்ன பரிகாரம் செய்ய்பப்பட்டுள்ளது?

ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு படையெடுத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் சாதாரண மனிதன் கூட தன்னால் இயன்ற அளவு எதிரிகளை எதிர்த்து போரிடத்தான் செய்வான். தனது நாட்டின் மீது படையெடுத்த எதிரிகளை எதிர்க்க அந்நாட்டின் புழுக்கள்கூட போராடத்தான் செய்யும். அதுதான் அந்நாட்டின் தன்மானம். அது எந்த நாடாக இருந்தாலும் சரி. ஒட்டு மொத்தமாக தீவிரவாதம் என்ற பட்டத்தை எல்லோருக்கும் சுமத்தி சம்மட்டியால் அடித்து ஒழித்துவிடலாம் என்று நினைக்கும் பயித்தியக்காரணத்தைத்தான் இப்போது அமேரிக்க செய்துவருகிறது. அதை மற்ற நாடுகளும் கைகட்டி பார்த்து வருகின்றன. ஐ.நா.வில் 1978ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி, சுதந்திரத்திற்காக போராடும் எந்த நாடும், அதன் மக்களும் தனது சுதந்திரத்திற்காக எல்லா வழிகளிலும் போராடலாம், அது ஆயுதப் போராடமாக இருந்தாலும் சரி. போராடும் உரிமை அந்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. அவர்களை அரசு தீவிரவாதத்தின் மூலம் மட்டும் பணிய வைக்கவேண்டும் என்று நினைப்பது போராளிகளை இன்னும் அதிகமாக்குமே தவிர்த்து போராட்டத்திற்கு முடிவு கிடைக்காது.

ஈராக்கியப் போராளிகளை தீவிரவாதிகள் என்ற பெயரால் ஈராக்கில் ஒயிட் பாஸ்பரஸ் மற்றும் நாப்பளம் எனப்படும் கெமிக்கல் ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றன அமேரிக்கப் படைகள். இந்த உலகமும் இதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பெயர்தான் மனிதாபிமானம், சுதந்திரம், மனித உரிமைகள்!

நல்ல வேளையாக இந்தியாவிற்கு 1947 லேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. இல்லையென்றால் இந்தியாவின் மீதும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடத்தி, நம் சுதந்திர போராளிகள் எல்லோரையும் தீவிரவாதிகள் என்று தூற்றியிருப்பார்கள்.

சென்ற வாரம் அமேரிக்கப் படைத்தலைவர், ஈராக்கில் ஏறக்குறைய 3000 போராளிகள் இருப்பார்கள் என்று கருத்துத் தெரிவித்தார். (உண்மை நிலவரப்படி, கிட்டத்தட்ட 30,000 - 50,000 இருக்கும் என கணிக்கப்படுகிறது). இவர்கள் ஈராக்கிற்கு எதற்காக வந்தார்கள்? போராளிகளை உருவாக்கவா? அல்லது சதாம் மறைத்து வைத்திருக்கும் WMD கண்டுபிடிப்பதற்கா?

மதிப்பிற்குரிய டொனால்டு ரம்ஸ்பீல்டு என்ன சொன்னார்? ஈராக்கில் அமேரிக்கப் படைகள் நுழையும் போது ஈராக்கிய மக்கள் கைகளில் மலர்க் கொத்துகளுடன் வரவேற்பார்கள் என்று கதை அளந்தார். நடந்தது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். பிறகு சாதாமின் மகன்கள் இருவரும்தான் அமேரிக்கப் படைகளுக்கு எதிராக தீவிரவாத செயல்கள் செய்கின்றனர், அவர்களை ஒழித்தால் எல்லாம் முடிந்துவிடும் என்றார்கள். அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அத்தோடு விடவில்லை. சிதைந்த அவர்களின் முகங்களை Wax மூலம் திரும்பவும் உருவாக்கி ஈராக்கியர்களுக்கு இறந்தது அவர்கள்தான் என்று உறுதிப் படுத்தினார்கள். அதன் மூலமாவது சதாம் திரும்பி பதவிக்கு வந்தாலும் வந்துவிடுவார் என்று பயந்துக் கொண்டிருக்கும் பொது மக்கள் சமாதானமடைந்து அமேரிக்கப் படைகளுக்கு பூக்கொத்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள்!

ஆனால் சதாமின் மகன்கள் கொல்லப்பட்ட விதமும் இறந்த அவர்களின் உடல்களை அவமானப்படுத்திய விதமும் ஈராக்கில் சும்ம இருந்த ஒரு பகுதியினரை போராளிகளாக மாற தூண்டியது.

அதற்கு பின், சதாமை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தால் பதவியிழந்த பாத் பார்ட்டியினரின் தீவிரவாதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று பாத் பார்ட்டியினரை ஈராக்கின் புதிய அரசில் சேர்த்துக் கொண்டதோடு அல்லாமல் சதாமையும் எலிக் குகைகளிலிருந்து தூசுத் தட்டி எடுத்து வந்தனர். போராட்டம் முற்று பெற்றதா? பூக்கொத்து கொடுக்கப் பட்டதா? அமேரிக்க அதிபரும் திடீரென ஒரு இரவில் பாக்தாத் விமான நிலையத்திற்கு விஜயம் செய்து பூக்கொத்து கிடைக்கிறதா என்று பார்த்தார்!

ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன் 'ஜர்க்காவி' என்று இல்லாத ஒரு புதியப் படைப்பை உருவாக்கி நடக்கின்ற அட்டூழியங்களை எல்லாம் அவன் தலையில் சுமத்தி அவனைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருப்பதாக உலகிற்கு அறிமுகப்படுத்தி ஈராக்கில் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இப்படி நாளொன்றிற்கு ஒரு புதுக் காரணத்தைச் சொல்லி சாதாரண மனிதர்களை கொன்று குவித்து ஈராக்கில் எதிரிகளைத்தான் உருவாக்கி வருகிறார்களே தவிர்த்து சரியான தீர்வை நோக்கி ஈராக்கின் தற்போதைய அரசாங்கமோ அல்லது அமேரிக்க நிர்வாகமோ ஒன்றும் செய்வதாக தெரியவில்லை.

தற்போது ஈராக்கின் உள்துறைக்கு சொந்தமான ஒரு பாதாளச் சிறைச்சாலை கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்து 170க்கு மேற்பட்ட ஈராக்கின் அப்பாவி மக்களை வெளிக் கொணர்ந்துள்ளார்கள். இவர்கள் எல்லோரும் எலும்பும் தோலுமாக எப்போது மரணம் வரும் என்று காத்திருக்கும் நடைப் பிணங்களாக காட்சி அளிக்க.. ஈராக்கின் அரசாங்கம் எண்ணெய் கிணறுகளுக்குள் தலையைக் கவிழ்த்துக் கொண்டு எங்களுக்குத் தெரியாது.. நாங்கள் விசாரணைக் கமிஷன் நியமிக்கப் போகிறோம் என்று சொல்லி வருகின்றனர். இந்த 170 பேர்களும் ஈராக்கின் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.

ஈராக்கின் அபு கரீப் சிறைச் சம்பவமும் அங்கிருந்து வெளியான படங்களும் உலகமே வெட்கிக் குனிந்த அமேரிக்கா ஜனநாயகத்தின் சிறப்புகள்! கனாடவில் அடைக்கலம் தேடி ஓடிய முன்னால் அமேரிக்க வீரர் (Ex marine staff Sgt. Jimmy Massey) கனடாவிற்கு அளித்த சத்தியப் பிரமானத்தில் அவரும் அவருடன் இருந்த மற்ற வீரர்களும் சேர்ந்து முப்பது ஈரக்கிய அப்பாவிகளை, எந்தவித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணிகளை, பெண்களை, குழந்தைகளை, இளைஞர்களை சுட்டுக் கொன்றதாக கூறியிருக்கிறார். We fired at a cycle rate of 500 bullets per vehicle. (Robert Fisk, The Independent, AN 27/12/2004).

அமேரிக்கப் படை 82nd Airborne சேர்ந்த ஜெர்மி ஹிண்ஜ்மென் தனது வாக்குமூலத்தில் 'we were told to consider all Arabs as potential terrorists... to foster an attitude of hatred that gets your blood boiling' என்று கூறியிருக்கிறார். (Robert Fisk, The Independent, AN 27/12/2004).

அக்டோபர் 16 அன்று ஈராக்கின் போராளிகள் ஐந்து அமேரிக்க வீரர்களை வெடிகுண்டு தாக்கிக் கொன்றார்கள். அதற்கு பழி வாங்கும் முகமாக, அமேரிக்க படைகள் விமானத்தாக்குதல் நடத்தியது. போராளிகள் என்ன கூட்டம் கூட்டமாக நகரத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்களா, நினைத்த மாத்திரத்தில் அவர்கள் மீது வானிலிருந்து குண்டுமழை பொழிந்து கொல்வதற்கு. விமானத்தாக்குதல்களில் அதிகம் பாதிக்க்பபடுவது அப்பாவி மக்கள்தான் என்று புரிந்துக் கொள்வதற்கு சாதாரண அறிவு போதும், ஆனால் அமேரிக்காவின் முற்றுகையாளர்களுக்கு அத்தனை பயம் போராளிகளை நேரில் சென்று தேடுவதற்கு. அமேரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் இறந்தவர்கள் மொத்தம் 70 பேர், அவர்கள் அனைவரும் போராளிகள் என்று அமேரிக்க அரசாங்கம் அறிவித்தது. இது மற்றுமோர் பொய். இதுவரை அமேரிக்க விமானப்படைத் தாக்குதலில் இறந்தவர்களில் 70 சதவிகிதம் அப்பாவி மக்களே!

இறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் (அமேரிக்காவை பொறுத்தவரை அவர்கல் போராளிகள்) நான்கு வயதிலிருந்து 8 வயது வரை உள்ள பிள்ளைகளில் மூன்று பேர். ஆறு வயது முஹம்மது சாலிஹ் அலி முகம் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு மற்ற உடல் பகுதிகளெல்லாம் பிளாஸ்டிக் பைகளில் போட்டு அடக்கம் செய்யப்பட்ட குழந்தை. நான்கு வயது சாத் அஹமது ஃபவாத் மற்றும் அவனது மூத்த சகோதரி எட்டு வயதான ஹைஃபா. இவர்கள்தான் போரளிகளா? (Haifa Zangana, The Guardian, AN Nov 20, 2005. (Haifa Zangana is an Iraqi born novelist and former prisoner of Saddam Hussain) இவர்களைத்தான் பொதுமக்கள் கிடையாது என்று அறிக்கை விடுகிறது அமேரிக்கப் படைகள், ஜனநாயகத்தின் காவலர்கள்!

என்ன அருமையான அமேரிக்க சுதந்திர வாழ்க்கை! இதைப் பார்த்துதான் முஸ்லீம்களுக்கு பொறாமையாம்! அதனால்தான் அவர்கள் 9/11 தாக்குதல் நடத்தினார்களாம்! இந்த அமேரிக்காவையும் அது செய்வதையும் துதி பாடும் அடிமைக் கூட்டங்கள் அங்கங்கு முஸ்லீம்களுக்கு அறிவுரைகள் வேறு சொல்லி வருகிறது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த சுதந்திரக் காவலர்கள் உலகிற்கு சுதந்திரத்தைக் கற்றுத்தரவுள்ளார்கள்.

ஏற்கனவே அனுபவித்த கொடுமையான வாழ்க்கையிலிருந்து எப்போது தப்பிப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்த ஈராக்கியர்களுக்கு அமேரிக்கா கற்றுக் கொடுத்த தீவிரவாதக் கலாச்சாரம் அமேரிக்க சாதித்த மிகப்பெரும் வெற்றியாகும். சதாம் என்ன காரணம் சொல்லி தனது மக்களை கொடுமைப் படுத்தினானோ அதே காரணங்களைச் சொல்லித்தான் அமேரிக்கா அப்பாவி ஈராக்கியர்களை ஒழித்துக் கட்டுகிறது. சதாம் செய்ததை அமேரிக்கா தட்டிக் கேட்ட போது பெரும்பாலோருக்கு அமேரிக்காவின் சுதந்திரக் கருத்துக்கள் மீது அபரிதமான காதல். இப்போது எங்கே போனார்கள் அந்த அடிமைக் கூட்டங்கள். ஈராக்கியர்கள் சதாமிடம் அனுபவித்ததைவிட அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். முடிவு என்ன என்று தெரியாமல் ஈராக் சம்பந்தப்பட்ட எல்லோரும் குழப்பிப் போய் உள்ளனர்.

அமேரிக்கா அரசாங்கம் ஒரு அதிகாலை திடீரென தனது படைகளை விலக்கிக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மூச்சுவிடக் கூட முடியாத சூழல் என்று வரும்போது தலை தப்பித்தால் போதும், ஈராக்கிற்கு என்ன நிலை ஏற்பட்டால் எனக்கென்ன என்று ஒரு நாள் ஓடத்தான் போகிறது. ஐ.நாவும் தனது நிலை என்ன என்று தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. அப்படியே ஐ.நா ஏதாவது செய்வதென்றாலும் அதற்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் செய்வதற்கு ஆசிய நாடுகளைத்தான் நம்பியாக வேண்டும். முஸ்லீம் நாடுகள் கூட ஈராக்கில் கால் வைக்க தயங்கின்றன.

இதுதான் உலகை வழிகாட்டி அழைத்துச் செல்லும் சூப்பர் பவர் அமேரிக்காவின் கேடு கெட்ட நிலை. இதற்கு பின்னால் ஒரு கூட்டம் டாலருக்கு அடிமைப்பட்டு, அதனுடைய ராணுவத்தின் வீரதீர பராக்கிரமங்களுக்கு பயந்து தலையாட்டி பொம்மைகளாக பின்னால் போய்க் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டதில் இந்தியாவையும் எப்படிப்பட்டாவது சேர்த்துவிட வேண்டும் அமேரிக்காவும் நினைத்துக் கொண்டிருக்கிறது.

(தொடரும்)

Thursday, November 17, 2005

அமேரிக்காவின் பொய்களும் அதன் பின் புலங்களும்

உலக நாடுகளில் வெறும் பொய்களைச் சொல்லி பிழைப்பு நடத்தக் கூடிய அரசாங்கங்களில் முதலிடம் நிச்சயமாக அமேரிக்க அரசிற்குத்தான் தரவேண்டும். காலம் காலமாக வெறும் வார்த்தை அலங்காரங்களை மட்டும் வைத்து தனது சொந்த நாட்டு மக்களை ஏமாற்றி, ஊடகங்களின் வசதியுடன் தனது மக்களை கருத்து சுதந்திரம் என்ற பெயரால் அவர்களது எதிர்பார்ப்புகள் மற்றும் சிந்தனைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆளும் வர்க்கம் நிறைந்த நாடுதான் இந்த அமேரிக்கா என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. அது உள்நாட்டு விவாகாரங்களோடு நின்று போகும்போது அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை பாதிக்கப் போவதில்லை. ஆனால் அதே பாணியை தற்போது உலக நாடுகளின் மீது, ஐ.நா. உலக வங்கி, IMF, UNICEFF, UHO மற்றும் ராணுவ தளவாடங்களின் வசதியோடு செயல்படுத்த முனையும்போது பல்லாயிரக்கணக்கான உயிர் மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்துகிறது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரால் என்ன வேண்டுமானலும் சொல்லலாம், யாரை வேண்டுமானலும் விமர்சிக்கலாம், மிரட்டலாம் அல்லது அழிக்கலாம். ஆனால் அந்தக் கருத்து சுதந்திரம் அமேரிக்கவை எதிர்ப்பவர்களுக்கு இருக்கக் கூடாது என்பதுதான் அமேரிக்காவின் கருத்து சுதந்திரத்திற்கான சரியான விளக்கம் என்பதை அமேரிக்காவிற்கு வால் பிடிக்கும் கூட்டத்திற்கு தெரியுமோ என்னவோ?

அப்படி ஓர் உலக அழிவை அதாவது பொருளாதார சீரழிவை, பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்புமின்மை போன்ற அதிரடி நடவடிக்கைகளால் அமேரிக்கா நடத்திவரும் பொய் நாடகங்கள் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஈராக் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்களும் அதற்கான காரணங்களும் மிகத் தீவரமாக அலச வேண்டிய அவசர சூழலில் உலகம் இருந்து வருகிறது. அமேரிக்கா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நாடுகளாக உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் இருக்கும் பட்சத்தில் அமேரிக்கா செய்யக் கூடிய தவறுகளை அவர்களுக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்புகள் குறைந்து போகின்றன.

9/11 ஏன் உருவானது என்ற கேள்விக்கு அமேரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ் பதிலளிக்கும்போது 'நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுதந்திர வாழ்க்கை அவர்களுக்கு பிடிக்கவில்லை. நமது உயர்வு மிக்க சமுதாய பண்புகளும், வாழ்க்கை முறைகளும் அவர்களுக்கு எரிச்சலையும் பொறாமையையும் அளிக்கிறது, அதனால்தான் நம்மீது இப்படி ஓர் மோசமான தீவிரவாத செயலை கட்டவிழ்த்துள்ளார்கள்' என்று சொன்னார்.

அவருடைய பதிலில் அவர் இரண்டு விஷயங்களை கோட்டிட்டு காட்டியுள்ளார். ஒன்று அமேரிக்கர்கள் அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுதந்திர வாழ்க்கை இன்னொன்று வாழ்க்கை முறை. இந்த இரண்டும் வேறெந்த வாழ்க்கை முறைகளைவிட சிறப்பானது என்று மார்தட்டும் அதிபர் புஷ், இந்த இரண்டையும் ஈராக்கிற்கு கற்றுத்தர வேண்டுமென்று முடிவெடுத்தார். அதோடு நில்லாமல் இந்த இரண்டிற்கும் 'ஜனநாயகம்' என்று ஓர் அடைமொழிக் கொடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்றுத் தீர்ப்பது என்று ஆசைப்பட்டார். (விற்பது என்ற வார்த்தை நான் பயன்படுத்தியக் காரணம் இது பண்டமாற்று முறை என்பதால். ஜனநாயக பயமுறுத்தலால் மத்திய கிழக்கு நாடுகள் அமேரிக்காவுடன் உள்ளமைப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு அமேரிக்கவின், குறிப்பாக புஷ் மற்றும் ஷெனை பரிவாரங்களின் ஆயில் கம்பேனிகளுக்கு நீண்ட கால வியாபார உரிமைகள் வழங்க இருக்கின்றன).

அவரது ஆசையில் அவரைப் பொறுத்தவரை தவறில்லை. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணங்கள் ஈராக்கைப் பொறுத்தவரை தற்போது அவராலேயே மறந்து போனதோ என்று சந்தேகமளிக்கும் அளவிற்கு ஈராக்கின் நிகழ்வுகள் மிக மோசமான பாதையை நோக்கிப் போய் கொண்டிருக்கின்றன.

சதாம் ஹுசைனை மூட்டைக் கட்ட அவர்கள் சொன்ன இரண்டு முக்கியக் காரணங்கள்:

அ) சதாம் ஹுசைனிடம் WMD இருக்கிறது. அதனால் ஈராக்கியர்களை ஈவு இரக்கிமின்றி கொன்று தள்ளுவார். அவர் அவ்வாறு 1988ல் குர்துகளுக்கு எதிராக ஹலப்ஜாவில் பயன்படுத்தினார். தற்போது ஐரோப்பிய அமேரிக்க நாடுகள் மீது அவர் பயன்படுத்தலாம். அதற்கு அவரிடம் ஆயுதங்கள் உள்ளன. லண்டனை 45 நிமிடத்திர்க்குள் சதாம் ஹுசைனால் தாக்க முடியும்.

ஆ) ஈராக்கியர்களை சதாமிடமிருந்து விடுவிக்க வேண்டும்.

இதில் முதல் காரணமான WMD கடந்த இரண்டு வருடமாகத் தேடியும் கிடைக்காமல் போயிற்று என்பது உலகமே அறிந்த விஷயம். அது பொய்யான தகவல் என்பதும், இந்த பொய்த்தகவல் எப்படி அமேரிக்க அதிபரிடம் சென்றது என்று அமேரிக்கவின் புலனாய்வுத் துறையை சந்திக்கிழுத்து அதன் தலைவரை வெளியேற்றி முடித்த கையோடு அமேரிக்காவும் மற்ற நாடுகளும் முழுவதுமாக அடுத்த விஷயத்திற்கு சென்று விட்டார்கள். காரணம் பாதிக்கப்பட்டதும், பாதிக்கப்படுவது ஈராக்கின் அப்பாவி மக்கள்தானே தவிர்த்து அமேரிக்க அல்லவே.

அதுமட்டுமா? ஈராக்கின் பெட்ரோல் முழுக்க முழுக்க அமேரிக்காவின் கைகளுக்கு வந்துவிட்டது, இனிமேல் இதில் இழந்துபோன அமேரிக்க உயிர்களாகட்டும் அல்லது ஈராக்கிய உயிர்களாகட்டும், எல்லாம் யார் கேட்கப் போகின்றார்கள்?

ஈராக்கில் WMD இல்லாமல் போனால் என்ன! என்னிடம் இருக்கிறது என்று அமேரிக்கா பயன்படுத்திய கெமிக்கல் ஆயுதங்களைப் பற்றி உலக நாடுகள் ஏன் வாய் மூடிக்கிடக்கின்றன. இளைத்தவன் செய்தால் அடி உதை. வசதி மிக்கவன் செய்தால் கண்டு கொள்வதில்லை!

அமேரிக்கப் படைகள் வெள்ளை பாஸ்பரஸ் எனும் கெமிக்கலை பல்லூஜாவில் பயன்படுத்தி அப்பாவி ஈராக்கிகளை கொன்று குவித்தது என்று இத்தாலியின் தொலைக் காட்சியில் சென்ற வாரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதலில் அப்படியில்லை என்று மறுத்து பொய் சொன்ன அமேரிக்கா, பிறகு மெதுவாக ஆமாம், நாங்கள் அதை ஈராக்கின் போராளிகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தினோம் என்று தனது நிலையை மாற்றி ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது.
பெண்களும், பிள்ளைகளும் வெள்ளை பாஸ்பரஸ் தாக்கப்பட்டு உடல்கள் கரைந்து தெரு முழுதும் கிடந்ததை நாங்கள் பார்த்தோம் என்று பல்லூஜாவில் தாக்குதலில் ஈடுபட்ட அமேரிக்க வீரர் ஒருவரின் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது (Check Information Clearing House website)
ஆனால் இந்த WMD அமேரிக்கப் படைகள் ஈராக்கிற்கு சென்றவுடனேயே பயன்படுத்தப்பட்டது என்று அமேரிக்க படை வெளியிடும் பத்திரிக்கையிலேயே வெளிவந்துள்ளது. (March Edition of Field Artillery, officers from 2nd Infantry's fire support element boast about their role in the attach on Fallujah in November last year. "White Phosphorous. WP proved to be an effective and versatile munition. We used it for screening missions at two breeches and, later in the fight, as a potent psychological weapon against the insurgents in trench lines and spider holes when we could not get effects on them with HE [high explosive]. We fired 'shake and bake' missions at the insurgents, using WP to flush them out and HE to take them out.") (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)

The second, in California's North County Times, was by a reporter embedded with the marines in the April 2004 siege of Falluja. "'Gun up!' Millikin yelled ... grabbing a white phosphorus round from a nearby ammo can and holding it over the tube. 'Fire!' Bogert yelled, as Millikin dropped it. The boom kicked dust around the pit as they ran through the drill again and again, sending a mixture of burning white phosphorus and high explosives they call 'shake'n'bake' into... buildings where insurgents have been spotted all week." (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)

'மூச்சுவிடக்கூடிய எந்த உயிரினமாக இருந்தாலும் அவை எல்லாவையும் ஒழித்துக் கட்டுங்கள்' இதுதான் பல்லூஜாவில் அமேரிக்க வீரர்களுக்கு இடப்பட்ட கட்டளை.

There were widespread reports that in March 2003 US marines had dropped incendiary bombs around the bridges over the Tigris and the Saddam Canal on the way to Baghdad. The commander of Marine Air Group 11 admitted that "We napalmed both those approaches". Embedded journalists reported that napalm was dropped at Safwan Hill on the border with Kuwait. In August 2003 the Pentagon confirmed that the marines had dropped "mark 77 firebombs". Though the substance these contained was not napalm, its function, the Pentagon's information sheet said, was "remarkably similar". While napalm is made from petrol and polystyrene, the gel in the mark 77 is made from kerosene and polystyrene. I doubt it makes much difference to the people it lands on. (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)

சதாம் ஆட்சியில் இருந்த காலத்தில் செய்தது இதைத்தானே! சதாம் செய்ததற்கும் தற்போது அமேரிக்க செய்வதற்கும் என்ன வித்தியாசம்! அமேரிக்க படைகளை எதிர்க்கும் ஈராக்கிய போராளிகளை ஒழித்துக் கட்ட அமேரிக்கப் படைகள் பயன்படுத்தும் WMDயைத்தான் அன்றைக்கு சதாம் தனது எதிரிகளை ஒழித்துக் கட்டப் பயன்படுத்தினார். சதாம் ஹுசைனைப் பிடித்து சிறையில் அடைத்தாகிவிட்டது. ஈராக்கில் நடைபெறும் மேலே சொன்ன அக்கிரமங்களுக்கு அமேரிக்க அதிபர் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவாரா?

ஈராக்கில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று நாம் இருக்க முடியாது. இதே நிலை நாளை வேறு யாருக்கு வேண்டுமானலும் நிகழலாம். அமேரிக்காவை பொறுத்தவரை அவர்களுக்கு யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை அல்லது நிரந்தர எதிரிகளும் இல்லை. இன்றைய நண்பர்கள் நாளைய எதிரிகளாக பாவிக்கப்படுவார்கள். நாளை இந்த நிலை நமக்கும் நடக்கலாம்!

ஈராக்கில் அமேரிக்க படைகளின் வரம்பு மீறல்களையும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் நிலைகளையும் பின்வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

(தொடரும்)

Monday, November 07, 2005

வோல்கர் ரிப்போர்ட் - இந்திய அரசியல்

இந்திய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், தேவைப்பட்டால் தனது சொந்த நாட்டைக் கூட அடமானம் வைக்கத் தயங்க மட்டார்கள்.

சமீபத்த்தில் உலகில் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் வோல்கர் ரிப்போர்ட்டில் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கின் பெயர் அடிபட்டவுடன் அவரை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் குய்யோ முய்யோ என்று சத்தம் போட்டு அவரை பதவியிறக்கவும் செய்துவிட்டனர். முக்கியமாக பா.ஜா.கா இதை இந்திய நாட்டின் ஒரு மானப் பிரச்சனையாகக் கருதி அங்கங்கே அறிக்கைகள் வேறு. அப்படி என்னய்யா இந்த வோல்கர் ரிப்போர்ட்?

பால் வோல்கர்

2004 களில் ஐ.நா சபையின் ஆயில் பார் புட் புரோகிராமில் ஊழல் நடந்ததை கண்டுபிடிக்க அமேரிக்காவின் பெடரல் ரிசர்வின் ஓய்வு பெற்ற முன்னால் அதிகாரி பால் வோல்கரை கொண்டு ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. வழக்கம் போல் ஐ.நா.வின் பொருளாதார மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட விவாகாரங்களை கண்டுபிடிக்கவோ அல்லது விசாரிக்கவோ வேண்டுமென்றால் மேலை நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்கும் ஓரவஞ்சகப்படி அவர் நியமிக்கப்பட்டார்.

இவரது விசாரனை சரியில்லை என்று இவருக்குக் கீழ் வேலை செய்த அதே அமேரிக்காவின் ராபர் பேட்ரோன், மிராண்ட டன்கன் என்ற இருவரும் ராஜினாமா செய்து விலகிக் கொண்டனர்.

அமேரிக்காவின் பொய்கள்

ஏற்கனவே அமேரிக்கா ஈராக்கின் யுத்தத்திற்கு சொன்ன காரணங்களில் கிட்டத்தட்ட எல்லாமே பொய்களும், புரட்டல்களும் என்று நிரூபிக்கப் பட்டதால் இந்த வோல்கரின் ரிப்போர்ட்டின் மேல் நமக்கு பலத்த சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது. ஈராக்கிடம் WMD இருக்கிறது என்று கதை சொன்னார்கள்.. அது பொய்யாகிப் போனது. ஈராக்கிற்கும் அல் காயிதாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்றார்கள்.. அதுவும் பொய் என்று தெரிய வந்தது. இப்படி பொய்களை காரணமாகக் கொண்டு பல அப்பாவி உயிர்களை கொன்று குவித்த அமேரிக்காவின் இந்த புது வோல்கர் ரிப்போர்ட்டை நமது இந்திய அரசியல்வாதிகள் தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதை நினைக்கும்போது இவர்களில் எவரும் நாட்டை பெரிதாக மதிக்கவில்லை.. மாறாக தனது அரசியல் வாழ்க்கையை மட்டுமே பெரிதாக மதிக்கிறார்கள்.

அமேரிக்கா சொல்வதேல்லாம் உண்மையா?

அமேரிக்கா சொல்வது எல்லாம் உண்மையாக இருக்காது என்று ப.ஜா.காவிற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் எப்போதும் தேசப்பற்றைப் பற்றி வாய் கிழிய பேசும் இந்த அரசியல் கூத்தாடிகள் மூன்றாவது நாட்டைச் சேர்ந்த ஒரு ரிப்போர்ட்டில் இந்திய அரசியல்வாதியின் பெயர் வந்தால் அதை நன்றாக விசாரித்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை பதவி விலகச் சொல்வதுதான் நியாயமே தவிர்த்து தாம் தூம் என்று குதித்து நம்மிடையே ஒற்றுமையில்லை... நாம் எல்லோரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை... எனது நாட்டின் ஒற்றுமையோ அல்லது ஒருமைப்பாடோ முக்கியமில்லை... என்று காட்டியிருக்கிறார்கள்.

சந்தேகத்திகத்திற்குட்பட்ட வோல்கர் ரிப்போர்ட்

வோல்கர் கமிட்டியின் புலனாய்வு சந்தேகத்திகத்திற்கிடமானது. புலனாய்வு எந்த விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டது என்று தெளிவாக இல்லை. வோல்கர் கமிட்டி ஆய்வு செய்த ஆவனங்கள் ஈராக்கின் பெட்ரோல் அமைச்சரவையிலிருந்து, அமேரிக்க ராணுவத்தின் கைகளுக்குச் சென்று பிறகு தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தின் மூலமாக வோல்கர் கமிட்டிக்கு சென்றது. இப்படி கைமாறிய ஆவனங்களில் கையாடல்கள் நடந்திருக்க முடியாது என்று எவ்வாறு சொல்ல முடியும்? அதிலும் இந்த ஆவனங்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டதாக இருக்கிறது.

நட்வர் சிங் குற்றவாளியாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதைப் பொறுத்திருந்து இந்தியாவின் கோர்ட்டுகள் மூலமாக புலனாய்வு செய்து உண்மையை தெரிந்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் மண்ணை அள்ளி வீசிக் கொண்டால் நாட்டின் தன்மானம் காப்பாற்றப்படும். நாளை பிரன்சிலிருந்து வரும் ஒரு புலனாய்வு அறிக்கையில் இந்தியாவின் ஜனாதிபதி குற்றம் செய்தவர் என்று குறிப்பிட்டால் நாம் எல்லோரும் அவரை பதவி விலகச்சொல்லி சத்தம் போடுவோமா?

தேசமாவது ஒற்றுமையாவது... பதவி கிடைத்தால் போதும் என்று அலையும் அரசியல்வாதிகள் பின்னால் அலையும் நாம் என்றைக்கு மாறப்போகிறோமோ தெரியவில்லை. துப்பு கெட்ட பல அரசியல்வாதிகளின் கைகளில் நாட்டைக் கொடுத்துவிட்டு நம் தலைவிதியை நொந்து கொண்டு துப்பு கெட்ட மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Tuesday, October 25, 2005

இப்படியும் நடக்குதுங்க! - கவனம் தேவை!

இன்று காலை எனக்கு வ்நத மெயிலில் படிக்க நேர்ந்த ஒரு அதிர்ச்சி நிறைந்த செய்தி. அதை அப்படியே ஆங்கிலத்தில் பதிந்துள்ளேன். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் கவனமாக இருக்க இந்த செய்தி பயன்படும் என நம்புகிறேன்.

------------------------

IIM Alumnus Harrased at Bangalore Station

Shocking Brutality at Bangalore Railway Station


Hi!

I would like to bring to notice a certain injustice that I have subjected to at the Bangalore Railway Station (Majestic) On September 30 (Friday), 2005, I had been to the station to see off my fiance and her mother. They took the Karnataka Express (Train #2627) to Jhansiat 6:30 pm.

On my way out I was asked to present my platform ticket by a railway official. On producing the same, the TT turned around and told me "What if I say that you haven't given me the ticket?" Before I could react, he along with his colleague pushed me into the adjacent enquiry cabin and physically manhandled me. I was slapped several times, my spectacles were grabbed and deliberately crushed by foot, and my phone was flung away from me. The RPF comprising of one RPF and four constables, appeared on the scene. The surrounding public was whisked away. None of the railway police officials cared to listen to me and they started hitting me indiscriminately with lathis. They dragged me out, and all the 4 constables continued hitting me with lathis from Platform 1 to Platform 3/5, till we reached the station master's cabin. Racist abuses and threats were made on the way. At the station master's cabin, I was told that I have been charged with a non-bailable offence and would be behind bars for 15 days.

Not for a single moment was I allowed to speak. All of a sudden a stranger came to the scene and he claimed that he was there to help me. Having lost all my physical strength and mental senses, I was happy to see some sort of help. He, claiming to be V Srinivas from Infosys, talked to the officials and the railway police in Kannada. He told me that the only way I was to get out was if I was willing to pay my way through. Being in no state to make a rational choice, I gave him my ATM card and pin. He took one of the RPF chaps along with him and said he would clear the matter. He returned some time later saying that everything was okay now.

I was asked to sign a statement which said that I hit the police and TT in a drunken state. I refused. Finally, they pressurized me to write that I did not produce a platform ticket when asked. I wrote the same and then V Srinivas took me out of the station. He joined me in an auto and took me to the ICICI ATM at Anand Rao circle. He withdrew Rs. 15000 from my ATM and got back. he took the cash under the pretext that while helping me he had left his wallet in the train he had left behind and that he would return the same through his ICICI Internet account. Having broken down mentally I did not realise that I was being cheated. He then took me to a Samsung showroom and tried purchasing a cellphone worth Rs. 18500 with my card. It was only then that I realised what was happening. I grabbed my card back, caught him by the collar, snatched my cash that lay in his pocket, and got into a running auto.

I have now realized that all of this was a plan. There is a strong nexus between the railway officials, the railway police and the fraudster. The railway officials identify a victim who they think is well-to-do, the RPF beat that individual till he has no physical or mental well-being. Then this fraud chap comes on to the scene, takes advantage of the situation, and takes all your cash away. Also, this series of events generally occurs on the last day of the month as they know that the salary gets credited on this day. (This strikes me now because the self-proclaimed Infy employee, V Srinivas, clearly asked me whether I had received my salary. He said that he just wanted to find out if there was cash enough to tackle the case.)

Now three days hence, I have tried to run from pillar to post. I have been forced to miss office hours in my effort to get justice. But I don't want to give up the fight midway. If any of you are in the media, or have friends/relatives who are in the industry, I'd like to speak with them about this in greater detail. I can be reached on xxxxxxx or xxxxxxx. I believe it would catalyze my efforts.

Also, please pass this email to all the people who reside in Bangalore, so that they don't fall into the same trap.

Regards,
Nimish V Adani
IIML Batch of 2003
ITBHU Batch of 2001

Source: http://www.iitiim.com/WebX?14@@.f5d0635

Thursday, October 20, 2005

நேற்று - இன்று - நாளை

நேற்று
1982ம் வருடம் ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும் வருடம். ஈரானை ஒழித்துக்கட்ட அமேரிக்கா ஈராக்கிற்கு வேண்டிய அத்தனை கெமிகல் மற்றும் ராணுவ ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது.

இச்சூழலில் சதாம் ஹுசைன் துஜைல் எனும் இடத்திற்கு தனது புடை சூழ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவரது வாகனத்தின் மீது துப்பாக்கி குண்டுகளால் அப்பகுதியில் வாழும் ஒரு சில ஷியாக்களால் தாக்கப்படுகிறார். திடீரென தாக்கப்பட்டாலும் தகுந்த பாதுகாப்புடன் வந்த சதாமின் காவலாளிகள் திருப்பித் தாக்கினர். உடனடியாக சதாமின் நேஷனல் கார்டு பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டருடன் வந்து துஜைலில் இருந்த மக்களை தாக்க, 150க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்நிகழ்ச்சி ஈராக்கிகளை தவிர்த்து மற்ற யாருக்கும் தெரியாமல் போனது, குறிப்பாக அமேரிக்கா கண்டு கொள்ளவே இல்லை.

இன்று
2005ம் வருடம் அமேரிக்க வீரர்கள் ஈராக், சிரியாவின் பார்டர் பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்குபோது சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து ஐந்து அமேரிக்க வீரர்கள் மரணமடைகிறார்கள். உடனே அமேரிக்க ஈராக்கின் ராணுவத் தலைமை அமேரிக்க ஹெலிகாப்டர்களை அனுப்பி அப்பகுதியின் இரு கிராமங்களில் குண்டுமழை பொழிகிறது. 70 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள். அதில் இதுவரை 39 அப்பவிகள் கொல்லப்ப்ட்டதாக தகவல்.

நேற்று சதாம் நடத்திய கொலைகளுக்காக இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுகிறார்.

நாளை
இன்று அமேரிக்க ராணுவம் நடத்திய கொலைகளுக்காக நாளை அமேரிக்கா அதிபர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுவாரா?

Wednesday, October 19, 2005

இஸ்ரேலின் வெறியாட்டம் - பலியாகும் குழந்தைகள்

இஸ்ரேல் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இஸ்ரேல் பாலஸ்தீன போராட்டம்தான். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்த கொடூர போராட்டம் ஜான் ஏறி முழம் சறுக்கிய கதையாக முடிவுக்கு வராமல் நடந்து கொண்டிருக்கிறது.

விடுதலைக் கேட்டு போராடும் பாலஸ்தீன மக்கள் தலைவர்கள் உலக நாடுகளில் பலமிக்க பல ஐரோப்பிய நாடுகளிடமும் மற்றும் அமேரிக்காவிடமும் பிச்சைக் கேட்டு இதுவரை உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் பாலஸ்தீனர்களின் ஆயுதப் போராட்டம் அவ்வப்போது தலை தூக்குவதும் பிறகு குறைவதுமாக முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போராட்டத்தில் அதிகமாக பலியாவது பெண்களும் குழந்தைகளுமே! யுனிசெப்பின் கணக்கெடுப்பின்படி கடந்து ஐந்து வருடங்களில் 542 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலின் துப்பக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர்.

சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பாக முஹம்மது அல் துர்ரா எனும் 12 வயது சிறுவன் தன் தந்தையின் கைகளிலேயே, இஸ்ரேலிய ராணுவத்தால் சுடப்பட்டு மரணமடைந்தான்.

இச்செய்தி தவறானது என்று இங்கு ஒரு பதிவில் சமீபத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. ஒரு வேளை இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு வலையுலகில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் செய்தியேல்லாம் ஆதாரம் நிறைந்ததாகத் தோன்றலாம்.

உலகமே இச்சிறுவனின் கொடுமையான மரணத்தை டிவியில் பார்த்தது. அச்சிறுவனின் தந்தை தனது மகனைக் காப்பாற்ற ஒரு சுவற்றின் அருகிலும் ஒரு மெட்டல் பேரலுக்கு (Metal Barrel) மத்தியில் தானும், தனது மகனும் பயந்து மறைந்து நின்றனர். என்னதான் போராடியும் முடியாது தன் மடியிலேயே தனது மகனை இஸ்ரேலிய ராணுவத்தின் இரு தீவிரவாதிகளின் துப்பக்கி குண்டுகளுக்கு பலியாகக் கொடுத்தான் அந்த தகப்பன்.

அச்சிறுவன் தன் தந்தையின் மார்பைக் கட்டிபிடித்து பயந்து அழுவதும், தந்தை இரு கைகளாலும் அவனை மறைகக முயல்வதும், துப்பாக்கிக் குண்டுகள் அவர்கள் இருவரின் பின்னால் உள்ள சுவற்றை துளைப்பதும், பிறகு இறுதியாக அச்சிறுவனின் உடலைத் துளைப்பதுமாக அந்த வீடியோ படம் காட்டுகிறது. மகன் தன் மடியில் செத்துக் கிடப்பதைப் பார்த்த தந்தை வலிப்பு வந்து மயக்கமடைகிறான்.

இந்தக் கொடுமையான காட்சியைப் படமாக்கியது பிரான்ஸ் 2 டிவிக்காக பணிபுரியும் தலால் அபு ரஹ்மா எனும் பாலஸ்தீன கேமராமேன். இந்தப் படம் இஸ்ரேலின் கொடுமையை சித்தரிக்கும் ஒரு ஐகோனாக (icon) பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் மறையாமல் இருக்கிறது.

இந்நிகழ்ச்சியை பின்னனியாக வைத்து நூற்றுக் கணக்கான சோகக் கவிதைகள் உலகம் முழுவதும் எழுதப்பட்டன. எகிப்து, துனீசியா மற்றும் பெல்ஜியம் நாடுகள் முஹம்மது அல் துர்ராவின் புகைப்படம் தாங்கிய ஸ்டாம்புகளை வெளியிட்டன. அரபு நாடுகளில் உள்ள பலத் தெருக்களுக்கும் கார்டன்களுக்கும் இச்சிறுவனின் பெயர் சூட்டப்பட்டது.

கெய்ரோ நகரில் இஸ்ரேலின் தூதரகம் இருக்கும் தெருவிற்கு எகிப்திய அரசு இச்சிறுவனின் பெயரை வைத்திருக்கிறது.

Sunday, October 16, 2005

கடவுள் சொன்னார், செய்தேன்!

ஜார்ஜ் புஷ் இப்போதெல்லாம் படு கோபத்தில் இருக்கிறார். கையில் ஆணி சுத்தியலுடன் தனது ரிபப்கிளிகன் செனட்டர்களையும் சேர்த்துக் கொண்டு நியூ ஆர்லின்ஸ் நகரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். காட்ரீனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக கண்ணில் கிடைக்கும் கட்டைகளையும், மட்டைகளையும் வைத்து எங்கு பார்த்தாலும் 'மடார் மடார்' என்ற சுத்தியல் சத்தம்தான்.

'அதிபர் ஜார்ஜ் புஷ் சுத்தியலைப் பயன்படுத்துவதில் படு கில்லாடி. முன்னால் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு வந்த முதல் கார்பெண்டர்' என்று வெள்ளை மாளிகையின் சீப் ஆப் ஸ்டாப் வில்லியம் எய்ட்ஸ் (Aids) NBR ரேடியோவிற்கு அளித்த பேட்டியில் பெருமையுடன் குறிப்பிட்டார். 'புஷ் அவர்கள் இனி கேபினட் மீட்டிங்கிற்கு சுத்தியலுடன் வரவேண்டும்' என்று துணை அதிபர் ஷெனாய் கேட்டுக் கொண்டார். புஷ்ஷின் முதல் ரவுண்ட் அமைச்சரவையில் வெளியுறவு செகரட்டரி பவல் அவ்வப்போது புஷ்ஷின் சொல்லை மதிக்காமல் கேபினட் மீட்டிங்கில் பிரச்சனைகள் உண்டக்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இது தொடர்பாக ஸ்டாட்போர்டு யூனிவர்சிட்டியின் பொலிட்டிகல் புரபசர் மைக்கேல் ஸ்டடி அவர்கள் 'ஜார்ஜ் புஷ்ஷின் கோபத்திற்கும், சுத்தியலுடன் அலைவதற்கும் காரணம் காட்ரீனா அல்ல, கடவுள்தான்' என்று தெரிவித்தது அமேரிக்க எவாஞ்சலிஸ்ட் செனட்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டடி மேலும் கூறும்போது 'ஜார்ஜ் புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், கடவுளின் ஆசியும் அனுமதியும் பெற்றுதான் அவர் எந்த முடிவுகளும் எடுப்பது வழக்கம். கடவுள் சொல்லித்தான் ஆப்கான் மற்றும் ஈராக் மீது படையெடுத்தார்'.

இது சம்பந்தமாக மைக்கேல் ஸ்டடி அவர்கள் மேலும் சொல்லும்போது 'ஈராக் போரில் மரணமடைந்த அமேரிக்க வீரர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், ஒரு நல்ல காரணத்திற்காக அவர்க்ள் சொர்க்கம் செல்கிறார்கள் என்றும் புஷ் அவர்கள் சொன்னதை' கம்பூனிட்டி ஹாலில் நடந்த 'Statistics of death and life' கருத்தரங்கில் மேற்கோள் காட்டி பேசினார்.

'பாலஸ்தீன் தேசத்தை உருவாக்கச் சொல்லி தனக்கு கடவுள் அதிகாரம் கொடுத்துள்ளார்' என்று பாலஸ்தீன் அதிபர் மெஹ்மூத் அப்பஸின் கையைப் பிடித்துக் கொண்டு புஷ் அவர்கள் நெகிழ்ந்ததும், பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்ததும் மெஹ்மூத் அப்பாஸ் தனது சுயசரிதையில் எழுதியுள்ளதை கவனிக்கத்தக்கது.

மைக்கேல் ஸ்டடியின் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும், காட்ரீனாவிற்கு கடவுளுக்கும் புஷ்ஷின் கோபத்திற்கும் உள்ள சம்பந்தம் தெரியாமல் போனதால் காங்கிரஸ் இன்வஸ்டிகேடிங் கமிட்டி நிர்ணயித்து அதற்கு வேலையில்லாமல் இருக்கும் நியூ கொலம்பியாவின் செனட்டர், டெமக்ரடிக் கட்சியைச் சேர்ந்த இவான் ஸ்லீப்பை தலைவராக நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்தது.

தனது சாகக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு ஆய்வு கமிட்டியில் மெம்பராக இருப்பதும், தனக்கு இதுவரை அப்படி ஓர் வாய்ப்பு ஏற்படாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டிய ஸ்லீப் தனது பணியை செவ்வனெ செய்து விரைவில் செனட்டில் தாக்கல் செய்யமுடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இயற்கை சீரழிவுகள் வருவதற்கு முன்னால் அதை முழுதாக அறிந்து அதன் மூலம் ஏற்படவிருக்கும் சேதங்களை முன்கூட்டியே கணக்கிடும் தொழில்நுட்பத்தை அமேரிக்க மெட்ரோலாஜி டிபார்ட்மெண்ட்களில் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று புஷ் இன்றிரவு ஆணையிட்டார். இவ்வாறு முன்கூட்டி அறிவதன் மூலம் சீரமைப்புப் பணிகளையும், அதைத் தொடர்ந்து வரும் கட்டுமானப் பணிகளை 'ஹாலிபர்ட்டன்' கம்பேனிக்கு சேதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னாலேயே குத்தகைக்கு கொடுக்க ஏதுவாக இருக்கும் 'பிமா (FEMA) தனது மகிழ்வைத் தெரிவித்தது.

Thursday, October 13, 2005

அமேரிக்காவின் அவுட் சோர்ஸிங் (Some day in Future)

அமேரிக்க ஜனாதிபதியை அவுட் சோர்ஸ் மூலம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவருவதென்று காங்கிரஸ் இன்று ஒர் முக்கியமான அறிவிப்பு செய்தது. இவ்வாறு செய்வதன் மூலம் அதிபரின் வருடாந்திர சம்பளமான 400,000 டலரை கணிசமாக சேமிப்பதோடு அமேரிக்க ஒவ்வொரு வருடமும் சந்திந்து வரும் 500 பில்லியன் டாலர் பட்ஜெட் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய முடியும் என்று அறிவித்தது.

வரும் நவம்பர் மாதம் அதிபர் புஷ் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இந்தியாவில், மும்பை நகரிலிருந்து இயங்கிவரும் இந்தூஸ் டெலிசர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் குர்வீந்தர் சிங் நவம்பர் ஒன்றிலிருந்து அதிபராக பணி தொடங்க உள்ளார் என்றும் காங்கிரஸ் அறிவித்தது.

குர்வீந்தர் சிங்கின் சம்பளம் மாதத்திற்கு 400 டாலர் (இந்திய மற்றும் அமேரிக்காவின் வரிகள் தனி) என்றும் அத்துடன் மெடிக்கல் பெனிபிட்ஸ் அல்லது வேறு எந்த உதவியும் கிடையாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது.

குர்வீந்தர் சிங்கை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம், அவருடைய பெற்றோர்கள் அமேரிக்காவின் நயாகார நீர்வீழ்ச்சிக்கு விடுமுறைக்காக சென்றபோது குர்வீந்தர் சிங் அங்கே பிறந்ததாகவும், அதனால் அவர் அமேரிக்காவின் அதிபராகும் தகுதி அதிகமுள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்தது.

'நாங்கள் இந்த முக்கிய முடிவை அமேரிக்காவின் தற்போதைய நிதி நிலையை மனதில் வைத்து எடுத்ததாகவும், இது அமேரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும்' - செனட்டர் தாமஸ் ரொந்தனால்ட், ABC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தாமஸ் அமேரிக்க அவுட் சோர்ஸிங் அக்கவுண்டபிலிட்டி அமைப்புடன் சேர்ந்து இது தொடர்பாக இரண்டாண்டு காலம் ஆய்வு செய்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவர் மேலும் 'உலக அரங்கில் அமேரிக்காவின் நிதி மாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதது கவனிக்கப்பட வேண்டியது' என்றும் சொன்னார்.

அதிபர் புஷ் இன்று காலை இ மெயில் மூலமாக பதவிப்பறிப்பு தொடர்பான ஆனையைப் பெற்றுக் கொண்டார் என்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தனது வெள்ளை மாளிகையை காலி செய்யும் ஏற்பாட்டில் இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகையின் குறிப்பு ஒன்று அறிவிக்கின்றது.

கால நேர வித்தியாசத்தின் காரணமாக அமேரிக்காவின் புதிய அதிபர் மிஸ்டர் சிங் இந்தியாவிலிருந்து இரவில் பணி செய்வார் என்று அறியப்படுகிறது. 'இரவில் அமேரிக்காவின் அதிபராக பணி செய்வதன் மூலம் தனது பகல் நேர வேலையான அமேரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பேனிக்கான கால் செண்டர் வேலையை தன்னால் தொடர்ந்து செய்ய இயலும்' என்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.

MDTV க்கு அளித்த பிரத்தியோகமான பேட்டியில் 'தான் அமேரிக்காவின் அதிபரானது மிகுந்த மகிழ்வை தருவதாகவும், தான் நிச்சயம் ஒருநாள் அதிபராவேன் என்று நம்பிக்கை இருந்ததாகவும்' தெரிவித்தார் மிஸ்டர் சிங்.

அதிபர் சிங் இந்தியாவிலிருந்து தனது பி.சி. மூலமாக அமேரிக்காவின் அன்றாட நிகழ்வுகளை புரிந்துக் கொள்ள பெங்களூரைச் சேர்ந்த டுர்ரண்ட் சாப்வேர் நிறுவனம் 'ஸ்கிரிப்ட் டிரி' என்று ஓர் மென்பொருளை உருவாக்கி இருக்கிறது, அதன் மூலம் மிஸ்டர் சிங் பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளவில்லை என்றாலும் மேலோட்டமாக தனது முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

அமேரிக்காவின் 'மென்பவர் கவுன்சிலின்' அறிக்கையின் படி அதிபர் புஷ்ஷிற்கு அமேரிக்காவில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தெரியவருகிறது. ஆனால் அதிபர் தன் இளமை காலத்தில் பணி செய்த 'நேஷனல் கார்டு' அமைப்பில் வேண்டுமானல் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கிறது. அமேரிக்காவின் நேஷனல் கார்டு தற்போது ஈராக்கின் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் புஷ் மற்றும் ஷெனை இருவருக்கும் ஈராக்கில் வேலை வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வருகிறது.

'நான் ஈராக் சென்றிருக்கிறேன்'. ஈராக்கைப் பற்றி தனக்கு ஓரளவு அறிவும் அனுபவமும் இருப்பதாக அதிபர் புஷ் சொன்னார். 'தனக்கு ஈராக்கில் வேலை வாய்ப்பு கிடைத்தால் அதனால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும்' தெரிவித்தார் புஷ். அதிபர் புஷ் ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு பயணம் செய்ததும், அங்குள்ள 'கிப்ட் ஷாப்பில்' சிறிது நேரம் இளைப்பாறியதும் கவனிக்கத்தக்கது.

பாக்தாதிலும், பல்லூஜாவிலும் கிடைத்த தகவல் படி அவர்கள் புஷ்ஷின் வருகைக்காக காத்திருப்பதாக தெரிகிறது. அங்கிருந்து செயல்படும் மிலிட்டண்ட் அமைப்பின் தலைவர் ஒருவர் இதுபற்றி பேசும் போது 'புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், அவர் இங்கு வருவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். விரைவில் அவர் அதிகம் நேசிக்கும் கடவுளுடன் அவருக்கு ஒரு நல்ல சந்திப்பை தன்னால் ஏற்பாடு செய்து தரமுடியும்' என்று தெரிவித்தார்.

Wednesday, October 12, 2005

அந்த 40 வருடங்கள்

சென்னை IIT யின் டீன் விஜய் கிராண்டி முப்பது வருடங்களாக வாரத்திற்கு ஒரு வேளை உணவு உண்ணுவதில்லையென்று ஓர் உண்ணா நோன்பை கடைபிடித்து வந்தார். அந்த நோன்பை, விரதத்தை சென்ற வாரம் முடிவுக்கு கொண்டு வந்தார் என்பது பல பேருக்கு தெரியாத செய்தியாகப் போனது. ஆனால் அந்த செய்தியினுள் புதைந்து கிடந்த ஒரு உன்னதமான தேசப்பற்றை எந்த செய்தி நிறுவனங்களும் கண்டு கொள்ளவில்லை.

அப்படி என்ன ஒரு முக்கியமான விசெஷம் இவரின் இந்த உண்ணா நோன்பில்...

1965 இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு சோகம் நிறைந்த வருடம். பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுத்த வருடம் அது. காஷ்மீரை எப்படியும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இளைய இந்தியா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாகிஸ்தானின் துணிகர முயற்சி.

எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் படைகளுடன் தனது இன்னுயிரை இழந்து கொண்டிருக்கும் வேளையில், இன்றைக்கு மார் தட்டி மற்ற நாடுகளை எல்லாம் துச்சமாக மதிக்கும் அமேரிக்க அன்று இந்தியாவிற்கு எதிராக ஓர் மிரட்டலை பிரகடனம் செய்தது. அதாவது.. இந்தியாவிற்கு உதவியாகக் கொடுத்து வந்த உணவு பொருட்களை நிறுத்துவதாக அறிவித்தது. உணவு பஞ்சத்தால் இந்தியா அப்போது அமேரிக்காவிடம் கையேந்தி நின்று வந்தது எல்லோருக்கும் தெரியலாம். அமேரிக்காவின் பயமுறுத்தல் இந்தியாவை பொறுத்தவரை அதிர்ச்சி நிறைந்த கவலைக்கிடமான செய்தி. அப்போதைய பிரதமர் சாஸ்திரி அவர்கள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுமக்களிடம் பேசியக் கூட்டத்தில் முக்கியமான கோரிக்கை ஒன்றை எடுத்து வைத்தார்.

இந்தியாவில் இருக்கும் உணவுப் பஞ்சத்தை சமாளிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாரத்திற்கு ஒரு வேளை உண்ண நோன்பை கடைபிடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

பள்ளிச் சிறுவனாக இருந்த விஜய் கிராண்டியும் அந்த பொதுக் கூட்டதில் கலந்து கொண்டார். மற்ற இந்தியக் குடிமக்களைப் போல் பிரதமர் சாஸ்திரியின் வேண்டுகோளுக்கிணங்க விஜயும் வாரம் ஒரு வேளை உண்ணா நோன்பை அனுசரிக்கத் தொடங்கினார். இந்தியா ஒருவாறாக அந்த பாகிஸ்தானுடனான போரையும் இந்தியாவினுள் இருந்த உணவு பஞ்சத்தையும் வெற்றிகரமாக சமாளித்தது.

ஆனால், பள்ளிச் சிறுவனான விஜய் கிராண்டி, அந்த ஒரு வேளை உண்ணா நோன்பை விடாது கடைபிடிக்கத் தொடங்கினார் வேறொரு வைராக்கியத்துடன். என்று அமேரிக்காவிற்கு இந்திய உணவு உதவி செய்யும் நாள் வருமோ அன்றுவரை இந்த உண்ணா நோன்பு தொடரும்.

அந்த நாளும் வந்தது. சென்ற வாரம் இந்தியாவின் அமேரிக்காவிற்கான தூதர் வாஷிங்டனில் 50 மில்லியன் டாலருக்கான காசோலையையும், இரண்டு விமானங்க்ள் நிறைந்த உணவுப் பொருள்களையும், இன்னும் மருந்துகளையும் அமேரிக்காவிற்கு இந்தியாவின் உதவியாக கொடுத்தார். காட்ரீனாவால் நிகழ்ந்த பேரிழப்பை இன்னும் கிரகிக்க முடியாமல் தவிக்கும் அமேரிக்காவிற்கு இந்தியா அளித்த உதவிதான் இந்த 50 மில்லியன் டாலர் காசோலை.

விஜய் கிராண்டி தனது உண்ணா நோன்பை முறித்தார். விஜய் கிராண்டியை போன்ற மனிதர்கள் உள்ளவரை இந்தியா தன்னிலை எழுச்சிப் பெற்ற நாடக உலக அரங்கில் மற்றைய நாடுகளுக்கு முன்னுதாராணமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

Wednesday, September 14, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 11

இஸ்ரேலியர்களின் வரலாறு - ஜோசப்பின் இளமை வாழ்க்கை

ஆப்ரஹாம் - இஸ்ஹாக் - ஜேக்கப் - ஜோசப் என்று நான்காம் தலைமுறைக்கு அடி எடுத்து வைத்துள்ள இந்த இஸ்ரேலியர்களின் வரலாற்றில் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்ட இந்தக் கொள்கைப் போராட்டம் காலச் சுழற்சியில் பல்வேறு பரிமானங்களைக் கொண்டதாக மாறி வருவதைக் காணலாம்.

ஆப்ரஹாமின் போராட்டமும், அவருடன் சேர்ந்து அவருடைய மனைவியர்களும் சேர்ந்து அனுபவித்த சிரமங்களும், தியாகங்களும் இன்றுவரை மாற்ற முடியாத வலுவான அடிப்படையை உருவாக்கிக் கொடுத்தது. அவருடைய சந்ததியினர் இன்றுவரைப் பெருகி பல்வேறு சமூகங்களாக மாறி இருந்தாலும், அன்றைக்கு அவர் மூலம் இறைவன் புத்துப்பித்து வைத்த ஆன்மீக அடித்தளங்கள் இன்றைக்கும் வலுவான ஒரு அடிப்படையாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆப்ரஹாமின் வாழ்க்கை முழுவதும் ஒரு மேன்மையான லட்சியத்தினை எட்ட அவர் நடத்திய போராட்டம் தெளிவாகவும், வன்முறைகள் இல்லாமலும், இன்னும் சொல்லப் போனால் குடும்ப வாழ்க்கையில் இடர்பாடுகள் ஏற்பட்டாலும் எதுவும் அவரது கட்டுப்பாட்டை மீறியதாக இருந்ததில்லை. வன்முறைகள் அவர் மீதுதான் கட்டவிழ்த்து விடப்பட்டதே தவிர்த்து அவர் வன்முறையை கையில் எடுத்ததாக இல்லை. அவருடைய மனைவியருள் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அவரது மகன்களுக்கு அவர் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை வழி முறைகள் அவர்களை இருவேறு கிளைகளாக, இரு வேறு சமூகமாக அமைய வைத்தது. ஆனாலும், ஒன்றைவிட ஒன்றுக்கு அதிக முக்கியத்துவம், அதாவது ஒரு மகனைவிட இன்னொரு மகனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற அவர மனைவியர்களின் பேராசைகள், பிரிவினையை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

ஆப்ரஹாமிற்கு பிறகு இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அதில் சமூகத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எதுவும் இல்லாமல் சுமூகமான முன்னேற்றமாக இருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ திருக் குரான் இஸ்ஹாக்கைப் பற்றி அதிகமாக பேசவில்லை. ஆனால் இஸ்ஹாக்கின் மகன்களில் ஒருவருக்கு மட்டுமே, அதாவது இளைய மகனான ஜேக்கப்பிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்ற அவரது மனைவியின் விருப்பம் குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆப்ரஹாம் வாழ்க்கையில் இரு மனைவியரால் இப்படி ஓர் பிரச்சனை எழுந்தது. ஆனால் இஸ்ஹாக்கின் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் ஒரு படி முன்னேறி ஒரு தாய் தனது இரு மகன்களில் ஒருவருக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் வேண்டும் என்று ஒரே உள்ளத்தில் ஏற்படும் உறவு வேறுபாடுகளையும், வெருப்புகளின் வித்துக்களை சரித்திரமாக சொல்லுகின்றது.

இந்த நிகழ்வுகள் மனித மனங்களின் வளர்ச்சியையும், அதிகாரம், முக்கியத்துவம், சமூக கௌரவம், பொருளாதார வளர்ச்சி என்ற நிலைகளில் மனித உள்ளங்கள் எவ்வாறு பாதிக்கத் தொடங்குகின்றன என்பதை கோடிட்டு காட்டுகிறது. மனித உள்ளங்கள் எவ்வாறு ஏற்ற தாழ்வுகளை உருவாக்குபவையாகவும் தான் பெற்றெடுத்த பிள்ளைகளிலேயே வித்தியாசம் பார்க்கக் கூடியதாக மாறுகிறது என்பதை எடுத்துச் சொல்லும் வரலாறாக அமைகிறது.

பிறகு ஜேக்கப்பின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப் போல் கொள்கை முன்னெற்றங்களில் அதிக பிரச்சனைகள் இல்லாமல் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், சிறிது சிறிதாக கடவுள் வழிபாடு பழுதுபடத் தொடங்கி கடவுளுடன் அம்மனிதன் நெருங்கியவனாக இருந்த காரணத்தால் அது ஒரு தனி மனித வழிபாடாக அல்லது அங்கீகாரமாக மாறத் தொடங்குகிறது. இறைவனுக்கு நெருங்கிய மனிதனாக ஒருவன் இருந்தால் அவன் இறைவனின் அங்கீகாரம் பெற்ற மனிதனாக, சமுதாயத்தில் அவனுக்கு புதிய ஒரு சமூக அந்தஸ்த்தை உருவாக்க காரணமாக இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. கொள்கைக்காக மனிதன் என்ற நிலை மாறி மனிதனுக்காக கொள்கைகள் என்று பரிமானம் அடைவதைக் காட்டுகிறது.

ஏமாற்றப்படுவதும் அல்லது ஏமாற்றுவதும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அவசியமே என்பது போல் ஜேக்கப்புடைய வாழ்வில் சில நிகழ்வுகள் அமைந்துள்ளன. அவர் தனது தந்தையை ஏமாற்றுவதில் தொடங்கி, தாய் மாமனிடத்தில் அவர் ஏமாறுவதுமாக இறுதியில் தனது பிள்ளைகள் ஜெருசலம் நகரில் (ஷெச்சம்), அச்சமூகத்தின் ஆண் மக்களை ஏமாற்றி அவர்களை தீர்த்துக் கட்டுவதாக சரித்திரம் செல்கிறது. அத்துடன் நில்லாமல் சகோதரர்களின் மத்தியில் ஜோசப்பிற்கு அதிக முக்கியத்துவம் அவர்களது தகப்பனால் வழங்கப்படுவதால் சகோதரர்கள் தனது சகோதரனையே, ஜோசப்பையே ஏமாற்றும் படலமாக முற்றுப் பெருகிறது.

இங்கும் மனித மனங்களின் கட்டுபாடற்ற அல்லது சகிப்புத் தன்மை இல்லாமையை எடுத்துச் சொல்லும் நிகழ்வுகளை வரலாற்றில் காணலாம். இந்த நான்கு தலைமுறையின் வரலாறு அவர்களின் குடும்பம் விரிவடையும் போதெல்லாம் ஒரு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு விரிவடைவதோடு மட்டும் நில்லாமல் பிரிவடையவும் செய்கின்றது என்பதையும் பார்க்கிறோம்.

ஒரு குடும்பத்தில், ஒரே கொள்கைக்காக வாழும் மக்களிடத்திலேயே இவ்வாறு தனிப்பட்ட மோதல்கள் ஏற்படுவதும், அதில் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று பிறர் மேல் வெருப்புக் கொள்வதும், அது காலப் போக்கில் தனிமனித முக்கியத்துவத்திற்காக கொள்கைகளை தியாகம் செய்யக் கூடியவதாகவும், ஒருவரை ஒருவர் சமூக படிக்கட்டுகளில் விஞ்சி நிற்க வேண்டும் என்ற சிநதனைகளை வளர்ப்பதாகவும் இந்த வரலாறு செல்வதைக் காணலாம்.

ஜோசப்பின் இளமைப் பருவம்

எகிப்திய மன்னன் பரோனின் அமைச்சவரையில் நிதி அமைச்சராக இருக்கும் ஒரு தனவந்தன் எகிப்து நாட்டிற்கு வந்த வர்த்தகக் கூட்டத்தில் அடிமையாக கொண்டுவரப்பட்ட ஜோசப்பை விலைக்கு வாங்கி தன் மனைவியிடம் அறிமுகப்படுத்துகிறார். அந்த அமைச்சருக்கு பொருட் செல்வம் நிறைய இருந்தது, ஆனால் குழந்தைச் செல்வம் இல்லாதிருந்தார். ஜோசப் அப்போது இளமைப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு அழகான, பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருந்த ஒரு வாலிபன். பார்க்கும் எந்த பெண்ணும் அவரை அடைய வேண்டும் என்று ஆவல் கொள்ள வைக்கும் அழகிய இளமை பருவத்தில் இருந்தார் ஜோசப். இன்னும் சொல்லப் போனால் அந்நகரில் அவரைப் போன்ற தோற்றமும், உடலமைப்பும், இன்னும் ஒளி மிகுந்த பார்வையும், முக அமைப்பும் உள்ள இளைஞர் வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வசீகரமானவராக இருந்தார்.

ஜோசப்பின் தோற்றம் மட்டும் ஆவல் கொள்ள வைக்கும் அழகு நிறைந்ததாக இல்லை. அவரது பேச்சு, நடத்தை, பெருந்தன்மை, செயல்கள் எல்லாம் பிறரை கவரக்கூடியதாக இருந்தது. அவரது கொள்கைப் பிடிப்பு, இறை பக்தி, இறைப் பணி, மக்களை ஓரிறைப் பக்கம் அழைக்கும் அழகிய முறை, அவருடைய கல்வி, சிந்தனை, அவருக்கு இறைவன் வழங்கிய மறைவானவைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு எல்லாம் அவரை அச்சமூகத்தில் ஒரு சிறந்தவராக, வித்திசாசமானவராக இருக்க வைத்தது. கனவுகளுக்கு சரியான காரணங்களும், அதற்கான விளக்கங்களும் சொல்லக்கூடிய விசித்திரமான அறிவும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.

தன்னை இகழ்ந்தவர்களையும், இன்னல் செய்தவர்களையும் மன்னிக்கும் குணமும், மறக்கும் தன்மையும் அவரிடம் நிறையவே இருந்தது. தனது ஒவ்வொரு பிரச்சனையிலும் தன்னை இறைவன் கைவிடமாட்டான் என்ற அசாத்திய நம்பிக்கை அவரை சிறுவயது முதல் தனி ஒரு மனிதனாக போராட வைத்தது. தனது சகோதரர்கள் தன்னை ஏமாற்றி அழைத்துச் சென்று காட்டில் கிணற்றில் தள்ளிவிட்ட போதும் இறைவனே என்னைக் காப்பாற்ற போதுமானவன் என்ற நம்பிக்கை அவரை அப்படிப்பட்ட இன்னல்களிலிருந்தும் கைதூக்கிவிட போதுமானதாக இருந்தது.

தனது வேலை நேரம் போக அவர் இறைவனின் சிந்தனையிலும், இறைப் போதனையிலும் தன் வாழ்க்கையைக் கழித்து வந்தார்.

அவருடைய இளமைப் பருவமே அவருக்கு ஓர் சோதனையாக வந்து சேர்ந்தது. அவர் அடிமையாக வேலை செய்யும் அவரை விலைக்கு வாங்கிய அமைச்சரின் இல்லத்திலேயே அவருக்கு பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தது.

அவருடைய அழகின் வளர்ச்சியையும், பழகும் பக்குவத்தையும் தினமும் கண்ணுற்று வந்த அமைச்சரின் மனைவியின் மூலமாகவே அவர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஜோசப்புடன் உறவு கொள்ள வேண்டும் என்று முதலாளியின் மனைவி விரும்பலானார். இதை புரிந்துக் கொண்ட ஜோசப் செய்வதறியாது தவித்தார். தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது புரியாமல் இருந்தார். வீட்டை விட்டு ஓடிவிட முடியாது. அடிமை என்ற காரணத்தால் எங்கு சென்றாலும் யாரும் உதவ மாட்டார்கள். யாருக்கு இவர் அடிமையோ அவருக்கு மட்டுமே இவர் சொந்தம். அந்த அடிமையை அந்த உரிமையாளர் கொலை செய்யக்கூட முடியும். அதே நேரம் அடிமையுடன் உறவு கொள்ள உரிமை உள்ளவர்கள் விரும்பினால் அதைத் தடுக்கவும் முடியாது, அதை மறுக்க உரிமைகூட ஒரு அடிமைக்குக் கிடையாது. வேறு யாரிடமும் இதைச் சொன்னால் அடிமைக்கு ஏது உரிமை என்று யாரும் காது கொடுத்துக் கூட கேட்க மட்டார்கள்.

ஜோசப் இப்போது வேண்டுமானல் ஒரு அடிமையாக இருக்கலாம். ஆனால் அவர் ஆப்ரஹாமின் வழிவந்த ஒரு உயர்ந்த குடும்பத்தின் வாரிசு மற்றும் இறைத்தூதர். தான் ஒரு அடிமையாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஒரு நல்ல மாற்றம் வரும், தன்னை யார் என்று இந்த சமுதாயம் உணர்ந்துக் கொள்ளும் என்பதை நன்றாக அறிந்திருந்தார். இறைவனின் தூதராக இருப்பவர்களுக்கு சோதனைகள் எப்போதும் குறைவில்லாமல் வந்து கொண்டுதான் இருக்கும் என்பதை அறிந்து, அதை வெற்றிக் கொள்ள வேண்டும் என்ற பக்குவம் நிறைந்தவராகவும் இருந்தார். அழகும், செல்வமும் உள்ள பெண்ணாக இருந்து அழைத்தாலும், தவறான உறவு முறைகள் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது, அது இறைவனின் பார்வையில் மிகப் பெரும் குற்றம் என்பதை நன்கு அறிந்திருந்தார்.

பிரச்சனைக்கு தீர்வு தெரியாமல் தவித்தார் ஜோசப். அமைச்சரின் மனைவியோ சரியான நேரத்திற்காக காத்திருந்தார். அப்படி ஓர் நாளும் வந்தது. அமைச்சர் வெளியூர் சென்ற ஒரு நாளில் அமைச்சரின் மனைவி இருக்கின்ற ஆடையிலேயே விலையுயர்ந்த ஆடையை அணிந்து தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு இரவிற்கு தயாரானார். ஜோசப் செய்வதறியாது இறைவனிடம் பிரார்த்தித்தவராக தனிமையில் அமர்ந்திருந்தார். இரவு நெருங்க நெருங்க, அமைச்சரின் மனைவிக்கு ஆவல் அதிகமாகியது, ஜோசப்பிற்கு பயம் அதிகமாகிப் போனது. அமைச்சருடைய மனைவியிடமிருந்து அழைப்பும் வந்தது.

(தொடரும்)

Monday, August 15, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 10

இஸ்ரேலியர்களின் வரலாறு - ஜேக்கப்பின் இறுதி வாழ்க்கை மற்றும் ஜோசப்.

ஜேக்கப் இதற்கிடையில் தனது சகோதரன் இசாயுவை சந்திக்கிறார். இசாயு தனது பழைய பகைமையை மறந்து ஜேக்கப்பை தழுவிக் கொள்கிறார். ஜேக்கப்புடன் இருக்கும் பிள்ளைகளையும் பெண்களையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு இவர்களெல்லாம் யார் என்று கேட்க, ஜேக்கப் அவர்கள் அனைவரையும் சகோதரனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்கள் எல்லோரும் ஜேக்கப்பின் மனைவி உட்பட இசாயுவிற்கு தலை வணங்குகின்றனர். அத்துடன் இசாயுவிற்காக தான் கொண்டுவந்த நூற்றுக் கணக்கான கால்நடைகளை அன்பளிப்பாக அளிக்கிறார்.

இசாயு சிறிது நாட்களில் பாலஸ்தீனுக்கு திரும்பிச் செல்ல ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கன் ஆன் தேசத்திற்குட்பட்ட ஷெச்சம் என்ற இடத்திற்கு வந்து சேருகிறார். ஷெச்சம் என்பது அங்கிருந்த ஒரு பெரிய மனிதனின் பெயராகும். அவரது பெயரில்தான் அந்த ஊர் அழைக்கப்படுகிறது. ஷெச்சனின் தந்தை ஹாமொர் என்பவரிடமிருந்து நூறு ஆடுகளை பரிவர்த்தனை செய்து கொண்டு பகரமாக கொஞ்சம் நிலத்தை பெற்றுக் கொள்கிறார் ஜேக்கப். தான் வாங்கிய இடத்தில் தங்குவதற்காக ஒரு தற்காலிக இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்கிறார். அந்த இடம்தான் ஜேக்கப் பல வருடங்களுக்கு முன்னதாக ஒரு பாறையில் அடையாளம் செய்து வைத்து சென்ற இடமாகும். அந்த இடத்தில்தான் அவர் உறங்கும் போதுதான் இந்த பூமி உனக்குச் சொந்தமானது என்று கனவில் தெரிய வந்த இறைவனால் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.(1)

எனவே, அந்த இடத்தில் தற்போது இறைவழிபாட்டிற்காக ஒரு ஆலயத்தை கட்டுகிறார் ஜேக்கப். அந்த ஆலயம்தான் பைத்துல் முக்கந்துஸ் என்று பெயர் பெருகிறது. அந்த இடத்தின் தற்போதைய பெயர் ஜெருசலம் என்பதாகும்.

ஜேக்கப் அவர்களால் எழுப்பப்பட்ட அந்த ஆலயம் பிற்காலத்தில் டேவிடுடைய மகனான சாலமன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் அங்கே தங்கியிருக்கும் போது ஜேக்கப்பின் மகளான டினாவுடன் ஷெச்சம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இந்தச் செய்தி ஜேக்கப் மற்றும் அவரது ஆண் மக்களுக்கு தெரியவருகிறது. பிறகு ஹாமொர் தனது மகனுக்காக டினவை பெண் கேட்டு ஜேக்கப்பிடம் வருகிறார். அப்போது டினாவின் சகோதரர்கள் அனைவரும் டினாவை ஹாமொரின் மகன் ஷெச்சத்திற்கு தர முடியாது, காரணம் ஷெச்சத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்யாதவர்கள், அவர்களுக்கு பெண் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகின்றனர். ஹாமொர் பிடிவாதம் செய்யவே, ஷெச்சத்தில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் விருத்த சேதனம் முதலில் செய்து கொள்ளுங்கள், பிறகு ஷெச்சதிற்கு தங்களின் சகோதரி டினாவை மணமுடித்து வைக்கிறோம் என்று சொல்ல ஹாமொர் சம்மதிக்கிறார். ஷெச்சத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்கின்றனர்.

அவ்வாறு அவர்கள் விருத்த சேதனம் செய்த மூன்றாவது நாளில் அவர்கள் எல்லோரும் வலியால் படுக்கையில் இருக்கும்போது ஜேக்கப்பின் இரண்டு மகன்கள் அவர்கள் அனைவரையும் தனது வாளுக்கு இரையாக்கி கொன்று முடிக்கின்றனர். ஷெச்சத்தில் இருந்த அத்தனை ஆண்களையும் கொன்றதோடு நில்லாமல் அந்த ஊரை கொள்ளையடித்து ஆடு மாடுகள் இன்னும் என்னென்ன உள்ளனவோ அவையனைத்தையுன் அபகரித்துக் கொள்கின்றனர்.(2)

புனித நகரத்தில் (ஜெருசலத்தில்) வரலாற்றுப் பூர்வமான முதல் இரத்தக் களங்கள் உருவாகின. ஆண்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டு பெண்கள் மட்டும் உயிருடன் விட்டு வைக்கப்படுகின்றனர். நகரம் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்திவிடப்படுகிறது.

இதற்கு பிறகு ராச்சல் பிள்ளைப் பேறு உண்டாகி ஜேக்கப்பிற்கு 12வது பிள்ளையாக பெஞ்சமின் என்பவரை பெற்றெடுக்கிறார். பிரசவத்தின் போது ராச்சல் மரணமடைகிறார். ஜேக்கப் ரச்சலை எப்ஃராத் என்னுமிடத்தில் அடக்கம் செய்து அந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வைக்கிறார். அப்படி வைக்கப்பட்ட கல் இன்றுவரை ராச்சல் அடக்கஸ்தலம் என்று அறியப்படுகிறது. எப்ஃராத் என்ற அந்த இடத்தின் தற்போதைய பெயர் பெத்லஹம் என்பதாகும்.

ஜேக்கப் பிறகு தனது குடும்பத்துடன் தனது தந்தை இஸ்ஹாக்கிடம் வந்தடைகிறார். பெரும் நோய் வாய்ப்பட்டிருந்த இஸ்ஹாக் சிறிது காலத்தில் மரணமடைந்து விடுகிறார். இஸ்ஹாக் மரணமடையும் போது அவரது வயது 180 என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன (3)

ஜேக்கப்பின் 12 மகன்களில் ஜோசப் தந்தையைப் போல் குணாதிசயம் கொண்டவராக வளர்ந்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் ஜேக்கப்பிடம் இருந்த அந்த புனிதத் தன்மை பொருந்திய மனிதராக இளைஞராக வளர்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மற்ற சகோதரர்களைப் பொல் அல்லாமல் தந்தை ஜேக்கப்பிடம் அதிக நேரம் இருப்பதும் அவருடைய இறைப்பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்வதுமாக வாழ்கிறார். இதனால் ஜேக்கப் மற்ற பிள்ளைகளை விட ஜோசப்பை அதிகமாக நேசிக்கிறார்.

ஏற்கனவே ஜேக்கப்பை அதிகமாக அவரது தாயார் நேசித்த போதும் இசாயுவை தந்தை இஸ்ஹாக் அதிகமாக நேசித்த காரணத்தால் எழுந்த குழப்பம் தீர்வுக்கு வந்த போது தற்போது ஜேக்கப்புடைய பிள்ளைகளின் மத்தியில் இப்போது இந்த புதிய குழப்பம் ஆரம்பமாகியது.

தந்தை ஜேக்கப் தனது சகோதரன் ஜோசப்பை மட்டும் அதிகம் நேசிக்க காரணமென்ன என்று துப்பறியத் தொடங்கினர் மற்ற சகோதரர்கள். அப்போது ஜோசப்பிற்கு உறக்கத்தில் கனவு ஒன்று தோன்றுகிறது. அக்கனவில் ஜோசப் பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் மற்றும் சந்திரனையும் காண்கிறார். அவை அனைத்தும் ஜோசப்பின் முன்னால் மண்டியிட்டு வணங்குகின்றன. இதை ஜோசப் தனது தந்தை ஜேக்கப்பிடம் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட ஜோசப் இந்த கனவைப் பற்றியோ அல்லது தன்னிடம் இதை சொன்னதைப் பற்றியோ வேறு யாரிடமும், சொல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார். காரணம் இந்த கனவின் மூலம் ஜோசப் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட தூதராகும் அறிகுரி தோன்றுவதாக ஜேக்கப் எண்ணுகிறார்(4). ஜேக்கப் மகனுக்கு 'இறைவன் உன்னை இறைத்தூதராக தேர்ந்தெடுப்பான். உனக்கு கனவுகளின் விளக்கங்களை கற்றுக் கொடுத்து அவனது அருளை உன் மீது அதிகமாக்கி வைப்பான்' என்று அறிவிக்கின்றார். தூதாரானால் அல்லது ஜோசப் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மற்ற சகோதரர்கள் பொறாமை கொள்வார்கள், அதனால் ஜோசப்பை அவர்கள் கொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று தந்தை ஜேக்கப் பயம் கொள்கிறார்.

தூதர் என்ற அந்தஸ்தும் கௌரமும் அப்போது மிகவும் உன்னதமானது. அது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு சகோதரரும் விரும்புவதும், அப்படி அது தனக்குக் கிடைக்காமல் போனால் கிடைக்கப் பெற்ற சகோதரனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் பகைமையாக உருவானது.

வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி 11 நட்சத்திரங்கள் ஜோசப்பின் சகோதரர்கள் என்றும் சூரியன் தந்தையாகவும் சந்திரன் தாயாகவும் ஜோசப்பின் முன்னல் வணங்கி நிற்கின்றனர் என்று ஜோசப்பின் கனவிற்கு விளக்கமளிக்கின்றனர். பைபிளில் இந்தக் கனவை ஜோசப் தனது தந்தை மற்றும் சகோதரர்களுக்கு தெரிவித்ததாக அறிவிப்பு உள்ளது(5).

இதனால் சகோதரர்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை உருவாகிறது. ஜோசப்பின் காரணத்தால் தங்களுக்கு தனது பெற்றோர்களிடத்தில் அதிக பாசம் இல்லை செல்வாக்கு இல்லை என்று பொறாமை கொள்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் ஜோசப்தான் அவரை கொன்றுவிடலாமா ஆலோசனை செய்கின்றனர். தூதராக தேர்ந்தெடுக்கப்படுவது இறைவனின் உரிமைக்கு உட்பட்ட செயல் என்ற நிலை மாறி, தந்தை யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரே தூதராகும் அந்தஸ்தைப் பெற்றவர் என்ற எண்ணம் சகோதரர்களுக்கு மத்தியில் உருவாகிறது. இதற்கு காரணம் ஜேக்கபிற்கு தந்தை இஸ்ஹாக்கின் மூலம் கிடைத்த ஆசீர்வாதமே காரணம் என்ற தவறான சிந்தனையே.

அதில் ஒரு சில சகோதரர்கள், கொல்ல வேண்டாம் ஜோசப் இன்னும் சிறுவனாகத்தான் இருக்கின்றார், ஆதலால் எங்காவது காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடலாம் என்று மாற்று ஆலோசனை வழங்குகின்றனர். காட்டிற்கு அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் எறிந்துவிடலாம். எதேனும் வர்த்தகக் கூட்டம் கிணற்றில் இருக்கும் ஜோசப்பை பார்த்து அழைத்து சென்றுவிடுவார்கள். வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள்ளட்டும், ஆனால் நம்மிடத்தில் திரும்ப வரக்கூடது, எதற்காக ஒரு கொலையைச் செய்ய வேண்டும், அதிலும் அவர் நமது சகோதரர், எப்படியாவது ஜோசப்பை தங்களின் வாழ்விலிருந்து தூரமாக்கிவிட வேண்டும் முடிவு செய்கின்றனர். ஆனால், அவர்களின் பிரச்சனை எப்போதும் தந்தையுடனேயே இருக்கும் ஜோசப்பை எப்படி தனியாக அழைத்துச் செல்வது.. என்ன காரணத்தைச் சொல்லி தூரமாக கூட்டி செல்வது.. அப்படி எதையாவது சொன்னாலும் தந்தை நம்மை நம்பி ஜோசப்பை அனுப்பி வைப்பாரா என்றெல்லாம் ஆலோசனை செய்யலாயினர்.

இறுதியாக சகோதரர்கள் அனைவரும் ஜோசப்பை காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடுவது என்று முடிவெடுத்து தந்தை ஜேக்கப்பிடம் அனுமதி கேட்கச் சென்றனர். தந்தையோ அனுமதி தர மறுக்கிறார். காட்டில் ஒநாய் ஏதேனும் சிறுவன் ஜோசப்பை கொன்று தின்றுவிடும் என்று மறுக்கிறார். ஆயினும் சகோதரர்கள், பயப்பட வேண்டாம் நாங்கள் என்ன அப்படி பலமில்லாதவர்களா, நிச்சயம் ஒநாயிடம் எங்களின் சகோதரனை பலி கொடுத்துவிட மாட்டோம், எங்களுடன் வரட்டும், அவர் விளையாட வாய்ப்பு கொடுங்கள் என்று வாதம் செய்து தந்தையை சம்மதிக்க வைக்கின்றனர் (6).

அவர்கள் ஜோசப்பை அழைத்துக் கொண்டு காட்டிற்கு செல்கின்றனர். அங்கே வேண்டுமென்றே அவரை பின்னால் விட்டுவிட்டு முன்னால் தூரமாகச் செல்கின்றனர். பிறகு ஜோசப்பை அங்கிருக்கும் ஒரு பெரும் கிணற்றின் அருகில் நிற்க வைத்து அவருடைய சட்டையை மட்டும் கழட்டிக் கொண்டு அவரை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். பிறகு ஆடு ஒன்றை அறுத்து அதன் இரத்தத்தில் ஜோசப்பின் சட்டையை நனைத்து எடுத்து தந்தை ஜேக்கப்பிடம் எடுத்துச் சென்று அழுகின்றனர்.

எதிர்பாராமல் ஜோசப்பை அவர்கள் தனியாக விட்டுச் சென்றபோது ஒநாய் ஒன்று அவரை கொன்று தின்றுவிட்டது என்று அழுது செய்தியைச் சொல்கின்றனர்.(7)

ஜேக்கப் அவர்களின் செய்தியை நம்ப மறுக்கிறார். அவர்கள் காட்டிய ஜோசப்பின் சட்டை கிழியாமல் இருப்பதால் இது மற்ற மகன்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று வருத்தம் கொள்கிறார். இழந்த மகனுக்காகவும் அவர் திரும்ப கிடைக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தித்துப் பொருமையைத் தேடுகிறார்(8). இந்த சரித்திரத் திருப்பம் இஸ்ரேலிகளை ஒரு புதிய இடத்திற்கு பயணம் செய்ய வைக்க இருப்பதை இறைவனே முற்றிலும் அறிந்தவனாக இருக்கிறான்.

இஸ்ரேலிகள், எப்போதெல்லம் இறைவனின் பக்கம் இருக்கின்றார்களோ அப்போதெல்லாம் அவர்கள் இறைவனின் பாதுகாப்பு பெற்றவர்களாகவும் உலகில் சுகமாக வாழ்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இது போன்ற பொறாமையாலும், ஏமாற்றம் செய்வதாலும் அவர்கள் இறை ஆணையை புறக்கணித்து வாழும் போது பிரச்சனைக்கு உள்ளவதும் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற்றப்படுவதுமாக அவர்களது வாழ்க்கை உருமாறி உள்ளதை இனி வரும் வரலாறு தெளிவாக தெரிவிக்கிறது. ஜேக்கபின் மகன்களில் ஜோசப் மட்டுமே இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். மற்ற மகன்களில் பெரும்பாலோர் சத்தியத்தின் பாதையில் இருந்தார்களா அல்லது தவறிப் போனார்களா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு பின்னால் வரும் வரலாற்றைப் பார்க்கும்போது அவர்கள் நேர்வழியிலிருந்து தவறியவர்களாகத்தான் இருக்குமோ என்ற ஐயம் வருகிறது. இறைவனே போதுமானவன்.

கிணற்றில் எரியப்பட்ட ஜோசப் அவ்வழியாக வரும் வர்த்தக் கூட்டம் தண்ணீர் இறைக்க எத்தனிக்கும் போது இச்சிறுவரைப் பார்த்து அவரை காப்பற்றுகின்றனர். அத்துடன் அவரை மறைவாக எடுத்துச் சென்று சொற்ப காசுகளுக்கு வேறொருவருக்கு விற்று விடுகின்றனர். ஜோசப்பை வாங்கிய ஒரு எகிப்திய மனிதர் ஜோசப்பை தனது மனைவியிடம் அழைத்துச் சென்று இச்சிறுவனை தனது மகனாக தத்து எடுத்துக் கொள்ளலாம், இவரை நன்றாக கவனித்துக் கொள் என்று தனது குடும்பத்தில் வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்கிறார்(9)

பைபிளின் கூற்றுப்படி ஜோசப்பின் சகோதரர்கள் ஜோசப்பை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். ஆனால் அவ்வழியே வரும் வர்த்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஜோசப்பை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து, ஜோசப்பை அந்த வர்த்தக் கூட்டத்திற்கு 20 ஷெக்கல் பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று விடுகின்றனர்(10).

ஜோசப்பை விலைக்கு வாங்கிய அந்த மனிதர், எகிப்து நாட்டின் அதிபதியான பரோனிடம் நிதி அமைச்சரக பணியாற்றும் ஒரு பெரும் மனிதர்.

(தொடரும்)


1. Genesis (33)

2. Genesis (34)

3. Stories of the Prophets (page 225) by Ibn Khathir

4. Holy Quran (12:4-6)

5. Genesis (37)

6. Holy Quran (12:11-14)

7 & 8. Holy Quran (12:15-18)

9. Holy Quran (12:19-22)

10. Genesis (37)

வரலாற்றில் சில ஏடுகள் - 9

யூத குலத்தின் தொடக்கம் - ஜேக்கப்பின் ஹரன் வாழ்க்கை, திருமணம் மற்றும் மல்யுத்தம்.

இஸ்ஹாக்கின் வாழ்க்கையிலும் சரி அதைத் தொடர்ந்து வந்த ஜேக்கப்பின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களின் ஓரிறைக் கொள்கையின் செயல்பாட்டை அறிய முடியவில்லை. திருக் குரானிலும் அவர்களது வாழ்க்கைத் தொடர்பான அதிக குறிப்புகள் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை பொதுவாகவே வெறும் குடும்ப வாழ்க்கையாகவும் சகோதரர்களுக்குள் எழும் பூசல்களை விவரிக்கக் கூடிய வரலாறாகவே அறியமுடிகிறது.

முந்தைய நபிமார்கள் வரலாற்றிலிருந்து திருக் குரான் பெரும்பாலும் தேவையான செய்திகளை மட்டுமே சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஜேக்கப் போன்ற பல இறைத்தூதர்களின் பெயரையும் அவர்கள் இறைப்பணி செய்தவர்களாக இருந்தார்கள் என்று மட்டுமே சொல்வதுடன் அவர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லாத காரணத்தால் பைபிளுடன் சேர்ந்து திருக் குரானிலிருந்து மேற்கோள்கள் எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை.

திருக் குரான் வரலாற்றைச் சொல்லும்போது அதை தெளிவாகவும், அழகாகவும் தேவையற்றச் செய்திகள் இல்லாமல் படிப்பினைகளை மட்டுமே அரிதியிட்டு வழங்குகிறது. ஆனால் அதே செய்திகள் பைபிளிலும், தோராவிலும் (பழைய ஏற்பாட்டிலும்) சொல்லப்படும்போது அது கிட்டத்தட்ட பல இடைச் செருகல்களுக்கு உட்பட்டு, மனித கையாடல்கள் செய்யப்பட்ட ஒரு சரித்திர புத்தகம் போல் இருக்கிறதே தவிர்த்து வேத புத்தகம் போல் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

இறைவனும் திருக் குரானில் 'வரலாறுகளில் மிக அழகியதை நாம் உமக்கு கூறுகின்றோம்'(1) என்று மனித குலத்திற்கு தேவையானதை மட்டும் முந்தைய இறைத்தூதர்களின் வரலாறுகளையும் மற்றும் இன்னும் பிற பல வரலாற்றுச் செய்திகளையும் கருத்துக்களுக்கு உட்பட்டே வழங்குகிறான்.

ஜேக்கப் தனது தாய் மாமனான லபான் வாழும் ஹரன் வந்தடைகிறார். அங்கே லபானிடமிருந்த ஆடு மாடுகளை மேய்ப்பவராகவும் அதைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுத்தப் படுகிறார். 4000ம் வருடங்களுக்கு முன்பு சிறந்த பொருளாதாரம் என்பது கால் நடைகள் மட்டுமே. விவசாயத்தைவிட கால் நடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம்.

ஜேக்கப் அங்கு வாழ்ந்து வரும்போது லபானின் இரண்டாவது மகளான ராச்சல் மீது காதல் கொள்கிறார். ராச்சல் தன் சகோதரி மூத்தவள் லியாவை விட அழகிலும் அறிவிலும் சிறந்தவாரக இருக்கவே ஜேக்கப் ராச்சலை விரும்புகிறார். ராச்சலை தனக்கு திருமணம் செய்துதர லபானிடம் வேண்டுகிறார். ராச்சலை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தன்னிடம் ஏழு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று லபான் கட்டளை இட ஜேக்கப் ஏற்றுக் கொள்கிறார். ஏழு வருடங்கள் கழித்து லபான் தனது மகளை திருமணம் செய்துவிக்கிறார். முதலிரவும் நடந்து முடிகிறது. ஆனால் காலையில்தான் ஜேக்கபிற்கு புரிகிறது தன்னுடன் முதலிரவில் இருந்தது ராச்சல் அல்ல லபானின் முதல் மகள் லியாஹ் என்று. இதனால் சோகமடைந்த ஜேக்கப் லபானிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றியதை முறையிடுகிறார். மூத்தவள் இருக்க இளையவளை திருமணம் செய்து தருவது எங்கள் பரம்பரையில் வழக்கமில்லை என்று காரணம் கூறுகிறார். தன்னிடம் இன்னும் ஏழு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்தால் ராச்சலை திருமணம் செய்து தருவதாக லபான் வாக்களிக்க ஜேக்கப் இன்னும் ஏழு வருடங்கள் அங்கேயே தங்கி வேலை செய்கிறார்.

ஏழு வருடங்கள் கழிந்தபின் ராச்சலையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலக் கட்டங்களில் ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆனால் மோசஸ் (மூசா நபி) இறைத்தூதர் மூலமாக இறைவன் அருளிய தோர என்று அழைக்கப்படும் (தவுரா) வேதத்தின் படி ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்வது கூடாது என்று தடுக்கப்படுகிறது. ஒருவள் மரணமடைந்து விட்டால் மற்றொருவளை திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் ஒருத்தி உயிருடன் இருக்கும்போது இன்னொருத்தியை திருமணம் செய்யக்கூடாது. திருக் குரானிலும் அதே சட்டம் சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இதன் பிறகு லபான் தனது மூத்த மகள் லியாவிற்காக ஜில்பா என்பவளையும், ராச்சலுக்காக பில்ஹா என்பவளையும் அடிமைகளாக ஜேக்கபிற்கு அன்பளிப்பாக வழங்குகிறார்.(2) நீண்ட காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த முதல் மனைவி லியாவின் மூலமாக முதன்முறையாக குழந்தை பிறக்கிறது. இதனால் பொறாமை அடைந்த ராச்சல் தன் மூலமாகவும் பிள்ளை பிறக்காததால் தனது அடிமையான பில்ஹாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து பில்ஹா குழந்தை உண்டாகிறார். இதை அறிந்த லியாஹ் தன் பங்கிற்கு தனது அடிமையான ஜில்பாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து அவளும் குழந்தை பெற்றெடுக்கிறாள். பிறகு ராச்சலும் குழந்தைப் பெற்றெடுக்கிறார். இவ்வாறு ஜேக்கப் தனது நான்கு மனைவிகள் மூலமாக 12 பிள்ளைகளுக்கு தந்தையாகிறார்.(3) இந்த 12 பிள்ளைகளும் பிற்காலத்தில் 12 யூத கோத்திரங்களாக பல்கி பிரிந்து செல்கின்றனர்.

12 பிள்ளைகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ராச்சல் ஈன்றெடுத்த ஜொசப் (யூசுப்) மற்றும் பெஞ்சமின் இருவருமாகின்றனர்.

ஏறக்குறைய இருபது வருடங்கள் ஹரனிலேயே வாழ்ந்து வந்த ஜேக்கப் தனது தந்தையிடம் திரும்ப நினைக்கிறார். லபானிடம் தனது மனைவியரிடமும் அதைத் தெரிவித்து லபானிடமிருந்து சில குறிப்பிட்ட ஆடு மாடுகள் மற்றும் இன்னுமுள்ள கால்நடைகளைப் பெற்றுக் கொண்டு பாலஸ்தீனை நோக்கி திரும்ப ஆயத்தம் செய்கிறார்.

தான் பெற்றுக் கொண்ட கால்நடைகளை அதிகமாக்க வேண்டி ஜேக்கப் சில வழிகளை கையாள்கிறார். தனக்கு பங்காக கிடைத்த அந்த கால்நடைகளை பிரித்து அவைகளை தனித்து மூன்று நாட்கள் நடந்து செல்லக்கூடிய தொலைவிற்கு வெறு இடங்களுக்கு மேய்ச்சலுக்காக நடத்திச் செல்கிறார். அங்கே போப்லார் (Poplar), அல்மாண்ட் (Almond) மற்றும் பிளான் (Plane) மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி அவைகளின் பட்டைகளை உரித்து அக்கிளைகளை கால்நடைகள் நீரருந்தும் தண்ணீர் கிடங்குகளில் போட்டு வைக்கிறார். கால்நடைகள் வெயில் நேரங்களில் தாகத்துடன் அங்கு நீர் அருந்தியவுடன் அவைகள் உடலுறவு கொள்கின்றன. அவைகளின் மூலம் அந்த கால்நடைகள் உடனுக்குடன் கருத்தரிக்கின்றன. இதனால் ஜேக்கப்பிடமிருந்த கால்நடைகள் குறைந்த காலத்தில் அதிகமாக பெருகின என்று பைபிள் கூறுகிறது. (4)

(கால்நடை அபிவிருத்திச் செய்யக்கூடியவர்கள் இந்த முறையை கையாண்டு பார்ப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இந்த மரங்களின் தமிழ்ப் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை).

தனது தமையன் இசாயுவை சமாளிக்க வேண்டி அதில் சில கால்நடைகளை அவருக்கு பரிசாகவும் எடுத்துச் செல்கிறார். அதில் நூற்றுக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களுமாக தனக்கு முன்னால் அனுப்பி வைக்கிறார். அத்துடன் இந்த கால்நடைகளை நடத்திச் செல்லக்கூடிய அடிமைகள் இசாயுவை சந்திக்க நேர்ந்தால் 'இவை அனைத்தும் உங்களின் (இசாயுவின்) அடிமையான ஜேக்கபிற்கு சொந்தமானது. இவை அனைத்தையும் அவர் உங்களுக்காக (இசாயுவிற்காக) அன்பளிப்பாக கொடுக்கச் சொன்னார்' என்று சொல்ல வேண்டுமென்ற கட்டளையுடன் அனுப்பி வைத்தார்.

ஜேக்கப் இரவில் பயணம் செய்வதும் பகலில் இசாயுவிற்காக பயந்து மறைந்துக் கொள்வதுமாக இரண்டு தினங்களை பயணத்தில் கழிக்கிறார். தனக்கு முன்னால் அனுப்பிய கால்நடைகளை இசாயு பெற்றுக் கொண்டார் என்று தெரிந்தால் ஒழிய தான் பகலில் பயணம் செய்வதில்லை என்று இரவில் பதுங்கி பதுங்கி பாலஸ்தீன் நோக்கி பயணம் செய்கிறார்.

அதிகாலை நேரத்தில் அவர் பயணம் செய்யும்போது ஓரிடத்தில் அவர் ஒரு மனிதருடன் மல்யுத்தம் செய்ய நேரிடுகிறது. மல்யுத்தம் காலைவரை தொடர்கிறது. அம்மனிதனால் ஜேக்கப்பை தோற்கடிக்க முடியவில்லை. முடிவில் ஜேக்கப் மல்யுத்தத்தில் வெற்றி பெருகிறார்.

மல்யுத்தம் முடிந்தவுடன் அம்மனிதர் ஜேக்கப்பைப் பார்த்து நீ ஒரு வழிப்போக்கனைப் போல் தெரிகிறாயே, உனது பெயர் என்ன என்று கேட்க, ஜேக்கப் தனது பெயரை அவரிடம் சொல்கிறார். உடனே அம்மனிதர், ஜேக்கப்பைப் பார்த்து, உனது பெயர் ஜேக்கப் அல்ல இன்றிலிருந்து உனது பெயர் இஸ்ரவேல் என்று அறிவித்து தான் ஒரு மனிதன் அல்ல, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர் என்று அறிவித்து மறைந்து விடுகிறார். அன்று முதல் ஜேக்கப் இஸ்ரவேல் என்றே அறியப்படுவதுடன் அவரது 12 பிள்ளகளும் இஸ்ரவேலர்கள் என்றே அழைக்கப் படுகின்றனர். (5)

வில்லியம் நெய்ல் என்பவர் எழுதிய One Volume Bible Commentry யில் பக்கம் 59ல் ஜேக்கப் தேவதூதருடன் போரிட்டதாக சொல்லாமல் இறைவனுடனே போரிட்டதாக எழுதுகிறார். கடவுள் பூமிக்கு மனித ரூபம் எடுத்து வந்து ஜேக்கப்புடன் மல்யுத்தம் செய்ததாகச் சொல்கிறார். ஏறக்குறைய கடவுளையே தோற்கடித்ததாகவும் எழுதுகிறார். அதன் காரணமாகத்தான் ஜேக்கப்பிற்கு இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஜேக்கப் இறைவனையே மல்யுத்ததில் தோற்கடித்தாரா அல்லது இறைவனின் தேவதூதனை தோற்கடித்தாரா என்ற ஆராட்சிக்கு செல்ல விரும்பவில்லை. மல்யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததுடன் நிறுத்திக் கொண்டு, இதன் பிறகு இந்த வரலாற்றுக் கட்டுரையை 'யூதர்களின் வரலாறு' என்ற தலைப்பிலிருந்து இனி 'இஸ்ரேலியர்களின் வரலாறு' என்று மாற்றித் தொடர்கின்றேன்.

(தொடரும்)

1. Holy Quran (12:3)

2. Genesis (29)

3. Stories of Prophets (Page 221) by Ibn Khathir

4. Genesis (30)

5. Genesis (32)

வரலாற்றில் சில ஏடுகள் - 8

யூத குலத்தின் விசித்திரமான ஆரம்பம்

யூத குலத்தின் தொடக்கமே ஒரு அமர்க்களமான தொடக்கமாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. ஆப்ரஹாமின் இரண்டாவது மகனான இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் அவர்களின் பிள்ளைகள்தான் பல கோத்திரங்களாக பிரிந்து யூதர்கள் என்று உலகிற்கு அறிமுகமாகின்றார்கள். உலகம் அறியப்படுகிற இந்த ஜேக்கப்பின் துவக்கம் அதாவது கடவுளுக்கு நெருங்கியவராக அல்லது கடவுளின் அருள் முற்றிலும் பெற்றவராக அல்லது கடவுளின் அருளிற்கு பாத்திரமானவராக அவர் மாறுவதற்கு அவரது தந்தை இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே காரணாமாயிருந்ததாக ஆதியாகாமம் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கின் பரிந்துரையின் பெயரால்தான் ஜேக்கப் கடவுளின் அருளுக்கும் இன்னும் இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார் என்பது விந்தையாக உள்ளது.

இஸ்ஹாக் தள்ளாத வயதை எட்டிய காலத்தில் தனது ஆசீர்வாதத்தை தனது மூத்த மகன் இசாயுவிற்கு தர விரும்பினார். அவ்வாறு தனது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் தான் மிகவும் நேசிக்கும் தலை மகன் இசாயுவிற்கு தருவதன் மூலம் இசாயு இறைவனின் அங்கீகாரம் பெற்ற மனிதராக, இறைத் தூதராக, தனக்கு (இஸ்ஹாக்கிற்கு) சமூகத்தில் இருந்த அதே கௌரவத்தை பெற்றவராக, தனக்குப் பிறகு தனது கொள்கைகளை சரிவர நடத்திச் செல்லவும் சமூகத்தை தலைமைத் தாங்கிச் செல்லவும் இசாயுவால் இயலும் என்று இஸ்ஹாக் விரும்பினார். ஆகவே தன்னிடம் இது நாள் வரை இருந்த அந்த புனிதத் தன்மையை தனது மூத்த மகனுக்கு அளிக்க விரும்பினார். ஆனால் அவரது கண் பார்வையோ மங்கிப் போயிருந்தது (1).

ஆகவே, இஸ்ஹாக் தனது மூத்த மகன் இசாயுவை அழைத்து 'மகனே இசாயு, நீ வேட்டையாடுவதில் வல்லவன். ஆகவே எனக்காக ஒரு காட்டு விலங்கை வேட்டையாடி நல்ல ருசியான உணவாக சமைத்து கொண்டுவா. அதை நான் உண்டு முடித்து எனது ஆசீர்வாதத்தை உனக்கு அளிக்க விரும்புகிறேன்' என்று சொல்லி இசாயுவை வேட்டையாட அனுப்பி வைத்தார் இஸ்ஹாக். இதை மறைவாக நின்று செவியுற்ற ரெபெக்கா, இஸ்ஹாக்கின் மனைவி, அதிர்ந்து போய், இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் தான் அதிகம் நேசிக்கும் இரண்டாவது மகனான ஜேக்கப்பிற்கே கிடைக்க வேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினார்.

மகன் ஜேக்கப்பை அழைத்து தாய் ரெபெக்கா, 'மகனே ஜேக்கப், உனது வயதான தகப்பனார் தனது ஆசீர்வாதத்தை இசாயுவிற்கு தர விரும்புகிறார். நீ உடனே இரண்டுவிதமான ஆடுகளை பிடித்து அறுத்துக் கொண்டுவா. நான் அவைகளை சமைத்து நல்ல உணவாக்கி உன்னிடம் தருகிறேன். நீ அதை உனது தந்தை இஸ்ஹாக்கிற்கு பரிமாறி அவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்' என்று ஜேக்கப்பை தயார் செய்தார் (சதிகார) தாய். (இது ஆதியாகாமத்தில் பதியப்பட்டுள்ள வேத மொழிகளே. ஆனால் இந்த சதி இப்படி அரங்கேறியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை).

ஜேக்கப் உணவுடன் தந்தையிடம் செல்ல, இஸ்ஹாக்கின் மங்கிய பார்வையின் காரணமாக வந்தவரிடம் 'யார் நீ?' என்று கேட்க, ஜேக்கப் 'உங்களின் மகன்' என்று சொல்கிறார். இஸ்ஹாக் அருகில் வந்து ஜேக்கபின் கைகளைத் தொட்டுப் பார்த்து 'குரல் ஜேக்கப்பைப் போல் இருக்கிறது, ஆனால் கைகளோ இசாயு போல் இருக்கிறது' என்று கூறிவிட்டு ஜேக்கப் பரிமாறிய உணவை இஸ்ஹாக் உண்ணுகிறார்.

உணவு உண்டு முடித்து, தனக்கு முன்னால் அமர்ந்திருப்பது இசாயு என்பதை அறியாமல் ஜேக்கப்பிற்கு தனது ஆசீர்வதத்தை அளிக்கிறார். 'நீ மற்றெவரையும் விட சிறப்பானவனாக இருப்பாய். உனது சகோதரர்களைவிட நீயே வல்லமை பெற்றவனாக இருப்பாய்' என்று ஆசீர்வதிக்கிறார்.(2)

யூத குலத்தின் பிதா தனது தந்தையை ஏமாற்றி அவரின் ஆசீர்வாதம் பெறுவதாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. என்ன ஒரு விசித்திரமான யூத குலத்தின் தொடக்கம். ஆரம்பமே பிறரை ஏமாற்றுவதில் தொடங்கும் சரித்திரமாக அமையப் பெற்றுள்ளது. இதன் மூலம் யூத குலத்தில் பிறந்தவர்களுக்கு சொல்லப்படும் படிப்பினைதான் என்ன? ஆண்டவனையே ஏமாற்றலாம் என்பதா? அல்லது ஏமாற்று வேலை செய்வதில் தவறில்லை என்பதா? ஆண்டவனையே ஏமாற்றலாம் அதில் தவறில்லை என்றால் இந்த உலகில் வேறு யாரை வேண்டுமானலும் ஏமாற்றலாம் அதில் குற்றமில்லை!

இஸ்ஹாக்கின் தகப்பனாரான ஆப்ரஹாம் தனது இளவயது முதல் மரணம் அடையும் வரை பல சிரமங்களும், வேதனைகளும் அடைந்து இன்னும் சொல்லப்போனால் தனது இளவயதில் நெருப்பிலே தூக்கி எறியப்பட்டார். இப்படி பல கொடூரமான நிலைகளிலும் அவர் மனிதர்களை தவறான பாதையில் விட்டு ஏக இறைவனின் பக்கம் அழைத்தவராகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். தியாகங்கள் பல செய்து தனது குடும்பத்தையும் தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் ஓரிறை பக்கம் கொண்டுவந்து தனது சந்ததியை உருவாக்கினார். அத்தோடு நில்லாமல் ஓரிறைவனை வணங்கும் கூட்டமாக தனது சமூகத்தையும் மாற்றி அமைத்தார். அவ்வாறு வாழ்நாள் முழுவதும் கஷ்டமடைந்த அவருக்கு இறைவனைத் தவிர்த்து வேறு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. அவ்விறைவனின் உதவி கூட பல்வேறு இறைச் சோதனைகளுக்குப் பின்னரே அவருக்குக் கிடைத்தது. ஆதியாகாமத்தில் ஜேக்க்ப் தனது தந்தை இஸ்ஹாக்கை ஏமாற்றுவதன் மூலம் அவ்விறைவனின் அருளைப் பெற்றவராகிரார் என்ற இந்த சரித்திர வேதத்தின் கூற்று ஏற்றுக் கொள்ள இயலாததாகத்தான் என்னைப் போன்றவர்களுக்கு தெரிகிறது. நிச்சயம் ஜேக்கப் என்ற இறைத்தூதர் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்பதே (இந்தக் கட்டுரையை எழுதியவன் என்ற முறையில்) எனது கருத்து.

ஆப்ரஹாம் இஸ்மாயிலையும் இஸ்ஹாக்கையும் வளர்த்தபோது இறைவனின் உதவி அவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர்களது செயல்களை இறைவனின் பக்கமே பணி செய்ததாக இருக்குமாறு அமைத்தாரே தவிர்த்து தனது ஆசீர்வாதத்தால் மட்டுமே தனது பிள்ளைகளின் வாழ்வில் இறைவனின் அருளை கொண்டுவரவில்லை. மாறாக அவர்களது செயல்களில் ஓரிறைவனின் கொள்கையை நிலைக்கச் செய்து அவர்களின் வாழ்க்கை மற்றும் நடைமுறை வழியாக இறைவனின் ஆசீர்வாத்தைதை பெற வைத்தார். இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கைவிட இறைவனின் தோழர் என்று அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் தனது தந்தைக்கு ஓரிறை சிந்தனை வரவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்ய முடிந்ததே தவிர்த்து தனது தந்தை நாளை இறைவனின் முன்னால் குற்றவாளியாக நிற்பதை தடுக்கும் சக்தியற்றவராக இருந்தார். ஆனால் அவரது மகனோ தனது ஆசீர்வாதத்தின் மூலம் அவரது மகனான ஜேக்கப்பிற்கு இறைவனின் தூதர் பதவியை அடையச் செய்தார் எனும் ஆதியாகாமத்தின் வரிகள் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

ஆனால் இஸ்ஹாக்கின் மைந்தனான ஜேக்கப்பிற்கு இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் அதாவது தன் மூலமாக தனது மகனுக்கு இறைவனின் அருளை நிலைநிறுத்தச் செய்ய அவரின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானதாக இருந்ததாக பைபிளின் ஆதியாகாமம் அறிவிப்பதுதான் விந்தையாக இருக்கிறது.

இறைவனின் அருளுக்கு முற்றிலும் பாத்திரமான ஒருவரின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தால் ஒரு மனிதன் இறைவனின் அருளுக்கு தகுதியானவனாக மாறலாம் என்று ஆதியாகமத்தின் மூலம் அறிய முடிகிறது?

ஜேக்கப்பின் வாழ்க்கையைப் பற்றி திருக் குரானில் அதிகமான விளக்கங்கள் இல்லாத காரணத்தால் ஆதியாகாமத்தின் இந்த கூற்றினை சரி பார்க்க இயலாமல் போகிறது. அதே நேரம் ஆதியாகாமத்தில் உள்ளதை உள்ளபடி கூறுவதன் மூலமே இந்த யூத குலத்தின் சரித்திரத்தை வேதங்களின் வழியாக கொடுக்க முடியும். அவை அறிவிற்கு ஏற்றுக் கொள்ள இயலாமல் போனாலும் இருக்கின்ற வேதங்களின் வழியாகத்தான் இந்த வரலாற்றைச் சொல்ல முடியும்.

(எனது கருத்துப்படி ஆதியாகாமத்தில் சொல்லப்படுகின்ற இந்த சரித்திரக் கதை மனிதர்களால் பிற்காலத்தில் பைபிளில் செய்யப்பட்ட இடைச்செருகலாக இருக்கலாம். கரணம் திருக் குரானில் ஜேக்கப் ஒரு இறைத்தூதராக யாகூப் என்ற பெயரில் சொல்லப்படுகிறது. அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இறைவனே போதுமானவன், அவனே முற்றிலும் அறிந்தவன். அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது தகப்பனாரான இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானது என்ற ஆதியாகாமத்தின் கூற்று ஏற்புடையதாகத் தெரியவில்லை. நல்லது, இப்போது சரித்திரத்திற்கு வருகிறேன்.)

ஜேக்கப் இவ்வாறு தனது தந்தையின் ஆசீர்வாததைப் பெற்று வெளியேறியவுடன் இசாயு தன் தந்தையிடம் வருகிறார். ஆனால் எல்லாம் முடிந்து போயிற்று. தனது தந்தையின் மூலம் நிகழ்ந்ததை அறிந்து வேதனைப் படுகிறார். தந்தை இஸ்ஹாக்கும் தனது மூத்த மகன், மிகவும் நேசித்த மகன் இசாயுவிற்காக கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.(3)

இதனால் கோபமடைந்த இசாயு தமையன் ஜேக்கப்பை கொலை செய்யப்போவதாக கோபத்துடன் ஜேக்கப்பைத் தேடி புறப்படுகிறார். இதை அறிந்த ரெபெக்கா மகன் ஜேக்கப்பை அழைத்து ஹரனில் வசித்துக் கொண்டிருக்கும் தனது சகோதரன் லபானிடத்தில் சென்று தஞ்சம் பெற்றுக் கொள்ளுமாறு அனுப்பி விடுகிறார்.

இசாயு தான் இழந்து போன இந்த நிலையை எண்ணி வருத்தமுற்று தனது பெரிய தந்தை இஸ்மாயிலின் இடத்திற்கு சிறிது காலம் சென்றுவிடுகிறார். அங்கே இஸ்மாயிலின் மகளை திருமணம் முடித்து வாழ்ந்ததாக(4) வரலாறு மூலம் அறியமுடிகிறது.

ஜேக்கப் ஹரன் செல்லும் வழியில் இரவில் ஓரிடத்தில் உறக்கம் கொள்ளும் போது இறைவன் கனவில் தோன்றி, 'நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் சந்ததியினருக்கும் தருவதாக' வாக்களிக்கிறார்(5). இது இறைவனால் ஜேக்கப்பிற்கு அளிக்கப்பட்ட முதலாவது வாக்குறுதி, ஆதியாகாமத்தின் படி. (இதைத் தொடர்ந்து மோசஸுக்கும் இறைவன் வாக்களிக்கிறார். அதில் அந்த இடம் கொஞ்சம் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. அதை பிறகு பார்ப்போம்.)

இந்தக் குறிப்பிட்ட வேத வசனத்தின் மூலமாகத்தான் இஸ்ரேலியர்கள் 'பாலஸ்தீனத்தை கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமி' என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த குறிப்பிட்ட வசனத்தின், வேதத்தின் வரிகளை தங்கள் இஷ்டம் போல் மாற்றி, பின் குறிப்பு இன்னும் விளக்கங்கள் என்ற பெயரில் காலம் காலமாக இடைச்செருகல்கள் செய்து வரலாற்று மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பதையும் இக்கட்டுரையின் பிரிதொரு பகுதியில் அறியத்தருகிறேன்.

உறக்கம் கலைந்து எழுந்த ஜேக்கப் மிகவும் மகிழ்ந்து தான் உறங்கிய இடத்தில் சில அடையாளங்களை ஏற்படுத்துகிறார். பிற்காலத்தில் அதே இடத்தில்தான் மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் ஆலயத்தை எழுப்புகிறார். இந்த ஆலயம்தான் தற்போது மூன்று (யூத, கிறிஸ்துவ, முஸ்லீம்) மதத்தினராலும் ஜெருசலத்தில் சொந்தம் கொண்டாடப்படுகிற ஆலயமாகா திகழ்கிறது.

(தொடரும்)

1. Genesis (27:1)

2 & 3. Gnesis (21:1-38)

4. Songs (84: 5-6)

5. Genesis (28:13)

Wednesday, August 10, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 7

யூத குலத்தின் தொடக்கம் - இஸ்ஹாக்கின் பிறப்பும் ஆப்ரஹாமின் மறைவும்
ஆப்ரஹாமின் இல்லத்திற்கு அவருக்கு அறிமுகமில்லாத ஒரு சிலர் வருகை தந்தனர். அவர்களை விருந்தினர்களாக வரவேற்று, ஒரு கொழுத்த கன்றுக் குட்டியை உணவாக்கி அவர்களை உபசரிக்கிறார் ஆப்ரஹாம். ஆனால் வந்தவர்கள் அந்த உணவை உண்ணாமல் அல்லது அவர்களது கைகள் உணவுகளை நாடிச் செல்லாமல் இருக்க ஆப்ரஹாம் அதிர்ச்சியுற்று, வந்தவர்களின் மேல் பயம் கொள்கிறார். இதை கண்ணுற்ற விருந்தினர்கள், 'பயப்பட வேண்டாம், நாங்கள் உங்களுக்கு ஓர் நற்செய்தி கொண்டு வந்துள்ளோம்' என்று அறிவித்து, ஆப்ரஹாமிற்கும் சாரவிற்கும் ஒரு ஆண்மகவு பிறக்கும் என்று அறிவித்தார்கள் (1)

இதே செய்தி பைபிளில்(2) இடம் பெற்றுள்ளது. ஆனால் அதில் விருந்தினர்கள் (தேவ தூதர்கள்) உண்ணுவதைப் போல் நடித்தார்கள். அவர்களுக்கு முன்னால் இருந்த அந்த உணவு மறைந்த்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. தேசங்களும் ராஜாக்களும் அந்த மகனிலிருந்து உருவாகுவார்கள் (3) என்றும் கூறுகின்றது.

இதைக் கேட்ட ஆப்ரஹாமும் சாரவும் திகைத்து நின்றனர். இந்த வயதான காலத்தில் அதிலும் 100 வயதைத் தாண்டிய ஆப்ரஹாமும் 90 வயதை நெருங்கிய சாராவும் எப்படி பிள்ளைப் பேறு பெறமுடியும் என்று ஆச்சர்யப்பட்டனர்.

நல்லவர்களில் வழிகாட்டியாக இஸ்ஹாக் இருப்பார் என்று இறைவன் ஆப்ரஹாமிற்கு நற்செய்தி கூறினான். ஆப்ரஹாமின் மீதும் இஸ்ஹாக்கின் மீதும் இறைவனின் அருள் நிலைத்திருக்கும். அவர்களின் சந்ததியிலிருந்து நல்லவர்களும் தீங்கிழைத்துக் கொள்வோரும் இருப்பார்கள் என்று தெரிவித்தார்கள் (4)

இறைவனின் இந்த வாக்கு ஆப்ரஹாமிற்கு மகிழ்வை தந்தது. ஆனால் அதன் இறுதியில் அமைந்த 'சில வழிகேடர்களும் இருப்பார்கள்' என்ற வார்த்தை பிற்காலத்தில் வர இருக்கும் குழப்பத்திற்கு எச்சரிக்கைச் செய்யப்பட்டதைப் போல் இருந்தது. வழிகேட்டில் இருந்தவர்கள், தங்களுக்கு தங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள், காலப்போக்கில் பிறரை வழி கெடுப்பவர்களாக மாறியதோரு நில்லாமல் தான் வந்த வழியை மறந்தவர்களாகவும் ஆனார்கள் என்பதை இந்த வரலாற்றின் வளர்ச்சியில் பார்க்கலாம்.

ஒரே குடும்பம், ஒரே சிந்தனை, ஒரே வணக்கம், ஒரே கடவுள் என்று ஆப்ரஹாமின் குடும்பம் இறைச்சேவையில் தங்களை முழுதாக இணைத்துக் கொண்டு தான் வசித்த மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மனிதர்களை ஓர் இறைவன் பக்கம் அழைத்தவர்களாக வாழ்ந்தார்கள். நல்லதை ஏவுவதும் தீமையைத் தடுப்பதுமாக வாழ்ந்த ஆப்ரஹாமின் குடும்பத்திலிருந்தே இறைவன் இறைத் தூதர்களை தான் வாக்களித்தவாறு உலகிற்கு அனுப்பி வைத்தான். ஒருவரைத் தொடர்ந்து இன்னொருவராக இறைவன் ஒருவனே என்ற கொள்கையைச் சுமந்து இறைப்பணி செய்தவர்களாக ஆப்ரஹாமின் வம்சம் பெருகத் தொடங்கியது.

ஆப்ரஹாமும் அவரது குடும்பத்தினரும் அவர்களது சந்ததியினரும் இறைவனின் பாதையில் தங்களை வழிநடத்திச் செல்லும்வரை அவர்களுக்கு இறைவனின் பாதுகாப்பு முற்றிலும் இருந்தது. அவ்வாறு இல்லாதபோது அவர்களின் இறைவனின் பாதுகாப்பு வளையத்திற்குள் இல்லாமல் போனது மட்டுமல்லாமல் அவர்கள் உலகில் அலைக்கழிக்கப்பட்ட அவலம் யூதர்களின் வரலாற்றில் நிறைந்து கிடக்கிறது. அதனைத்தான் மேற்கூறிய திருக் குரானின் இறைவசனத்தில் அவர்களின் சந்ததியினரில் வழி கெட்டுப் போனவர்களும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

(யூதர்கள் என்று பிற்காலத்தில் அறியப்படுகிறவர்களின் தோற்றுவாயான ஆப்ரஹாமின் வரலாற்றையும், யூதர்களின் பிதா என்று அழைக்கப்படுகிற இஸ்ஹாக்கின் வரலாற்றையும் அறியாமல் யூதர்களின் வரலாற்றை முழுமையாக தெரிந்ததாகச் சொல்ல முடியாது. இவ்விருவரும் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்கள் என்பதை முழுமையாக ஆய்ந்து நோக்கினால் இன்றைக்கு பிரிந்துக் கிடக்கிற உலகச் சமுதாயத்தின் அடிப்படை எங்கிருந்து தோன்றியது என்பதையும் உணரமுடியும். யூதர்கள் முதல் கிறிஸ்துவர்கள் வழியாக இன்னும் இன்று பெருகி இருக்கின்ற முஸ்லீம்கள் வரை எல்லா மக்களும் ஒரே பிரிவிலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதை புரிந்துக் கொள்வது அவசியமாகிறது. ஆனால் இதில் உள்ள ஒரு சில பிரிவினர் இந்த மூலத்தை உதாசீனப்படுத்துவதன் மூலம் தனித்துவம் என்று தேவையற்றை இடைச் செருகல்களையும் கொள்கைகளையும் உருவாக்கி தங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், இவ்வுலகின் அதிபதிகள் இன்னும் வாழத் தகுதியுள்ளவர்கள், மற்றவர்கள் எல்லோரும் இவர்களுக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும் என்ற மனித விரோதக் கொள்கைகளை செயல்படுத்த விரும்புகின்றனர். அவ்வாறு செய்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இறை பாதையை விட்டு விலகிச் சென்றவர்களே!

ஒரு ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும்தான் இந்த உலக மக்கள் பல்கிப் பெருகி பல்வேறு கோத்திரங்களாகவும், குலங்களாகவும் இன்னும் பல சமுதாயங்களாகவும், நாடுகளாகவும் வளர்ந்திருப்பதை வரலாறுகள் மூலம் தெரிந்துக் கொள்வது மனித வர்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அதற்கு ஆப்ரஹாமின் வரலாற்றை முழுமையாகத் தெரிந்துக் கொள்வது மிக மிக அவசியம்).

இக்காலக்கட்டத்தில் ஆப்ரஹாம் திரும்பவும் பக்காவிற்கு வருகை தந்து தனது இரண்டாவது மனைவியான ஹாஜிராவுடன் சிறிது காலம் வாழ்கிறார். அங்கே அவரும் அவரது மூத்த புதல்வன் இஸ்மாயிலுடன் சேர்ந்து பக்காவில் இறைவனின் ஆணைக்கிணங்க கஃபா எனும் ஆலயத்தை புதுப்பித்து அதை உலகில் மனிதர்களுக்கான முதல் ஆலயமாக வணங்குமிடமாக செய்கின்றார்கள்.(5)

இந்த ஆலயம் இவ்வுலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து அதாவது இந்த பூமியும் சொர்க்கமும் படைக்கப்பட்ட தினத்திலிருந்தே உருவாக்கப்பட்டது என்றும், இந்த உலகம் உள்ளலவும் இது அவ்வாறே இருக்கும் என்றும் கூறப்படுகிறது (6)

பெரும்பாலோர், இன்னும் முஸ்லீம்கள் கூட கஃபா என்பது இறுதித் தூதர் முஹம்மது நபி (சல்) அவர்களால் கட்டப்பட்டது என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கஃபா என்பது ஆப்ரஹாம் நபியவர்களால் புதுப்பிக்கப்பட்டது என்ற செய்தி கூட ஒரு சிலருக்கு அதிசயமாக இருக்கின்றது.

கஃபா புதுப்பிக்கப்பட்டு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழிந்தபின்பு ஜெருசலத்தில் இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் (யாகூப்) இறைத்தூதரால் மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் இன்னுமொரு இறை ஆலயம் எழுப்பப்படுகிறது.(7) பைபிளிலும் இந்த அக்ஸாவின் ஆலயம் ஜேக்கப் எனும் இறைத்தூதரால் கட்டப்பட்டது என்று சொல்ல்ப்படுகிறது.

இஸ்லாம் என்பது முஹம்மது நபி (சல்) அவர்களால் இந்த உலகிற்கு கொண்டுவரப்பட்ட மார்க்கம் என்ற தவறான சிந்தனை உள்ளவர்கள் இந்த மார்க்கம் ஆப்ரஹாம் நபியவர்களால் புதுப்பிக்கப்பட்ட மார்க்கம் என்பதை அவரது வரலாற்றைப் படிப்பவர்களுக்கு புரியலாம்.

ஆப்ரஹாமின் மனைவி சாரா தனது 127வது வயதில் மரணமடைந்ததாக பைபிள் மூலம் அறியமுடிகிறது. சாராவின் மரணத்திற்கு பிறகு ஆப்ரஹாம் கண்டூர எனும் மற்றொரு பெண்ணை மணமுடித்தாகவும் அவர்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. (8) அது மட்டுமல்லாமல் ஹாஜூன் எனும் இன்னொரு மனைவி மூலம் அவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்ததாகவும் அதே வரலாற்றுக் குறிப்பு மூலம் அறிய முடிகிறது. (9)

ஆப்ரஹாம் தனது 175வது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார். அவரை அவரது முதல் இரண்டு புதல்வர்கள் இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் இருவரும் சேர்ந்து ஹிப்ரோன் எனும் இடத்தில் அவரது முதல் மனைவி சாராவின் அடக்கத்தலத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்விக்கின்றனர். அதே இடத்தில்தான் இஸ்ஹாக் மற்றும் அவரது மகன் ஜேக்கப் அவர்கள் மரணடைந்தவுடன் அடக்கம் செய்யப்பட்டதாவும், அந்த அடக்கத்தலங்களை சாலமன் (சுலைமான்) நபியவர்கள் புதுப்பித்துக் கட்டியாதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது. அவர்களின் அந்த அடக்கத் தலங்கள் தற்போது 'கலீல் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

ஆப்ரஹாமின் மறைவிற்குபின் இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப்பற்றி அதிகமான குறிப்புகள் இல்லை. இஸ்ஹாக் தனது நாற்பதாவது வயதில் பிதுயில் என்பவரின் மகளான ரெபெக்கா (Rebekah) அல்லது ரிஃப்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.(10) அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன என்றும் அல்லது இரு குழந்தைகள் பிறக்கின்றன என்றும் பைபிள் மூலம் தெரிய வருகிறது.(11)

முதல் மகனின் பெயர் இசாயு (அரபு வழக்கில் அல்-அய்ஸ்), இரண்டாவது மகனின் பெயர் ஜேக்கப் (அரபு வழக்கில் யாகூப்). இசாயுவின் சந்ததியினர் ரோமர்கள் என்றும் ஜேக்கபின் சந்ததியினர் யூதர்கள் என்றும் வரலாற்றின் மூலம் சொல்லப்படுகிறது.

இஸ்ஹாக் தனது மூத்த புதல்வனான இசாயுவை அதிகம் நேசித்ததாகவும் அவரது மனைவி ரெபக்கா இரண்டாவது மகனான ஜேக்கபை அதிகம் நேசித்ததாகவும் பைபிள் சொல்கிறது. இந்த அதீத நேசத்தின் காரணமாக பிற்காலத்தில் குறிப்பிடத்தக்க மோசடி ஒன்று நடந்ததாக பைபிள் கூறுகிறது. அது என்னவென்று அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

1. திருக் குரான் (11:69-73)

2. ஆதியாகாமம் (18)

3. ஆதியாகாமம் (17)

4. திருக் குரான் (37:111-112)

5. திருக் குரான் (3:96-97)

6. முஸ்லீம் ஹதீத் தொகுப்பு

7. புகாரி ஹதீத் தொகுப்பு (ஆபூ தர்)

8. Stories of the Prohpets (Ibn Kathir P. 180)

9. அத்தாரிஃப் வல் ஆலம் (அப்துல் காசிம் அல் சுஹைலி)

10. Stories of the Prohpets (Ibn Kathir P. 180)

11. Genesis 24 (Bible)

Sunday, August 07, 2005

அணு அயூதம் - பாதுகாப்பா? பிரச்சனையா?

ஹிரோஷிமாவில் அணு ஆயுதத்தால் நேர்ந்த மரணக்குவியல்களை நினைத்து உலகம் வருத்தம் தெரிவிக்கும் இந்த நேரத்தில் இன்னொரு ஹிரோஷிமா ஏற்படாமல் தடுக்க என்ன செய்கிறது?

ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அணு ஆயுத நாடுகளும் மற்றும் அணு ஆயுத தொழில் நுட்பம் கொண்ட நாடுகளும் எந்த அளவு அனுசரிக்கின்றன என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அணு ஆயுதம் என்பது ஏதோ ஒருசில தனிச் சிறப்புகளை உருவாக்கித்தரும் ஒரு ஆயுதமாக நினைத்து அமேரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீன மற்றும் ரஷ்யா நாடுகள் அதை பெருமையாக நினைத்து சேமித்து வைத்தன. இப்பொது அந்த தொழில் நுட்பத்தை தங்களது பொருளாதார முன்னேற்றங்களுக்காக பயன்படுத்த துவங்கியிருப்பது அணு ஆயூதத்தை வேகமாக பரவச் செய்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

'அணு ஆயுதம் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும், நான் மிகவும் பொறுப்பானவன், நான் அதை அநியாயத்திற்கு பயன்படுத்த மாட்டேன். நான் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றெல்லம் உலகத்திற்கு விரிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நாடுகள், அணு ஆயுதத்தை அடையத்துடிக்கும் நாடுகளைப் பார்த்து, 'உனக்கு இதை வைத்துக் கொள்ளத் தெரியாது, நீ பொறுப்பற்றவன், உன்னிடம் இதைப் பாதுகாக்கும் அறிவு இல்லை.. நீ அயோக்கியன் என்று பேசுவதே' இந்த அணு ஆயுதப் பரவலுக்கு அடிப்படைக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

அணு ஆயுதம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? எனக்கும் அதை உருவாக்கத் தெரியும்.. நீ யார் எனக்கு புத்திமதி சொல்ல என்று ஒரு சில நாடுகள் அணு ஆயுதத்தை எப்படி அடைவது என்ற முயற்சியில் இறங்கியுள்ளன.

அணு ஆயுதம் இருந்தால் அதைக் காட்டி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருசில நாடுகள் கிறுக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டும் செயல்படுகின்றன, உதாரணத்திற்கு வட கொரியாவைச் சொல்லலாம். உடைந்து போன சோவியத் யூனியனில் இருந்த நாடுகளிடம் அவரவர்கள் பங்கிற்கு கிடைத்த அணு ஆயுதங்களை எல்லம் விலை கொடுத்து வாங்கிய அமேரிக்கா அவைகளில் சிலவற்றை அழித்து மீதியை தனது கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்தக் கொள்கையை எப்படியாவது தனக்கு சாதகமாக்கி சில அரசியல் நலன்களை அடையத் திட்டமிடுகிறது வட கொரியா.

இன்னும் சில நாடுகள், தன்னிடம் அணு ஆயுதம் இருந்தால் அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தன்னை தாக்காது என்று அணு ஆயுதத்தை எப்படிப் பட்டாவது அடைந்துவிட வேண்டும் என்று போராடுகின்றன. உதாரணம் ஈரான். மத்தியக் கிழக்கு நாடுகளில் நாலா பக்கத்திலும் அமேரிக்கா ராணுவத் தளங்களை அமைத்து ஈரனிற்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளதை உடைக்க ஒரே வழி அணு ஆயூதம்தான் என்று ஈரான் அதை அடைந்துவிடத் துடிக்கிறது.

என்ன காரணமாக இருந்தாலும் அணு ஆயுதம் இப்போது பரவலாகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 1950களில் பிரிட்டன் யாருக்கும் தெரியாமல் அணு ஆயுதம் தயார் செய்வதற்கான 20 டன் கன நீரை இஸ்ரேலுக்கு விற்றது தற்போதுதான் தெரியவந்துள்ளது. எந்த நாடு யாருக்கு இந்த அணு ஆயுதம் தொடர்பான தகவல்களையும், சாதனங்களையும், தொழில் நுட்பத்தையும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது என்பது அமேரிக்காவிற்கு தெரிய வந்தாலும் தனது அராஜக நிலையின் காரணமாக அமேரிக்காவின் பிரசங்கத்தை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.

அமேரிக்காவைப் பொறுத்தவரை அணு ஆயுதம் என்பது தற்போது ஒரு பாதுகாப்பாகத் தெரியவில்லை. உலகில் இருக்கும் துக்கடா நாடுகள் முதல் பெரிய நாடுகள் வரை எல்லோரிடத்திலும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிற காரணத்தால் பொழுது விடிந்து பொழுது போனால் எவன் எங்கு என்னப் பிரச்சனை செய்வானோ என்று பயம். போகிற போக்கில் அமேரிக்க உலகமெங்கும் 'எமர்ஜென்சி' பிரகடனம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கேட்டால் இது 'பிரிஎம்டிவ் ஆக்ஷன் (pre-emptive action) என்ற தத்துவத்தை சொன்னாலும் கேட்பதற்கு இப்போது எந்த நாட்டிற்கும் திராணியில்லை. கூடவே இங்கிலாந்தும் சேர்ந்து ஜால்ரா அடிக்கும். அணு ஆயுதம் அமேரிக்காவிற்கு பாதுகாப்பு என்பதைவிட பிரச்சனையாகத்தான் தெரிகிறது.

ஈரானைப் பொறுத்தவரை அணு ஆயுதம் அந்த நாட்டிற்கு பாதுகாப்பாகத் தெரிகிறது. யார் கண்டது, அதுவே அந்த நாட்டிற்கு இன்னுமொரு போரை உருவாக்கி வைத்தாலும் வைக்கலாம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது ஒரு 'வேஸ்ட்' என்றுதான் தெரிகிறது. வல்லரசு நாடுகள் எதுவம் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

எது எப்படியாயினும் இந்த அணு ஆயுதம் உலகிற்கு பிரச்சனையே. இதை ஒழித்துக் கட்டி நம்மை நிம்மதியாக வாழவிடுவார்களா இந்த அரசியல் மேதாவிகள்? ஹிரோஷிமாவில் நடந்தது வேறு எங்கும் நடக்காமல் இருக்க பிரார்த்தனை செய்வதைத் தவிர்த்து நம்மால் வேறு என்ன செய்யமுடியும்?

Wednesday, August 03, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 6

யூத குலத்தின் தொடக்கம் - பக்கா (மக்கா)

இதுநாள்வரை அறிந்திராத ஒரு புதிய இடத்திற்கு ஆப்ரஹாம் தன் மனைவி ஹாஜிரா மற்றும் மகன் இஸ்மாயிலுடன் பயணம் தொடர்ந்தார். (இப்னு கதிர் எனும் சரித்திர வல்லுனர் இஸ்மாயில் பால்குடி மாறாத பாலகனாக இருந்தபோதுதான் ஹாஜிராவும் ஆப்ரஹாமும் 'பக்கா' என்று அழைக்கப்படும் வரண்ட சமவெளிக்குப் பயணம் செய்தார்கள் என்று எழுதுகிறார். இஸ்மாயிலின் வயது என்ன என்று சரியான குறிப்பு இல்லை. ஆதியகாகம் இஸ்மாயிலுக்கு 13 வயது இருக்கும்போது பக்கா சென்றார் என்று அறிவிக்கிறது).

அவர்கள் இந்த புது இடமான பக்காவிற்கு வரக்காரணம் சாராவைவிட்டு ஹாஜிரா தூரமாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் தனது மகன் இஸ்மாயிலுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற மனக்கவலையால் உந்தப்பட்டதாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. அதாவது இஸ்மாயில் இளமைப்பருவம் அடையும்வரை அவர்கள் பாலதீன் தேசத்தைவிட்டு தள்ளி இருப்பதே நல்லதென்ற முடிவுடன் பக்காவை வந்தடைகின்றனர் ஆப்ரஹாமின் குடும்பத்தினர்.

பக்கா என்ற இந்த இடம்தான் பிற்காலத்தின் மக்காவென்று பெயர் மாற்றமடைந்து ஆன்மீகத் தேடலுக்கு ஒரு புதிய பரிமானத்தையும் பரினாமத்தையும் அளிக்கும் இடமாக மாறுகின்றது. மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக அந்த இறைவனால் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆலயமாக திகழ்கிறது. (1) அக்காலத்தில் வர்த்தகர்கள் கடந்து செல்லும் ஒரு பாதைதானே தவிர்த்து இந்த வரண்ட பூமியில் அப்போது எந்த மக்களும் வாழ்ந்திருக்கவில்லை அல்லது வாழ்வதற்கேற்ற எந்த சூழலும் இல்லை.

மலை முகடுகளின் மத்தியில், வாழ்வதற்கு தேவையான ஆதாரங்களற்ற பூமியின் உச்சத்தில் நின்ற ஒற்றை மரத்தின் நிழலை நாடி கால்நடையாக வந்து சேர்ந்தார்கள் கணவனும், மனைவியும் மற்றும் அவர்களது பால்குடி மாறாத பச்சிளம் மகனும். வாழ்க்கையில் தேடல் என்பது சில நேரங்களில் சுகமானதாகத் தெரியும். ஆனால் பல நேரங்களில் இந்த தேடல் புரியாத பல வட்டங்களில் சுழலும்போது அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் விவரிக்கமுடியாத அளவிற்கு வேதனை நிறைந்ததாக இருக்கும். அப்படி ஓர் வேதனையின் பிடிகளில் சிக்கி இருந்தனர் அந்த தம்பதியினர். நாள் கணக்கில் நடந்து வந்த பயணத்தின் இறுதியாக காட்சியளித்தது அந்த மலைமுகடுகளுக்கு மத்தியில் வரண்டு நின்ற அந்தப் பகுதி. பச்சை நிறம் என்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு புல் பூண்டுகள் இல்லாத தண்ணீருக்கான எந்தவித ஆதாரமுமற்ற வரண்ட பூமியில் சிறிது இளைப்பாறிவிட்டு ஆப்ரஹாம் புறப்படத் தயாரானார்.

அன்பு மனைவியையும், அருமை குழந்தையையும் அங்கேயே விட்டுவிட்டு வந்த வழியே திரும்ப நடந்தார் ஆப்ரஹாம்! கணவன் தன்னை விட்டு செல்வதை அறிந்த ஹாஜிரா ‘எங்களை விட்டு எங்கே செல்கிறீர்கள்?’ என்று பின்னால் தொடர்ந்தவாறு வந்து கேட்க, பதில் சொல்லாதவராக முன்னால் நடந்து கொண்டிருந்தார் ஆப்ரஹாம். பலமுறை கேட்டும் பதில் வராததால் ‘இது இறைவனின் கட்டளையா?’ கண்ணீர் மல்க கேட்டார் மனைவி. ‘ஆம்’ என்ற பதிலை கூறிவிட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் ஆப்ரஹாம். ‘அப்படியானால் அல்லாஹ் எங்களை கைவிட மாட்டான்’ என்று சொல்லிவிட்டு மரத்தடியின் கீழ் அமர்ந்திருந்த தன் மகவை நோக்கி திரும்பி நடந்தார் ஹாஜிரா.

கணவன் தன் மனைவியையும் அன்புடனும் பாசத்துடனும் தூக்கி வளர்த்துக் கொஞ்சி மகிழ்ந்த, அதிலும் இனி பிள்ளைப் பாக்கியமே இல்லை என்று தளர்ந்துப் போன வயதில் வாழ்க்கையில் மகிழ்வூட்ட வந்த இளம் மகனையும் தனியே விட்டுவிட்டு கண்ணீர் மல்க திரும்பி நடந்துக் கொண்டிருந்தார்.

கையில் உள்ள தோல்பையில் சிறிது தண்ணீரும், கண்கள் முழுக்க கண்ணீரும், நெஞ்சம் முழுக்க இனி எப்படி வாழப்போகிறோம் என்ற கவலையுடனும் தூரத்தில் நடந்து செல்லும் கணவன் ஆப்ரஹாமைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார் ஹாஜிரா எனும் மங்கை. தாயின் கையைப் பிடித்தவாறு வந்த வழி திரும்பிச் செல்லும் தந்தையையும் தவித்து நிற்கும் அன்னையையும் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார் இஸ்மாயில் எனும் பாலகன்.

தியாகத்தின் முதல் கட்டம் தொடங்கியது. தந்தையைப் பிரிந்து நின்றார் தனையன். கணவனைப் பிரிந்து நின்றார் மனைவி. ஏன் இப்படி ஒர் பிரிவு... யாருக்காக... இந்த ஒரு நிலை. எல்லாம் கேள்விக் குறியாய் நிற்கும் இவ்வேளையில் யார் இவர்களுக்கு ஆதாரம்?

கணவன், மனைவி, பிள்ளைகள் இன்னும் என்னென்ன உறவுகள் உள்ளதோ அவை யாவும் இவ்வுலகில் ஏற்படும் பிணைப்புகள். வாழ்க்கையை நடத்திச் செல்ல தேவையான உறவு அம்சங்கள். எப்படி அந்த பிணைப்புகள் ஏற்பட்டதோ அப்படியே அவை யாவும் ஒரு நாளில் உதிர்த்து போகும் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கும் இந்த சரித்திர நிகழ்ச்சி ஒன்றே ஒன்றை மட்டும் முழுமையாக சந்தேகமின்றி தாங்கி நின்றது... அதாவது இறைவன் என்ற ஓர் உன்னத மாபெரும் சக்தி ஒன்று மட்டுமே மனிதனை எந்த இக்கட்டிலும் வழிகாட்ட வல்லது. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு மட்டுமே நித்தியமானது அதுமட்டுமல்லாமல் இறைவனே போதுமானவன் என்பதை உணர்த்தி நின்றது இந்த முதல் தியாகம்.

ஆன்மீக வட்டத்தின் மையத்தை உலகிற்கு எடுத்துக் காட்டப்போகும் தியாகத்தின் ஆரம்பம் அவர்களை அறியாமலே அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி இதுநாள்வரை காத்து அருள் செய்து கொண்டிருந்த அல்லாஹ்வின் பக்கம் அவர்களை ஈர்த்தது. இறைவனே போதுமானவன், இனி வருவதை எதிர் கொள்வோம் என்று தாயும் மகனும் ஆப்ரஹாம் திரும்பிச் செல்வதை விழிகள் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நெடுதூரம் நடந்து வந்த ஆப்ரஹாம் தன் மனைவியும், குழந்தையும் பார்வையிலிருந்து மறைந்தவுடன், இருகரம் ஏந்தி கண்கள் நீர் பொழிய படைத்த இறைவனிடம் பிரார்த்தித்தார். தன் மனைவியும் மகனும் வளமற்ற இந்த இறைவனின் வீட்டின் அருகாமையில் விட்டுச் செல்கின்றேன் அவர்களுக்கு இறைவா நீயே பாதுகாப்பு.. இவ்வழியே செல்லும் மனிதர்களின் உள்ளங்களில் கருணையை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவ வழி செய் இறைவா என்று பிரார்த்தித்தார்கள்.(2)

இஸ்லாத்தின், ஏக இறைவனின் சிறப்புமிக்க ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம், மண்ணில் வாழ் மனிதர்களுக்கு மீண்டும் ஓர் வழிகாட்டுதலுக்கான ஆரம்பம் ஆதரவற்ற மண்ணில் அமைதியாக அமர்ந்திருந்தது.

பக்காவில் தாயும் மகனும் தாகத்தால் தவித்தனர். சிறுவன் இஸ்மாயிலின் தாகம் கொஞ்சம் கொஞ்சமாய் அழுகையாக மாறி பின்பு கதறலாக உருவெடுக்க ஹாஜிரா செய்வதறியாது தவித்தார். கண்ணுக் கெட்டிய தூரம் வரை தண்ணீருக்கான அறிகுரியோ அல்லது யாரவது வழிப் போக்கர்களின் வருகையோ தெரியாமல் இருக்க, இரு மலைக் குன்றுகளுக்கு மத்தியில் மகனின் தாகம் போக்க மாறி மாறி அலைந்து தேடலானர் தாய் ஹாஜிரா. இரு பக்கத்திலும் இருந்த குன்றின் மீதேறி ஏதேனும் தெரிகிறதா அல்லது யாராவது வருகிறார்களா என்று மாறி மாறி ஓடலானர். சிறுவன் இஸ்மாயிலோ உயிர்போகும் அளவிற்குக் கதறிக் கொண்டிருந்தார்.

(இவ்வாறு தான் அலைந்து ஓடியதை ஹாஜிரா பிற்காலத்தில் தனது கணவர் ஆப்ரஹமிடம் தெரிவிக்க அந்த இரு மலைகளான சபா மற்றும் மர்வா என்ற இரண்டுக்கும் இடையில் ஏழு முறை நடப்பது என்பதை ஹஜ்ஜின் ஒரு கிரியையாக ஆப்ரஹாம் அவர்கள் நிலை நிறுத்தினார்கள். ஹஜ் செய்யும் முஸ்லீம்கள் அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறு செய்துவருகின்றனர்).

அப்போது இறைவன் ஹாஜிராவை அழைத்து வானவர் மூலமாக அச்செய்தியை அறிவித்தான். 'ஹாகரே உன்னை துயருத்துவது எது? பயப்படாதே' என்று அறிவித்து இஸ்மாயில் இருக்கும் இடத்தில், அவரின் பாதம் இருந்த இடத்தில் ஒரு நீரூற்று உருவானது (3). 'இறைவன் பிள்ளையின் குரலை கேட்டான்' என்ற அறிவிப்பும் ஹாஜிராவை வந்தடைந்தது.

அந்த நீரூற்றுதான் ஜம்ஜம் என்ற பெயருடன் இன்றுவரை குறைவில்லாமல் கஃபாவின் அருகில் சுரந்துக் கொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் அதை புனித நீராக பருகுவதும் மக்காவிலிருந்து தங்கள் நாட்டிற்கு திரும்பும்போது தங்களால் முடிந்த அளவிற்கு அதை எடுத்துச் சென்று மக்கா வர இயலாதவர்களுக்கு வழங்குவதும் வழக்கத்தில் உள்ளது.

இந்த ஜம்ஜம் நீரூற்றைப் பற்றி பழைய ஏற்பாடு என்று அறியப்படும் யூதர்களின் வேதத்தில் ஆதியாகமத்திலும் சங்கீதத்திலும் (4) அறிவிப்பு செய்யப்ப்ட்டுள்ளது. அந்த நீரூற்றுதான் ஹாஜிராவிற்கும் மற்றும் இஸ்மாயிலுக்கும் வாழ்வாதாரமாகியது. இந்த நீரூற்றிலிருந்து வரும் தண்ணீரை பாதுகாத்து வழிப் போக்கர்களுக்கு விநியோகம் செய்து அதிலிருந்து தங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவைகளை பகரமாக பெற்றுக் கொண்டார்கள். இந்த நீருற்று இஸ்மாயிலின் காலத்திற்கு பிறகு அவர்களின் வழி வந்த பரம்பரையினரால் உரிமைக் கொண்டாடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நீரூற்றுக்காக பிற்காலத்தில் போர்கள் கூட நடந்திருக்கின்றன. ஒரு சில ஆண்டுகளுக்கு இந்த போரின் காரணத்தால் இந்த நீரூற்றை யாருக்கும் தெரியாமல் மூடி வைத்திருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

இதன் பிறகு இஸ்மாயிலின் நபித்துவமும், தந்தையைப் போல் மக்களை ஏக இறைவனின் பக்கம் அழைக்கும் பணி செய்வதும், அதைத் தொடர்ந்து பக்காவில் தந்தை ஆப்ரஹாமுடன் பிற்காலத்தில் ஒன்று சேர்ந்து கஃபா எனும் ஆலயத்தை கட்டி எழுப்புவதுமாக இஸ்மாயிலின் வாழ்க்கை வேறொரு பாதையில் செல்கிறது. இஸ்மாயிலின் சந்ததியினரே அரபுகள் என்று அழைக்கப்படும் கூட்டமாக பிற்காலத்தில் பிறந்து வளர்ந்து வருகிறது.

இஸ்மாயிலை தொடர்ந்து அவரது சமூகத்தில் எந்த இறைத்தூதரும் வரவில்லை என்றும் வரலாற்றில் அறியப்படுகிறது. இஸ்மாயிலின் பக்கா வாழ்க்கை இங்கே அவசியமில்லாதாதால் இதை இத்துடன் நிறுத்திவிட்டு யூதர்களின் பிதாவான இஸ்ஹாக் என்று அறியப்படும் ஆப்ரஹாமின் இரண்டாவது மகன் பிறந்த வரலாற்றையும் அதைத் தொடர்ந்து வந்த யூத குலத்தைப் பற்றி இனி பார்க்கலாம்.

திருக் குரானில் இஸ்ஹாக் மற்றும் இஸ்மாயில் தொடர்பான வேறு சரித்திரக் குறிப்புகள் காணக்கிடைக்காததால் அவர்களுக்கு மத்தியிலே என்ன தொடர்பு இருந்தது என்று திருக் குரான் வாயிலாக சொல்ல இயலவில்லை. ஆனால், ஆதியாகாமத்தில் இஸ்மாயிலின் மகளை இஸ்ஹாக்கின் (மூத்த) மகன் (இசாயு) மணந்துக் கொண்டதாக செய்தி அறியப்படுகிறது.(4)

(தொடரும்)

1. திருக் குரான் (3:96)

2. திருக் குரான் (14: 37)

3. ஆதியாகாமம் (21:17-20)

4. சங்கீதம் (84: 5-6)

5. முஹம்மத் (பக்கம் 5, ஆசிரியர் மார்டின் லிங்ஸ்)

Monday, July 04, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 5

யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாமின் பயணம்

மனித வரலாற்றின் விசித்திரமே மனித மனங்களின் 'நேரிடை அனுபவத் தேடல்தான்'. ஒவ்வொரு மனிதனும் நன்மை எது, தீமை எது என்பதைத் தெரிந்திருந்தாலும் பெரும்பாலான மனிதர்கள் அத்தீமையைச் செய்வதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை பெறாத வரை அவர்கள் அதை தெரிந்ததாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவ்வாறு நேரிடை அனுபவத்தேடலில் இருப்பவர்களில் சிலர் பிறரது அனுபவத்தை தனக்கு கிடைத்த அனுபவமாக எண்ணி செயல்படுவார்கள். பிறரது அனுபவங்களை படிப்பினையாக ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்கள் மிகவும் குறைவாக இருந்தாலும், அக்குறைவானவர்களே இந்த உலகத்தின் தலை எழுத்தை மாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் தலை எழுத்தை மாற்றியவர்களில் பலர் நல்வழியை நோக்கியும் சிலர் தீய வழியை நோக்கியும் இந்த உலக ஓட்டத்தை திசை திருப்பி இருக்கின்றார்கள்.

இவ்வுலக ஓட்டத்தை நல் வழியில் திருப்பிய பெரும் மனிதர்களில் ஆப்ரஹாம் என்ற தச்சுத் தொழிலாளியும் ஒருவர். அவர் இறைவனின் திருத்தூதராக இருந்து இவ்வுலக தலை எழுத்தை மாற்றிய பெரும் மனிதர்களில் ஒருவர். அவருக்கு இறைவன் போதுமான வழிகாட்டுதல்களை கொடுத்து அவரது அனுபவத்தேடல்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தான். அந்த இறைவனின் துணையுடன் அவர் செய்த செயல்களில் மிக முக்கியமானது மறைந்து அல்லது மறந்து போன ஆன்மீகத் தொடரை, மையத்தை கண்டுபிடித்தது. அதுமட்டுமல்லாமல் அதைப் புதுப்பித்து உலக ஆன்மீகத் தேடலில் ஒரு அழியாத தடத்தினை ஏற்படுத்தினார். எந்த இறைத்தூதருக்கும் இல்லாத ஒரு சிறப்பு ஆப்ரஹாமிற்கு இறைவனால் வழங்கப்பட்டது. அதுதான் இறைவனின் (அல்லாவின்) நண்பர். கலீலுல்லாஹ் என்று அரபி வார்த்தையில் சொல்லப்படக்கூடிய சொல்லின் பொருள் இறைவனின் தோழர் என்பதே.

தோழன் என்று சொல்லும்போது நாமெல்லாம் நன்றாக புரிந்துக் கொள்ளமுடியும் அதன் மகத்துவத்தையும் அதன் பலனையும். நண்பர்களிடம் பரிமாறிக் கொள்ளும் எத்தனையோ விஷயங்களை பெற்ற தாயிடமோ அல்லது நம்பி வந்த மனைவியிடம் கூட பரிமாறிக் கொள்ளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் 1426 வருடங்களுக்கு முன்பாக இவ்வுலகின் தலைவிதியை மாற்றி அமைத்த முகம்மது (சல்) அவர்கள் இதை சாதித்தது தனது தோழர்களின் உதவியால்தான். அந்த வகையிலே இறைவனின் தோழராக இருந்து இந்த உலக மக்களின் ஆன்மீகத் தேடலுக்கு ஒரு புதுப் புரட்சிக்கு வித்திட்டவர் இந்த ஆப்ரஹாம்.

மனித வாழ்க்கை இரண்டுவிதமான ஆதாரங்களுக்காக அல்லது ஆதாரங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஒன்று வாழ்வதற்கான ஆதாரம் - பொருள். இன்னொன்று வாழ வேண்டியதற்கான காரணம் - ஆன்மீகம். அதில் பொருள் தேடல் - மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை. ஆன்மிகத் தேடல் - வாழ வேண்டியதற்கான காரணம். ஆன்மீகத் தேடலும், பொருள் தேடலும் ஒன்றாக ஒன்றை ஒன்று சார்ந்து பயணிக்கும்போது அது அதன் இலக்கை எளிதாகவும் எளிமையாகவும் அடைந்துவிடுகிறது. அப்படியில்லாமல் பொருள் தேடலும், ஆன்மீகத் தேடலும் ஒன்றை ஒன்று மறந்து பயணிக்கும்போது வாழ்க்கை எளிமையில் இருந்து மாறி இடர்களில் சென்று சேர்கிறது. காலப்போக்கில் இரண்டும் வெவ்வேறு பாதையில், வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரம்பிக்கின்றன. அவ்வாறு வெவ்வேறு திசையில் செல்லும் இந்தப் பயணம் ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்குபின் ஒன்றை ஒன்று முற்றிலும் அறியாமல், ஒன்றாகத் தொடங்கிய அந்த பதிவுகள்கூட மாறி இரண்டும் இரண்டுவிதமான வாழ்க்கைக் கோட்பாடுகளாக அறியப்படுகிறது.

இந்த இரண்டுவிதமான வாழ்க்கைக் கோட்பாடுகள் இன்னும் சில படிகள் மேலே சென்று ஒன்றை ஒன்று அழிக்கவும் முற்படுகின்றன. இந்த வினைகள், எத்தனையோ ஆண்டாண்டு காலமாக சுழற்சி முறைகளில் மாறி மாறி மனித வரலாற்றில் அறியப்பட்டு வந்தாலும் மனிதனின் அனுபவத்தேடலுக்கே உரிய விசித்திர குணாதியசத்தால் இது மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் மாறி மாறி நடந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு பொருள் தேடலும், ஆன்மீகத் தேடலும் முற்றிலுமாக ஒன்றை ஒன்று அறியாமல் ஒன்றை ஒன்று அழிக்க முயற்சித்த அந்த கால கட்டத்தில்தான் ஆப்ரஹாம் அவர்கள் இறைவனின் தூதராக தோன்றுகிறார். இரு தேடல்களின் ஆரம்ப விழுதுகளைத் தேடி அதைப் புதுப்பிக்கின்றார். உலகின் ஆன்மீகத் தேடலுக்கான ஒருமித்த அந்த இலக்கை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்துகிறார். இவை யாவும் அவர் முன் கூட்டியே அறிந்து அல்லது தானாக திட்டமிட்டு செய்தாரா? நிச்சயமாக இல்லை. இறைவனின், படைத்தவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.

ஆப்ரஹாமின் இந்த மாபெரும் ஆன்மீக புரட்சிக்கு அவருக்கு தேவைப்பட்டது 'தேடல்' என்ற 'புலம் பெயருதல்'. அதில் அவருக்கு உதவியாக அவரது மனைவியர்களான சாரவும், ஹாஜிராவும் மற்றும் லூத்தும் இருந்தார்கள். இந்த காலத்தில் இருப்பது போல் நவீன தகவல் தொடர்போ அல்லது செய்திகளை பரிமாறிக் கொள்ளவோ எந்தவித வாய்ப்பும் இல்லாத கிட்டத்தட்ட 5000 வருடத்திற்கு மேற்பட்ட கால கட்டத்தில் லூத்தும் ஆப்ரஹாமும் தனித்தனியே இறைவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு வெவ்வேறு நாடுகளில் தங்களது இறைப்பணியை செய்து வந்தனர். பிற்காலத்தில் அவர்கள் ஒருவரை எப்போது சந்தித்தனர் அல்லது இல்லையா என்ற விபரங்கள் வரலாறுகளில் தெளிவாக இல்லை.

ஆப்ரஹாமின் புலம் பெயருதல் ஒரு புதிய தியாகத்தை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு அவரை உள்ளாக்கியது.

ஹாஜிரா.. கருத்தரிந்து ஒரு ஆண்மகவை ஈன்றெடுத்தார். ஆப்ரஹாமிற்கு முதல் வாரிசு இந்த உலகில் உருவானது. ஆண்மகவிற்கு இஸ்மாயில் (இஷ்மாயில்) என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது ஆப்ரஹாமிற்கு சுமாராக 86 வயது என்று மதிப்பிடப்படுகிறது. இந்த இஸ்மாயிலின் வம்சம்தான் பிற்காலத்தின் அரபு குலமாக அரேபிய தேசம் என்ற பெயர் தாங்கி மத்திய கிழக்குப் பகுதியில் அறியப்படுகிறது.

இஸ்மாயிலின் பிறப்பு ஏற்கனவே புகைச்சலில் இருந்த சாரா - ஹாஜிரா உறவில் இன்னும் விரிசல்களை அதிகமாக்கியது. தினம் தினம் இவ்விருவரின் பிரச்சனைகள் அதிகமாக ஆப்ரஹாமிற்கு இது ஒரு கவலைக்குரிய விஷயமாகிப்போனது. ஆப்ரஹாம் வணங்கியும் வாழ்ந்தும் வந்த ஜெருசலத்தின் இறை ஆலயத்தில் அவருடைய வாழ்க்கைக்கு எதிர்காலத்திற்கு வழி தேட முற்பட்டார். சாரா ஹாஜிராவின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி தேடலானர். இந்நிலையில் ஆப்ரஹாமிற்கு இறைவன் மீண்டும் ஒரு நற்செய்தி வழங்குகின்றான். சாராவிற்கு ஒரு குழந்தையை அளிப்பதாக வாக்களிக்கின்றான். அந்த குழந்தைக்கு இஸ்ஹாக் (ஐசக்) என்று பெயரிடுமாறு நற்செய்தி அளிக்கின்றான்.

இச்சூழலில் இஸ்மாயிலின் வளர்ப்பும் வாழ்க்கையும் தந்தையின் அரவனைப்பில் சிறப்பாக இருந்தது. ஆனால் ஆப்ரஹாமின் வாழ்க்கையில் ஒருப் பெரிய திருப்பத்திற்கான காரணமாக அமைந்தது குழந்தை இஸ்மாயிலின் வாழ்க்கை. சாரா உடலாலும், மனதாலும் பெரும் நோய்க்குள்ளானார். ஹாஜிராவை தனது இல்லத்திலிருந்து மட்டுமல்லாமல் ஆப்ரஹாமின் வாழ்க்கையிலிருந்தே அகற்ற விரும்பினார். தனக்கு இரண்டாவது மகன் பிறக்க இருக்கும் மகிழ்ச்சியில் ஆப்ரஹாம் இருந்தாலும், தனது மூத்த மகன் பெற்றிருந்த உன்னத நிலையை இழந்துவிடுவானோ என்று அஞ்சினார்.

ஒரு நாள் சாரா ஹாஜிரா பிரச்சனை உச்சத்தை எட்டவே.. சாரா ஆப்ரஹாமிடம் ஹாஜிராவையும், இஸ்மாயிலையும் இந்த வீட்டை விட்டு மல்லாமல் இந்த நாட்டைவிட்டே தூரமாக்க வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கை வைக்கவே, ஆப்ரஹாம் மிகப்பெரும் கவலைக்குள்ளானர். சாராவிடமிருந்த ஆழ்ந்த அன்பின் காரணமாகவும் மற்றும் ஆரம்பகால கஷ்டங்களில் சாராவின் ஒத்துழைப்பு மற்றும் பங்கை நினைக்கும்போது ஆப்ரஹாமல் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினார்.

மிக நீண்ட ஆலோசனைக்கும், பிரார்த்தனைக்குப் பிறகு தனது இரண்டாவது மனைவி ஹாஜிராவையும் அன்பிற்கினிய பாலகன், குழந்தை இஸ்மாயிலையும் அழைத்துக் கொண்டு கன் ஆனிலிருந்து (பாலஸ்தீனிலிருந்து) அறியப்படாத ஒரு இடத்தை நோக்கி பயணப்பட்டார்.

இது நாள்வரை தானும் தனது மனைவியருமாக நடத்தி வந்த புலம் பெயருதல் இப்போது தனது இரண்டாவது மனைவி ஹாஜிரா மற்றும் அன்பு மகன் இஸ்மாயிலுக்காக அவர்களை எங்காவது சாராவின் தொடர்பில்லாத ஒரு இடத்தில் விட்டுவிடுவதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு கனத்த மனதுடன் பயணம் தொடர்ந்தார்.

பெரும் தியாகத்தின் அடித்தளம் ஒன்று எழுப்பப்பட்டது.

(தொடரும்)