Wednesday, October 12, 2005

அந்த 40 வருடங்கள்

சென்னை IIT யின் டீன் விஜய் கிராண்டி முப்பது வருடங்களாக வாரத்திற்கு ஒரு வேளை உணவு உண்ணுவதில்லையென்று ஓர் உண்ணா நோன்பை கடைபிடித்து வந்தார். அந்த நோன்பை, விரதத்தை சென்ற வாரம் முடிவுக்கு கொண்டு வந்தார் என்பது பல பேருக்கு தெரியாத செய்தியாகப் போனது. ஆனால் அந்த செய்தியினுள் புதைந்து கிடந்த ஒரு உன்னதமான தேசப்பற்றை எந்த செய்தி நிறுவனங்களும் கண்டு கொள்ளவில்லை.

அப்படி என்ன ஒரு முக்கியமான விசெஷம் இவரின் இந்த உண்ணா நோன்பில்...

1965 இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு சோகம் நிறைந்த வருடம். பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுத்த வருடம் அது. காஷ்மீரை எப்படியும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இளைய இந்தியா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாகிஸ்தானின் துணிகர முயற்சி.

எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் படைகளுடன் தனது இன்னுயிரை இழந்து கொண்டிருக்கும் வேளையில், இன்றைக்கு மார் தட்டி மற்ற நாடுகளை எல்லாம் துச்சமாக மதிக்கும் அமேரிக்க அன்று இந்தியாவிற்கு எதிராக ஓர் மிரட்டலை பிரகடனம் செய்தது. அதாவது.. இந்தியாவிற்கு உதவியாகக் கொடுத்து வந்த உணவு பொருட்களை நிறுத்துவதாக அறிவித்தது. உணவு பஞ்சத்தால் இந்தியா அப்போது அமேரிக்காவிடம் கையேந்தி நின்று வந்தது எல்லோருக்கும் தெரியலாம். அமேரிக்காவின் பயமுறுத்தல் இந்தியாவை பொறுத்தவரை அதிர்ச்சி நிறைந்த கவலைக்கிடமான செய்தி. அப்போதைய பிரதமர் சாஸ்திரி அவர்கள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுமக்களிடம் பேசியக் கூட்டத்தில் முக்கியமான கோரிக்கை ஒன்றை எடுத்து வைத்தார்.

இந்தியாவில் இருக்கும் உணவுப் பஞ்சத்தை சமாளிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாரத்திற்கு ஒரு வேளை உண்ண நோன்பை கடைபிடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

பள்ளிச் சிறுவனாக இருந்த விஜய் கிராண்டியும் அந்த பொதுக் கூட்டதில் கலந்து கொண்டார். மற்ற இந்தியக் குடிமக்களைப் போல் பிரதமர் சாஸ்திரியின் வேண்டுகோளுக்கிணங்க விஜயும் வாரம் ஒரு வேளை உண்ணா நோன்பை அனுசரிக்கத் தொடங்கினார். இந்தியா ஒருவாறாக அந்த பாகிஸ்தானுடனான போரையும் இந்தியாவினுள் இருந்த உணவு பஞ்சத்தையும் வெற்றிகரமாக சமாளித்தது.

ஆனால், பள்ளிச் சிறுவனான விஜய் கிராண்டி, அந்த ஒரு வேளை உண்ணா நோன்பை விடாது கடைபிடிக்கத் தொடங்கினார் வேறொரு வைராக்கியத்துடன். என்று அமேரிக்காவிற்கு இந்திய உணவு உதவி செய்யும் நாள் வருமோ அன்றுவரை இந்த உண்ணா நோன்பு தொடரும்.

அந்த நாளும் வந்தது. சென்ற வாரம் இந்தியாவின் அமேரிக்காவிற்கான தூதர் வாஷிங்டனில் 50 மில்லியன் டாலருக்கான காசோலையையும், இரண்டு விமானங்க்ள் நிறைந்த உணவுப் பொருள்களையும், இன்னும் மருந்துகளையும் அமேரிக்காவிற்கு இந்தியாவின் உதவியாக கொடுத்தார். காட்ரீனாவால் நிகழ்ந்த பேரிழப்பை இன்னும் கிரகிக்க முடியாமல் தவிக்கும் அமேரிக்காவிற்கு இந்தியா அளித்த உதவிதான் இந்த 50 மில்லியன் டாலர் காசோலை.

விஜய் கிராண்டி தனது உண்ணா நோன்பை முறித்தார். விஜய் கிராண்டியை போன்ற மனிதர்கள் உள்ளவரை இந்தியா தன்னிலை எழுச்சிப் பெற்ற நாடக உலக அரங்கில் மற்றைய நாடுகளுக்கு முன்னுதாராணமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

4 comments:

Anonymous said...

னல்ல ஒரு செய்தியை அறிய தந்தமைக்கு நன்றி அக்பர் பாஷா அவர்களே!

விஜய் கிராண்டிக்கும் அவருடைய தேசப் பற்றுக்கும் ஒரு சல்யூட்.

உண்மையாக மெய் சிலிர்த்தது.

Akbar Batcha said...

நண்பர்களே,

நாற்பது வருடங்கள் என்று எழுதுவதற்கு பதிலாக முப்பது வருடங்கள் என்று கட்டுரையின் ஆரம்பத்தில் எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.

யாத்திரீகன் said...

சென்னை IIT-யில் அப்படி ஒரு டீன் கிடையாது என்பதை IITM-ன் வலைத்தளத்திற்கு சென்று சரிபார்த்துக்கொள்ளவும்..

ரவியா said...

http://sv.typepad.com/forsv/2005/10/a_mail_from_vij.html