மழையை காணாத மண்ணில்
ஒவ்வொரு தூறலும் ஒரு உற்சாகம்
வானத்தை மேகத்தால்
வெள்ளையடித்த இறைவன்
மனித முகங்களில் மின்னல்கள் பதித்தான்
எட்டிப் பார்த்த கதிரவன் - முகில்களின்
பிடிக்குள்ளே சிக்கித் தவித்தான்
இரவென்னும் ஆடைக்குள் (பர்தாவில்)
நிலவுப்பெண் சவுதி முக்காடிட்டு
முழுதாய் மறைந்து கொண்டாள்
மழை நிலவரம் கேட்டு தொலைபேசியில்
தொல்லை தந்தான் கடைக் குட்டி
ஊரெல்லாம் ஏசியிலே குளிர்ந்திருக்க
வீட்டுக்குள் ஏசியா? - ஏசினாள் என் மனைவி
தூறல்கள் மட்டும்தானா
தூரத்தில் வெளிச்சம் கண்டு
துவழ்கிறது என் மனம்
வானத்தை வளைத்து நிற்கும்
வென்மேக முற்றுகைக்குள்
கார்முகிலின் முன்னோட்டம்
மழையே வா, மெல்ல மெல்ல வா
வேகமாய் பொழிந்துவிட்டு
வெளியேறி போய்விடாதே
உன் கவி கேட்டு எத்தனைகாலங்கள் ஆயிற்று
நன்று நீ பாட வேண்டும்
நாளையும் வர வேண்டும்
No comments:
Post a Comment