Saturday, August 20, 2011

வலிகளும் சுகமே!

எனது வலிகள் வெற்றியின் படிக்கற்களா? இல்லை

மண்ணறையில் கட்டப்படும் கருங்கற்களா?

இறைவனே என் மீது கருணை காட்டதபோது

மனிதர்களின் கருணை எனக்குத் தேவையில்லை!


அழுகைகளை விதைத்து சிரிப்புகளை அறுவடை செய்யும்

மனிதப் பித்தர்களில் நானும் ஒருவன்!

உள்ளத்தை அண்ணை மண்ணில் விட்டுவிட்டு

உடலுடன் எண்ணை மண்ணில் அலைகின்றேன்!


நோக்கம் தவறில்லை! முயற்சியும் தவறில்லை!

வழிகளில் எங்கோ தடம் புரண்டுவிட்டேன்

தூக்கி நிறுத்த இறைவனைத் தேடுகின்றேன்

தூரத்தில் ஓர் மின்மினி வெளிச்சத்தை அர்ப்பணிக்கிறது!


என்னையும் நான் சமர்ப்பிக்கின்றேன்! எழுதாத என் நிலையை!

எனக்கும் உனக்கும் மட்டும் தெரிந்த என் மனதை!

ஏற்றுக் கொள் இறைவா! வலிகளும் சுகமே!

உன் நினைவால் என் நெஞ்சு வாழும் வரை.

2 comments:

திருவள்ளூர் தமிழ்ச்சங்கம் said...

அன்பு தோழருக்கு வணக்கம். இன்று முதல் முறையாக உங்கள் வலைப்பூவை பார்வையிட்டேன். விதைதான் பயிராகும். அழுகையை விதைத்தால் சிரிப்பு விளையாது. மற்றபடி மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். எங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் மூலமாக வலைப்பூ தொடக்கியுள்ளோம். இதனை தாங்களும் பர்வை இ ட்டு, தங்கள் தமிழ் ஆர்வ நண்பர்களுக்கும் எங்கள் வலைப்பூவை பற்றி சொல்லுங்கள். வாழ்க தமிழ் பணி. எங்கள் வலைபூ thiruvallurtamilsangam.blogspot.com.

Akbar Batcha said...

திருவள்ளூர் தமிழ் சங்க நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். வருகைக்கும் நன்றி. உங்களின் விமர்சனத்திற்கு உள்ளான எனது வரிகளை மீண்டும் சிந்தித்து பாருங்கள். எனது கவிதையின் கருத்து நயமும் அதில் பிரதிபலிக்கும் வாழ்வின் அனுபவமும் புரியமுடியும். நான் விளக்கமளிக்க விரும்பவில்லை.