Thursday, October 13, 2005

அமேரிக்காவின் அவுட் சோர்ஸிங் (Some day in Future)

அமேரிக்க ஜனாதிபதியை அவுட் சோர்ஸ் மூலம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவருவதென்று காங்கிரஸ் இன்று ஒர் முக்கியமான அறிவிப்பு செய்தது. இவ்வாறு செய்வதன் மூலம் அதிபரின் வருடாந்திர சம்பளமான 400,000 டலரை கணிசமாக சேமிப்பதோடு அமேரிக்க ஒவ்வொரு வருடமும் சந்திந்து வரும் 500 பில்லியன் டாலர் பட்ஜெட் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய முடியும் என்று அறிவித்தது.

வரும் நவம்பர் மாதம் அதிபர் புஷ் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இந்தியாவில், மும்பை நகரிலிருந்து இயங்கிவரும் இந்தூஸ் டெலிசர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் குர்வீந்தர் சிங் நவம்பர் ஒன்றிலிருந்து அதிபராக பணி தொடங்க உள்ளார் என்றும் காங்கிரஸ் அறிவித்தது.

குர்வீந்தர் சிங்கின் சம்பளம் மாதத்திற்கு 400 டாலர் (இந்திய மற்றும் அமேரிக்காவின் வரிகள் தனி) என்றும் அத்துடன் மெடிக்கல் பெனிபிட்ஸ் அல்லது வேறு எந்த உதவியும் கிடையாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது.

குர்வீந்தர் சிங்கை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம், அவருடைய பெற்றோர்கள் அமேரிக்காவின் நயாகார நீர்வீழ்ச்சிக்கு விடுமுறைக்காக சென்றபோது குர்வீந்தர் சிங் அங்கே பிறந்ததாகவும், அதனால் அவர் அமேரிக்காவின் அதிபராகும் தகுதி அதிகமுள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்தது.

'நாங்கள் இந்த முக்கிய முடிவை அமேரிக்காவின் தற்போதைய நிதி நிலையை மனதில் வைத்து எடுத்ததாகவும், இது அமேரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும்' - செனட்டர் தாமஸ் ரொந்தனால்ட், ABC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தாமஸ் அமேரிக்க அவுட் சோர்ஸிங் அக்கவுண்டபிலிட்டி அமைப்புடன் சேர்ந்து இது தொடர்பாக இரண்டாண்டு காலம் ஆய்வு செய்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவர் மேலும் 'உலக அரங்கில் அமேரிக்காவின் நிதி மாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதது கவனிக்கப்பட வேண்டியது' என்றும் சொன்னார்.

அதிபர் புஷ் இன்று காலை இ மெயில் மூலமாக பதவிப்பறிப்பு தொடர்பான ஆனையைப் பெற்றுக் கொண்டார் என்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தனது வெள்ளை மாளிகையை காலி செய்யும் ஏற்பாட்டில் இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகையின் குறிப்பு ஒன்று அறிவிக்கின்றது.

கால நேர வித்தியாசத்தின் காரணமாக அமேரிக்காவின் புதிய அதிபர் மிஸ்டர் சிங் இந்தியாவிலிருந்து இரவில் பணி செய்வார் என்று அறியப்படுகிறது. 'இரவில் அமேரிக்காவின் அதிபராக பணி செய்வதன் மூலம் தனது பகல் நேர வேலையான அமேரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பேனிக்கான கால் செண்டர் வேலையை தன்னால் தொடர்ந்து செய்ய இயலும்' என்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.

MDTV க்கு அளித்த பிரத்தியோகமான பேட்டியில் 'தான் அமேரிக்காவின் அதிபரானது மிகுந்த மகிழ்வை தருவதாகவும், தான் நிச்சயம் ஒருநாள் அதிபராவேன் என்று நம்பிக்கை இருந்ததாகவும்' தெரிவித்தார் மிஸ்டர் சிங்.

அதிபர் சிங் இந்தியாவிலிருந்து தனது பி.சி. மூலமாக அமேரிக்காவின் அன்றாட நிகழ்வுகளை புரிந்துக் கொள்ள பெங்களூரைச் சேர்ந்த டுர்ரண்ட் சாப்வேர் நிறுவனம் 'ஸ்கிரிப்ட் டிரி' என்று ஓர் மென்பொருளை உருவாக்கி இருக்கிறது, அதன் மூலம் மிஸ்டர் சிங் பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளவில்லை என்றாலும் மேலோட்டமாக தனது முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

அமேரிக்காவின் 'மென்பவர் கவுன்சிலின்' அறிக்கையின் படி அதிபர் புஷ்ஷிற்கு அமேரிக்காவில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தெரியவருகிறது. ஆனால் அதிபர் தன் இளமை காலத்தில் பணி செய்த 'நேஷனல் கார்டு' அமைப்பில் வேண்டுமானல் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கிறது. அமேரிக்காவின் நேஷனல் கார்டு தற்போது ஈராக்கின் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் புஷ் மற்றும் ஷெனை இருவருக்கும் ஈராக்கில் வேலை வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வருகிறது.

'நான் ஈராக் சென்றிருக்கிறேன்'. ஈராக்கைப் பற்றி தனக்கு ஓரளவு அறிவும் அனுபவமும் இருப்பதாக அதிபர் புஷ் சொன்னார். 'தனக்கு ஈராக்கில் வேலை வாய்ப்பு கிடைத்தால் அதனால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும்' தெரிவித்தார் புஷ். அதிபர் புஷ் ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு பயணம் செய்ததும், அங்குள்ள 'கிப்ட் ஷாப்பில்' சிறிது நேரம் இளைப்பாறியதும் கவனிக்கத்தக்கது.

பாக்தாதிலும், பல்லூஜாவிலும் கிடைத்த தகவல் படி அவர்கள் புஷ்ஷின் வருகைக்காக காத்திருப்பதாக தெரிகிறது. அங்கிருந்து செயல்படும் மிலிட்டண்ட் அமைப்பின் தலைவர் ஒருவர் இதுபற்றி பேசும் போது 'புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், அவர் இங்கு வருவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். விரைவில் அவர் அதிகம் நேசிக்கும் கடவுளுடன் அவருக்கு ஒரு நல்ல சந்திப்பை தன்னால் ஏற்பாடு செய்து தரமுடியும்' என்று தெரிவித்தார்.

10 comments:

க்ருபா said...

:-))

கலக்கறீங்களே! :-))

ஆமாம், அமெரிக்கப் பாராளுமன்ற கட்டிடம் கூட வேளச்சேரிக்கு மாறப்போகிறதாமே...

-சு. க்ருபா ஷங்கர்
http://www4.brinkster.com/shankarkrupa/blog

Akbar Batcha said...

நன்றி க்ருபா ஷங்கர்,

தங்களின் வருகை நல்வரவாகட்டும்.

Anonymous said...

//விரைவில் அவர் அதிகம் நேசிக்கும் கடவுளுடன் அவருக்கு ஒரு நல்ல சந்திப்பை தன்னால் ஏற்பாடு செய்து தரமுடியும்' என்று தெரிவித்தார்.//

நல்ல கற்பனை வளம். நன்றாக உள்ளது.

Alex Pandian said...

http://www.dinamalar.com/2005oct17/flash.asp

your blog mentioned in Dinamalar.
Congratulations..!

Akbar Batcha said...

Thanks Alex Pandian

I just visited. It is interresting to know that somewhere people are scanning our writings.

அதிரைக்காரன் said...

இருந்தாலும் நீங்க புஷ்ஷை இப்படிப் பந்தாடக் கூடாது!

அதிரைக்காரன் said...

இந்த விசயத்தில் டோனி பிளேர் மூக்கை நுழைக்கக் கூடாது

பிரதீப் said...

இதில அவரை நேரடியா கடவுள்கிட்ட அனுப்பி வைக்கிறதுதான்யா கொல்லுது... ஹி ஹி

NambikkaiRAMA said...

ஹா ஹா :))

gulf-tamilan said...

//'புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், அவர் இங்கு வருவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். விரைவில் அவர் அதிகம் நேசிக்கும் கடவுளுடன் அவருக்கு ஒரு நல்ல சந்திப்பை தன்னால் ஏற்பாடு செய்து தரமுடியும்' என்று தெரிவித்தார்//
:)))