Wednesday, October 19, 2005

இஸ்ரேலின் வெறியாட்டம் - பலியாகும் குழந்தைகள்

இஸ்ரேல் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இஸ்ரேல் பாலஸ்தீன போராட்டம்தான். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்த கொடூர போராட்டம் ஜான் ஏறி முழம் சறுக்கிய கதையாக முடிவுக்கு வராமல் நடந்து கொண்டிருக்கிறது.

விடுதலைக் கேட்டு போராடும் பாலஸ்தீன மக்கள் தலைவர்கள் உலக நாடுகளில் பலமிக்க பல ஐரோப்பிய நாடுகளிடமும் மற்றும் அமேரிக்காவிடமும் பிச்சைக் கேட்டு இதுவரை உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் பாலஸ்தீனர்களின் ஆயுதப் போராட்டம் அவ்வப்போது தலை தூக்குவதும் பிறகு குறைவதுமாக முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போராட்டத்தில் அதிகமாக பலியாவது பெண்களும் குழந்தைகளுமே! யுனிசெப்பின் கணக்கெடுப்பின்படி கடந்து ஐந்து வருடங்களில் 542 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலின் துப்பக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர்.

சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பாக முஹம்மது அல் துர்ரா எனும் 12 வயது சிறுவன் தன் தந்தையின் கைகளிலேயே, இஸ்ரேலிய ராணுவத்தால் சுடப்பட்டு மரணமடைந்தான்.

இச்செய்தி தவறானது என்று இங்கு ஒரு பதிவில் சமீபத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. ஒரு வேளை இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு வலையுலகில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் செய்தியேல்லாம் ஆதாரம் நிறைந்ததாகத் தோன்றலாம்.

உலகமே இச்சிறுவனின் கொடுமையான மரணத்தை டிவியில் பார்த்தது. அச்சிறுவனின் தந்தை தனது மகனைக் காப்பாற்ற ஒரு சுவற்றின் அருகிலும் ஒரு மெட்டல் பேரலுக்கு (Metal Barrel) மத்தியில் தானும், தனது மகனும் பயந்து மறைந்து நின்றனர். என்னதான் போராடியும் முடியாது தன் மடியிலேயே தனது மகனை இஸ்ரேலிய ராணுவத்தின் இரு தீவிரவாதிகளின் துப்பக்கி குண்டுகளுக்கு பலியாகக் கொடுத்தான் அந்த தகப்பன்.

அச்சிறுவன் தன் தந்தையின் மார்பைக் கட்டிபிடித்து பயந்து அழுவதும், தந்தை இரு கைகளாலும் அவனை மறைகக முயல்வதும், துப்பாக்கிக் குண்டுகள் அவர்கள் இருவரின் பின்னால் உள்ள சுவற்றை துளைப்பதும், பிறகு இறுதியாக அச்சிறுவனின் உடலைத் துளைப்பதுமாக அந்த வீடியோ படம் காட்டுகிறது. மகன் தன் மடியில் செத்துக் கிடப்பதைப் பார்த்த தந்தை வலிப்பு வந்து மயக்கமடைகிறான்.

இந்தக் கொடுமையான காட்சியைப் படமாக்கியது பிரான்ஸ் 2 டிவிக்காக பணிபுரியும் தலால் அபு ரஹ்மா எனும் பாலஸ்தீன கேமராமேன். இந்தப் படம் இஸ்ரேலின் கொடுமையை சித்தரிக்கும் ஒரு ஐகோனாக (icon) பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் மறையாமல் இருக்கிறது.

இந்நிகழ்ச்சியை பின்னனியாக வைத்து நூற்றுக் கணக்கான சோகக் கவிதைகள் உலகம் முழுவதும் எழுதப்பட்டன. எகிப்து, துனீசியா மற்றும் பெல்ஜியம் நாடுகள் முஹம்மது அல் துர்ராவின் புகைப்படம் தாங்கிய ஸ்டாம்புகளை வெளியிட்டன. அரபு நாடுகளில் உள்ள பலத் தெருக்களுக்கும் கார்டன்களுக்கும் இச்சிறுவனின் பெயர் சூட்டப்பட்டது.

கெய்ரோ நகரில் இஸ்ரேலின் தூதரகம் இருக்கும் தெருவிற்கு எகிப்திய அரசு இச்சிறுவனின் பெயரை வைத்திருக்கிறது.

2 comments:

Sri Rangan said...

ஐயா இந்தப் பதிவு கண்ணீரோடு பேசும் கொடுமைகளை நாம் அறிவோம்.உண்டு கொழுத்த உதவாக்கரைகள்,ஓசியில் மக்களிடம் தட்டிப்பறித்துண்ணும் ஒட்டுண்ணிகள்தாம் கொடிய இஸ்ரேலிய யூதர்களையும் அவர்களது கொடும் பயங்கர வாதத்தையும் நியாயப்படுத்தும்.தன்னினத்துக்கு மலம் தீத்தும் இந்துப்பண்பாடு நிசத்தில் மக்கள் நலன் சார்ந்தது அல்ல.எனவே அதன்வழி சிந்திக்கும் டோண்டு இராகவன்,நீலகண்டன் போன்றோர் இப்படி இஸ்ரேலை ஆதரிப்பது இந்தியாவிலருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றும் குருர மனோபாவத்திலிருந்தே.இதில் அவர்கள் தமது அறிவாற்றாமையைக் காட்டுவது மட்டுமல்ல,மாறாக ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடிவுக்காகக் குரல் கொடுத்த நபிகளின் கூற்றை எதிர்ப்பதே.வரலாற்று அறிஞர்களுக்குத் தெரியும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒருபோதும் இந்து மதம் குரலிடவில்லையென்று,மாறாக இஸ்லாம்,கிருத்துவம் அதற்கு முன் பௌத்தம்-சமணம் கொடுத்திருக்கிறது.பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணயவுரிமை பற்றி இந்தக் கேடான மனிதர்களுக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது?போய் அர்ச்சனைத்தட்டில் விழுவதை ஏந்த வேண்டியதுதானே?மக்களை மக்களாக மதிக்காத யூத அரசையும் அதன் ஆளும் வர்க்கத்தையும் தூக்கிப்பிடிக்கும் டோண்டு, நீலகண்டன் போன்றோர்கள்- உலகப்பயங்கரவாதிகள் .

Akbar Batcha said...

இஸ்ரேலுக்கு யார் வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம், அதற்காக இஸ்ரேல் செய்வது எல்லாம் நியாயம் என்பதுபோல் பேசுவதும் எழுதுவதும் தவறாகும். தனக்கு மிகவும் வேண்டியவர்கள், அல்லது தான் மிகவும் நேசிப்பவர்கள் தவறு செய்தால் அதை உடனே தட்டிக் கேட்டால்தான் தான் நேசிப்பவர்களுக்கு நல்லது செய்வது என்று அர்த்தம். இல்லையென்றால் செல்லைப் பிள்ளை ஊதாரிப் பிள்ளையாகவும், உருப்படாத பிள்ளையாகவும் போய்விடும். அதைத்தான் அமேரிக்கா இஸ்ரேலுக்கு செய்துவருகிறது.