Friday, December 05, 2025

வெளிச்சத்தை வென்ற இருட்டுகள்

சுதந்திர இந்தியாவின் இருண்ட நாட்களில் டிசம்பர் 6ம் ஒன்று. 1992, டிசம்பர் 6 அன்று ஓர் மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டது.  இந்த அநீதி முஸ்லீம்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாக தோன்றினாலும், உண்மையில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக தொடுக்கப்ப்ட்ட நீண்ட போராட்டத்தின் ஒரு அங்கம்தான் இது.

தண்டல் எடுத்தவன் செய்வதெல்லாம் சரிதான், அதைக் கேட்க ஆளில்லை என்பதை துவக்கி வைத்த நாள்.  இல்லாத வரலாற்றை இன்றைய அரசியல் மேலாண்மைக்காக, இருப்பதாக காட்டி கொஞ்சமும் கவலையில்லாமல் அதில் உண்மை கொஞ்சமும், பொய்களை அதிகமுமாக கலந்து நீதியின் கண்களை குருடாக்கிய நாள். நாங்கள் இருக்கிறோம், விடமட்டோம் என்று வீர வசனம் பேசிய நாட்டின் பிரதமர் நரசிம்ம ராவ் மௌனமாக தொலைக் காட்சியில் பார்த்து ரசித்த நாள் இந்த நாள். 

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பது மாநிலத்தின் முதல்வரான எனது அதிகாரத்திற்கு உட்பட்டது, பாபர் மசூதியின் கட்டிடத்தை காப்பாற்றுவேன் என்று உயர் நீதிமன்றத்திற்கு வாக்களித்த முதல்வர் கல்யாண்சிங், இடிக்கப்பட்டத்தை இனிப்பு வழ்ங்கி கொண்டாடி நீதிமன்ற அவமதிப்பு என்று ஒரு நாள் சிறை சென்று வந்ததற்கு காரணமான நாள்.  முப்பது வருடங்களாக வழக்கை முடிக்க முடியாமல் இந்திய நீதிமன்றம் திணறிப்போனதற்கு காரணமான நாள் இந்த நாள். இராமர் பிற்ந்த இடம் என்பதற்கான அறிவியல் அல்லது அறிவுப்பூர்வமான ஆதாரங்கள் இல்லையென்றாலும் இந்த பள்ளிவாயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லீம்கள் எந்த தொழுகையும் நடத்தவில்லை, ஆனால் இந்துக்கள் இங்கே இராமர் சிலைக்கு வழிபாடு தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்கள், எனவே பயன்பாட்டு விதிகளின் அடிப்படையில் பயன்படுத்தி வந்த இந்துக்களுக்கே இந்த இடம் சொந்தம் என்று தீர்ப்பு எழுதிய நாள். (The decision rested on possession, continuous use, and relative strength of claims under modern civil-law principles like “title by continuous possession/possession history,” plus considerations about what constitutes “essential religious practice” ).  

கட்டிடத்தை இடித்தது தவறுதான் ஆனால் இடத்தை ஹிந்துக்களுக்கு கொடுப்பதே சரி என்று விளக்கமளித்து நீதிபதிகள் கையெழுத்திடாமல் சிறப்பு மிகுந்த நீதி வழங்க காரணமான நாள் இந்த நாள். நாடு முழுவதும் மக்களை திரட்டிமந்திர் வஹி பனேங்கேஎன்று அரசியல் போர்க்களம் நிகழ்த்திய அத்வானி அவர்களை நிராபராதி என்று விடுவிக்கப்பட காரணமாக இருந்த நாள் இந்த நாள்.

இவை அனைத்தைம் நடந்தேறிய இந்த நாளுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் இருக்கிறது.  ஆம், இன்று சட்ட மாமேதை, இந்த அரசியல் அமைப்புசட்டத்தின் முதன்மை சிற்பி டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்.  அதாவது அவரது இறந்த நாள். அவரது இறந்த நாளைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசியல் சட்டத்திற்கு மூடுவிழா நடத்த நிர்ணயிக்கப்பட்ட நாள்.  பாபர் மசூதி இடிப்பு முஸ்லீம்களை இரண்டாம் குடிமக்களாக மாற்றத் தொடங்கப்பட்ட ஒரு அடையாளம் மட்டுமல்ல, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஒழிக்க அதன் முதன்மைசிற்பியின் இறந்தநாளை குறியீட்டு நாளாக அறிவித்த நாள். 

சுந்தந்திர இந்தியாவில் நடப்பதெல்லாம் அரசியல் சட்டமைப்பிற்கு உட்பட்டே என்ற ஓர் மாயையை ஏற்படுத்தி, கணக்குப் போடத் தெரியாதவர்கள், கூட்டு மனசாட்சி நீதியரசர்கள், கொலை செய்யப்பட்டவன் அந்த இடத்தில் இருந்தது தவறு என்றெல்லாம் தன்னிச்சையாக, தான் தோன்றித்தனமாக தீர்ப்புகள் எழுதும் வல்லுநர்கள் இருக்கும் வரை இருண்ட நாட்கள் இருண்ட நாட்களே! பாவம் வெளிச்சம். அநாதையாக வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. வெளிச்சத்தை வென்ற இருட்டுகள்

சுதந்திர இந்தியாவின் இருண்ட நாட்களில் டிசம்பர் 6ம் ஒன்று. 1992, டிசம்பர் 6 அன்று ஓர் மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டது.  இந்த அநீதி முஸ்லீம்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாக தோன்றினாலும், உண்மையில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக தொடுக்கப்ப்ட்ட நீண்ட போராட்டத்தின் ஒரு அங்கம்தான் இது.

தண்டல் எடுத்தவன் செய்வதெல்லாம் சரிதான், அதைக் கேட்க ஆளில்லை என்பதை துவக்கி வைத்த நாள்.  இல்லாத வரலாற்றை இன்றைய அரசியல் மேலாண்மைக்காக, இருப்பதாக காட்டி கொஞ்சமும் கவலையில்லாமல் அதில் உண்மை கொஞ்சமும், பொய்களை அதிகமுமாக கலந்து நீதியின் கண்களை குருடாக்கிய நாள். நாங்கள் இருக்கிறோம், விடமட்டோம் என்று வீர வசனம் பேசிய நாட்டின் பிரதமர் நரசிம்ம ராவ் மௌனமாக தொலைக் காட்சியில் பார்த்து ரசித்த நாள் இந்த நாள். 

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பது மாநிலத்தின் முதல்வரான எனது அதிகாரத்திற்கு உட்பட்டது, பாபர் மசூதியின் கட்டிடத்தை காப்பாற்றுவேன் என்று உயர் நீதிமன்றத்திற்கு வாக்களித்த முதல்வர் கல்யாண்சிங், இடிக்கப்பட்டத்தை இனிப்பு வழ்ங்கி கொண்டாடி நீதிமன்ற அவமதிப்பு என்று ஒரு நாள் சிறை சென்று வந்ததற்கு காரணமான நாள்.  முப்பது வருடங்களாக வழக்கை முடிக்க முடியாமல் இந்திய நீதிமன்றம் திணறிப்போனதற்கு காரணமான நாள் இந்த நாள். இராமர் பிற்ந்த இடம் என்பதற்கான அறிவியல் அல்லது அறிவுப்பூர்வமான ஆதாரங்கள் இல்லையென்றாலும் இந்த பள்ளிவாயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லீம்கள் எந்த தொழுகையும் நடத்தவில்லை, ஆனால் இந்துக்கள் இங்கே இராமர் சிலைக்கு வழிபாடு தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்கள், எனவே பயன்பாட்டு விதிகளின் அடிப்படையில் பயன்படுத்தி வந்த இந்துக்களுக்கே இந்த இடம் சொந்தம் என்று தீர்ப்பு எழுதிய நாள். (The decision rested on possession, continuous use, and relative strength of claims under modern civil-law principles like “title by continuous possession/possession history,” plus considerations about what constitutes “essential religious practice” ).  

கட்டிடத்தை இடித்தது தவறுதான் ஆனால் இடத்தை ஹிந்துக்களுக்கு கொடுப்பதே சரி என்று விளக்கமளித்து நீதிபதிகள் கையெழுத்திடாமல் சிறப்பு மிகுந்த நீதி வழங்க காரணமான நாள் இந்த நாள். நாடு முழுவதும் மக்களை திரட்டிமந்திர் வஹி பனேங்கேஎன்று அரசியல் போர்க்களம் நிகழ்த்திய அத்வானி அவர்களை நிராபராதி என்று விடுவிக்கப்பட காரணமாக இருந்த நாள் இந்த நாள்.

இவை அனைத்தைம் நடந்தேறிய இந்த நாளுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் இருக்கிறது.  ஆம், இன்று சட்ட மாமேதை, இந்த அரசியல் அமைப்புசட்டத்தின் முதன்மை சிற்பி டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்.  அதாவது அவரது இறந்த நாள். அவரது இறந்த நாளைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசியல் சட்டத்திற்கு மூடுவிழா நடத்த நிர்ணயிக்கப்பட்ட நாள்.  பாபர் மசூதி இடிப்பு முஸ்லீம்களை இரண்டாம் குடிமக்களாக மாற்றத் தொடங்கப்பட்ட ஒரு அடையாளம் மட்டுமல்ல, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஒழிக்க அதன் முதன்மைசிற்பியின் இறந்தநாளை குறியீட்டு நாளாக அறிவித்த நாள். 

சுந்தந்திர இந்தியாவில் நடப்பதெல்லாம் அரசியல் சட்டமைப்பிற்கு உட்பட்டே என்ற ஓர் மாயையை ஏற்படுத்தி, கணக்குப் போடத் தெரியாதவர்கள், கூட்டு மனசாட்சி நீதியரசர்கள், கொலை செய்யப்பட்டவன் அந்த இடத்தில் இருந்தது தவறு என்றெல்லாம் தன்னிச்சையாக, தான் தோன்றித்தனமாக தீர்ப்புகள் எழுதும் வல்லுநர்கள் இருக்கும் வரை இருண்ட நாட்கள் இருண்ட நாட்களே! பாவம் வெளிச்சம். அநாதையாக வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

No comments: