Sunday, April 24, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் (முடிவு)

இஸ்ரேலின் இந்த proxy war இன்று நேற்று தொடங்கியதல்ல. ஆனால் அதற்காக அவர்கள் பயன்படுத்தக்கூடிய கருவிகளும், காரணங்களும் தான் அவ்வப்போது மாறுபடுகின்றது. அப்படி ஒரு கருவியாக, இஸ்ரேலின் கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நாடுதான் இந்த அமேரிக்கா என்ற ஒரு வல்லரசு.

இஸ்ரேலுக்கும் அமேரிக்காவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை, உறவை புரிந்துக் கொண்டால் அமேரிக்கா எப்படி ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையை புரிந்துக் கொள்ளமுடியும். 1800 களில் இஸ்ரேலியர்கள் தனக்கென்று ஒருநாட்டை நிர்மானிக்க வேண்டி ஒரு மாபெரும் திட்டத்தை உருவாக்கினார்கள் அந்த திட்டம் ஒரு நாட்டை மட்டும் உருவாக்கக் கூடிய திட்டமாக இல்லாமல் 'ஜையோனிசயம்' என்ற ஒரு கொள்கையைத் தூசித்தட்டி எடுத்து அதற்கென்று புதிய கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு ஆதரவு தேடினார்கள். அவர்களின் இன்றைய இஸ்ரேல் நாளை இல்லாமல் போனாலும் இந்த 'ஜையோனிசயம்' என்ற இந்த தாத்பரிய கோட்பாடுகள் நிலை நிற்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இப்படி ஒர் கொள்கையை உருவாக்கினார்கள். அதற்கெதிராக யார் செயல்பட்டாலும், அப்படி செயல்படுவர்களை 'Anti Semitic' என்று அழைத்து, குற்றம் சுமத்தி தன்னை ஒரு பரிதாபமான கூட்டமாக, பாதிக்கப்பட்ட கூட்டமாக காட்டிக் கொண்டு வருகிறது. (இஸ்ரேலின் வரலாற்றை பிறகு பார்க்கலாம்).

இன்றைக்கு அமேரிக்காவின் முஸ்லீம் நாடுகளுக்கு குறிப்பாக அரபு நாடுகளுக்கு எதிரான இந்த நிலைக்கு காரணங்கள் என்ன என்பதை எனது முந்தைய பதிவுகளில் தெளிவாக எழுதியிருந்தேன். (பார்க்க: அமேரிக்காவின் அரசியலும் முஸ்லீம்களும் - 4). அதற்கான அடிப்படை எங்கே உருவானது என்பதை இந்த பதிவிலே சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.

முதலாவது அடிப்படைத் திட்டம் பால் வோல்பிட்ச் (தற்போதைய உலக வங்கியின் தலைவர், மிகுந்த சர்ச்சைக்குள்ளானவர்) என்ற 'புதிய பழமைவாதிகள்' என்று அழைத்துக் கொள்வதில பெருமைப்படும் இந்த மனிதர் 1992ம் வருடத்தில் Defense Policy Guidance என்று ஒரு திட்டத்தை வரையறுத்து அதன் முதன்மை லட்சியமாக 'access to vital raw material, primarily Persian Gulf oil' என்று அதற்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார். அதாவது பெர்சியன் கல்ப் எண்ணெய் வளத்தை கைப்பற்ற வெண்டியதன் அவசியத்தையும் அதற்கு ராணுவ நடவடிக்கைகள்தான் சிறந்த வழி என்றும் அறிவித்தார். அதற்கான வாசலாக ஈராக்கினுள் அமேரிக்காப் படைகளின் பிரவேசமும் மற்றும் அதனை அமேரிக்காவின் ஒரு முக்கியமாக, நிரந்தர ராணுவ தளமாக மாற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். (Reference: Mrs. Maggie Mitchell Salem, Special Assistant to Madeleine Albright and US Foreign Service Officer 1994 - 2000).

இரண்டாவது அடிப்படைத் திட்டம் ரிச்சர்ட் பெர்ல் மற்றும் டக்லஸ் பெய்த் (Richard Perle and Douglas Feith) என்ற இரு பெரும் 'புதிய பழமைவாதிகளால்' 1996ல் 'A Clean Break: A New Strategy for Securing the Realm' என்று உருவாக்கப்பட்ட கொள்கைத் திட்டம். இந்த திட்டம் இஸ்ரேலுக்காக, 1996ல் பிரதமராக இருந்த பெஞ்சமின் நேதன்யாஹ¥ என்ற ஜையோனிசத் தலைவனுக்காக அமேரிக்க எடுபிடிகளால் உருவாக்கப்பட்டது. (Richard Perle - former US Defense Policy Board Chair and Douglas Feith - former Under Secretary for Defense for Policy 2000 - 2005).

அமேரிக்காவின் வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்தும் இந்த இரு பெரும் அமேரிக்க தேசியவாதிகள் இஸ்ரேலுக்காக உழைக்கும், எடுபிடியாக இருக்கும் இப்படிப்பட இந்த செயலை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. அல்லது அப்படியே நடந்தாலும் இப்படிப்பட்ட மனிதர்களை, எடுபிடிகளை அந்த நாட்டின் முக்கிய பதவிகளில் அமர்த்தவும் மாட்டார்கள். ஆனால் இது போன்ற நிலையையும் செயலையும் அமேரிக்கா போன்ற நாடுகளில்தான் பார்க்க முடியும், காரணம் அந்த அளவிற்கு அமேரிக்காவின் நிர்வாக அமைப்பினுள் இஸ்ரேலின் ஜையோனிசக் கொள்கைகளும் அவர்களது பணபலமும் ஊடுருவி இருப்பதனால்தான்.

Securing the source of vital raw material - அதாவது எரிபொருளான எண்ணெய் வளம் அடுத்து Securing the Realm - அதாவது கொச்சையாக சொல்ல வேண்டுமென்றால் புதிய நிலப்பரப்பு, இந்த இரண்டையும் முன்வைத்து நடத்தப்படுகின்ற இந்த அரசியல் மற்றும் ராணுவப் போராட்டத்தின் தற்போதைய பரிமானம்தான் இந்த தீவிரவாதம் மற்றும் ஜனநாயக நிர்மானிப்பு. இதை சாதிப்பதற்கு தடையாக இருப்பதுதான் இஸ்லாம் என்ற சமத்துவக் கொள்கைகள். அதிலும் இந்த இஸ்லாத்தை எங்கே நறுக்கினாலும் மீண்டும் துளிர்விட்டு வளர்வதும் அதற்கு காரணமாக இருக்கக்கூடிய நபிகள் நாயகம் என்ற மாபெரும் மனிதரின் வழிகாட்டுதல்களும் திருக் குர்ஆனும்.

அமேரிக்கா அடிக்கடி சொல்வதுபோல் pre-emptive action என்பது தீவிரவாதத்திற்கெதிராகவோ அல்லது அமேரிக்க பொருளாதார அமைப்புகளை நாசமாக்க முயற்சிக்கும் கூட்டங்களுக்கு எதிராக நடத்தக் கூடிய தாக்குதல்கள் மட்டுமல்ல, மாறாக வளர்ந்துவரும் இஸ்லாமிய கோட்பாடுகளும் அதனால் ஏற்படக்கூடிய எதிர்கால இழப்புகளையும் சரியாக கணித்தே இப்படி ஒர் கொள்கையை அமேரிக்காவும் இஸ்ரேலும் செயல்படுத்தி வருகிறது.

இஸ்ரேலும் அமேரிக்காவும் தன்னுடைய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தவும் சாதிக்கவும் எந்தவித பாதையையும் தேர்ந்தெடுக்கத் தயங்கமாட்டார்கள். தாயின் தலை மீது காலை வைத்தாவது தான் நினைத்ததை சாதிக்கும் குணமுடைய இந்த கூட்டணி, இஸ்லாத்தின் மீது தொடரும் தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல. அதற்கேற்றார்போல் அரேபிய ஆட்சியாளர்களின் பலவீனமும் அவர்களின் ஆட்சி முறையும் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு காரணியாக அமைந்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இஸ்ரேலுக்கு நெருக்கடியாக இருந்த ஈராக்கை சின்னாபின்னமாக்கி அதன் முதுகெலும்பை முறித்து அந்த நாட்டை அமேரிக்காவின் கைக்குள் கொண்டுவந்ததின் மூலம் அமேரிக்காவின் பொருளாதார வளங்களுக்கும், அதன் அடிப்படையான பெட்ரோலுக்கும் ஒரு தீர்வு எடுத்ததோடு மட்டுமல்லாமல், ஈராக்கின் எண்ணெய் கிணறுகளை நேரடியாக இஸ்ரேலுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தியாகிவிட்டது. அதற்கான கட்டுமான பணிகளும் துவங்கிவிட்டன. ஈராக் இனி தன்னிச்சையாக செயல்பட குறைந்தது இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் ஆகலாம். அதுவல்லாமல் அமேரிக்காவுடன் முரண்டு பிடிக்கத் தொடங்கினால் அதனுடைய தற்போதைய கடன் சுமையான 110 பில்லியன் டாலரை (தற்போது அதை காலவாதி செய்வதாக அமேரிக்கா அறிவித்துள்ளது) அதன் தலைமேல் சுமத்தி உடனே கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தங்கள் ஆரம்பித்துவிடும். அதற்கேற்றார்போல் தற்போதைய ஈராக்கின் ஆட்சியாளர்கள் எல்லோருமே அமேரிக்காவின் கைக்கூலிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டாகிவிட்டது.

அடுத்த பிரச்சனை என்னவென்றால் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லும் எண்ணெய் குழாய்கள் சிரியாவைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருப்பதால் சிரியாவின் முதுகெலும்பையும் முறித்தாக வேண்டும். அதானால்தான் தற்போது லெபானின் முன்னால் பிரதமர் ஹரீரி கொலையை முன்னிலைப்படுத்தி சிரியாவின் துருப்புகளை லெபானைவிட்டு வெளியேற்றும் வேலையும் நடந்து வருகிறது. இஸ்ரேலை ராணுவ பலம் கொண்டு சிரியாவினால் சமாளிக்க முடியாவிட்டாலும், லெபானனை கைக்குள் வைத்திருப்பதன் மூலம் சிரியா தனது அரசியல் எல்லையை அதிகப்படுத்தி வைத்திருந்தது. ஹிஸ்புல்லாவிற்கு எல்லாவிதாமான ஆதரவு தருவதன் மூலம் இஸ்ரேலின் பாலஸ்தீன பிரச்சனைக்கும் சிரியா ஒரு சவாலாக இருந்து வந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலான் ஹைட்ஸ் என்ற மலைப்பகுதியிலிருந்துதான் இஸ்ரேல் நாட்டிற்கு தேவையான குடி தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சிரியாவிற்கு இந்தப் பகுதி மிகவும் அவசியமான ஒன்று, ஏனென்றால் இந்த மலைப்பகுதி சிரியாவின் ராணுவ பாதுகாப்பிற்கு, குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் சிரியாவின் ஆளுமையை குறைப்பதன் மூலம் இஸ்ரேல் - சிரியா பேச்சு வார்த்தைகளில் சிரியாவின் உயர்நிலையை குறைக்கமுடியும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கிறது. அவ்வாறு செய்வதால் இஸ்ரேல் விரும்புகின்றவாறு சிரியாவுடனான பேச்சு வார்த்தையை அமைத்துக் கொள்ளமுடியும். விரைவில் அப்படி ஒர் நிலையும் ஏற்பட இருக்கிறது, அதில் இஸ்ரேல் கோலான் ஹைட்சை கொடுக்க சம்மதித்து சிரியாவின் வழியாக ஈராக்கின் எண்ணெயை கொண்டு செல்ல அனுமதி பெற காத்திருக்கிறது. தனது தண்ணீரின் தேவையை லெபனான் மூலமாக இஸ்ரேல் சமாளித்துக் கொள்வதற்கு வசதியாக லெபானனை சிரியாவின் பிடிக்குள்ளிருந்து விடுவித்தாகிவிட்டது. இவை அனைத்தும் அமேரிக்காவின் உதவியின்றி இஸ்ரேலுக்கு சாத்தியமில்லை.

கடைசியாக இஸ்ரேலுக்கு பிரச்சனையாக இருக்கக் கூடிய ஒரே வலிமையான நாடு ஈரான் மட்டுமே. ஈரானில் ஏற்கனவே அமேரிக்கா மூக்கை நுழைத்து சரியாக காயம் பட்டு நிற்பதால் ஈரானை மண்டியிட வைக்க அமேரிக்காவிற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. சமயம் ஏற்படும்போது அந்த திட்டமும் செயல்படுத்தப்படும்.

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேல் - அமேரிக்காவின் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டாலும் ஒரு முக்கியமான இறுதிக் கட்ட போராட்டத்தை நோக்கியே 'the might of mythology' இந்த உலகப் பயணம் நகர்ந்துக் கொண்டு வருகிறது.

Battles are won by the supremacy of arms and guns, but the war is won by ideas and the empire is protected by the power of knowledge.

அமேரிக்காவின் ராணுவ பலமும் ஜையொனிசத்தின் மூளை பலமும் இணைந்து நடத்தும் இந்த உலக நாடகங்கள், பொய்களாலும், ஏமாற்றத்தாலும் புனையப்பட்ட காவியங்களே தவிர்த்து சத்தியத்திற்காக நடத்தப்படும் போராட்டமல்ல. இஸ்ரேலின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இது போன்ற அசத்தியத்திற்காக, சத்தியத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களே அதிமாக இருக்கும். கிறிஸ்துவத்தின் மீதும் அதைக் கொண்டு வந்த இயேசுவின் மீது நடத்தப்பட்ட வன்முறைகளும், பொய் பிரச்சாரங்களும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது இஸ்லாத்தின் மீது அதனுடைய தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனது கூட்டணிகளை மாற்றி அமைத்துக் கொண்டு தனக்கு யார் யாரெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்த இந்த ஜையோனிசக் கூட்டம் தயங்கியதல்ல. வரலாற்று நிகழ்வுகள் நமக்கு இதை தெளிவாக அறிவிக்கின்றன.

ஜையோனிசத்தின் உண்மையான முகத்தை மறைத்துக் கொண்டு உலகத்திற்கும் சாமனிய மனிதர்களுக்கும் வேறுவகையான தோற்றத்தைக் காட்டி நேரத்திற்கு தகுந்தார்போல் வேடமடிந்து நடத்திக் கொண்டிருக்கும் இந்த நாடகம் சிறு சிறு வெற்றிகளை அங்கங்கே கொடுத்தாலும் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வரும்போது சேர்த்து வைத்த அத்தனையும் ஒரே நேரத்தில் இழக்க நேரிடும். இது எத்தனையோ முறை நடந்துள்ளது என்றாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதையும் வரலாறு நன்றாகவே அறிவிக்கின்றது. (இஸ்ரேலின் வரலாற்றை அதன் தொடக்கத்திலிருந்து எழுத இருக்கிறேன். அதில் மேலும் இது தொடர்பான விளக்கங்களை பார்க்கலாம்.)

Dissemination of Knowledge and close interaction with people at all level is the only way to protect any empire. ஆனால் இந்த இஸ்ரேல் அமேரிக்க கூட்டணிகளின் ஆட்சிமுறையே முடிந்தவரை பொதுமக்களிடமிருந்து உண்மைகளை மறைத்து வைப்பதும், அவர்களை ஏமாற்றுவதும், அதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதும்தான். (தற்போதைய உதாரணம்: இதுவரை வெளிவராத இரட்டை கோபுர தகர்ப்பு விவகாரங்களும், ஈராக்கின் WMD).

மக்களை ஏமாற்றிய எத்தனையோ சாம்ரஜ்யங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டன, உதாரணம் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் அழிவு. அமேரிக்கா சாம்ரஜ்யம் இன்னும் விழித்துக் கொள்ள அவகாசம் உள்ளது. அது எப்போது என்பதே என் போன்றவர்களின் கேள்விகள். அழிவின் விளிம்பிலெ நின்றுகொண்டு மாற நினைத்தாலும் மாற வாய்ப்பு உண்டு.

இறைவன் திருக் குர்ஆனிலே கீழ்வருமாறு கூறுகின்றான். "அவர்களும் திட்டமிட்டார்கள். அல்லாஹ்வும் திட்டமிட்டான். இன்னும் திட்டமிடுவதில் அல்லஹ்வே மிக்க மேலானவன்". (அல் குர்ன் 8:30 (அல் அன்·பால்)

இப்படிப்பட்ட சாவால்கள் யாவும் முஸ்லீம்களுக்கு புதிதல்ல, ஆனால் அதை எதிர்கொள்ளும் சூழல்தான் புதிது. கல்வியிலும், அறிவியல் வளர்ச்சியிலும், இஸ்லாமியக் கொள்கைகளை, வாழ்க்கை நடைமுறைகளைப் பின்பற்றபடுவதிலும் பின் தங்கியுள்ள முஸ்லீம்களுக்கு இந்த சூழல் பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. இதானால்தான் முஸ்லீம்கள் தனது நிலையை அடிமுதல் நுனிவரை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. முஸ்லீம்கள் முதலில் தங்களிடத்திலே வளர்ந்துள்ள களைகளை வேறோடு எடுத்தெரிய வேண்டும். முஸ்லீம்கள் தாங்களாக மாறாத வரை இறைவனும் அவர்களுக்கு உதவி செய்யமாட்டான்.

முற்றும்.

குறிப்பு: எனது இந்த ஆய்வுரைக்கு மறுமொழியிட்டவர்களுக்கும் மற்றும் பயனுள்ள விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும் எனது நன்றிகள். மீண்டும் சந்திக்கும்வரை வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.

Saturday, April 16, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 5

'ஹிப்போகிரஸி' என்ற வர்த்தை ஒரு காலத்தில் தீண்டத்தகாத வார்தையாக, அவமானக் குறியாக அறியப்பட்டது. அந்த வார்த்தையைக் கொண்டு யாரையாவது குற்றப்படுத்திப் பேசினால் பேசப்பட்ட மனிதர் அவமானப்பட்டதைப் போல் உணர்வார். ஆனால் இன்றைய அரசியல் உலகில் அந்த வார்த்தையைச் சொல்லி யாரையாவது பேசினால் அது அவரின் அரசியல் உயர்வைக் குறிப்பதைப் போல் பெருமைப் பட்டுக் கொள்ளும் அவல நிலைமையைத்தான் நாம் பார்க்கிறோம்.

அமேரிக்காவின் ஜார்ஜ் புஷ்ஷிலிருந்து இஸ்ரேலின் ஷரோன் வரை, ஒரு சூரியனுக்கு கீழ் இருக்கக் கூடிய எல்லா நாட்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும், ஆள்பவர்களும் ஹிப்போகிரஸிகளாகத்தான் மாறிப் போய்விட்டார்கள். வெட்கமில்லாத, கண்ணியமில்லாத அரசியல் தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வாழக்கூடிய நம்மிடத்திலும் இந்த 'ஹிப்போகிரஸி' இப்போது ஒரு பெருமைக்குரிய விஷயமாகிவிட்டதில் எந்தவித விந்தையும் இல்லை. எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணம்தான் இபோதெல்லாம் மேலோங்கிவிட்டதே தவிர்த்து செல்லுகின்ற பாதை சரியாக இருக்க வேண்டும் என்ற அறச் சிந்தனையே அற்று போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு ஹிப்போகிரஸி (நயவஞ்சகன்) எழுதிய 'The Case for Democracy; The Power of Freedom to Overcome Tyranny and Terror' என்ற நூலைப் படித்துவிட்டு அமேரிக்காவின் ஜார்ஜ் புஷ் கண்ணீர் விடாத குறையாக ஜனநாயகத்தின் மேல் அளவு கடந்த பிரியம் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா? நாடன் ஷரன்ஸ்கி என்ற அந்த ஹிப்போகிரஸி எழுதிய நூலை அக்கு வேறு ணி வேறாக படித்து புரிந்துவிட்டு தற்போது கர்த்தருக்கு அடுத்த படியாக ஜனநாயகத்தைத்தான் தனது கடவுளாக ஏற்றுக் கொண்டு விட்டாரோ என்று நினைக்குமளவிற்கு ஜனநாயகப் பயித்தியம் பிடித்து விட்டது. அத்தோடு விடவில்லை, இந்த புத்தகத்தை 'is part of my DNA' என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார் ஜார்ஜ் புஷ் (Rupert Cornwell - The Guardian).

அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று கேட்கலாம். அதில் என்ன இருக்கிறது என்பதற்கு முன்னால் அதை எழுதியவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. இந்த நாடன் ஷரன்ஸ்கி 19 வருடங்களுக்கு முன்பாக சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு யூத அரசியல் கைதி. 1986ம் வருடம் சோவியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி இந்த அரசியல் கைதி சோவியத் வெகு காலமாக கேட்டுக் கொண்டிருந்த ஒரு ரஷ்ய ஒற்றனுக்கு மாற்றாக (Prisoner Exchange) விடுதலை செய்யப்பட்ட ஒரு 'மனித உரிமைவாதி'. நாடன் ஷரன்ஸ்கி தற்போது இஸ்ரேலில் ஷரோனின் அமைச்சராக இருக்கிறார். அவருடைய புத்தகத்தில் அவர் சொல்லிய மிக முக்கியமான கருத்துக்களில் இரண்டை மட்டும் இங்கே கொடுக்க விரும்புகிறேன். காரணம் அந்த இரண்டு கருத்துக்கள்தான் அமேரிக்காவின் வெளியுறவு கொள்கையின் மிக முக்கியமான தூண்களாக தற்போது காட்டப்படுகிறது? (அவரை நான் ஏன் ஹிப்போகிரஸி என்று சொல்கிறேன் என்று இந்தப் பதிவிலே இன்னொரு இடத்திலே சொல்கிறேன்) அவர் சொல்லிய கருத்தில் தலையாயது இதுதான். (1) ஒன்று இந்த உலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப் படுகிறது. ஒன்று நல்லவர்கள் கூட்டம் இன்னொன்று தீயவர்கள் கூட்டம். (இதற்கு மத்தியில் யாரும் கிடையாது, அமேரிக்காவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் இருக்கக் கூடாது. இதைத்தான் அதிபர் புஷ் அவர்கள் 'either with us or against us' என்ற புகழ் பெற்ற வார்த்தைகளை ஆப்கான் யுத்தத்தின் போது முழங்கியது. (எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்ற குழப்பமிருந்தாலும் ஏதேனும் ஒரு கூட்டத்தில் சேர்ந்துக் கொள்ள வேண்டும்).

(2) ஜனநாயகவாதிகள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்ள மாட்டார்கள், காரணம் சுதந்திரச் சிந்தனையும் விடுதலை உணர்வும் கொண்ட மக்கள் தனது எண்ணங்களை வெளிப்படையாக தெரிவிப்பதால் கோடுங்கோல் ஆட்சியாளர்களை (சதாம் ஹ¤சைன் போன்றவர்களை) தன்னிஷ்டத்திற்கு செயல்பட அனுமதிக்க மாட்டார்கள். அதாவது மக்கள் சுதந்திரமாக செயல்படும்போது அவர்களுடைய உண்மையான விருப்பங்கள் வெளிப்படும், அந்த வெளிப்பாடுகள் கொடுங்கோல் ஆட்சி ஏற்படாமல் இருக்க வழி அமைக்கும்.

இப்படியெல்லாம் மக்கள் உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் குரல் கொடுக்கும் மிகப்பெரும் மனித உரிமையாளனாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு ரஷ்யாவின் சிறையில் இருக்கும் போது எழுதிய தனது சிந்தனைகளை புத்தகமாக வெளியிட்டு இஸ்ரேலில் தஞ்சம் புகுந்து அரசியலில் ஈடுபட ஆரம்பித்தவுடன் எங்கே போயிற்று இந்த மனித உரிமை முழக்கங்கள்?

இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை ஆரம்ப காலங்களில் எதிர்த்தவர்தான் இந்த நாடன் ஷரன்ஸ்கி. பிற்காலத்தில் அரசியலில் தனது சொந்த நலன்களை கருதி பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டார். அது மட்டுமல்ல இஸ்ரேலின் அரசு சார்ந்த நிறுவனங்கள் இவரை பிடித்து வாங்கு வாங்கு என்று அடி முதல் நுனி வரை துவட்டி எடுக்க பாலஸ்தீனர்கள் பற்றி பேசுவதையே நிறுத்திக் கொண்டார். இவர்களேல்லாம் எந்தவிதாமான ஜனநாயகவாதிகள்?

இவரின் இஸ்ரேல் வாழ்க்கையையும் அதில் அவர் வழங்கிய நேர்முக கருத்துக்கள், பேச்சுகள், பொதுவாழ்க்கையில் அவர் செய்யும் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சேகரித்து வரும் டாக்டர் இஸ்ரேல் ஷகாங் என்பவர் (இவர் சிறுவராக இருந்தபோது ஒரு காலத்தில் நாஜிக்களின் முகாம்களில் வதைக்கப் பட்டவர். இவர் founder of Israeli League for Civil and Human Rights) சொன்னதை நினைவு கூற விரும்புகிறேன். 'மனித உரிமைகளை இனத்திற்கும் நாட்டிற்கும் தகுந்தார்போல் நிர்ணயிக்கக் கூடிய இவரின் (நாடன் ஷரன்ஸ்கி) இந்த பாங்கு இவரின் முந்தைய மனித உரிமை முழக்கங்களை சந்தேகிக்க வைக்கிறது'. (Dr. James Zogby, Arab News, April 4, 05)

அமேரிக்காவின் NBC தொலைக்காட்சி நிறுவனத்தில் டாக்டர் ஜேம்ஸ் ஜொகபியும், நாடன் ஷரன்ஸ்கியும் ஒருமுறை சந்தித்துக் கொண்ட போது ஜேம்ஸ் இவரின் தற்போதைய நிலைபாட்டைப் பற்றி கேட்டபோது வார்த்தைகளை மென்று முழுங்கி கடைசியாக ஜெம்ஸிற்கு 'Palestine threat' பற்றி சரியாக புரியவில்லை என்று மழுப்பிவிட்டார் (Arab News April 4, 05). தொடர்ந்து ஜேம்ஸ் இது விஷயமாக பேசியபோது தலையை வேறு எங்கோ திருப்பிக் கொண்டு பதிலளிக்கவும் மறுத்து விட்டார்.

ஒரு யூதன் எங்கேனும் பாதிக்கப்பட்டால் அது மனித உரிமை மீறல்கள், அதே நேரம் ஒரு முஸ்லீம் பாதிக்கப்பட்டால் அதைக் கண்டு கொள்ளக் கூடாது - இதுதான் இந்த ஹிப்போகிரஸி நாடன் ஷரன்ஸ்கியின் மனித உரிமை சம்பந்தப்பட்ட கொள்கைகள். ஏன் இப்படி? அதிகாரம் வேண்டும், அரசியலில் முன்னேற வேண்டும். தான் ஒரு காலத்தில் சொன்ன தத்துவங்களையும், கொள்கைகளையும் தானே தின்று முழுங்கலாம், தவறில்லை, ஆனால் அரசியல் படிக்கட்டுகளில் முன்னேறியாக வேண்டும். இதற்குப் பெயர்தான் நயவஞ்சகம். இந்த நயவஞ்சகன் எழுதிய நூலை உயர்வாக சொல்லிக் கொண்டிருக்கும் இன்னொரு நயவஞ்சகன் ஜார்ஜ் புஷ். தான் சிறையில் வாடிய போது எழுந்த இந்த சுதந்திர சிந்தனைகள் விடுதலையானவுடன் வெறும் புத்தகத்தில் எழுதி விற்பதற்குத்தான் பயன்படும் என்பதை சொல்லாமல் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார் இந்த நாடன் ஷரன்ஸ்கி. 'Tyranny and Terror' என்பதை தனது சிறைக்காலங்களில் அனுபவித்த இந்த மேதை தினம் தினம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பாலஸ்தீனர்களைப்பற்றி கவலைப்படாத இந்த மனிதரை நயவஞ்சகன் (ஹிப்போகிரஸி) என்று சொல்வதில் எந்த தவறும் கிடையாது.

ஒரு சாதாரண மனிதன் எழுதிய இந்த புத்தகம் அதிபர் புஷ்ஷின் சிந்தனையை இவ்வளவு அதிகமாக கவர்ந்திருக்கிறதென்றால் என்ன காரணம்? ஏன் இப்படி ஜனநாயகத்தைப் பற்றி அதிபர் புஷ்ஷைவிட ஷரன்ஸ்கியின் ஜனநாயக விளக்கம் சுமார் 200 வருடகால அமேரிக்கா சுதந்திர விரும்பிகளுக்கு புதுமையாக இருக்க வேண்டும்?

ஒரே வாக்கியத்தில் சொல்லி விடாலாம். 'உலகை ஆள்வது அமேரிக்கா.. அமேரிக்காவை ஆள்வது இஸ்ரேல்..' அமேரிக்கவின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளும், செயல்களும் எப்படி ஜயனோசியக் கொள்கைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் அமேரிக்காவின் மூன்றாவது லட்சியமான அரபு நாடுகளை இஸ்ரேலுடைய ஆதிக்கத்தின் கொண்டுவரும் திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இஸ்ரேலிய முதலாளிகளின், அரசியல் மாஸ்டர்களின் பிடிக்குள் இருக்கும் அமேரிக்கா இஸ்ரேலுக்காக, குறிப்பாக ஜயனோசியக் கூட்டங்களுக்குக்காக பணி செய்ய வேண்டிய நிர்பந்தமும் அவர்களின் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் தற்போது தலையாய கடமையாக இருக்கிறது.

(தொடரும்)

Monday, April 11, 2005

அரசியல் இஸ்லாம் - ஆன்மீக இஸ்லாம்?

இஸ்லாம் என்பது ஒன்றுதான். இதில் அரசியல் இஸ்லாம் ஆன்மீக இஸ்லாம் என்று எந்த பிரிவுகளும் கிடையாது. முஸ்லீம்களில் பல பிரிவுகள் இருக்கலாம், ஆனால் இஸ்லாத்தில் பிரிவுகள் கிடையாது. இஸ்லாம் என்பது ஒரு முழுமையான மார்க்கம் மற்றும் வழிமுறைகள் அடங்கிய ஒரு வாழ்க்கைத் திட்டம். முழுமையான வாழ்க்கைத் திட்டம் அல்லது வழிமுறை எனும்போது அதில் ஒரு மனிதனுக்கு தேவையான எல்லாவிதமான அடிப்படை வழிகாட்டுதலும் இருக்க வேண்டும். உலகில் தோன்றிய மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் உள்ள வித்தியாசமே இதுதான். மற்ற மதங்களெல்லாம் இறைவழி பாட்டையும், மோட்சமடைவதின் அவசியத்தையும் அதற்கான வழி முறைகளை மட்டுமே பெரும்பான்மையாக வலியுறுத்துகின்றன. ஒரு சில மதங்களில் அதையும் தாண்டி மற்ற விஷயங்கள் அங்கங்கே சொல்லப் பட்டாலும் காலப் போக்கில் அவைகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு கடவுளை நான்கு சுவற்றுக்குள், கோவில்களிலும், பள்ளிகளிலும் உட்கார வைத்துவிட்டார்கள். ஏதோ கடவுள் அங்கு மட்டும் விழிப்புடன் இருப்பது போலவும் மற்ற இடங்களில் என்ன தவறு செய்தாலும், கோவிலுக்கு சென்று கன்னத்தில் போட்டுக் கொண்டால் போதும் என்ற நிலைக்கு போதனைகள் வெறும் சடங்காக மட்டும் கையாளப்படுகின்றன.

இதை மாற்றி இறைவனை எல்லா நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் அஞ்சி நடக்கவும், இறைவனின் போதனைகளை அதற்குரிய வழியில் பின்பற்ற வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது. ஒரு முஸ்லீம் அரசியல்வாதியாகவோ, வியாபாரியாகவோ, ஆசிரியனாகவோ, தொழிலாளியாகவோ, முதலாளியாகவோ, விஞ்ஞானியாகவோ அல்லது ஏழையாகவோ இருக்கலாம். அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலைக்கேற்ப அவர்கள் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களாக ஒரு நல்ல மு·மீனாக வாழ்ந்து மறைய வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. விரும்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர்கள் அதை செயல்படுத்த ஒரு சில பார்முலாக்களையும் அவர்களுக்கு அறிவுறுத்துகிறது. இதைத்தான் இஸ்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்று அனைத்திர்க்கும் உகந்த அறிவையும் வழிமுறையையும் குரான் மூலமாக கொடுத்திருக்கிறது. எனவேதான் இஸ்லாம் ஒரு முழுமையடைந்த மார்க்கம் என்று இறைவனாலேயே மொழியப்பட்டது.

'இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்துவிட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையுமாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்' (அல்-மாயிதா 5:3 - அல் குரான்)

ஏக இறைவனை ஏற்றுக் கொண்டால் அது ஆன்மீகம், அந்த ஏக இறைவனை எப்படி வணங்க வேண்டுமென்று முகம்மது நபி (சல்) அவர்கள் சொன்னபடி வணங்கினால் அது அரசியல் என்று கருத்துத் தொணிக்கும் வகையில் இந்த வலைப்பதிவில் நேசகுமார் அவர்களால் ஒரு கட்டுரை வரையப்பட்டது. அந்தக் கட்டுரை இன்னும் நிறைய விஷயங்களை அவர் விரும்பியது போல் வெளிப்படுத்தியுள்ளது. (He is deliberately attempting to distort the meanings by quoting out of context) அதாவது அல்லாஹ்வை மட்டும் வணங்கினால் அது 'ஆன்மீக இஸ்லாம்', நபி முகம்மது (சல்) அவர்கள் காட்டிய வழியில் வழிபட்டால் அது 'அரசியல் இஸ்லாம்' என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த சிந்தனை கோட்பாட்டை நினைத்து சிரிக்கத்தான் வேண்டும்.

ஒரு மாணவன் தனது அறிவியல் புத்தகத்தை தானாக படித்தால் அது 'அறிவியல் படிப்பு', அதையே அவனது அறிவியல் ஆசிரியர் சொல்லி தந்ததுபோல் படித்தால் அது 'ஆசிரியர் அறிவியலாகிவிடுமா?'

ஒரு குழந்தை தானாக ஏதேனும் உளரினால் அது 'மொழிப் பயிற்ச்சி', அதையே அம்மா சொல்லிக் கொடுப்பது சொன்னால் அது 'அம்மா பயிற்ச்சியாகிவிடுமா?'

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆன்மீகம் என்றால் என்ன, கர்மா என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தங்களை அவர் தெரிந்து கொள்ளுதல் நல்லது. நேசகுமார் போன்றோரின் கவலை எல்லாம் எப்பாடு பட்டாவது முகம்மது நபியை ஒரு குற்றமுள்ளவர் என்று நிரூபித்துவிட வேண்டும் அப்படி செய்வதன் மூலம் முஸ்லீம்களை முகம்மது நபியின் (சல்) வழிகாட்டுதலில் இருந்து வேறுபடுத்தி வெறும் மதச் சடங்குகளை மட்டும் செய்யக் கூடியவர்களாக மாற்றிவிட வேண்டுமென்பதே. (அதற்கான காரணங்களை பிறகு பார்க்கலாம்). நேசகுமார் போன்றோருக்கு வெண்டுமென்றால் கடவுளை பூஜை அறையோடும் அல்லது கோவில்களில் மட்டும் கொண்டாடினால் பொதுமென்று இருக்கலாம்.

'மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் நடைமுறை அத்வைதம் - அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மைப் போல் சமமானவர் என்று பாவிப்பதும் அவ்வாறே நடந்து கொள்ளும் தன்மையும் இந்துக்கள் மத்தியில் அறவே மலரவில்லை. ஆனால் இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாரட்டத்தக்க வகையில் அணுகியிருக்கிறதென்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று அனுபவப் பூர்வமாக கூறுகிறேன்'. என்று விவேகானந்தர் அவர்கள் சாட்சி கூறுகின்றார்.
அதுமட்டுமல்ல 'நான் அழுத்தமாகச் சொல்கிறேன். நடைமுறைக்கு இசைவான இந்த இஸ்லாமியச் செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் - அது எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் - பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே அமையும்' என்று கூறுகின்றார் (Letters of Swami Vivekananda P. 463)

விவேகானந்தர் எந்த ஒரு முஸ்லீமுடைய வாளுக்கும் பயந்து இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நேசகுமார் போன்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

நடைமுறை அத்வைதம் எப்போது சாத்தியமாகும்? இஸ்லாமிய செயல்பாடுகள் இருந்தால்தான் அது சாத்தியமாகும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் விவேகானந்தர். இஸ்லாமிய செயல்பாடு என்றால் ஒருமித்த ஒரு வழிகாட்டுதலுக்கு உட்பட்ட செயல்பாடாக இருக்க வேண்டும், அதுவல்லாமல் ஆளுக்கொரு வழியில் செயல்பட்டால் அது விவேகான்ந்தர் சொன்னதுபோல் அது எத்தனை சிறப்புக்குரியதாக இருந்தாலும் பயனற்றதாகத்தான் இருக்கும். அதுதான் இந்து வேதாந்த தர்மங்களில் ஏற்பட்ட ஒரு குறைபாடு. அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்க்காகத்தான் இங்கே முகம்மது நபியவர்களின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.

குரான் என்பது ஒரே நாளில் மொத்தமாக எழுதி அச்சடித்து மனித சமூகத்தின் கையில் கொடுக்கப்பட்ட ஒரு புத்தகமல்ல. கொஞ்சம் கொஞ்சமாக 23 வருடங்களாக கொடுக்கப்பட்டு அதை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் எப்படி வழிநடத்த வேண்டுமென்று நபிகளின் வாழ்க்கை மூலமாக நடத்திக் காட்டப்பட்டதுதான் குரான் என்ற புனித மறை. எனவேதான் ஒவ்வொரு முஸ்லீமும் நபிகாளாரை பின்பற்றி நடந்தால்தான் குரானை அதனுடைய உண்மையான வழியில் செயல்படுத்த முடியும். அதுதான் விவேகானந்தர் அவர்கள் சொன்ன இஸ்லாமிய செயல்பாடு.

கர்மாவை அதிகமாக வலியுறுத்துவது அத்வைதம், ஆனால் அதை அழகாக வாழ்வில் செயல்படுத்த பாதை அமைத்துக் கொடுக்கிறது இஸ்லாம் என்று விவேகானந்தர் போன்ற பெரும் மனிதர்கள் சொன்னதெல்லாம் கடவுளை வெறும் வழிபாட்டு கூடங்களில் மட்டும் வைத்துவிடக்கூடாது என்ற கருத்தில்தான்.

இஸ்லாம் என்பது முன்பே சொன்னது போல் ஒரு முழுமையடைந்த மார்க்கம். இதில் வாழ்க்கைக்கு தேவையான எல்லா அடிப்படை அம்சங்களும் போதிக்கப் பட்டுள்ளது. இதில் ஆன்மீகமும் இருக்கிறது அரசியலும் இருக்கிறது. பொருளாதாரமும் இருக்கிறது பொறியியலும் இருக்கிறது. அறிவியலும் இருக்கிறது சட்டவியலும் இருக்கிறது. சமுத்திரங்களைப் பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது சரித்திரங்களும் சொல்லப்பட்டுள்ளது. ஆக இவை எல்லாம் இருப்பதால் இஸ்லாத்தை அறிவியல் இஸ்லாம், சரித்திர இஸ்லாம், பொருளாதார இஸ்லாம், பொறியியல் இஸ்லாம் என்று பகுதி பகுதியாக பெயரிட்டுக் கொள்ளலாமா?

அல்லாஹ்வைவிட முகம்மது நபி (சல்) அவர்களுக்கே அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது அதுதான் அரசியல் இஸ்லாத்தின் அடிப்படை, அதைத்தொடர்ந்து இஸ்லாத்தில் பிளவுகள் அதிகமாகிறது என்றெல்லாம் எழுதியிருக்கிறார் நேசகுமார். இப்படி அல்லாஹ்வைவிட நபிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அது நபி வழிபாடகிறது என்று கூட எழுதியுள்ளார்.

எந்த முஸ்லீமும் நபியே எனக்கு இதைக் கொடு, நான் இன்ன கஷ்டத்தில் இருக்கிறேன் என்னை காப்பாற்று என்று கைதூக்கி முறையிடுவதில்லை. அறியாமையில் இருக்கும் முஸ்லீம்கள்கூட தர்காக்களுக்கு சென்று அங்கு அடங்கியிருக்கக் கூடிய மனிதர்களிடத்தில் வேண்டுமென்றால் கையேந்தி நிற்பார்கள், கேட்பார்கள், ஆனால் நபியை ஒரு போதும் கடவுள் நிலையில் வைத்து வணங்கியதில்லை. இறைவனுக்கு கொடுக்கப்படும் அந்தஸ்த்தை ஒரு போதும் நபியவர்களுக்கு இந்த சமுதாயம் கொடுத்ததுமில்லை, கொடுக்கப் போவதுமில்லை.

பிறகு ஏன் கடவுளை அவன் இவன் என்று பேசுகிறீர்கள், ஆனால் முஹம்மதை மட்டும் மரியாதையாக பேசுகிறீர்களே என்று கேட்கலாம்.

கடவுளை அவன் என்றும் பேசலாம், அவர் என்றும் பேசலாம் அல்லது அது என்றும் பேசலாம், காரணம் இறைவன் மறைவானவன், எல்லோருக்க்கும் பொதுவானவன். எனக்கு இருக்கும் உரிமைதான் நேசகுமார் போன்றோருக்கும் இருக்கிறது. நானும், அவரும் இன்னும் எல்லோரும் அதே இறைவனால்தான் படைக்கப் பட்டவர்கள். யாருக்கு எப்படி அழைக்கத் தோன்றுகிறதோ அவ்வாறு அழைக்கலாம். இந்த அ·றிணை உயரிணை இருக்கக் கூடிய மொழிகளில்தான் இந்த மரியாதை வேற்றுமைகள். இது மொழி வழக்கு. இந்த மொழி இலக்கணம் தெரியாமல் சிலர் இதை ஒரு பெரும் குற்றமாக எடுத்துச் சொல்வது அவர்களின் அறியாமையையே பறைசாற்றுகிறது. ஆங்கிலத்திலும் அரபியிலும் இன்னும் எத்தனையோ மொழிகளில் மனிதர்களை குறிப்பிடும்போது இந்த அ·றிணை உயரிணை வேற்றுமைகள் கிடையாது. எனவே இது மொழிபெயர்ப்பும் அந்தந்த மொழியில் இருக்கக்கூடிய வழக்கு இலக்கணங்களை கொண்ட விதியாகும்.

இறைவனை அவமானப் படுத்தினால் ஆயுள் தண்டனை, ஆனால் முகம்மது நபியைத் தரக்குறைவாக பேசினால் மரண தண்டனை என்றெல்லாம் மிகவும் கவலைபட்டு சில கருத்துக்களையும் நேசகுமார் மொழிந்துள்ளார்.

உதாரணத்திற்கு: அரசு பேருந்தில் ஏறிக் கொண்டு அந்த பேருந்தைப் பற்றி தரக்குறைவாக பேசலாம், அதை நடத்தும் அரசாங்கத்தை அவமானமாக பேசலாம், அந்த பேருந்தை ஓட்டுபவரும், நடத்துனரும் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டர்கள், கூட பயணம் செய்பவர்கள் கூட அதை ரசிக்கலாம். அதே நேரம் அதை ஓட்டும் ஓட்டுனரையோ அல்லது நடத்துனரையோ தரக்குறைவாகப் பேசினால் என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஏன் அப்படி?

ஒரு நாட்டின் சட்டம் கடவுளை மறுக்கலாம் அல்லது கடவுளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம், அது அந்தந்த நாட்டின் வரைமுறைக்கு உட்பட்ட விஷயம், இவைகளைப் பற்றி எல்லாம் விவாதிக்க வேண்டிய அளவிற்கு அவைகள் ஒன்றும் முக்கியமான விஷயங்கள் அல்ல.

Saturday, April 09, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 4

போர் என்றால் முதலில் பாதிக்கக் கூடியது பொருளாதாரம். ஆனால், போரை ஒரு சிறந்த முதலீடாக வைத்து பொருளாதார வெற்றி கான நினைப்பதில் அமேரிக்காவிற்கு நிகர் அமேரிக்காதான். எத்தனையோ நாடுகள் போரில் தனது பொருளாதாரத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் இன்னும் ஏழையாகவே இருந்து கொண்டிருக்கின்றன. அமேரிக்காவின் இந்த 'gambling' மத்தியக் கிழக்கு நாடுகளை பொருத்தவரை கொஞ்சம் சுலபமான விஷயம்தான். காரணம் போர் செய்யப்போவது ஒன்றும் சீனாவோ அல்லது ரஷ்யாவிற்க்கு எதிராகவோ அல்ல, இன்னும் சொல்லப் போனால் வட கொரியாவிற்கு எதிராகக் கூட அமேரிக்கா தற்போது ஆயுதத்தை கையில் எடுக்காது.

போர் என்றால் அதிலிருந்து வெற்றி பெரும் நாட்டிற்க்கு ஏதேனும் பிரயோசனம் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது முட்டாள்தனமான முடிவு மட்டுமல்லாமல் உள்ளதையும் இழக்க வெண்டிய சூழ்நிலை ஏற்படும். அமேரிக்கா ஒன்றும் முட்டாள்தனமாக முடிவு எடுக்கும் நாடு அல்ல, எனவே போருக்கு முன்னால் அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார அரசியல் லாபங்களை நன்றாக கணக்கிட்டுத்தான் போருக்கான முடிவை எடுத்தது.
அதிலும் போர் செய்யப்போவது தன்னால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்ட உருப்படாத ஆட்சியாளர்களும், ஆமாம் சாமி போட்ட கிரிமினல் ராணுவத் தலைவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளுக்கு எதிராகத்தான். ஆப்கானிஸ்தான் போர் ஒரு போரே அல்ல. இரட்டை கோபுரத்தின் வீழ்ச்சியால் எழுந்த கவுரவப் பிரச்சனயை தீர்த்துக் கொள்ள வலுவிழந்த நாட்டை இழுத்துப் போட்டு உதைத்த கதைதான். அதுமட்டுமல்லாமல் தன்னிடத்தில் உள்ள அனைத்துவித ஆயுதங்களையும் சோதித்துப் பார்க்கவும் அது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.

ஈராக் யுத்தம் அமேரிக்காவிற்க்கு அனைத்து வகையிலும் வலு சேர்க்கக் கூடிய போர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஈராக் யுத்தம் அமேரிக்கவை பொருந்த்தவரை ஒரு நல்ல முதலீடும் கூட.

ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க அமேரிக்க தயாரானது. உலகிற்கு வேண்டுமானல் ஈராக் யுத்தம் ஒரு தெளிவில்லாத WMD கதையாக இருக்கலாம், ஆனால் அமேரிக்கா தான் எழுதிய 'script' படித்தான் இந்த யுத்தத்தை நடத்தியிருக்கிறது. அதனால்தான் ஜார்ஜ் புஷ்ஷ¤ம் டோனி பிளேயரும் தலையில் அடிக்காத குறையாக தன்னாட்டு மக்களிடம் நேரடியாக விளக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது இந்த முடிவால் இரு நாடுகளுக்கும் விளையக் கூடிய நன்மைகளுக்கு காலம் பதில் சொல்லும் என்றெல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். (அந்த வகையில் அமேரிக்கர்கள் பொதுவாக போரை எதிர்த்தாலும் பிறரை அடக்கியாள வேண்டுமென்ற குணாதிசயம் அவர்களை ஜார்ஜ் புஷ்ஷின் இரண்டாவது வெற்றிக்கு ஓட்டு பொட வைத்தது).

இப்போரின் முடிவில் அமேரிக்கா எதிர்பார்க்கும் மூன்று முக்கிய விளைவுகள்:

அ) ஐ. நா. சபையையும், ஐரோப்பிய நாடுகளையும் அரசியல் ரீதியாக வலுவிழக்க செய்வது.
ஆ) சரிந்துவரும் தனது டாலரை பெட்ரோ டாலரின் மூலம் தூக்கி நிறுத்துவது
இ) இஸ்ரேலை மத்தியக் கிழக்கு நாடுகளின் போலிசாக உயர்த்தி அரபு நாடுகளை இஸ்ரேலின் பிடிக்குள் (ஆதிக்கத்தின்) கீழ் கொண்டு வருவது.

இந்த மூன்றிர்க்கும் சரியான காரணத்தைக் காட்டி உலக ஊடகங்களில் அதை பெரிதுபடுத்தி சாமனிய மக்களின் சிந்தனைகளை முடிந்தவரை குழப்பி அதன் மூலம் அவர்களது கருத்துக்களை தனக்கு ஆதரவாக திரட்டுவது என்று முடிவு செய்யப் பட்டது. அமெரிக்க எப்போதுமே தான் விரும்பக் கூடிய முடிவை முதலில் ஊடகங்களில் விவாதிக்க வைத்து அதன் வாயிலாக மக்களின் ஆதரவை திரட்டுவது வழக்கம். ஆள்பவர்களின் கருத்துக்களை பொதுமக்களிடத்தில் விற்பதற்க்குத்தானே இந்த ஊடகங்கள் எல்லாம் அடித்துப் பிடித்து ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களில் ஒரு விஷயத்தைச் சொன்னால் அதை உண்மை என்று நம்புவது பெரும்பாலருக்கு பழகிப் போன ஒன்று. (ஊடகங்களில் உண்மையை மட்டும் எழுதுபவர்களின் நிலையை நினைக்க பரிதாபமாக இருக்கிறது.)

மக்களின் மனதில் சென்று பதியக்கூடிய வாசகங்கள் உருவாக்கப் பட்டன. அவற்றில் முதன்மையானதும் ஏற்கனவே ஆப்கான் போரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டதுமான 'தீவிரவாதம்' அதைத் தொடர்ந்து 'WMD (Weapons of Mass Destruction)' என்று இரு USP (Unique Selling Points) உருவாக்கப் பட்டது.
செப்டம்பர் 11 க்கு பின் உலகில் உருவாகிப் போன சந்தேக நோய் தொற்று நோயாக மாறி இருப்பவன் இல்லாதவன், தெரிந்தவன் தெரியாதவன் என்று எந்தவித மொழி, மத மற்றும் நாடுகள் வித்தியாசமில்லாமல் எல்லோரையும் பற்றிக் கொண்டது அமேரிக்காவிற்க்கும் பிரிட்டனுக்கும் சாதகமாக அமைந்தது.

எதிர்க்க ஆளில்லை என்றால் அடிக்க வருபவனின் தன்னம்பிக்கையும் தைரியமும் அபாரமாக இருக்கும். அதுமட்டுமா? எப்போது எதிரியை உதைக்கலாம் என்ற ஆர்வமும் அதிகமாக இருக்கும். அப்படித்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் திட்டத்தை கையில் வைத்துக் கொண்டு உடனடியாக போரில் குதிப்பதென்று தவியாய் தவிக்க ஈராக் அமேரிக்காவின் 52வது மாநிலமாக மறுவதற்கு நாட்கள் எண்ணப்பட்டன.

தீவிரவாதம் மற்றும் WMD என்ற இரண்டு வார்த்தைகளும் உலக அரங்கில் எல்லா மனிதர்கள் வாயிலும் வராத நாட்களே இல்லை எனும் அளவிற்கு தினம் தினம் பேசப்பட்டது. ஆனால் ஈராக்கில் அப்பாவி மக்களும், ஆண், பெண் குழந்தைகளும் மரணத்திற்க்கு தயாரானார்கள்.

ஏதோ ஒரு கூட்டம் லாபமடைவதற்க்கு லட்சக் கணக்கில் மக்கள் தங்கள் உயிர்களை அநியாயமாக இழக்கத் தயாரானார்கள். அவர்களை அறியாமலே மரணத்தின் கொட்டகைக்கு வந்து குவிக்கப் பட்டார்கள். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையும், பெற்றோர்கள் பிள்ளைகளையும் தங்களது கண்களுக்கு முன்னாலேயே வெடி குண்டுகளிலும், பீரங்கி தாக்குதலிலும், விமான ஏவுகனைகளினாலும் சிதறடிக்கப் படுவதைப் பார்த்தார்கள். பிஞ்சுக் குழந்தைகளும் சின்னஞ் சிறார்களும் இரத்த வெள்ளத்தில் கையிழந்து காலிழந்து முகம் சிதைந்து மரணத்தில் மிதந்தார்கள். பெற்றெடுத்தப் பிள்ளைகளின் விழிகளில் தூசு விழுந்தாலே துடித்துப் போகும் தாய்மார்கள் மார்புகளில் பிள்ளைகளை அணைத்தவாறு மரணித்தார்கள்.

இரட்டைக் கோபுரம் தாக்கப்படும் காட்சியை மணிக்கொருமுறை டிவிக்களில் காட்டி மேலை நாட்டு மக்களின் மனதில் அதை மறக்கவிடாமல் செய்த மீடியாக்கள் ஈராக்கில் சிதறிவிழும் மனித உடல்களை மொத்தமாக மூடி மறைத்தன. எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக் கூடாது, எப்படிப்பட்ட படங்களை வெளியிட வேண்டும் என்று அந்தந்த படைத்தலைவர்களின் தணிக்கைக்கு பிறகே போர்ச் செய்திகள் வெளியிடப்பட்டன. அதையும் மீறி அல் ஜசீரா மற்றும் அல் அரபியா டிவியினர் ஈராக்கில் அப்பாவி மனிதர்களும் பிள்ளைகளும் கொல்லப் படுவதை செய்தியாக வெளியிட்டார்கள். ஆனால் அமேரிக்கா கருத்துச் சுதந்திர விரும்பிகள், ஜனநாயகக் காவலர்கள் அந்த டிவிக்களின் செய்தி சேகரிக்கும் பாக்தாத் அலுவலகங்களை தாக்கி அங்கிருந்த செய்தியாளர்களையும் உண்மையை சொன்ன காரணத்திற்க்காக மேல் நோக்கி அனுப்பி வைத்தார்கள்.
சோவியத்தை நம்பி முதலாம் வளைகுடா போரில் மோசம் போன சதாம் ஐரோப்பியாவை நம்பி இரண்டாம் வளைகுடா போரில் ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல் எலிக்குகைக்குள் தஞ்சமடைய நேர்ந்தது.

அரபுலகம் அவமானத்தில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வேதனையில் வாய்மூடி அமைதியாகக் கிடந்தது. ஐ.நா. சபையின் முடிவிற்க்கான காலம் தொடங்க ஆரம்பித்தது. வெறும் நிவாரணப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என்று அறிவுறுத்தப் பட்டது.

ஐரோப்பிய நாடுகள் மெதுவாக ஒதுங்க ஆரம்பித்தார்கள். ஈராக் அமேரிக்காவின் வசம் போய்விட்டது, பெட்ரோல் டாலர்கள் பெட்ரோல் ஈரோவாக மாறும் நாட்கள் தற்போது இல்லை என்ற எதார்த்தத்திற்க்கு வந்தவர்கள் புனரமைப்பு பணிகளில் ஏதாவது ஒப்பந்தம் கிட¨க்குமா என்று அமேர்க்காவிடம் பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்தார்கள்.

அமேரிக்காவின் script ல் ஐரோப்பியாவிற்கு எந்தவித பாத்திரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு பிரிதொரு சந்தர்பத்திற்க்காக காத்திருப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்பதை உணர்ந்து அமைதியாகிப் போனது ஐரோப்பிய உலகம்.

அமேரிக்கா ஏன் தன்னிச்சையாக புனரமைப்பு பணிகளில் யாரையும் கூட்டு சேர்க்காமல் செயல் படுகிறது என்பதை புரிந்துக் கொள்ள ஒன்றும் ராக்கெட் அறிவு தேவையில்லை. ஈராக் என்பது அமேரிக்கவை பொருத்தவரை ஒரு புதயலைப் போன்று. தோண்ட தோண்ட வற்றாமல் கிடைக்கக் கூடிய உலகின் இரண்டாவது அதிக கையிருப்பு இருக்கக் கூடிய பெட்ரோல் உள்ள நிலம் என்பதால் எத்தனை பில்லியன் டாலர்கள் செலவு செய்தாலும் வட்டியும் முதலுமாக எடுத்துக் கொள்ளலாம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லாததால் அமேரிக்க வேறு யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை.

ஈராக்கின் எல்லா ஒப்பந்தங்களும் அமேரிக்க கம்பேனிகளுக்கு மட்டுமே கொடுக்கப் பட்டது. அது மட்டுமல்லாமல் அந்த ஒப்பந்தங்கள் எதையும் பிற்காலத்தில் ஈராக் செல்லுபடியாகாத ஒப்பந்தமாக மாற்றிவிடக் கூடாது என்பதில் தனிக் கவனம் எடுத்து அதற்கு தகுந்தார்போல் ஈராக்கின் புதிய சட்டங்கள் பால் பிரெமரால் (First Governor General of Iraq) ஏற்கனவே எழுதி அமலாக்கப் பட்டுவிட்டது. ஒரு நாட்டை அநியாயமாக எடுத்துக் கொண்டதுமல்லாமல் அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி இருக்கக் கூடிய பெட்ரோல் தொடர்பான எல்லா வியாபரங்களையும் அமேரிக்க கம்பேனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கிறது அமேரிக்க அரசாங்கம்.

அமெரிக்கா விரும்பியது போல் ஐ. நா சபை ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. கோபி அண்ணானின் ஐ.நா. சீரமைப்புத் திட்டத்திற்க்கு அமேரிக்கா veto சொல்லிவிட்டது. ஆங்காங்கே ஏழை நாடுகளுக்குச் சென்று போலியோ ஊசி போடும் வெலையும் கோதுமை மூட்டைகளை வினியோகம் செய்தால் போதும் என்று ஐ.நா. வின் வேலையை அமேரிக்கா குறைத்துவிட்டு உலக நாடுகளின் அரசியல் பொருளாதார ஒழுங்குகளை தான் பார்க்கப் போவதாக ஆணித்தரமாக அழகுற ராஜ தந்திர வார்த்தைகளில் சொல்லிவிட்டது.

ஐ.நா.வின் தலை எழுத்தை மாற்றி எழுதும் பணியை இத்தோடு விடப் போவதில்லை அமேரிக்கா. ஐ.நா. சபையைப் பற்றி 1994ல் 'There is no such thing as the United Nations. There is only the international community, which can only be led by the remaining superpower, which is the United States... The secretariat building in New York has 38 stories. If it lost ten stories, it wouldn't make a bit of difference' என்று Federalist Society Forum' என்ற அமைப்பில் பேசிய ஜான் போல்டன் (1) என்ற புதிய பழமைவாதியைத்தான் (இப்படி மொழி பெயர்க்கலாமா? neo-conservative) அமேரிக்காவின் ஐ. நா. தூதராக நியமித்திருக்கிறது.

ஈராக் போரின் மூலம் தனது முதலாவது எதிர்பார்ப்பான ஐ.நா. ஒழிப்பு வேலையை தொடங்கிவிட்ட அமேரிக்கா தனது இரண்டாவது வெற்றியான டாலரின் பாதுகாப்பில் குறைந்தது ஒரு பத்தாண்டு காலத்திற்க்காவது அதிகம் கவலைப்பட தேவையில்லை எனும் அளவிற்கு தன்னை கொஞ்சம் நிம்மதியாக்கிக் கொண்டது. ஒபெக் நாடுகளின் முதுகெலும்பை உடைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈராக்கை கையில வைத்துக் கொண்டு தான் விரும்பிய நாடுகளுடன் இருநாட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு வேண்டுகின்ற அளவிற்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ய முடியும். ஒபெக் நாடுகளின் கட்டுபாட்டை குலைத்து அவர்களையும் அமேரிக்கா விரும்பியபடி பெட்ரோல் விலையை நிர்ணயிக்க செய்யும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

தான் எதிர்பார்த்த முதல் இரண்டு விளைவுகள் செயல்படத் தொடங்கியது அமேரிக்காவிற்கு தற்போது மன சாந்தியை அளித்தாலும் தனது மூன்றாவது எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்து கொள்ள அமேரிக்கா போரின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக ஜனநாயகம் என்ற புதிய USP யை இப்போது செயல் படுத்த தொடங்கியுள்ளது.

அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.

(தொடரும்)

Notes:
1. Warriors of Democracy - Aamer Syed, Arab News page 7, dated April 7, 2005

Saturday, April 02, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 3

ஆங்கிலத்தில் சொல்வார்கள், 'When the chips are down, you have to show the grit' இதைத்தான் தற்போது அமேரிக்கா செய்து கொண்டிருக்கிறது. தனது பொருளாதாரம் ஒரு கண்ணி வெடியின் மீது நிற்பது போல் அமேரிக்கா உணர்கிறது. அமேரிக்காவின் வீழ்ச்சி அதனுடைய பொருளாதார வீழ்ச்சியை பொறுத்தே இருக்கிறது என்பதை அமேரிக்காவின்ஆளும் வர்க்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. இன்னும் நான்கைந்து வருடங்களில் அமேரிக்காவின் பொருளாதாரம் சரிவை சந்திக்கும் அபாயம் வெகுவாகவே இருப்பதால், 21ம் நூற்றாண்டு அமேரிக்காவின் கையை விட்டு போகும் வாய்ப்பு நிறையவே உள்ளது.

அமேரிக்காவின் பொருளாதாரத்தை தொடர்ந்து நம்பலாமா? அமேரிக்காவின் பொருளாதார பலம் தொடர்ந்து குறைவதால் டாலரின் கையிருப்பை மாற்றலாமா? என்றெல்லாம் உலக நாடுகள் தொடர்ந்து சிந்தித்து வருவதும் டாலரின் கையிருப்பை குறைப்பதும் இப்போது தொடங்கிவிட்டன.

இச்சூழலில்தான் 1999ல் ஈரோ அறிமுகப் படுத்தப்பட்டு டாலரைப் போல் அல்லாமல் தங்கத்திற்க்கு எதிராக 15% மதிப்புடன் புழக்கத்திற்க்கு கொண்டு வரப்பட்டது. முதலில் ஈரோ ஒரு பலவீனமான கரன்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த நான்கு வருடமாக ஈரோ டாலருக்கு எதிராக 25% தனது மதிப்பை உயர்த்தி, தன்னை ஒரு மாற்று கரன்சியாக, குறிப்பாக டாலருக்கு எதிராக தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது.

எப்போதுமே மார்க்கெட்டில் ஒரு பொருளை எதிர்த்து இன்னொரு பொருளை புழங்கவிட வேண்டுமென்றால் அல்லது புரோமோட் செய்ய வேண்டுமென்றால் அறிமுகப்படுத்தப்படும் அல்லது போட்டியிடும் பொருளை குறைந்தது இரண்டு மூன்று வருடத்திற்க்கு எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு செயல் படுத்தப்படும். அவ்வப்போது தேவைப்படும் பட்சத்தில் அதனுடைய செயல் திட்டத்தில் ஒருசில மாற்றங்கள் உண்டாக்கப்டுமே தவிர்த்து அதனுடைய 'marketing strategy' மாற்றப்பட மாட்டாது. அந்த வகையில்தான் ஈரோ அமேரிக்க டாலருக்கு எதிராக நிறுத்தப்பட்டு உலக நாடுகளின் வர்த்தகத்தில் தனக்கென்று ஒரு பங்கை உருவாக்கிக் கொண்டுவிட்டது.

2002 வருடத்தில் உலக நாடுகளின் டாலர் மொத்தக் கையிருப்பு தோராயமாக 68% ஆக இருந்தது. அதே வருடம் உலகிலேயே ஜப்பானுக்கு அடுத்தப்படியாக கிட்டதட்ட 200 பில்லியன் டாலர்கள் கையிருப்பு வைத்துள்ள சீனா தனது கையிருப்பில் கனிசமான பங்கை ஈரோவிற்கு மாற்றுவதாக அறிவித்தது. (சீனாவின் forex reserve ஒரு அரசாங்க ரகசியமாக கையாளப்படுகிறது). ஈரோவின் மத்திய வங்கியான BNP Paribas அறிக்கையின்படி சீனா 80% வைத்திருந்த டாலரின் கையிருப்பை 50% குறைத்ததாக தெரிகிறது.

2001 லிருந்து 2003 வரை கனடா தனது டாலரின் கையிருப்பை 75% லிருந்து 55% குறைத்து ஈரோவின் கையிருப்பை 23% லிருந்து 42% உயர்த்தியுள்ளது.

ஜனவர்¢ 2003ல் ரஷ்யாவின் மத்திய வங்கி ஈரோ கையிருப்பை 5% லிருந்து 10% உயர்த்தி டாலரின் கையிருப்பை 75% குறைத்தது. ரஷ்யாவின் இறக்குமதியில் 42% ஐரோப்பிய நாடுகளிலிருந்துதான் செய்யப்படுகிறது என்பதும் கவனிக்க வேண்டியதே.

2002ல் தைவான், ஹாங்காங், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், 2003ல் இந்தோனேஷியா 'axis of evil' என்று அமேரிக்காவால் அடையாளப்படுதப்பட்ட நாடுகளில் ஒன்றான வட கொரியா போன்ற நாடுகள் டாலரை குறைத்து ஈரோவை அதிகப் படுத்த தொடங்கின. இப்படி உலக நாடுகளின் செயல்பாடுகளுக்கு காரணம் ஏதோ அமேரிக்காவை பிடிக்காமல் அல்ல. இந்த நாடுகளின் இறக்குமதிகளின் பெருமடங்கு ஐரோப்பியா நாடுகளிலிருந்து செய்ய வேண்டிய அவசியமும் மற்றும் டாலரைப் போல் அல்லாமல் ஈரோ தங்கத்திற்க்கு எதிராக அதிலும் 15% மதிப்புடன் பொறுத்தப்பட்டதே. அதே நேரம் ஈரோவின் நம்பகத்தன்மை டாலரைவிட அதிகமாக இருப்பதற்க்கு காரணம் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் எதுவும் அமேரிக்காப் போன்று பற்றக்குறைகள் அதிகமில்லாமல் இருப்பது இன்னுமொரு முக்கிய காரணம்.

தற்போது உலக பொருளாதாரத்தில் என்னவெல்லாம் வாங்க வேண்டுமோ அவை அத்தனையும் ஈரோவின் மூலம் வாங்கிக் கொள்ளலாம், பெட்ரோலைத் தவிர்த்து.

இவ்வாறு ஈரோவின் புழக்கம் அதிகமாவதும் ஐரோப்பிய நாடுகள் ஈரோவில் வர்த்தக பரிமாற்றங்கள் செய்வதும் அமேரிக்காவின் டாலர் புழக்கத்தை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது.

இந்த உலக வர்த்தக பரிமாற்றங்களில் அதிகமான வர்த்தகம் பெட்ரோல் வர்த்தகம்தான் என்பதை புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. உலகிலேயே அமேரிக்காதான் தற்போது எண்ணெய் இறக்குமதியில் முதலிடம் வகிக்கிறது. ஒரு நாளைக்கு 20 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்யக்கூடிய அமேரிக்க தனது இந்த வர்த்தகத்திற்க்கு டாலர் அல்லாமல் ஈரோவில்தான் கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதிலும் தற்போது இருக்கக் கூடிய வருடத்திற்க்கு 500 பில்லியன் டாலர் பற்றாக்குறை பட்ஜெட் வைத்துக் கொண்டு, நினைத்துப் பார்க்கவே இயலாத அளவிற்கு ஒரு பொருளாதார படுகுழியின் விளிம்பில் நின்றுக் கொண்டிருக்கிறது அமேரிக்கா!

அதுமட்டுமா? அமேரிக்காவின் அதிகமான எண்ணெய் இறக்குமதி சவுதி அரேபியாவிலிருந்துதான் செய்யப் படுகிறது. இந்த இரு நாட்டிற்க்கும் உள்ள ஒரு விசித்திரமான ஒப்பந்தத்தின்படி சவுதி ரியாலின் மதிப்பு அமேரிக்கா டாலருக்கு எதிராக எந்தவித மாற்றங்களும் செய்யாமல், அதாவது இரு நாட்டு கரன்சிகளும் எப்படிப்பட்ட பணவீக்கம் நிகழ்ந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு குறையாமல் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உலகில் எல்லா பாகங்களிலும் அமேரிக்கா டாலர்கள் மதிப்பிழந்து வரும்போது சவுதியுடன் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவு குறையாமல் வர்த்தக பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பில்லியன் கணக்கில் சவுதி அரேபியா வருமானத்தை இழந்து வருகிறது. இப்படி ஏற்படும் இழப்புகளின் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி அமேரிக்கா பிரிண்டிங் பிரஸ் மூலமாக தீர்த்துக் கொள்கிறதோ அதே போல் சவுதி அரேபியா பெட்ரோல் பம்புகள் மூலம் சரி செய்து கொள்கிறது. பெருகிவரும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் இப்படி அச்சடிப்பதும், நிலத்திலிருந்து பம்ப் செய்வதுமாக இன்னும் எத்தனை நாளைக்குத்தான் செயல்படுவது?

ஈரோவின் இந்த உறுதியான மற்றும் குறிவைத்த முன்னேற்ற நடை பெட்ரோல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை எப்படி டாலரிலிருந்து ஈரோவிற்க்கு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.

ஆகஸ்ட் 2002ல் ஈரான் தனது அந்நிய செலாவனி கையிருப்பில் பாதியை ஈரோவாக மாற்றிவிட்டது. எண்ணெய் வளத்தில் உலகின் ஐந்தாவது இடத்தில் இருக்கக் கூடிய ஈரான் தனது பெட்ரோல் வர்த்தகங்களை ஈரோவில் மாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அதே வருடம் உலகில் பெட்ரோல் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுடன் குறிப்பாக ஜெர்மனியுடனான வர்த்தகம் ஈரோவில்தான் செய்யப்படும் என்று பேச்சுவார்த்தையில் இறங்கி ஒப்பந்தமும் ஆகிவிட்டது.

எண்ணெய் உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருக்கக் கூடிய வெனிசூலா பதிமூன்று வளரும் நாடுகளுடன் பார்ட்டர் (Barter deal) ஒப்பந்தம் செய்து கொண்டு தனது எண்ணெய் வர்த்தகத்திற்க்கு ஈடாக அந்தந்த நாடுகளுடைய பொருட்களை இறக்குமதி செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதற்கெல்லாம் முன்னோடியாக தனது பெட்ரோல் வர்த்தகத்தை ஈரோவிற்கு மாற்றிய முதல் நாடு ஈராக். எண்ணெய் வளத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய ஈராக் நவம்பர் 2000 ல் தனது வர்த்தகத்தை அதாவது oil for food என்று ஐ.நா. வினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத்தை முற்றிலுமாக ஈரோவிற்கு மாற்றியது. அதுமட்டுமல்லாமல், ஐ.நா. மூலமாக தான் வைத்திருந்த 10 பில்லியன் டாலரையும் ஈரோவாக மாற்றிக் கொண்டது. இதனால மூன்றில் இரண்டு பங்கு பெட்ரோலை ஈராக்கிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்த அமேரிக்க கம்பேனிகள் ஈராக்கிற்க்கு ஈரோவின் மூலம் பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்க்கு உள்ளானது. இச்சூழலில் ஜோர்டான் நாடும் ஈராக்கும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஜோர்டான் ஈராக்கிற்க்கு ஈரோவின் மூலம் பெட்ரோல் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தது.

இப்படி அங்கும் இங்குமாக டாலருக்கு போட்டியாக இருந்துக் கொண்டிருந்த ஈரோ கடைசியில் டாலரின் ராஜ்யமான பெட்ரோலில் கைவைக்க ஆரம்பித்தது அமேரிக்காவிற்கு நேர்ந்த மிகப் பெரும் பிரச்சனை.

இந்நிலையில்தான் வெந்த புண்ணில் வேலைச் செறுகியது போல் ஒபெக் நாடுகளும் தனது பெட்ரோல் வர்த்தகத்தை ஈரோவிற்கு மாற்றலாமா என்ற ஆய்வில் இறங்கியது. 'நீண்டகால எண்ணெய் வர்த்தகத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் டாலரிலிருந்து ஈரோவிற்கு மாற்றுவதால் எந்த கெடுதலும் வருவதாக தெரியவில்லை' என்று ஒபெக் அமைப்பின் ஜாவித் யெர்ஜானி என்பவர் தெரிவித்த கருத்து ஒபெக் நாடுகளின் வர்த்தக சிந்தனையில் வந்த மாற்றத்தை தெளிவுபடுத்துகிறது. (Javed Yerjani, head of OPEC market analysis dept., in his speech in April 2002).

அவர் அப்படி சொன்னதற்கான காரணம் உலகில் மொத்த எண்ணெய் இறக்குமதியில் (25%) முதல் இடத்தில் இருக்கக் கூடிய அமேரிக்காவைவிட ஐரோப்பிய யூனியனில் இருக்கக் கூடிய அனைத்து நாடுகளின் மொத்த இறக்குமதி 27% இருப்பதுதான். இன்னும் சில நாடுகள் இந்த யூனியனில் சேரவிருப்பதை கணக்கில் சேர்த்தால் இது இன்னும் 30 லிருந்து 35% உயர இருக்கிறது. அமேரிக்காவைவிட 30% அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த ஐரோப்பிய யூனியன் அமேரிக்கவின் பொருளாதார வர்த்தகத்தைவிட அதிகாமகக் கொண்டதால் டாலரின் இடத்தை ஈரோ பிடிக்க இருப்பதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை.

சீனாவின் இறக்குமதியும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியும் இன்றுவரை டாலரில்தான் நடந்து வருகிறது. இதுவும் ஈரோவிற்கு மாறும் பட்சத்தில் ஒபெக் நாடுகளின் ஏற்றுமதியில் 70% அமேரிக்கவைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்குத்தான் இருக்கும். இந்த சூழ்நிலையில் ஒபெக் நாடுகளின் வர்த்தகம் ஈரோவிற்கு மாறினால் அமேரிக்காவின் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று சொல்வதைவிட அழிந்துவிடும் என்று சொல்வதே மிகப் பொருத்தம்.

இதற்கிடையில் நீண்ட காலமாக எதிர்பார்த்த காஸ்பியன் எண்ணெய் சுரங்கம் வெறும் 4% ரிசர்வ்தான் என்பது 2002ல் தெளிவாகிப்போக அமேரிக்க முதலீடு செய்த ஆப்கான் அபகரிப்பு பிரயோசனமற்றதாகிப் போனது. அதுமட்டுமா? இருக்கும் 4% எண்ணெயும் தரமற்றது என்பதும் சோதனையில் தெளிவாகிப் போனது. சவுதியை விட காஸ்பியன் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் அதிகமான எண்ணெய் இருப்பதாக ஆய்வுகளில் (சாட்டிலைட்) தெரியவந்தபின் தான் அமேரிக்கா ஆப்கானிய அரசாங்கத்துடன் அதுவும் தலபான் அரசுடன் பேச்சு வார்த்தை கூட நடத்தியது. கடைசியில் அமேரிக்காவின் கணக்கு தவறாக இருக்க அமேரிக்கா வேறு வழியில்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் தனது கவனத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் திசை திருப்பியது.

அமேரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாக்க இராணுவ உலகில் தன்னிகரற்று, திமிருடன் இருக்கும் அமேரிக்க இராணுவத்தை களத்தில் இறக்குவதே ஒரே சிறந்த வழி என்று முடிவெடுத்தது அமேரிக்கா.

(தொடரும்)

Saturday, March 26, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 2

உலக அரசியலை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அமேரிக்காவின் அரசியலை புரிந்துக் கொண்டால் போதும், அதே போன்று அமேரிக்கா டாலரை நாம் புரிந்துக் கொண்டால் உலக பொருளாதாரத்தை புரிந்துக் கொண்டது போல் ஆகும். அந்த அளவிற்கு டாலரின் தாக்கம் உலக பொருளாதார வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் அதிக பங்கு கொண்டதாக இருக்கிறது. இதற்கும் முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் அணுகுமுறைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். அமேரிக்கா அரசியல் முஸ்லீம்களை பொருத்தவரை இரண்டு விதமான அரசியல் பரிமானங்களை கொண்டு செயல் படுத்தப்படுகிறது. ஒன்று உலக பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமான பெட்ரோல், இன்னொன்று உலகத்தின் பல பாகங்களில் பெரும்பான்மையான மக்களின் மனதை ஊடுருவிக் கொண்டிருக்கும் குரானின் கொள்கைகள். இரண்டிற்க்குமே அதாவது, 'மனம் மற்றும் பணம்' என்ற வாழ்வின் இரண்டு அதி முக்கிய தேவைகளுக்கு அடிப்படை காரணியாக இருப்பது இந்த மத்திய ஆசிய என்ற பாலைவன சமவெளிதான்.

இந்த இரண்டையும் வெல்ல வேண்டும் என்ற பன்னெடுங்கால போராட்டத்தின் பின்னனியில் (பல்வேறு அரசியல் கூட்டணிகள் செயல்பட்டாலும், தற்போது) அமேரிக்காவின் 'neocon' அரசியல் கூட்டணியினர் செயல்படுத்தும் அரசியல் திட்டங்களையும், அதன் சாதக பாதகங்களும்தான் இன்றைக்கு முக்கியத்துவம் நிறைந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் போராட்டமாக இருக்கிறது. முதலில் பொருளாதார பொலிட்டிக்ஸை அதாவது பெட்ரோல் பொலிட்டிக்ஸைப் பார்த்துவிட்டு பிறகு புத்தகப் பொலிட்டிக்ஸிற்கு (politics of ideology and mythology) போகலாம்.

அமேரிக்காவின் மிகப் பெரும் பிரச்சனை குறைந்து வரும் டாலரின் மதிப்பும், அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்தான். வருடத்திற்க்கு 5 சதவிகிதமாக அதன் மதிப்பு மற்ற நாடுகளின் கரன்சிக்கு, குறிப்பாக யூரொவிற்கு எதிராக குறைந்துக் கொண்டிருப்பது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று. காரணம் மற்ற கரன்சிகளைப் போல் அமேரிக்கா டாலர், தங்கத்திற்க்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட கரன்சி அல்ல. 1971ம் வருடத்திலிருந்து அமேரிக்கா டாலர் ஒரு 'floating currency' ஆக மாற்றப்பட்டது 'backing out on Bretton Wood Commitment'. அப்போது சுமார் 70 பில்லியன் டாலர் கடனாளியாக இருந்த அமேரிக்கா கையில் வைத்திருந்தது வெறும் 11 பில்லியன் பெருமானமுள்ள தங்கமே.

இன்றைக்கு அமேரிக்காவின் சூப்பர் பவர் அந்தஸ்திற்க்கு மற்றுமொரு காரணம் உலகச் சந்தையில் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றங்கள், மற்றும் ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கிடையில நடைபெறும் வர்த்தக மாற்றங்கள் யாவும் டாலரை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதே. பெரும்பாலும் உலகளாவிய இந்த வர்த்தக அமைப்பு டாலருக்கு பெரும் மதிப்பு அளிப்பதோடு அதன் பலவீனத்தை மறைப்பதற்க்கும் உதவுகிறது.

எந்த நாட்டினுடைய பொருளாதாரமும் அந்தந்த நாட்டின் பலம் மற்றும் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கணிக்கப்படும். அதே நேரம் அந்த நாட்டினுடைய கரன்சியின் மதிப்பு அந்நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பின் திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இதுதான் பொதுவான கரன்சி மற்றும் பொருளாதார அடிப்படை விதிமுறைகள்.

அமேரிக்காவின் டாலரை கவனித்தால் அது அதனுடைய சரியான மதிப்பைவிட அதிகமான மதிப்பு கொண்டிருப்பது தெரியவரும். இந்த 'over valued' அமேரிக்கா டாலரின் மதிப்புதான் தற்போது அமேரிக்காவின் மிகப் பெரும் பலமும் மற்றும் பலவீனமும். இது மற்ற நாடுகளில் இருக்கக் கூடிய பொருளாதார சிரமங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பிரச்சனை.

அமேரிக்கா தான் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவைவிட சுமார் 50% அதிகமாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வரை வருடத்திற்க்கு சுமார் 500 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் இருந்துக் கொண்டிருக்கக் கூடிய அமேரிக்க பட்ஜெட் மொத்தமாக கடந்து 25 வருட கால பட்ஜெட்டை கணக்கிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு டிரில்லியன் டாலர்கள் கடனாளியாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 1.25 பில்லியன் டாலர் கணக்கில் இது அதிகமாகிக் கொண்டிருப்பது அமேரிக்காவின் மிகப் பெரும் கவலைகளில் ஒன்று.

இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அமேரிக்கா டாலர்கள் இன்னும் ஒரு சக்திவாய்ந்த கரன்சியாக காட்சி அளிப்பதற்க்கு காரணம் மேலே சொன்னதுபோல் உலக வர்த்தக பரிமாற்றங்கள் அமேரிக்க டாலரின் மூலமாக நடைபெறுவதே.

உலகில் நடைபெறும் அந்நிய செலவானி மாற்றங்களில் சுமார் 80 சதவிகிதம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறுகிறது. உலகில் நடைபெறும் ஏற்றுமதிகளில் குறைந்த பட்சம் பாதி ஏற்றுமதி இறக்குமதிகள் டாலர் வழியாகத்தான் நடை பெறுகிறது. சர்வதேச வர்த்தகங்கள் செய்வதர்க்கு வசதியாக ஒவ்வொரு நாடும் அமேரிக்கா டாலரைத்தான் கையிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதன் காரணமாக உலக நாடுகளின் மொத்த டாலர் கையிருப்பு சுமார் 68 சதவிகிதமாக அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளில் குவிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமா? IMFன் கடன் வசதிகள், கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறவேண்டும். IMFல் அமேரிக்காவின் பங்கு 51% சதவிகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(இதை எழுதும்போது உலக வங்கியின் கொள்கைகளையும் அதன் வாயிலாக அழியும் ஏழை நாடுகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்று தோன்றினாலும் அதை வேறொரு தலைப்பில் பின்னொரு தருணத்தில் தருகிறேன்.)

இதைவிட இன்னுமொரு முக்கியமான வர்த்தக பரிமாற்றம், அதாவது ஒபெக் நாடுகளின் மற்றும் அதை சாரத எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அனைத்தும் டாலரில்தான் வியாபரம் செய்கின்றன.

இப்படி உலக நாடுகளின் வர்த்தகங்கள் அனைத்தும் டாலர் மூலமாக நடைபெறுவதால் அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் தனது டாலர் கையிருப்பைப் பற்றி கவலைப்படுவது அன்றாட வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக அவ்வப்போது பொது சந்தையிலிருந்து டாலரை வாங்குவதும் விற்பதும் இந்த மத்திய வங்கிகளின் வழக்கமான தொழிலாகும். ஏனென்றால் உலக நாடுகள் அனைத்தும் தனது கரன்சியின் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிர்பந்தமும் இன்னும் தனது கரன்சி over value கிவிடக் கூடது என்ற அவசியமும்தான். இப்படி உலக நாடுகள் எல்லாம் தனது கரன்சியைக் காப்பற்றிக் கொள்ள போராடும்போது அமேரிக்கா மட்டும் டலர்களை பிரிண்ட் செய்து உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் சலவைக் காயாமல் உறங்க வைத்துவிட்டு கொண்டாட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்புத் தகுதி அமேரிக்காவிற்கு மட்டுமே இருப்பதால் அமேரிக்கா டாலர்கள் over valued கவும், இன்னும் அடிப்படை பலவீனங்கள் பலவும் இருந்தாலும் இன்னும் பலம் நிறைந்த கரன்சியாகவும், பொருளாதார சூப்பர் பவராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

அமேரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப அச்சகங்களுக்கு ஆர்டர் கொடுத்து வேண்டிய டாலர்களை பிரிண்ட் செய்தால் போதும் என்று தினம் தினம் அதிகமாகும் கடன் பிரச்சனைகளை சர்வ சாதரணமாக சமாளித்துக் கொண்டிருக்கிறது. 'சருகிக் கொண்டிருக்கும் அமேரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்ற வேலையை எந்தவித செலவுகளும் இல்லாமல் அமேரிக்காவின் டாலர் அச்சகங்கள் கவனித்துக் கொள்ளும்' என்று சொன்ன பென் எஸ். பெர்னான்கியின் வாசகங்களை இங்கே நினைவு கூர விரும்புகின்றேன். (Ben S. Bernanke, a Federal Reserve Board Governor, in his speech on November 21, 2002)

இப்படி தொடர்ந்து டாலர்களை அச்சடித்துக் கொண்டிருந்தால் டாலரின் மதிப்பு மிக விரைவில் சிதைந்துவிடும் என்று பெரும்பாலான பொருளாதார மேதைகளின் அறிவுருத்தலால் அமேரிக்க அரசாங்கம் பிரிண்டிங் பிரசுகளுக்கு ஆர்டர் கொடுப்பதை கடந்த ஒரு சில வருடங்களாக நிறுத்தி வைத்துவிட்டு டாலர்களை முடக்கி வைக்காமல் புழக்கங்களை அதிகப் படுத்த வேண்டுமென்று முடிவெடுத்துள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு டாலர் புழக்கங்கள் அதிகமாகிறதோ அவ்வளவிற்கு அமேரிக்காவின் பொருளாதாரம் பாதுகாப்பு பெற்றதாக இருக்கும் என்பதை சமயோசிதமாக சிந்தித்து முடிவெடுத்து, குறைந்த பட்சம் உலகில் சராசரி மூன்று டிரில்லியன் டாலர்களாவது பொது சந்தைகளில் வர்த்தக பரிமாற்றம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்று தற்போது டாலர் புழக்கங்களை அதிகப் படுத்தி வருகிறது.

உலகப் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் மற்றும் நடத்திச் செல்லவும் கூடிய ஒரு முக்கியமான தலைமையிடத்தை அமேரிக்கா தக்க வைத்துக் கொள்ள அது எடுத்துக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதாரத் கொள்கைகளும் மற்றும் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக நடந்த கடினமான முயற்சிகளின் வெளிப்பாடுதான் இன்றைய அதன் உயர்விற்க்கு காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இராணுவ மற்றும் அரசியல் உலகிலும் தன்னை இப்படி உயர்வித்துக் கொண்டதன் காரணாமக தற்போது அறிந்தோ அறியாமலோ ஒரு முக்கியமான breaking point நிலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இதன் முதல் பதிவிலே அமேரிக்கா உலக நாடுகளை வழி நடத்திச் செல்லக் கூடிய தகுதி கொண்ட நாடக நான் எழுதியது.

அதுமட்டுமல்லாமல் அமேரிக்கா தற்போது மற்ற நாடுகளிடம் தன்னை நீங்கள் எல்லோரும் பெரியண்ணனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிர்பந்ததை வைக்க விரும்பாமலே தன்னிச்சையாக முடிவெடுத்து உலக நாடுகள் எல்லாவற்றிர்க்கும் எது சிறந்தது, எது சரியானது, நீ எப்படி நடக்க வேண்டும், இன்னும் பத்து வருடத்திற்க்கு பிறகு உனக்கு எது சிறந்தது என்று எனக்குத் தெரியும், நீ நான் சொல்வதைக் கேள், இல்லையென்றால் உன்னை ஒழித்துவிடுவேன் என்றெல்லாம் 'தாதா' வேலையை செய்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தன்னிகரற்று விளங்கிக் கொண்டிருக்கும் இந்த அமேரிக்காவின் பொருளாதார தலைமைக்கும், அதைத் தொடர்ந்து கிடைக்கும் அரசியல் மேம்பாட்டிற்க்கும், கொச்சையாக சொல்வதென்றால் அரசியல் தாதாகிரிக்கும் போட்டியே கிடையாதா?

அடுத்தப் பதிவில் சந்திக்கலாம். (தொடரும்).

Saturday, March 19, 2005

இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்

இஸ்லாம் குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் அவசியமா? என்ற ஒரு கேள்வி இந்த வலைப்பூவிலே வைக்கப்பட்டு அதற்கு அவசியமே என்ற பதில் நேசகுமார் என்பவரால் கொடுக்கப்பட்டது. கேள்வியும் பதிலும் மாற்றார்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதால், மாற்றார்கள் இஸ்லாம் குறித்து விவாதிக்கலாமா என்ற கேள்வி சற்று கனமானதாக தோன்றுகிறது பலருக்கு.

விவாதிக்கலாம், விமர்சனங்களும் செய்யலாம். செய்ய வேண்டும் என்பதே சரியான பதில். இஸ்லாம் என்பது குரானில் சொல்வது போல் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக அருளப்பட்டது. எனவே உலக மக்கள் அனைவரும் அது குறித்து விவாதிப்பதோ, விமர்சனம் செய்வதோ ஒன்றும் தடுக்கப்பட்ட செயல் அல்ல. பெரியாரும் விமர்சிக்கலாம், அண்ணாவும் விமர்சிக்கலாம். பெரியவர்கள் விமர்சித்தால் ஒன்றும் சிறியவர்கள் ஆகிவிட மாட்டார்கள். நேசகுமாரும் விமர்சிக்கலாம், நேசமில்லாதவர்களும் விமர்சிக்கலாம்.

விமர்சனங்கள் வரும்போதுதான் விவாதங்களும் வரும். விவாதங்கள் வரும்போதுதான் தெளிவு பிறக்கும். இஸ்லாம் வளர்ந்ததும், வாழ்வதும், வாழப்போவதும், இன்னும் வளர இருப்பதும் விமர்சனங்களாலும், விவாதங்களாலும்தான்.

இது குறித்த விவாதங்கள் வரும்போதுதான், நேசகுமார் நம்புவது போல், இஸ்லாம் வன்முறையை போதிக்கக் கூடிய அல்லது அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த மதமா அல்லது இஸ்லாத்திற்க்கு எதிரான வன்முறைகளுக்கு மத்தியிலே வளர்ந்த மதமா என்பதை புரிந்துக் கொள்ளமுடியும்.

"(நபியே) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டு மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டு உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ, அதைக்கொண்டு அவர்களுடன் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன், அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன்; இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன் (16:125) - திருக்குரான்.

ஆகவே விவேகத்தைக் கொண்டும், வேதத்தைக் கொண்டும் வாதடுவதில் எந்த தவறும் இல்லை, அதைத்தான் இறைவனும் விரும்புகிறான். அதைத்தான் நபி அவர்களும் செய்தார்கள். இதில் பயப்படவோ அல்லது இரட்டை வேடம் போடவேண்டிய அவசியமோ இல்லை.

Thursday, March 17, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும்

அமேரிக்காவிற்கு குளிர் காய்ச்சல் வராத நாட்களே கிடையாது என்று சொல்லுமளவிற்கு எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அமேரிக்கா மூக்கை சிந்திக் கொண்டிருப்பதும் மற்ற நாடுகளை நினைத்து கவலையில் நடுங்கிக் கொண்டிருப்பதும் வாடிக்கையாகிப் போய்விட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலங்களிலிருந்து அறுபதுகள் வரை தனது அண்டை நாடுகளில் யார் ஆளவேண்டும், எப்படி ஆளவேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. தீடீரென்று வியாட்னாமிற்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய கவலையில் தானும் நடுங்கி உலகத்தில் உள்ள மற்ற வளரும் நாடுகளையும் கவலை கொள்ள வைத்தது. அதன் பிறகு, ஐரோப்பியர்களை எப்படி தன் கைக்குள் வைத்திருப்பதென்ற கவலைக்கு மருந்தாக சோவியத் அரசோடு குளிர் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்தது. சோவியத்தை ஒழித்துக் கட்டிய பிறகு ஐரோப்பியர்களை எப்படி பிரித்து வைப்பதென்ற கவலையில் அவ்வப்போது கவனம் செலுத்தி வந்தது. ஐரோப்பியாவை எவர் ஆண்டாலும் சரி தனது கொள்கைகளுக்கோ அல்லது வியாபாரங்களுக்கோ எதுவும் குறை வந்துவிடக் கூடாது என்று ஒப்பாரி வைக்காத குறையாக பிதற்றல்கள்.

இவைகளை எல்லாம் விட்டு கொஞ்சம் தள்ளி வந்தால் சீனாவை நினைத்து வேறு சொல்ல முடியாத கவலை. ஜப்பானின் பொருளாதார முன்னேற்றமும், அதைத் தொடர்ந்து ஜப்பானிய பொருட்களுடன் உலக நாடுகளில் போராட வேண்டிய நிர்பந்தத்திற்க்கு உள்ளான போதும், அவ்வப்போது கொரியாவை நினைத்தும் பல்வேறு சூழல்களில் ஒரே ராஜ தந்திர பினாத்தல்கள். இருக்கிற உபாதைகள் போதாதென்று ஈரானியர்களின் அணுகுண்டை நோக்கிய முன்னேற்றம் அமேரிக்காவிற்கு சொல்லொன்னா துயரத்தை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒருவழியாக பாகிஸ்தானின் அணுகுண்டு ஜனநாயகவாதிகளின் கையில் இருப்பதைவிட காக்கிச்சட்டைக்காரர்களிடம் இருப்பதே மேல் என்ற கொள்கையை செயல்படுத்தி வரும்போது இந்த ஈரானிய தலைவலி தற்போது அமேரிக்காவை தூங்கவிடாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. இது போதாதென்று ரஷ்யாவின் nuclear fuel deal வேறு. ஈரானின் முல்லாக்களை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடும் அதே நேரம் ஈராக்கில் முல்லாக்களை ஆட்சியில் அமர்த்த வேண்டிய சிக்கலில் சிக்கி நிற்கிறது அமேரிக்கா.

இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அமேரிக்காவின் கொஞ்சம் நஞ்சம் சுய சிந்தனைகளையும் மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டு தனது எல்லா சுமைகளையும் அமேரிக்காவின் தலை மேல் போட்டுவிட்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிற இஸ்ரேல். தொலையட்டும் துக்காடா நாடு, பல காலமாக உலக நாடுகளில் அலைக்கழிக்கப்பட்ட மக்கள் என்று அமேரிக்கா இஸ்ரேலின் அட்டுழியங்களை 'செல்லப் பிள்ளையின்' விளையாட்டுப் போல் சகித்துக் கொள்ளவேண்டிய கவலை வேறு.

மொத்தத்தில் உலகப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தன் தலைமேல் அள்ளிப் போட்டுக் கொண்டு தத்துப் பித்தென்று உலக உருண்டைமேல் களியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிற அமேரிக்கா தற்போது ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அதாவது 'ஜனநாயக வாத்தியார்', உலகத்திற்க்கு ஜனநாயகத்தை கற்றுத் தருவதென்று முடிவெடுத்து முதலாவதாக அரேபிய ஆட்சியாளர்களை எல்லாம் கையில் தடியுடன் மிரட்டி வகுப்பறைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இப்படி அமேரிக்கா உலக நாடுகளை நினைத்து இத்தனை அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது? சிந்தித்துப் பார்த்தால் அமேரிக்காவின் இந்த உலகளாவிய செயல்கள், அது அரைகுறையாக இருந்தாலும் அல்லது முழுதாக இருந்தாலும், ஒரு தொலைநோக்கு நிறைந்த, மிகவும் புத்திசாலித்தனமான மாபெரும் திட்டத்தின் விளைவுகள் என்பது தெரியவரும்.

கம்யூனசத்தின் வீழ்ச்சியின் போது உருவான 'the new world order' என்ற புதிய உலகை நிர்மானிக்க கூடிய கட்டுமானப் பணிகளை தானாக உருவாக்கி அதற்கான தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. (போட்டி தலைமை எங்கே என்று கேட்கிறீர்களா?) தீவிரவாதத்திற்க்கு எதிரான போராட்டம், ஜனநாயகத்தை திணிக்க வேண்டிய கட்டாயம் என்று பல்வேறு பரினாமங்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் திட்டத்தின் பயணம்தான் இந்த அமேரிக்காவின் உலக அரசியல். தீவிரவாதத்திற்க்கும் ஜனநாயகத்திற்க்கும் எப்படியெல்லாம் அர்த்தங்கள் செய்யமுடியும் என்பதை அமேரிக்காவின் உலக அரசியலைப் பார்க்கும் போதுதான் நமக்கே புரிய வருகிறது.

உலக நாடுகளில் குறிப்பாக தெற்காசியாவும், மத்திய ஆசிய நாடுகளும் பல்லாண்டு காலமாக தீவிரவாத கூட்டங்களால் தினம் தினம் பொதுமக்கள் கொன்று குவிக்கப் பட்டபோது உல்லாசமாக உறங்கிக் கொண்டிருந்த அமேரிக்கா தனது பொருளாதார நலன்களுக்கு பிரச்சனை என்று வந்தவுடன் தீவிரவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு உலக நாடுகளை எல்லாம் தன் பின்னால் வரவேண்டுமென்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. தனது இரும்புக்கர ஆக்கிரமிப்பால் ஈராக்கை வைத்துக் கொண்டு அதில் நடத்திய கண்ணாமூச்சி தேர்தலை மார்தட்டி பெரும் சாதனையாக முழங்கும் அமேரிக்கா, உலகில் பல நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எத்தனையோ அரசுகளை அந்நாட்டு இராணுவ உதவியுடன் வீழ்த்திய வரலாறுகளையும் மறந்துவிடமுடியாது.

லெபனாலில் மக்கள் சுதந்திரமாக ஒட்டு போடவேண்டும், அது சிரியா வெளியேறினால்தான் சாத்தியம், மத்திய ஆசியாவில் ஜனநாயகத்தை மலர வைக்காமல் ஓய்வதில்லை என்று வாய் கிழிய கத்தும் வெள்ளை மாளிகை 'உலக விரும்பிகள்' பொலிவியாலில் நடக்கும் ஜனநாயகத்திற்க்கு ஆதரவான மக்கள் எழுச்சியைப் பற்றி வாய்மூடி மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சோவியத் வீழ்ச்சியுடன் அணிசேர நாடுகள் இயக்கம் சொல்லாமல் கொல்லாமல் தூக்கி எறியப்பட்டது போல் தற்போது ஐக்கிய நாடுகள் சபையும் அழிந்தொழிய இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னிருந்த அரசியல் சூழ்நிலை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளும் ஏறக்குறைய மற்ற நாடுகளை சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய அரசியல் பொருளாதார சூழலில் இருப்பதை மறுக்க முடியாது.

யாருக்கும் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற தற்போதைய உலகச் சூழல் இந்த உலகின் எதிர்கால பயணத்தை இரண்டுவிதாமான பாதைகளில் தொடருவதற்கான ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒன்று ஆக்கப் பூர்வமானது, இன்னொன்று அழிவை நோக்கியது. இரண்டிற்கும் தலைமை தாங்கிச் செல்ல தகுதி படைத்ததாக தற்போது அமேரிக்கா இருந்தாலும், அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையைத்தான் அமேரிக்கா விரும்புகிறது, காரணம், அமேரிக்காவின் உலகப் பார்வையும், உலகின் பெரும்பாலான நாடுகளின் உலகப் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. Unilateral and multilateral என்ற இரண்டு விதமான சிந்தனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத்தான் அவ்வப்போது அமேரிக்காவின் வலதுசாரி சிந்தனையாளர்கள் வேறொரு பெயரில் 'clash of civilization' என்று உலகை ஏய்க்கும் வேலையயை செய்து வருகிறார்கள். அப்படி செய்வதிலும் சொல்வதிலும் மூலமாக அமேரிக்காவிற்கு அதனுடைய 'new world order' கட்டமைப்புக்கு வலு சேர்க்க முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த அமேரிக்க சிந்தனையை ஏற்க மறுப்பதும் கீழை நாடுகளை, குறிப்பாக முஸ்லீம் நாடுகளை பிரித்துப் பார்க்கும் சிந்தனையை ஏற்க மறுக்கின்றன. காரணம் கீழை நாடுகளின் கலாச்சாரமும் சிந்தனை பரிமாற்றங்களும் ஐரோப்பாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தவை மேலும் அவைகள் இன்னும் பலன் தரக்கூடியவை என்பதில் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கைகள் வைத்துள்ளதுதான். ஆனால் அமேரிக்காவின் சிந்தனையை, குறிப்பாக தற்போது ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளை முற்றிலுமாக கவர்ந்திருக்கக் கூடிய ஜையனோசியக் கொள்கைகளைத் தழுவிய 'new world order' தற்போது 'clash of civilization' என்ற பெயரில் தனது திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா உலக பேரரசுகளும் உயர்ந்ததும் வீழ்ந்ததும் இப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனைகளின் வளர்ச்சியை பொருத்தே வந்திருக்கின்றன. அதே வேளை, இந்த சிந்தனைகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை கொடுக்கும் வரை அந்த சிந்தனைகளின் எதிர்மறை விளைவுகள் அதன் பின் விளைவுகள் ஒரு பெரும் பிரச்சனையாகத் தெரியாது. ஆனால், பொருளாதார பின்னடைவுகள் உருவாக ஆரம்பித்ததும், அதன் எதிர்மறை விளைவுகள் வெளிப்படையாக தெரியவரும். எதிர்மறை விளைவுகள் முதலில் பொருளாதார வீழ்ச்சி¨யையும் அதைத் தொடர்ந்து ஆதரவு அளித்த கூட்டணிகள் உடைவதின் மூலம் உணரமுடியும். ஆனால், இந்த காலம் கடந்த விழிப்பால் உடனடியாக அந்த சிதைவுகளிலிருந்து மீள்வது என்பது கடினமான ஒன்று மட்டுமல்ல பல சமயங்களில் அது அழிவில் சென்று முடிகிறது. இந்த சூழலில் உலகப் பேரரசுகள் எதைக் கொள்கையாகக் கொண்டு தனது சிந்தனை முறையை அமைத்துக் கொண்டதொ அந்த கொள்கையை உதறி எறிய வேண்டிய நிர்பந்தததிற்கு உள்ளாகின்றன. சிந்தனைகளை உதறி எறிவதென்பது சாதாரண விஷயமல்ல, அப்படி அந்த கொள்கைகளை விட்டு வெளியேறும் போது, அதற்கொரு விலையையும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சோவியத் பேரரசின் வீழ்ச்சியும் அதன் கீழ் இருந்த நாடுகள் சிதறுண்டு போனதையும் எடுத்துக் கொள்ளலாம். அமேரிக்காவும் இப்படி ஒரு சூழலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதா?

(தொடரும்)

Sunday, February 27, 2005

மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் - 4

மாற்றார்கள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தக்கூடிய இந்த மோசமான, கோரமான அரசியல் விளையாட்டிற்கு மிக முக்கியமாக காரணம் ஒன்றே ஒன்றுதான். பல்வேறு பரிமானங்களை தன்னிடத்திலே உள்ளடக்கிய ஒரு ஆழமான காரணம் அது.

அழகான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், 'இந்துக்களின் மத்தியிலே மாற்றார்கள் நிர்ணயிக்கக் கூடிய அல்லது அவர்களின் கட்டுப் பாட்டிற்குள் அமைகின்ற ஒற்றுமையை உருவாக்கவும், நாளுக்கு நாள் விரிவாகிக் கொண்டிருக்கிற பிளவுகளையும், பகைகளையும் மறக்கவும் அல்லது மறைக்கவும்' அப்பாவி கூட்டங்களான முஸ்லீம்கள் பொது எதிரியாக அடையாளப்பட்டு நிற்க வேண்டும். கொஞ்சம் எதார்த்தமாக சொல்ல வேண்டுமென்றால், 'காலம் காலமாக ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு இருக்கக் கூடிய அப்பாவி மக்கள் சமூகத்தின் அடித்தட்டிலேயே இருந்து அழிய வேண்டும். தாழ்த்தப் பட்டவர்களும், அவர்களை தாழ்த்தப் பட்டவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் இரு மக்கள் கூட்டங்களுக்கு மத்தியிலெ வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய முஸ்லீம்கள் தலீத்களின் பக்கம் சாய்வதே இந்த இனவாத அரசியலுக்கு மிகப் பெரும் காரணம்.

யார் எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன என்று முஸ்லீம்கள் ஒதுங்கியிருந்தார்கள் என்றால், மாற்றார்களுக்கு இப்படி ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்காதோ என்னவோ? இந்தியாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய முஸ்லீம்கள் ராமரை கடவுளாகவும், சரித்திர கதாநாயகனாகவும் ஏற்றுக் கொண்டால் எல்லாவிதாமான வகுப்புவாத பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும் (1) என்ற விஷம் கக்கும் பிரச்சாரத்தின் அடிப்படையை புரிந்துக் கொண்டால் தாழ்த்தப் பட்டவர்களிடத்தில் முஸ்லீம்களால் ஏற்படக்கூடிய சிந்தனைத் தாக்கங்களை அறிந்துக் கொள்ளமுடியும்.

முஸ்லீம் மன்னர்களும், முகலாய மன்னர்களும் குழப்பத்திலேயே தனது காலச்சாரத்தை தொடங்கி, குழப்பத்திலேயே முடிந்து போனாலும், அவர்களை அறியாமல் அவர்களின் பெரிதான உதவிகள் எதுவும் இல்லாமல் இஸ்லாமிய மார்க்கம், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப் பட்டவர்களின் மத்தியிலே வேருன்ற ஆரம்பித்தது. ஆனால் கடந்த ஆயிரம் வருடமாக மாற்றார்களுக்கு அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. காரணம் ஒடுக்கப் பட்டவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் கிடையாது, குறிப்பாக மன்னரட்சியில் அவர்களுக்கு எந்தவித உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாது. இன்னும் சொல்லப் போனால், மாற்றார்களின் அரசியல் அதிகாரத்தில் அவர்கள் பங்கு கேட்கும் அளவிற்கு சமூக விழிப்பற்றவர்களாகவும், அருகதையற்றவர்களாகவும் இருந்ததுதான் அல்லது இருக்க வைத்ததுதான். ஆகவே யார் மன்னனாக இருந்தாலும், தனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டிருந்த காரணத்தால் மாற்றார்கள் வாளவிருந்து போனார்கள். மன்னராட்சியின் மூலம் தனது அரசியல் அதிகாரங்களுக்கு எந்தவிதாமன இடையூறுகள் வராமல் பார்த்துக் கொண்டார்கள்.

ஆனால், வெள்ளையனின் சுமையான ஜனநாயக ஆட்சியை இந்தியாவில் வெள்ளையர்கள் இறக்கி வைக்க ஆரம்பித்தவுடன் ஒட்டுப்பெட்டிகளை நிரப்புவும் சொகுசான அரசியல் அதிகாரத்தை இழக்காமல் இருப்பதற்கும் ஒடுக்கப் பட்டவர்களும், தாழ்த்தப் பட்டவர்களும் தேவைப்பட ஆரம்பித்ததன் விளைவுதான் இந்த பொது எதிரி சாயம் பூசப்பட்ட முஸ்லீம்கள்.

முஸ்லீம்கள் ஒற்றுமை, ஒன்றுபட்ட தலைமை, சீரான சமூக அமைப்புகள் இல்லாமலும், மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலை, இன்னும் அங்கங்கே சிதறுண்ட சமூகமாக வாழ்கின்ற காரணத்தாலும் மாற்றர்களின் அரசியல் விளையாட்டிற்குள் அகப்பட்டு வழி தெரியாமல் 'psycho somatic' வியாதி ஏற்பட்டவர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அபுல் கலாம் ஆசாத் அவர்கள் சொன்னது போல் 'certainly this is an un-Islamic and irreligious life which entire community is living' (2).

மாற்றார்கள் உண்மையிலேயே பயப்படுவது தலீத்களின் வளர்ச்சியை நினைத்துதான். 2000 வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட சமுதாயம், கடந்த 50 ண்டுகளில் அரசியல் அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலையை எட்டியதே இந்த பயத்திற்க்கு காரணம்.சுதந்திரமடைந்து இந்த 58 வருட காலத்தில் தலீத்கள் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வில் முன்னிலை அடைந்ததும், நியாயமாக பெறவேண்டிய, இத்தனை காலமாக இழந்திருந்த அரசியல் அதிகாரத்தை தட்டிக் கேட்டதும் மாற்றர்கள் மத்தியிலே 'mental conflict' உருவாகிப் போனது. இந்த மெண்டல் கன்பிளிக்ட் இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு இன்னும் அதிகமாகவே இதற்கு தீர்வாக இப்படி அவசரம் அவசரமாக ஒரு பொது எதிரியை உருவாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கபட்டனர்.

வி.பி. சிங் மண்டல் பெயர் சொல்லி தனக்கென்று ஒரு கூட்டத்தையும், தலீத்களின் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்திய போது, மாற்றார் கூட்டம் பதைத்து போய், கடவுளின் பெயர் சொல்லி கூட்டம் சேர்க்கத் தொடங்கியது. மதத்தின் பெயர் சொல்லி மக்களை பிரித்த மாற்றார் கூட்டத்திற்க்கு, இப்போது அதே மதம் மற்றும் கடவுளின் பெயர் சொல்லி மக்களை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதுதான் வேடிக்கை. அதிகாரம் கையை விட்டு நழுவாமல் இருக்க அங்கங்கே இரை போடும் வேலையில் இறங்கினார்கள். முஸ்லீம்களைப் பற்றிய 'Fantasy' உருவாக்கப்பட்டு விஷப் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன.

முஸ்லீம்களுக்கு எதிராக எது நடந்தாலும், சமூக ரீதியாக போரடவும் மற்றும் ஜனநாயக வழியில் அதை எடுத்துச் சொல்லவும் எந்தவிதமான அமைப்புகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் சிதறுண்ட சமூகமாக சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது முஸ்லீம் சமுதாயம்.

1954 லிருந்து 1992 வரை 39 வருடங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக 13,356 இனப் படுகொலைகள் மாற்றர்களால் நடத்தப் பட்டிருக்கிறது (3). ஆனால், இன்றுவரை எத்தனை வழக்குகள் முடிவடைந்து நீதி கிடைத்திருக்கிறது?. தனி ஒரு மனிதனை கொலை செய்தால், சுப்ரீம் கோர்ட் வரை சென்று தூக்கு தண்டனை தருகின்ற அரசியல் சட்டம், கூட்டுக் கொலைகளுக்கு வெறும் கமிஷன் அமைப்பதோடு நின்றுவிடுகிறது. சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த கலவரங்களும், இனப் படுகொலைகளும் இன்றுவரை நீதி மன்ற வாசல்களில் தவமிருந்ததுதான் மிச்சம். J.B. டிசூசா சொன்னது போல், சுதந்திரடைந்த 47 வருடங்களில் வகுப்பு கலவரங்களால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை, வெள்ளையர்கள் ஆண்ட 150 வருடங்களில் கொல்லப் பட்டவர்களைவிட அதிகம் (4).

'கிழவர்கள் இறந்து விடுவார்கள், இளைஞர்கள் மறந்து விடுவார்கள்' என்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக எக்காளமிட்ட தீவிரவாதி பென் குயூரன் (5) சொன்னதற்கிணங்க இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் செய்கின்ற மாற்றர்கள் கூட்டம் ஒரு பக்கம். ஆனால் சமூகத்தில் குற்றவாளிகளாக, தீவிரவாதிகள் கூட்டம் என்று பழி சுமத்தப்பட்டு கூனிக் குருகி செத்து மடிகின்ற முஸ்லீம்கள் இன்னொரு பக்கம். உதாரணம் குஜராத் இனப் படுகொலைகளும், ரயில் பெட்டி எறிப்பு சம்பவமும். ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தில் கடந்த மூன்று வருட காலமாக எப்பாடு பட்டவது, பாகிஸ்தானின் ISI உடன் தொடர்பு ஏற்படுத்திவிடுவது என்ற விடாப்புடியுடன் போலீஸ் போராடிக் கொண்டிருக்கிறது.

இரண்டு விதாமான சிந்தனை சிறைக்குள் மூழ்கி கிடக்கிறது இந்த முஸ்லீம் சமுதாயம். ஒன்று தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, எப்படி வலை பின்னப் பட்டிருக்கிறது என்று தெரியாமல் எது நடந்தாலும், 'மன்னித்து விடுங்கள்' என்ற apologetic மனநிலையும், இன்னொன்று, எதார்த்தமே புரியாமல், 'arrogant' சிந்தனையும்.

சாதாரண முஸ்லீம்களின் தலைக்குள்ளே எதை வேண்டுமானலும் திணிக்கலாம், கேட்பதற்கு எந்த நாதியும் இல்லையென்று, முஸ்லீம் அரசியல்வாதிகளும், மாற்றர்களும் தங்களது சரக்குககளை மதம் மற்றும் சமுதாயத்தின் பேரில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்க்கு பாபர் மசூதி பிரச்சனையை எடுத்துக் கொள்ளாலாம். பாபர் மசூதி பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்தே இப்படி இரண்டுவிதமான அணுகுமுறையின் காரணமாக சமுதாயத்தில் ஆக்கப் பூர்வமான தீர்வு எதுவும் எடுக்க முடியாமல் இன்றுவரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

தாஜ் மாஹாலுக்கும், டெல்லி செங்கோட்டைக்கும் இந்திய அரசாங்கம், இந்திய முஸ்லீம்களுக்கு எதோ ராயல்டி கொடுப்பதைப் போல், பாபர் மசூதி பிரச்சனையை முஸ்லீம்களின் தலைமேல் போட்டு விட்டு, இரண்டு பக்கத்தினரும் எப்போது வேண்டுமானலும் ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசாங்கம்.

முஸ்லீம்களின் எதிர்காலம் முஸ்லீம்களின் கையில்தான் உள்ளது. குரானில் இறைவன் எச்சரிப்பதைப் போல் 'தானாக மாறாத வரை' இறைவன்கூட நமக்கு உதவி செய்யமாட்டான். சத்தியத்தையும், எல்லாவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வையும் கையில் வைத்துக் கொண்டு குருடர்கள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயமாக இல்லாமல், பொறுப்புகளை உணர்ந்த சமுதாயமாக மாறவேண்டும்.

முலயாம் சிங் யாதவின் 'வெள்ளிக்கிழமை பொலிட்டிக்ஸ்' எல்லாம் வேண்டாம் என்று உ.பி. முஸ்லீம்கள் முலயாம் சிங்கிற்கு சொன்னது மட்டுமல்லாமல் அந்த உத்தரவை திருப்பி வாங்க வைத்ததைப் போல், இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் அரசியல் விளையாட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்கும்போதுதான் இந்த முஸ்லீம் சமுதாயம் உருப்பட வழி கிடைக்கும்.

இந்தியன் என்ற எண்ணமும், இது என்னுடைய நாடு என்று மனதுக்குள் மட்டும் தினம் தினம் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. தெருவில் கிடக்கும் முட்களை நகர்த்தி, ஓரத்தில் எறிவதுகூட ஒரு இபாதத், அதவாது இறைவழிபாடு என்று சொன்ன நபிகள் நாயகத்தின் வழிகளை பின்பற்றக்கூடிய முஸ்லீம்களில் எத்தனை பேர் மற்றவர்களுடன் சேர்ந்து தெருச் சாக்கடைக்கும், நல்ல ரோடுகளுக்கும் போரடியிருக்கின்றார்கள்.

ஒரு நோயாளியைச் சென்று பார்ப்பதும், அவனுக்காக பிரார்த்திப்பதும் இறைவழிபாடு என்று நபிகளார் சொன்னார்கள், ஆனால், முஸ்லீம்களோ பள்ளிவாயிலில் நோயாளி யாரவது வந்தால், ஒதிவிட்டு, காசு வாங்கிக் கொள்வதோடு முடிந்து போகிறது.

மரணக் குழிக்கு செல்லும் வரை அறிவைத் தேடு என்று சொன்னார்கள் முகம்மது நபி (சல்). அறிவு என்பது வெறும், மார்க்கத்தைப் படிப்பது மட்டுமல்ல, அதனுடன் சேர்ந்து உலகக் கல்வியையும் தேடவேண்டும் என்பதை உணாரதவரை முஸ்லீம்கள் தான் உருவாக்கிய சிந்தனைச் சிறைக்குள்ளிருந்து வெளியேறுவது கடினம். மாற்றார்களின் அரசியல் கைதிகளாக இல்லாமல், அரசியலை நடத்திச் செல்லக்கூடிய சமூகமாக மாறும்போதுதான், முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்தியாவும் உலகத்தின் தலைசிறந்த நாடக உருவாகும்.

குறிப்பு: இந்த கட்டுரையை படித்தும், பதிலளித்தும் மற்றும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விமர்சித்தும், பாரட்டவும் செய்த நண்பர்கள் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

References:
1) Organizer, RSS official weekly, 20 June 1971
2) Islam & Indian Nationalism (Reflections on Abul Kalam Azad), Edited by Prof. Mishirul Hassan
3) Indian Human Right, International Muslims in India USA, Nov. 93
4) Times of India, 8 April 1994
5) Terrorist turned Prime Minister of Israel

Monday, February 21, 2005

சுனாமி பொலிட்டிக்ஸ்

அமேரிக்கா முன்னாள் ஜனாதிபதிகள் ஜார்ஜ் புஷ் சீனியரும், கிளிண்டனும் ஸ்ரீலங்கா பயணம் மேற்கொண்டுள்ளனர். சுனாமி தாக்குதலில் அதிகம் பாதிப்பிற்கு உள்ளான ஸ்ரீலங்கா மற்றும் இந்தோனேஷிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள மேலை நாட்டு தலைவர்களில் இந்த இருவரின் பயணம் வெறும், மீட்பு பணிகளை பார்வையிடுவதோடு நிற்பதல்லாமல் அதையும் தாண்டி, இந்திய துணைகண்டத்தில் அமேரிக்காவின் அரசியல் தாக்கத்தை அதிகப் படுத்தவேண்டும் என்பதே.

அமேரிக்காவின் இந்த தீடீர் சுனாமி அரசியலுக்கு காரணம் கீழை நாடுகளில் இழந்து கொண்டிருக்கும் தனது பெயரையும், இமேஜையும் தக்க வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக தனது ஆளுமையை பறைசாற்றுவதே.

அமேரிக்கா மற்றும் பிரிட்டன் இரு நாடுகளும் சுனாமி நிவாரணப் பணிக்காக மிக குறைந்த உதவியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தவுடன் உலகின் பல பாகங்களிலிருந்து விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. காலம் தாழ்த்தி அதை அவர்கள் அதிப்படுத்தியதும், வளரும் நாடுகளிலும் மற்றும் ஏழை நாடுகளிலும் அமேரிக்காவைப் பற்றி ஏற்கனவே இருந்த சந்தேகமான அணுகுமுறையும் எண்ணங்களும் இன்னும் அதிகமாகிப் போனது. காரணம் அமேரிக்காவிற்கு, சுனாமியைப் பற்றி கவலைப் படுவதைவிட வேறு பல கவலைக்குரிய விஷயங்கள் நிறைய இருந்ததுதான்.

ஈராக் போரில் இதுவரை 148 பில்லியன் டாலர் செலவு செய்த அமேரிக்காவும், 11.5 பில்லியன் டாலர்கள் செலவு செய்த பிரிட்டனும், சுனாமிப் பேரழிவில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இதுவரை முறையே 350 மற்றும் 96 மில்லியன்களே ஒதுக்கீடு செய்துள்ளது (1). சவுதி அரேபியாகூட இந்த இரு நாடுகளையும்விட அதிகாமகவே கொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

பயங்கரவாத்திற்கு எதிராக போர் செய்வதாக தம்பட்டம் அடிக்கும் இரண்டு நாடுகளும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி என்று வரும்போது இதுவரை வெறும் 16 பில்லியன் டாலர்களையே கொடுத்திருக்கிறது. ஆனால் தற்போது, சுனாமி பெயரைச் சொல்லி, ஸ்ரீலங்காவிலும், இந்தோனேஷியாவிலும் ராணுவத்தை கொண்டுவந்து இறக்கி இரு அரசுகளுக்கும் மட்டுமல்லாமல், அதை சுற்றியுள்ள நாடுகளுக்கும் கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்தியாவிற்கு ஒரு பெரும் அரசியல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சுனாமி பேரழிவில் யாருடைய உதவியும் தேவையில்லை என்று தனது காயத்திற்கு தானே மருந்திட்டுக் கொண்ட இந்தியா, அருகில் இருந்த நாடான ஸ்ரீலங்காவிற்கு உடனடியாக உதவிகளை அளித்தாலும், சரியான திட்டமில்லாததால் தற்போது கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.
இந்தியாவிற்கு தன்னை 'self contained' நாடக உலகிற்கு அறிவிப்பதற்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரவாதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக பயன் படுத்திய இந்தியா, தொடர்ந்து துணை கண்டத்தில் தனது நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்ற 'follow up' திட்டம் எதுவுமில்லாமல் இருப்பதே அமேரிக்காவின் தற்போதைய இந்த ராஜ தந்திர நடவடிக்கைகள்.

இந்தியா இதன் மூலம் இரண்டுவிதாமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று ஸ்ரீலங்கா தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தமும் அடுத்து அமேரிக்காவை துணை கண்டத்தைவிட்டு தூரமாக வைக்கவேண்டிய அவசியமும். ஸ்ரீலங்காவின் அரசியல் உறவுகள் ஒருபோதும் இந்தியாவுடன் அத்தனை சுமூகமாக இருந்ததில்லை. ஸ்ரீலங்காவின் தமிழர் பிரச்சனையே அதற்கான காரணம். ஸ்ரீலங்கா இந்தியாவை எப்போதும் சந்தேகத்துடனெயே பார்க்கிறது. இதற்கான தீர்வு, இந்தியாவின் ஸ்ரீலங்கா தொடர்பான அரசியல் கொள்கையை மீண்டும் ஆலோசனை செய்து, தமிழர் பிரச்சனைகள் தொடர்பான ஒரு புதுக் கொள்கையை உருவாக்குவதும், அது இந்தியாவிற்கும், ஸ்ரீலங்காவிற்கும் இன்னும் அதையும் தாண்டி தமிழர்களுக்கும் அது தீர்வளிக்க கூடியதாக இருக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் இந்திய தனது துணைகண்ட ஆளுமையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்திய துணைக் கண்டத்தில் தன்னை ஒரு வலுவான நாடக இந்திய பிரகடனப் படுத்த வேண்டுமென்றால் அது அமேரிக்காவின் அனுமதியோடு அல்லது அது எப்படி, எப்போது விருப்பப் படுகிறதோ அப்போதுதான் அது நடக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிற அமேரிக்காவின் சவால்களை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே இரண்டவது பிரச்சனை.

இரண்டுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளதால், இந்திய காலம் தாழ்த்தாமல் செயல்படுதே சிறந்தது.

References
(1) ஜார்ஜ் மொன்பியோட் - The Guardian - Republished in Arab News - 05/01/05

Wednesday, February 16, 2005

மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் - 3

ஆட்சி யாரிடம் இருக்கிறதோ அல்லது இருக்கப் போகிறதோ அவர்கள் பக்கம் சாய்வதும் அவர்களுக்கு துதி பாடுவதும் இந்த அரசியல் தரகர்களுக்கும், வியாபரிகளுக்கும் வெட்கமில்லாத விஷயங்கள்.

முகலாய மன்னர்களின் பலம் குறையத் தொடங்கியதும், இந்த அரசியல் தரகர்கள், மாற்றார்கள், தங்களின் நிலையை மாற்றிக் கொண்டு, வெள்ளை அரசிற்கு சிரம் தாழ்த்தி நின்றது வரலாற்று உண்மைகள். வெள்ளையர்களை முஸ்லீம் மன்னர்களும், ஏனைய குறுநில ஆட்சியாளர்களும் எதிர்த்த போது அரசியல் மாற்றார்கள் ஆங்கிலேய பிரபுக்களுடன் கைகோர்த்து செயல்பட ஆரம்பித்தனர். ஆங்கிலேய அரசின் நிர்வாக அமைப்புகளில் முழுமையாக இணைத்துக் கொண்டு தங்களை வெள்ளை ராஜ்யத்திற்கு வெண்சாமரம் வீசுபவர்களாக மாற்றிக் கொண்டார்கள்.

முடி இழந்த முஸ்லீம் மன்னர்கள் மற்றும் மதத் தலைவர்களின் கட்டளைக்கிணங்க முஸ்லீம்கள் வெள்ளையர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மறு பக்கத்தில் அரசியல் மாற்றார்கள், வெள்ளையர்களின் விசுவாசிகளாக மாறி நிர்வாக அமைப்புகளில் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். முடி இழந்த முஸ்லீம் மன்னர்கள், அவர்களை பின்பற்றும் முஸ்லீம் கூட்டம் ஒரு பக்கமும், இனி எதிர்காலம் வெள்ளை அரசிடம்தான் என்று அவர்கள் பக்கம் சாய்ந்த அரசியல் தரகர்கள் இன்னொரு பக்கமுமாக புதிய அரசியல் கூட்டனி அங்கே உருவாகியது. வெள்ளை சாம்ராஜ்யத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அங்கே வித்திடப் பட்டது.

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஈரோப்பிய நாடுகளில் முஸ்லீம்களின் எதிர்ப்பை சந்தித்து வந்த ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு இந்தியாவில் முஸ்லீம்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்கு இந்த மாற்றார்களின் அரசியல் நிலைப்பாடு மிகவும் உதவியாக அமைந்தது. முதன் முறையாக இந்துக்களும், முஸ்லீம்களும் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிரிய ஆரம்பித்தார்கள். அதற்கு வெள்ளை அரசாங்கம் எல்லாவிதமான வழி முறைகளையும் இரண்டு பிரிவினர்களுக்கும் அமைத்துக் கொடுத்தது. ஆயிரம் வருட காலங்கள் ஒன்றாக இருந்து, ஏழைகளின் இரத்தங்களில் மாளிகைகள் எழுப்பி அதில் இறுமாந்து வாழ்ந்து வந்த இந்து மற்றும் முஸ்லீம் அரசியல் வியாபாரிகள் வெள்ளையனின் பிடிக்குள் சிக்கியதும் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கத் தொடங்கினார்கள்.

அதுவரை ஒதுங்கியிருந்த மத உணர்வுகள் தட்டி எழுப்பப் பட்டன. ஆட்சி அதிகாரத்தை இழக்கும் போதுதான் வெறுப்புகளும், வேற்றுமைகளும் தலை தூக்க ஆரம்பிக்கும். கஷ்டம் வரும்போதுதான் கடவுள் நம்பிக்கை வலுப்பெறும். அரசியல் லாபங்களுக்காக முஸ்லீம் மன்னர்களுக்கு மதம் தேவைப்பட ஆரம்பித்தது. இதுநாள் வரை தனி மனித வாழ்வில் மட்டும் செயல் படுத்தப்பட்ட மதம், முடியிழந்த மன்னர்களால் பொதுப் பிரச்சனைகளுக்காகவும், சுதந்திர போராட்டத்திர்க்காகவும் பயன் படுத்தப்பட்டது. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து முஸ்லீம் மத அறிஞர்கள் 'புனிதப் போர்' (ஜிஹாத்) அறிவித்து மதத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு பயன்படுத்தினார்கள். கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களை ஒன்று சேர்ப்பது இந்திய மன்னில் முஸ்லீம்கள் மத்தியில் அரங்கேர ஆரம்பித்தன. முஸ்லீம்களுடைய ஆட்சியிலும், அதற்கு முன்பு ஆண்டு வந்த இந்து மன்னர்களின் ஆட்சியிலும் ஒதுக்கி வைக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர், தாழ்த்தப் பட்டவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எல்லோரும் இப்போது அரசியல் தரகர்களுக்கும், வியாபரிகளுக்கும் தேவைப்பட ஆரம்பித்தார்கள். பணபலமும் அதிகார பலமும் இருந்த போது தேவைப்படாத ஆள் பலம் தற்போது அரசியல் தரகர்களுக்கு அவசியமானது. வாழும்போது வேண்டாத மக்கள் கூட்டம், வீழும்போது தேவைப்பட்டது. அரசியல் வியாபாரிகளின் சுய விருப்ப வெறுப்புகளை பொது விருப்பு வெறுப்புகளாக மாற்றி பொதுமக்களிடத்தில் விற்கத் தொடங்கினர். அன்றைக்கு வாங்கத் தொடங்கிய நாம் இன்றுவரை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.

647 வருட காலங்கள் (1211 - 1858 AD) முஸ்லீம் மன்னர்களின் தலைநகராக இருந்த டெல்லி மாநகரத்தில் இன்று வரை முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழக் கூடிய மக்கள் கூட்டம் தானே தவிர்த்து, ஆட்சி கையில் இருக்கிறதென்று எந்த மன்னனும் தன் ஆட்சியின் கீழ் இருந்த எந்த மக்களையும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மதம் மாற்றியதில்லை. காரணம் முஸ்லீம் மன்னர்கள் எவரும் மதத்தின் பெயர் சொல்லி ஆட்சி நடத்தவில்லை. முகலாய மன்னர்கள் காலத்தில் இந்தியாவில் இஸ்லாம் ஒருபோதும் அரசியல் மதமாக இருந்ததில்லை. எந்த முஸ்லீம் மன்னனும் முஸ்லீம்களின் மக்கட்தொகையை கணக்கில் கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி முஸ்லீம் மன்னர்கள் யாரும் கவலைப் பட்டதில்லை. மாற்றர்கள் கடவுள் பெயர் சொல்லி மக்களை பல சாதிகளாகவும் வர்க்கங்களாகவும் கூறுபோட்டு சீரழித்தப் போது இந்த முகலாய மன்னர்கள் உல்லாச வாழ்க்கையில் உலகத்தை மறந்து சொகுசாக வாழ்ந்து வந்தார்கள்.

வெள்ளையர்கள் இந்தியாவை ஆளத்தொடங்கும் வரை இந்துக்களும், முஸ்லீம்களும் மதத்தின் பெயரால் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு சாகவில்லை. வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் இந்தியர்களின் இரத்தத்தை இந்தியர்களே சிந்த வைத்தபோதும் இந்த அரசியல் வியாபரிகளுக்கு அது இந்தியாவாகவும் தெரியவில்லை. அதிகாரமும், பொருளாசையும்தான் காரணமாக இருந்தது. இன்றைக்கும் அதே நிலைதான். ஆனால் காரணம்தான் வேறு. மதத்தையும் இனத்தையும் காரணம் காட்டி, முஸ்லீம்களை அன்னியர்கள் என்று சித்தரிக்கப்பட்டு இந்தியர்களின் இரத்தங்கள் இந்தியர்களால் சிந்தப்படுகிறது.

'அந்நியன்' என்ற சொல் கேட்பதற்கும் படிப்பதற்கும் ஒரு சாதாரண சொல்லாகவும், மிகச் சாதாரண அர்த்தம் தரக்கூடியதாகத்தான் தெரியும். ஆனால் அதை முஸ்லீம்களுக்கு எதிராக பயன் படுத்தும் போது அதன் அர்த்தம் சாமானிய இந்துக்களை, குறிப்பாக பொருளாதாரத்தில் பிற்படுத்தப் பட்டவர்களை மூளைச்சலவை செய்வதற்கு மாற்றார்கள் செய்த மற்றுமொரு சாதுர்யமான முயற்சி. இந்திய முஸ்லீம்கள் ஒன்றும், பாபருக்கும், லோடிக்கும் பிறந்த மக்கள் கூட்டமல்ல. முஸ்லீம்களில் பெரும்போலோர் ஏதோ ஒரு காலத்தில் இந்துக்களாகவும், ஆதிவாசிகளாகவும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். ஆனால் அவர்களை அந்நியர்கள் என்று அடையாளப் படுத்தினால்தான் குஜராத்தில் நடத்தியதைப் போன்ற இனப் படுகொலைகள் செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். அசோக் சிங்கால் போன்றோர்கள் இதை ஒரு 'வெற்றிகரமான சோதனை' என்று பெருமைபட்டுக் கொள்ளமுடியும்.

மராட்டிய மன்னன் சிவாஜியை எதிர்த்து போரிட்ட ஓளரங்கசீப்பின் படையில் அதிகமான போர் வீரர்கள் மாரட்டாக்கள்தான். வெள்ளையனுக்கு எதிராக 1857ல் படை திரட்டி போர் தொடுத்த பகதூர் ஷா ஜாபரின் பேரப்பிள்ளைகளின் தலைகளை வெட்டி பரிசளித்த அந்த வெள்ளைப் படையின் வீரர்கள் சீக்கியர்களும் மராட்டக்களுமே. அப்போது வாழ்ந்த அந்த மக்களெல்லாம் என்ன மத நம்பிக்கையோ அல்லது இறை நம்பிக்கையோ இல்லாத மக்காளாகவா வாழ்ந்தார்கள்? அவர்களில் பெரும்பாலோர் இன்றைய மக்களைவிட அதிகமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். முஸ்லீம்களுடன் சேர்ந்து போரிடும்போது அந்த மாற்றார்களுக்கு முஸ்லீம்கள் அந்நியர்களாக தெரியாமல் போனது எப்படி? மதத்தின் பெயர் சொல்லி அவர்கள் ஏன் பிரியவில்லை? அல்லது ஆங்கிலேயப் படையுடன் சேர்ந்து இந்தியர்களை இந்தியர்களே கொன்று குவித்த போது அந்த ஆங்கிலேயர்கள் அந்நியர்களாக தெரியாமல் போனது எப்படி?

யாருடைய கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் சொல்வதே வேதம் என்கிற நிலைக்கு இந்த உலகம் அதிகார வர்க்கத்தின் காலடியில் அடிமைப்பட்டு கிடக்கிறது. அதிகார வர்க்கத்தின் அகங்கார கூக்குரல்கள்தான் எங்கு நோக்கினாலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உலக அரங்கில் அதிகாரமும் ஆதிக்கமும் கையை விட்டு போகாமல் இருக்க வேண்டுமென்றால், மக்கள் பிளவுபட்டு கிடக்க வேண்டியது அவசியமாகிறது. சூழ்நிலையை தனக்கேற்றவாறு மாற்றும் திறமை இருந்தால்தான் இந்த உலகில் காரியம் சாதிக்க முடியும் என்பது இன்றைய அரசியல் தொடங்கி வியாபரம் வரை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் Political power can be achieved by political hate only என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்க்கூடிய இந்த இந்திய அரசியல் வியாபாரிகள், மாற்றார்கள் இருக்கும் வரை மதம் மற்றும் பல இனங்கள் கூட அடையாளப் படுத்தப்பட்டு சின்னா பின்னாமாக்கப்படும்.

(தொடரும்)

Tuesday, February 08, 2005

மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் - 2

அன்பிலும் அரவணைப்பிலும் இயக்கப்பட வேண்டிய இந்த உலகம், மாறாக வெறுப்பையும் எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் துவேஷ உணர்வுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு மனித உறவுகளை சின்னா பின்னாமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியை பிடிக்காததால்தான் எதிர்கட்சிக்கு ஓட்டு கிடைக்கிறதே தவிர எதிர்கட்சியின் மேல் இருக்கும் காதலினால் அல்ல. யாரையேனும் வெறுக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரு கூட்டமே கூடி ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறது. அன்பு, பரிவு, பாசம் என்று பேசினால் டிவி சீரியலில் கூட பார்ப்பதற்கு ரசிகர்கள் இல்லை. வெறுப்பின் அடிப்படையில் மனித உறவுகள் கூடுவதும் பிரிவதும் மனித இயல்பு. ஆனால் இந்த மனித இயல்பை, இயற்கை உந்துதலை தனிமனித அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அல்லது அதிகாரத்தை கைப்பற்றவும் அன்றைய மன்னர்கள் முதல் இன்றைய உலக அரசியல் வியாபாரிகள் வரை காலம் காலமாக பயன்படுத்தி வந்ததுதான் இந்த உலகின் துர்பாக்கிய நிலை.

இஸ்ரேலின் ஷரோனிலிருந்து, அமேரிக்காவின் புஷ் மற்றும் இந்தியாவின் அத்வானி வரை இந்த politics of hate அவர்களின் அரசியல் உயர்விற்காக மிக நன்றாக பயன்படுத்தப் பட்டுள்ளது. வெறுப்பின் அடிப்படையில் பல நாடுகளும் ஆட்சிகளும் உருவாகியிருப்பது தெள்ளத்தெளிவான உண்மை. இந்தியாவை பிடிக்காததால் பாகிஸ்தான் உருவானது. பாகிஸ்தானைப் பிடிக்காமல் பங்களாதேஷ் உருவானது. இப்படி எத்தனையோ வரலாறுகள் நம் முன்னால் உள்ளன. வரலாறு என்பது படிப்பினை பெறுவதற்கே ஒழிய, வெறும் படித்துவிட்டு மறக்கப் படுவதற்கல்ல. நாம் வரலாற்றை உதாசீனப் படுத்தும் போதெல்லாம், வரலாற்றில் செய்த தவறுகளை திரும்பவும் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Politics of hate தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால் அதற்கு ஒரு பொதுவான இலக்கு நிர்ணயிக்கவேண்டும், அந்த இலக்கு யார் என்றோ அல்லது எது என்றோ அவ்வப்போது அடையாளம் காட்டப்படவேண்டும். அப்போதுதான் அரசியல் வியாபாரிகளின் சரக்கு ஒழுங்காக விலை போகும். இன்றைக்கு உலக அரங்கில் பொதுவான ஒரு இலக்காக அடையாளம் காட்டப்பட்டு நிற்பது இஸ்லாமும் முஸ்லீம்களும். அதற்கு மாற்றார்கள் சொல்லக்கூடிய அல்லது பயன் படுத்தக் கூடிய காரணங்களில் தலையாயது 'பயங்கரவாதம்'. இந்தப் பெயர்க் காரணம் சூழலுக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே இருக்கும். இன்னும் சில வருடங்களில் மாற்றப்படும், அதற்கான அறிகுறிகள் இப்போதே வரத் தொடங்கிவிட்டன.

உலகின் எல்லா நாடுகளிலும் வெறுப்பிற்கும் மற்றும் தனக்குள்ளேயும் பிளவுபட்டு நிற்கக் கூடிய முஸ்லீம்களைப் பற்றி மாற்றாருக்கு என்ன போதிக்கப் பட்டதோ அல்லது போதிக்கப்படுகிறதொ அதை இங்கு வரலாற்றுப் பார்வையில் பார்ப்பது அவசியமாகிறது. காரணம் மாற்றாரின் தவறான புரிதலுக்கு இப்படிப்பட்ட போதனைகளே அடிப்படை காரணமாக அமைகிறது. முஸ்லீம்களின் தற்கால நிலையை இரண்டுவிதாமாக பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று இந்திய முஸ்லீம்களின் நிலை, இன்னொன்று உலக முஸ்லீம்களின் நிலை.

இந்திய முஸ்லீம்களின் அடையாளமும், உலக முஸ்லீம்களின் அடையாளமும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் தோன்றினாலும், இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்திய முஸ்லீம்கள் தான் பிறந்த மண்ணின் கலாச்சாரங்களினாலும், சிந்தனை முறைகளினாலும் மிகவும் வேறுபட்டவர்கள். அவர்கள் முஸ்லீம்களாக மாறிய காலம் தொடங்கி, இன்று வரை குரான் மற்றும் நபிகளின் வாழ்க்கை முறையை மட்டுமே ஏற்றுக் கொண்டார்களே தவிர்த்து அரேபியர்களின் குணாதிசயங்களையோ அல்லது கலாச்சாரங்களையோ பின் பற்றுபவர்களாக இல்லை. அதே நேரம், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லீம்களின் பங்கு வேறு எந்த முஸ்லீம்களுக்கும் குறைவானதல்ல. அதனால்தான் உலக அரங்கில் முஸ்லிம் அறிஞர் பெருமக்களுக்கு உலக அளவில் பெரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.

இந்திய முஸ்லீம்களைப் பற்றிய தவறான போதனைகளைப் முதலில் பார்த்துவிட்டு உலக முஸ்லீம்களைப் பற்றிய கண்ணோட்டத்திற்கு பிறகு செல்லலாம்.

மாற்றார்களில் பெரும் பகுதியினருக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டிருப்பதும் மற்றும் பிரச்சாரம் செய்யப்படுவதெல்லாம் முஸ்லீம்கள் அன்னியர்கள், அவர்கள் இந்த நாட்டை சூறையாட வந்தவர்கள், கத்தி முனையில் லட்சோப லட்ச இந்துக்களை முஸ்லீம்களாக மதம் மாற்றியவர்கள். ஓரு ண் நான்கு பெண்களை திருமணம் செய்துகொண்டு நிறைய பிள்ளைகளை பெறுபவர்கள். முஸ்லீம் இனம் பெருக வேண்டுமென்பதெ அதன் நோக்கம். இதே நிலை தொடர்ந்தால், இன்னும் குறைந்த வருட காலத்தில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மையினராகி, முஸ்லீம்கள் பெரும்பான்மையினராகிவிடுவார்கள். இந்திய மண்ணில் வாழ்ந்துகொண்டு, வேறு எந்த மண்ணையோ புனித இடமாக மதிக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் தூற்றப்படுகிறது.

இது போதததென்று, எழுதப்படாத சட்டங்கள், அறிவிக்கப்பாடத போலீஸ் நடவடிக்கைகள் என்று இன்னொருபுறம் முஸ்லீம்கள் சமூக எதிரிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். மாற்றார்களின் குற்றங்களை 'a bad apple in basket' என்று தத்துவார்த்த விளக்கங்களுடன் வெளியிடும் பத்திரிக்கைகளும், அவர்கள் மதத்தலைவர்களாக இருந்த போதிலும், அவர்களின் குற்றங்களை தனிப்பட்ட மனிதரின் குற்றங்களாக பார்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கும் மாற்றார்கள், அந்த குற்றவாளிகள் முஸ்லீம்களாக இருந்தால் மொத்த சமுதாயமே குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டன. அதற்கு முஸ்லீம்களின் குரானும், மத போதனைகளும் காரணம் என்று விளக்கமளிக்க ஏகப்பட்ட மாற்று மத முஸ்லீம் அறிஞர் பெருமக்கள்.

நமது முன்னாள் பிரதமர், பல முஸ்லீம் தலைவர்களால் மதிக்கப்பட்டவர், குறிப்பாக பத்வா ஸ்பெஷலிஸ்ட் டெல்லி ஷாஹி இமாம் அவர்களால் சமீபத்திய தேர்தல் நேரத்தில் புகழப்பட்டவர், காஷ்மீர் பிரச்சனையை தீர்த்துவைக்க தகுதி படைத்தவர் என்றெல்லாம் பேசப்பட்ட வாஜ்பாய் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய், முஸ்லீம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் பிரச்சனைகள் உருவாக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று முழங்கினார்.

இந்தியா என்று அழகிய ஒரு பெயர் சூட்டி உலகிற்கு, ஒன்றுபட்ட ஒரு நிலத்தை, நாட்டை, அறிமுகப் படுத்திய 1000 வருடத்திற்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட முஸ்லீம்கள் அன்னியர்களாக தினம் தினம் அடையாளம் காட்டப்பட்டு நிற்கிறார்கள்.

ஓவ்வொரு முஸ்லீமும், காலையில் எழுந்தது முதல், இரவில் தூங்கச் செல்லும்வரை தன்னை ஒரு இந்திய குடிமகன், தேச பக்தன் என்று மாற்றார்கள் எப்படியெல்லாம் விருப்பப் படுகிறார்களோ அப்படியெல்லாம் அவர்களை திருப்திபடுத்த வேண்டியுள்ளது. முஸ்லீமுடைய நிறுவனத்தில் முஸ்லீம்கள் மட்டும் வேலை பார்த்தால், அந்த நிறுவனத்தின் முதலாளி ஒரு இனவாதி. அதே நேரம் ஒரு மாற்றாருடைய நிறுவனத்தில் வெறும் மாற்றார்கள் மட்டும் வேலைப்பார்த்தால் அந்த முதலாளி ஒரு பொதுவாதி.

அன்றிலிருந்து இன்று வரை முஸ்லீமகளைப் பற்றி பேசப்படுகிற பொய் பிரச்சாரத்தில் மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது முஸ்லீம்கள் இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்கள் அல்லது அபகரிக்க வந்தவர்கள். Common Akbar, ஆப்கானிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் வந்த மன்னர்கள் இந்த நாட்டை அபகரிக்க வந்ததல்லாமல் வேறு எதற்காக வந்தார்கள்? அவர்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கலாம். ஆனால் வரலாறு என்ன சொல்கிறது, அன்றைக்கு வந்த முஸ்லீம் மன்னர்கள் எல்லோருக்குமே இங்கிருந்த ஆட்சியாளர்கள் இடம் கொடுத்த கதையை, ஆவனங்கள் மற்றும் சான்றுகளோடு விளக்குகின்றன. முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்த மன்னில் நுழைந்தபோது, இது சிறு சிறு ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. இன்றைகு இந்தியா என்று சொல்லப்படுகிற இந்த நிலம் ஒன்றுபட்ட ஒரு நாடக இருந்தது இல்லை.

தன் எதிரியை வீழ்த்த எப்படி அண்டை நாட்டு படையை உதவிக்கு அழைப்பது அன்றைய மன்னர்களின் வழக்காமாக இருந்ததோ அதே காரணம்தான் ஆப்கானிய மற்றும் மத்திய ஆசிய முஸ்லீம் மன்னர்கள் பாரத மண்ணிற்கு வருவதற்கு காரணமாக இருந்தது. தன் எதிரி மன்னன் ஒரு இந்து என்று நன்றாக தெரிந்தும், அவனை ஒரு முஸ்லீம் மன்னனின் துணையுடன் தோற்கடிப்பதும் அல்லது அந்த நாட்டை அபகரித்துக் கொள்வதும் அன்றைக்கு மிகச் சாதாரணமாக நடைப் பெற்று வந்தது.

முகலாய மன்னர்களின் படைத்தலைவர்கள் எல்லோருமே, இந்து ராஜ புத்திரர்களே. போர் வீரர்களில் பெரும்பாலோரும் அவர்களே. அக்பர் மாற்றார்களை வெற்றி கொள்ளவேண்டுமென்று ஆலயங்களின் பூஜை செய்தவர்களில் பெரும்பாலோர் இந்து பண்டிதர்களே.

ஜெய்ப்பூர் மகாராஜாவின் மகளைத்தானே அக்பருக்கு மணமுடிக்கப்பட்டது. அதே ஜெய்ப்பூர் மகாராஜாதான் பல போர்களின் அக்பரின் படையை தலைமை தாங்கிச் சென்றது. அன்றைக்கு ஏன் மதம் அவர்களுக்கு மத்தியில் குறுக்கே நிற்கவில்லை? அக்பரின் மதம் என்ன என்று அன்றைக்கு எந்த ராஜ புத்திர மன்னனும் பார்க்கவில்லை, மாறாக அவனை வெறும் மன்னனாகத்தான் பார்த்தார்கள். (1)

அக்பருக்கு வேண்டுமானால் மதம் அவசியமில்லாமல் இருந்திருக்கலாம், காரணம் ஆட்சி அதிகாரம் வேண்டும். ஆனால் பாரதத்தின் புனிதம் பாழ்படுத்த காரணாமாயிருந்த பாபரின் மகன் ராஜ புத்திரர்களுக்கு ஏன் அவசியமானான்?. அன்றைய அதிகார அவசியங்களுக்கு தேவைப்படாத மதம், இன்றைக்கு ஏன் அவசியமாகிறது? யாருக்காக?

(தொடரும்)

References:
(1). http://www.royalfamilyjaipur.com/j_rul.htm

Wednesday, February 02, 2005

மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும்

'முஸ்லீம்களின் ஒரு தலைமுறை அழிக்கப் பட்ட பிறகுதான் இந்துக்களான நாங்கள், எதை புரிந்துக் கொள்ள வேண்டுமோ அதை புரிந்துக் கொள்ளப் போகின்றோம்'. 'இந்திய முஸ்லீம்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?' என்ற ஒரு கேள்விக்கு, ஒரு நாடறிந்த சமூக அறிவியலர், மனோதத்துவ நிபுணர் சொன்ன மறுமொழிதான் இது. (அவரின் பெயர் இங்கே குறிப்பிட விரும்பவில்லை).

அந்த நிபுணரின் கருத்து கொஞ்சம் அதீதமாக தோன்றினாலும், பொதுவாகவே அவர் இப்படி எல்லாம் பேசக்கூடியவர் அல்ல என்பதால் அவருடைய பதிலை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியவில்லை. காரணம் தற்போது இந்திய முஸ்லீம்கள் அப்படி ஒரு எதிர்பாரத சூழலில் சிக்கி நிற்பது உண்மையே. மாற்றார்கள், முஸ்லீம்களை மாற்றார்களாக்கி வைத்திருப்பதும் அதற்கு ஒருசில முஸ்லீம்கள் துணை இருப்பதும்தான் இந்த அவலச் சூழலுக்கு காரணம். அப்படி முஸ்லீம்கள் மாற்றார்களாகவே இருக்க வேண்டியது மற்றவர்களுக்கு அவசியத் தேவையாகவும் இருக்கின்றது.
முஸ்லீம்கள் ஒரு இக்கட்டான காலச்சூழலை கடந்து கொண்டிருக்கிறர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகின் எல்லா பாகங்களிலும், முஸ்லீம்கள் பெரும் துன்பத்திற்க்கு ஆளாகி வருகின்றார்கள்.

பெரும்பான்மையினராக இருந்தாலும் சரி அல்லது சிறுபான்மையினராக இருந்தாலும் முஸ்லீம்கள் உள்ளும் புறத்திலும் விமர்சனங்களினாலும் அல்லது விஷமத்தனமான பிரச்சாரங்களினாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதார மற்றும் உயிர் சேதங்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

ஒருசிலர் இதை தவறாக புரிந்துக் கொண்டு இஸ்லாம் ஒரு கடினமான சூழலை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள், முஸ்லீம் எழுத்தாளர்களையும் சேர்த்துதான். இஸ்லாமிய மதத்தில் குறைபாடுகள் என்று விரிவான ஊடக விவாதங்கள் கூட நடந்து வருகின்றன. இன்னும் ஒரு சிலர் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையான குரானை, முஸ்லீம்களின் புனித மறையை மாற்றி அமைக்க ஆலோசனை தருகின்றனர். இதற்கு காரணமாக குரானில் உள்ள ஒருசில கருத்துக்கள் காலத்திற்கு முரன் பட்டதாகவும், வளர்ச்சி அடைந்த இந்த உலகச் சூழலில் அவைகள் ஒத்துப் போகாது என்றும் அறிவுரை கூறுகின்றனர். இன்னும் ஒரு சாரார், இஸ்லாத்தை அரசியல் இஸ்லாம், ஆன்மீக இஸ்லாம் என்று இரண்டாகப் பிரித்து முஸ்லீம்களை குறைந்தப் பட்சம் ஆன்மீக இஸ்லாத்தோடு நிறுத்திவைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். குறை சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்களும், வசை மொழிகளும் இன்னும் இடையுறாமல் செய்யப்படும் பிர்ச்சார தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இது போன்ற பிரச்சாரங்களும், தாக்குதல்களும் முஸ்லீம்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இஸ்லாமிய வரலாற்றில் இதைவிட இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது. நபிகள் நாயகம் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை மாற்றார்களிடம் எடுத்து வைக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்து இன்று வரை இது தொடர்கிறது, இன்னும் இந்த உலகம் உள்ள வரை ஓயவும் போவதில்லை. ஆனால் முஸ்லீம்கள் அவ்வப்போது தங்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டியதும், இப்படிப்பட்ட உண்மைக்கு புறம்பான பழிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியமாகிறது. அதேநேரம் இஸ்லாத்தையும் முஸ்லீம்களைப் பற்றிய மாற்றாரின் தவறான சிந்தனைகளையும் பார்வைகளையும் களைய வேண்டியது முஸ்லீம்களுக்கு கடமையாகிறது. மாற்றாரின் அரசியல் அரங்கில் பகடைக் காய்களாக உருட்டப் பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் முஸ்லீம்களின் செயல்பாடுகள் விவேகமுள்ளதாக இருக்கிறதா என்றால் மிகப் பெரிய கேள்விக் குறிதான் முன்னால் நிற்கிறது.

முஸ்லீம்கள் செய்வது எல்லாம் இஸ்லாம் இல்லை - இஸ்லாத்தில் சொல்லப் பட்டவைகள் அனைத்தையும் முஸ்லீம்கள் பின்பற்றுவதுமில்லை. இது எதார்த்த நிலை, ஆனால் முஸ்லீம்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், அவர்களுடைய மார்க்கம் அடையாளப் படுத்தப்படுவது வேறு எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் இல்லாத ஒரு நிலை. இந்த நிலைக்கு மிகப்பெரும் காரணம் முஸ்லீம்களே. தான் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும், குறிப்பாக தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில் மார்க்கத்தை காரணம் காட்டி நியாயப்படுத்த தொடங்கியதன் விளைவுதான் இது. மாற்றார்களுக்கு, குறிப்பாக முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும் குறை சொல்வதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு இப்படி மார்க்கத்தை அடையாளப் படுத்துவது இதனால் மிகவும் எளிதாகி விடுகிறது. இது ஒருபுறம் இருக்க முஸ்லீம்கள் எல்லாம் நம்மை போன்ற மனிதர்கள்தான், ஆனால் அவர்கள் பின்பற்றுகிற மார்க்கம்தான் அவர்களை அப்படியெல்லாம் செய்ய வைக்கிறதென்று இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் பிரிக்கின்ற வேலையும் மும்முறமாக நடைபெறுகிறது. இது எப்படி இருக்கிறதென்றால், கணக்கில் விடை தவறாக இருப்பதற்க்கு காரணம் பார்முலாவை சரியாக பயன்படுத்தாமல் கணக்குப் பாடத்தையே தவறு என்று சொல்வது போல் இருக்கிறது.

இஸ்லாம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டம். வாழ்வின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வை தன்னிடத்திலே கொண்டுள்ளது. முஸ்லீம்கள் அதில் தேர்ச்சி பெற வேண்டும். அதுதான் முஸ்லீம்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனை மற்றும் பரிட்சை எல்லாம். இஸ்லாம் ஒரு போதும் தன்னை பரிட்சித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீம்கள்தான் தன்னை அவ்வப்போது சரி செய்து கொள்ள வேண்டும். இஸ்லாம் இந்த உலக வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு போதுமான வழிகாட்டுதல்களை குரான் மற்றும் முகம்மது நபி (சல்) அவர்களின் வழ்க்கை நடைமுறை மூலமாக கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் மாற்றாரை குறை கூறுவதற்கு முன்னால் முஸ்லீம்கள் தங்களை சுய சோதனை செய்து கொள்வதும் தாம் பயணம் செய்கிற பாதையை அறிந்து கொள்வதும் மிகவும் நல்லது.

தற்போது உலகில் மிக ஆர்வமாக ஊடகங்களில் விவாதிக்கப்படுவதும், சாமனிய மனிதர்களின் சராசரி சிந்தனைகளை கவர்ந்திருப்பதும் 'பயங்கரவாதம்' என்கிற விஷயம்தான். இதையே தனது மிகப்பெரும் பிரச்சனையாக முன்னால் வைத்து உலகம் அனைத்தையும் தன்பால் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் தனக்குத் தேவையானதை சாதூர்யமாக அடைந்து கொண்டுமிருக்கிறது அமேரிக்க அரசாங்கம். கடந்து மூன்று வருட காலமாக நடக்கக்கூடிய பயங்கரவாத்திற்க்கு எதிரான போர் வேறு எதற்கோ எதிராகவும் மற்றும் வேறு எதையோ பாதுகாக்கவும் நடைபெறுவது நன்றாக புரிய வரும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க பயங்கரவாதம்தான் சரி என்று தொடங்கிய இந்த யுத்தம் முள்ளை முள்ளால் எடுக்கிறேன் என்று தற்போது உடலே ரணகளமாகிக் கொண்டிருக்கிறது. பயங்கரவாத்தின் அன்னை தீவிரவாதம் என்றும், தீவிரவாதம் தோன்றியது அடிப்படைவாதத்தில் என்றும், அடிப்படைவாதத்தின் உயிர்நாடி இஸ்லாம் என்று அடையாளம் காட்டப்பட்டு நிற்கிறது இஸ்லாம். ஆக்ஸ்போர்டு ஆங்கில டிஷ்னரியில் கூட அடிப்படைவாதம் என்றால் மதத்தின் அடிப்படை அம்சங்களை முறையாக பின் பற்றுவது என்றும், அதற்கு பைபிளை காரணங் காட்டிவிட்டு, அடிப்படைவாதி என்றால் முஸ்லீம் என்று அடையாளப் படுத்துகிறது. அடிப்படைவாதி என்றால் ஒன்றும் அசிங்கமான வார்த்தை இல்லை, ஆனால், அப்படி ஒரு மாயை தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அறிவியலின் அடிப்படை தெரிந்தவனை, அதில் சிறப்பாக செய்பவனை விஞ்ஞானி என்று சிறப்பிக்கும் இந்த ஊடக உலகம், மதத்தின் அடிப்படை தெரிந்தவனை மனித நேயத்திற்க்கு எதிரானவனை போல் சித்தரிக்கிறது. சமீபத்தில் இந்தியாவையே கண்ணீர்விட வைத்த சுனாமி பேரழிவில் உடல் உருவம் பார்க்காமல், சாதி மதம் பாராமல் வேலை செய்ததில் முன்னிலை வகித்தவர்கள், அடிப்படைவாதிகள், மனித நேயத்திற்க்கு எதிரானவர்கள் என்று பறைசாற்றப்பட்ட TMMK, RSS என்ற மதவாத அமைப்புகள்தான்.

ஆனால் உலகம் முழுவதும் அடிப்படைவாதி, தீவிரவாதி இன்னும் பயங்கரவாதி என்றெல்லாம் அடையாளம் காட்டப்பட்டு நிற்பவர்கள் முஸ்லீம்களே. ஏன் இப்படி? எங்கிருந்து தொடங்கியது இந்த போராட்டம். சாமுவேல் ஹண்டிங்டன் சொன்ன 'clash of civilization' தொடங்கிவிட்டதா? அல்லது பாரத முன்னாள் ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் சொன்னது போல் ' நாகரீகங்கள் ஒரு காலத்திலும் மோதிக் கொள்வதில்லை, அவை எப்போதும் ஒன்றை ஒன்று உயர்விக்கவே செய்கின்றன. மோதிக்கொள்வதெல்லாம் காட்டு மிராண்டித் தனங்கள்தான்' என்றாரே அதுதான் தற்போது நிகழ்ந்து வருகிறதா?


(தொடரும்)

Thursday, December 30, 2004

கடல் கண்ணீர்

நொடியில் கிளர்த்தெழுந்த கடல்நீர் அலைகள்
கொடிபோல் என்னருகில் கிடந்த குடல்வாய் மகவை
தடிகொண்டு தாக்கினவோ, தரைமேல் இழுத்தனையோ - அய்யகோ
அடிவயிறும் அழுகையிலே கடல்நீராய் கரைந்தனையே!

நாடு பல கடந்து நல்லாரும் பொல்லாரும்
சேர்த்திழுத் தணைத்து செப்ப ஒரு மொழியின்றி
கோர்த்து மரணத்தை கொடுங்கோலாய் மாற்றினையே
நேற்றுவரை புன்சிரித்த என்கடல்நீர் காரிகையே!

காற்றும் கடல்நீரும் எம்வாழ்க்கை ஊற்றுக்கள்
போற்றியதன் புகழ்பாடி உன்வாசலிலே வாழ்ந்துணர்ந்தோம்
ஆற்றுநீர் போதாதென்றோ அழுகைநீர் கேட்டுவந்தாய்
ஆறப் பொறுக்குதிலையே எமதழுத நெஞ்சங்கள்!

உன் சீர்கொண்டு வாழ்ந்தோம் - பொல்லா
உன் சீற்றம் கொண்டு மடிந்தோம்
ஏற்றமிகு இறைவனின் விதிதான் இதுவென்றால்
போற்றிஅவன் காலடியில் பொறுமையினை தேடிடுவோம்.

Wednesday, December 22, 2004

சிந்தனைச் சிதறல்கள் 1

என்னைத் தொட்ட தென்றல்தான் உன்னையும் தொடுகிறது
என் விழிகளில் விழுந்த வெளிச்சம்தான் உன் விழிகளில் மிளிர்கிறது
எனக்கு குளிரும் தென்றல் உனக்கு ஏன் சுடுகிறது?
ஒற்றை வான் கூரைக்குள்ளே இத்தனை விரிசல் ஏன் நமக்குள்
எங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோம்

களி மண்ணில் படைத்தான் கடவுள்
இரத்தமும் சதையும் சேர்ந்த இம்மானிடப் பதரை
தோற்றங்கள் வெவ்வேறாயினும் தோன்றுதல் ஒன்றுதானே
எனக்காக நீ சிரித்தாய் உனக்காக நான் அழுதேன்
இருந்தும் ஏன் இத்தனை இடைவெளி
விரைந்து வா நண்பா வேர்களைத் தேடுவோம்!

பூக்கள் பலவானாலும் பச்சை கிளைதானே உயிர்நாடி
இச்சைகளின் போராட்டம் எத்தனையோ நமக்குள்ளே
இருளை போர்வையாக்கி இரவிலே மரணித்தெழுந்தோம்
பகலிலே இரவைத்தேடி பாதியை நடித்தே கழித்தோம்
மீதி என்னவென்று யாருக்கு தெரியும் நண்பா
வீதிகள் பலவாறாயினும் சேருமிடம் ஒன்றுதான்
சேர்ந்தே தேடுவோம் வா சோதனை ஒன்றுதானே!

ஒரு பொய் வாங்கினால் நூறு பொய்கள் இனாம் என்றான்
பொய்களின் (பொருளாதார) சந்தைக்குள் போலீஸ் கட்டுப்பாடு
உண்மையின் வீதியிலே ஒருவனும் அங்கில்லை
பொய்களின் புதர்களிலே உண்மை ஒளிவதில்லை
பொய்களை விற்றா உண்மையை வாங்கமுடியும்?
பொய்களின் வீதிகளில் நமக்கென்ன வேலை நண்பா
போகட்டும் பழைய கதை புதையலை தேடலாம் வா!

நீர்கள் ஓடும் வழியெல்லாம் ஆறுகள் அமைவதில்லை
ஆழக்கடல் நண்பா அங்கே அலைகளுக்கு வேலையில்லை
கடமையை மறந்துவிட்டு சுதந்திரம் கேட்கிறோம் நாம்
அட நேரமில்லை நண்பா நம் சோகம்தனை புலம்ப!
பசித்தவன் உணவைத் தேடுவதுபோல்
படைத்ததன் பலன் தேடலாம் வா!

(தொடரும்)