'ராபினை நாங்கள்தான் கொலை செய்தோம்.. இப்போது ஷரோனையும் கொலை செய்வோம்' என்ற வரிகள் இஸ்ரேலில் குடியேறிய (Settlers) கூட்டத்தினர் வசிக்கும் பகுதிகளில் எல்லோரையும் கவர்ந்து கொண்டிருந்தது. (1). இஸ்ரேல் நாட்டினுள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து குடியேறியவர்கள், பாலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் சமதான ஒப்பந்தந்தை எதிர்த்து தங்களது கோபங்களை இவ்வாறு தாம் வாழ்ந்து வரும் பகுதிகளின் சுவர்களில் எழுதி எச்சரிக்கை செய்து வருகின்றனர். ராபினை கொன்றவன் இந்த பகுதியைச் சார்ந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதனால் இந்த யூதர்களின் எச்சரிப்பும் எரிச்சலும்?
இஸ்ரேலிய பத்திரிக்கையாளர் ஒருமுறை இவ்வாறு கூறினார். 'பாலஸ்தீனர்களின் பிரச்சனை இல்லை என்றால், இஸ்ரேல் இந்நேரம் ஒரு சிவில்வாரைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கும்'. ஏன் அந்தப் பத்திரிக்கையாளர் அவ்வாறு கூறினார்?
வாழ்வதற்கு தனக்கென்று ஒரு பூமி வேண்டும், அதுவும் தங்களது இதயங்களில் எந்நேரமும் தகித்துக் கொண்டிருக்கும் ஜெருசெலத்தின் அருகில் வேண்டும் என்று வந்தவர்கள். அதாவது பாலஸ்தீனத்தில் ஒரு கானி இடம் போதும் என்று ஆசைப்பட்டு, திட்டமிட்டு, இனி இந்த கிறிஸ்துவ நாடுகளின் ஆட்சியாளர்களிடம் சித்திரவதைப் படுவதைவிட ஒரு குடிசையிலாவது வாழ்ந்துவிட்டு போகலாம் என்று வந்தேறிய இஸ்ரேலிய மக்கள் தற்போது மண்ணிற்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீனர்களிடம் ஒட்டும் கூடாது, உறவும் கூடாது என்று சமாதான பேச்சு வார்த்தைக்கு குறுக்கே நிற்பதன் காரணம் என்ன?
இஸ்ரேலியர்கள் எங்கு சென்று வசித்தாலும் பிரச்சனைக்கு உள்ளக்கப்படுகிறார்களா? அல்லது பிரச்சனைகளை உருவாக்குகிறார்களா? வரலாறு என்ன சொல்கிறது?
நான் எழுதப் போவது இந்த உலகின் உன்னத உயற்விற்கும், அதே சமயம் மோசமான வீழ்ச்சிகளுக்கும் காரணமாக அமைந்த யூத சமுதாயத்தின் வரலாறுதான். நான் எழுத இருக்கும் யூத சமுதாயத்தின் வரலாறு அவர்களுடைய வேதமான 'பழைய ஏற்பாடு' அதாவது 'தோரா' என்று அழைக்கபடும் யூதர்களின் வேதத்திலிருந்தும், அடுத்து 'பைபிள்' அதாவது 'இஞ்ஜீல்' என்று அழைக்க்கப்ட்ட வேதத்திலிருந்தும். அது மட்டுமல்லாமல் வேறு பல ஆரய்ச்சி நூல்களிலிருந்தும் இறுதியாக இஸ்லாமிய இறுதி வேதமான 'திருக் குரானிலிருந்தும்' திரட்டப்பட்டவைகள். எத்தனையோ பேர் இந்த வரலாற்றை எழுதியிருக்கிறார்கள், அவர்களில் கடைவரிசையில் நிற்கக் கூடியவனாகிய நான் இந்த வரலாற்றை எஞ்சியிருக்கக் கூடிய வேத புத்தகங்களின் வழியாக என்னால் இயன்ற அளவிற்கு தொகுத்து எனது பார்வைகளுடன் வழங்க இருக்கிறேன். இம்முயற்சி தொடங்கியது கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு முன்பாக. ஆனால் இதை முதல் முறையாக எழுத்து வடிவமாக்கி பிறர் படிப்பதற்கு ஏற்றார் போல் அமைத்துக் கொடுக்க இருக்கிறேன்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஓர் முக்கியமான அரசியல் மாற்றத்திற்கான வித்திடப்பட்டது. அது உலக வரலாற்றிற்கு புதியதொரு பரிமானத்தை கொடுத்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன் இருந்த உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் ஒரு சமுதாயம் எந்த அளவிற்கு இந்த உலகின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்துக் கொள்ளமுடியும். அவ்வாறு அந்த பின்னோக்கிய வரலாற்றை தெரிந்துக் கொள்வதன் மூலம் இனி வரும் எதிர்காலத்தையும் அதில் நடக்க இருக்கின்ற மாறுதல்களையும் ஓரளவு அனுமானிக்க உதவும்.
இந்த உலகின் எல்ல நிலைகளிலும் பின்னி பினைந்த ஒரு ஒப்பற்ற சமுதாயமாக இருந்து வந்திருக்கிற யூத சமுதாயம் இவ்வுலகிற்கு ஏற்படுத்திய உயர்வுகளும், வீழ்ச்சிகளும் வேறு எந்த சமுதாயத்தினராலும் ஈடு செய்ய முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் பன்முக பங்களிப்புகள் வரலாற்றில் எங்கு நோக்கினாலும் சிதறிக் கிடக்கின்றன.
வரலாறு என்பது படிப்பினை பெறுவதற்கே. அதிலிருந்து நாம் கற்றுக் கொள்வதன் மூலம் நமது முன்னோர்கள் செய்த தவறுகளை செய்யாமல் நம்மையும் நமக்கு பின்னால் வரும் சமூகத்தையும் காப்பாற்ற முடியும்.
யூத - முஸ்லீம் - கிறிஸ்துவ போராட்டங்கள் என்பது காலம் காலமாக நடந்துவரும் நிகழ்வுகள். இந்நிகழ்வுகள் கடவுள் ஏற்புடையவர்களுக்கும், அல்லது மறுப்பாளர்களுக்கும் இன்னும் யாராக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. வரலாற்று பிண்ணனிகளைப் பார்த்தால் சில நேரங்களில் இந்த போராட்டங்கள் உலகை பலமாக உலுக்கியிருக்கின்றன. முழங்கால் வரை இரத்த ஆறுகளை ஓட வைத்திருக்கின்றன. கடவுளின் பெயர் சொல்லி ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திய அந்த வாழ்க்கை முறைகளை படிக்கும்போது.. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இந்த மனித குலத்திற்கு அவசியமா? என்று கேட்கத் தோன்றும்.
'அநியாயம் செய்யக் கூடிய ஒரு சமூகத்திற்கு எதிராக இன்னொரு சமூகத்தைக் கொண்டு நாம் தடுக்கிறோம்' என்று இறைவன் திருக்குரானில் சொல்வது போல் இவ்வுலகில் இருக்கக் கூடிய சமூகங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு கால கட்டத்தில் அநியாயம் செய்யக் கூடிய சமூகமாக இருந்திருக்கின்றன அல்லது இருக்கின்றன. நியாயத்திற்காக போராடத் தொடங்கிய எத்தனையோ கூட்டங்கள் பிற்காலத்தில் தான் தொடங்கிய அந்த பாதையை மறந்துவிட்டு அறிந்தோ அறியாமலோ அநியாயம் செய்யக் கூடிய கூட்டமாக, சமூகமாக மாறியிருக்கின்றது. இதில் எந்த சமுதாயமும் விதிவிலக்கல்ல.
ஆகவே 'வரலாற்றில் சில ஏடுகள்' என்ற இந்த படைப்பு வரலாற்று நோக்கில் வழங்கப்படும் ஒரு படைப்பே தவிர்த்து எனது விருப்பு வெறுப்புகளை சுமந்து வரும் படைப்பாக இருக்காது.
'இந்த மூன்று பிரிவினர்கள்தான் இவ்வுலகத்தின் வாரிசுகளாவார்கள்: யார் இந்த இஸ்ரேலிய (பாலஸ்தீனத்தில்) மண்ணில் வாழ்கின்றார்களோ அவர்களும்; யார் தனது மகவுகளை கொண்டு (கடவுளின் விதிகளை) சட்டங்களை படிக்க வைக்கிறார்களோ அவர்களும்: யார் சப்பாத் தினங்களை ஒட்டி திராட்சை பழ ரசங்களைக் கொண்டு சம்பிரதாய வழிபாடல்களை மறுபடியும் திரும்பத் திரும்ப செய்து ஆசிர்வதிக்கப்படுகின்றனரோ அவர்களும்' (தல்மூத் பி'சாச்சிம் 113, பகுதி 1)
யூதர்களின் இந்த வேத வரிகள் எவ்வாறு இஸ்ரேலியர்களை மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் ஒன்று சேர்க்கிறது என்றும் இந்த உலகின் rightful citizen நாம்தான் என்பதில் எவ்வாறு அவர்கள் இறுமாந்து இருக்கிறார்கள் என்பதையும் இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
(இந்தத் தொடர் எத்தனை இருக்கும் என்னால் தற்போது சொல்ல இயலவில்லை. இந்த வரலாற்று தொடர் சம்பந்தாமாக உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறேன்.)
1) Uri Avenery - Buying Off the Settlers, Arab News June 2, 2005
Saturday, June 04, 2005
Friday, June 03, 2005
முதல் தியாகம்
நிசப்தமான நடுப்பகல் நேரம். உடலின்
நீரையெல்லாம் உரிஞ்சும் சுட்டெரிக்கும் வெயில. எங்கு பார்த்தாலும் வெப்ப சலனங்கள்,
மணல்வெளிகள் தங்கத்தில் உருக்கப்பட்ட தடாகம் போல் தகித்துக் கொண்டிருந்தது. பனு
மக்ஸும் கூட்டத்தினருக்கு சொந்தமான சில ஒட்டகங்கள் மலைப்பகுதியின் அடிவாரத்தில் கற்களை உணவுகளாக சுவைத்துக் கொண்டிருந்தன. பாலையின் அனல் பறக்கும் வெயிலுக்குச் சொந்தமான இப்பகுதி குரைஷி இனத்தின்
வலிமைமிக்க ஒரு பிரிவான மக்ஸூம் குலத்தினருக்கு சொந்தமானது.
வீல் ... என்ற ஒரு பெண்ணின் அலறல் அந்த நிசப்தத்தை கொடூரமாக கலைத்தது. அதைத் தொடர்ந்து ஒரு ஆணின் அழுகுரலும் சேர பாலையின் அந்த மலையடிவாரம் திடீரென ஒரு பதை பதைக்கும் இடமாக மாறியது. ஒட்டகங்கள் தலையை திருப்பி சத்தம் வரும் இடத்தை நோக்கி பார்த்தன. 'இது தினமும் கேட்கும் சத்தம்தான்' என்று நினைத்தனவோ என்னவோ சிறிது நேரத்தில் ஒட்டகங்கள் தலையை தொங்கவிட்டு தங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தன.
மீண்டும், மீண்டும் அந்த பெண்ணின் அலறலும் ஆணின் அழுகையும் மணல்வெளியில் முட்டி மோதி காணமல் போக, சில ஆண்களின் கேளிக்கை சிரிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகியது. ஒரு புறத்தில் மரண அவலத்தில் கதறும் ஆண் பெண் குரல்கள். இன்னொரு புறத்தில் அவர்களின் கதறல்களை ரசித்துச் சிரிக்கும் ஆண்களின் கூட்டம்.
சாட்டை அடியின் விளாசல்களில் எழுந்த சத்தங்களின் மத்தியில் ஒரு ஆணின் தளர்ந்த அழுகுரல் வலியால் சத்தமிட, அலறிய பெண்ணின் குரல் அடிக்காதீர்கள்... அவரை அடிக்காதீர்கள்.. என்று சத்தமிட்டது. ஆனால், அந்த சாட்டையடி சத்தங்கள் நிற்காமல் தொடர, அழும் அந்த ஆண், பெண் குரல்களை பின்னுக்குத் தள்ளின அங்கிருந்து வந்த ஆண்களின் கேளிக்கை சிரிப்புகள்.
தூரத்தில் இரு இளைஞர்கள் தங்கள் தலைகளில் கை வைத்தவர்களாக கண்களில் தாரை தாரையாக நீர் சொரிய அழுது கொண்டிருந்தார்கள். ஏன் இந்த அழுகை என்று கேட்க யாருமில்லை. பலைவனத்தின் மணல்களும், மலைகளின் பாறைகளும்தான் கேட்க வேண்டும். யாருமற்ற, நாதியற்றவர்களாக இளைஞர்கள் இருவரும் இங்கே அழுவதும், தூரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சித்திரவதை செய்யப்படுவதும் அதை மலைகளும், பாறைகளும், மணல் வெளிகளும் வெறும் வாய் மூடி மௌனமாக கேட்பதுமாக நாழிகைகள் நகர்ந்தன. ஒரு நாளல்ல, இரு நாளல்ல. இந்த அவலம் தொடர்ந்து பல நாட்களாக நடந்துக் கொண்டிருக்கிறது.
சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி சாய்ந்துக் கொண்டிருந்தான். இரு இளைஞர்களும் அழுகை வந்த திக்கை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். அப்துல்லாஹ் மற்றும் அம்மார் என்ற இருவரும் தளர்ந்த நடையுடன் கேளிக்கையும் கும்மாளமுமாக சிரித்துக் கொண்டிருக்கும் கூடாரத்தை தயங்கியபடி நெருங்கினார்கள். வரும் இருவரையும் பார்த்தவுடன் அந்த கூட்டத்தினர் இன்னும் சத்தமிட்டு சிரித்து வரவேற்றனர்.
'அழைத்து செல்லுங்கள். அடிமைகளுக்கு பிறந்த அடிமைகளே' சத்தமிட்டனர்.
'நாளை இந்த இரு கிழங்களும் உயிரோடு கண் விழித்தால் வழக்கம் போல் திரும்பவும் அழைத்து வரவேண்டும்.. புரிகிறதா..' என்று முழக்கமிட.. இரு இளைஞர்களும் தலையசைத்து ஆமோதித்தவாறு.. மணலில் கிடத்தி இருந்த அந்த இருவரையும் நோக்கி நடந்தார்கள்.
எக்காளமிட்டு சிரித்த அந்த கூட்டம் அபூ ஹுதைஃபா இப்ன் முகீரா என்பவரின் வாரிசுகள். அபூ ஹுதைஃபா என்பவர் இஸ்லாத்தையும் முஹம்மதுவையும் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கு முக்கிய தலைவர்களில் ஒருவரான அபூஜஹ்லின் பெரிய தந்தையாவார்.

அப்துல்லாவும் அம்மாரும் அழுத வண்ணம் மணலில் கிடத்தியிருந்த தனது பெற்றோரின் அருகில் வந்து நின்றார்கள். கொதி மணலில் மார்பில் பாரமாக வைக்கப்பட்டிருந்த சுடும் பாறையை
தள்ளிவிட்டார்கள் இருவரும். உடலெல்ல்லாம் சாட்டையால் அடிபட்டு ரத்தம் சொறிய கிடந்த
தனது தந்தை யாசிர் பின் மாலிக்கை அழுதபடி தூக்கிப் பிடித்து அமர வைத்தார்கள். அவரின் உடலெல்லாம்.. இரும்புக் கம்பியால் பழுக்கக் காய்ச்சி சூடு போடப் படடதுபோல் தோல்கள் பிய்ந்து
தொங்கின. மேனி முழுவதும் இரத்தம் ஒழுகி... சின்ன பின்னப்படுதப்பட்ட உடலாக இருந்தார் யாசிர்.
இரும்புக் கவசத்தை தலையில் அணிவித்து சுடுமணலில் கிடத்தப்பட்டிருந்த தனது தாய் சுமையாவின் சுட்டெரிக்கும் கவசங்களை அப்புறப்படுத்திவிட்டு அவரையும் தூக்கி அமரவைக்கவே... அம்மாரல் இனிமேலும் அடக்கி வைக்கமுடியாத அழுகை சத்தமாக பீறிட்டு வந்தது. காய்ந்து பழுத்துப் போன முகம். இரத்தம் கலந்த கண்ணீருடன் அழுது புடைத்திருக்கு அன்னையின் கன்னங்கள். முத்தமிட்டு கொஞ்சி மகிழ்ந்த தாயின் கோரமான முகத்தைப் பார்த்து சொல்லன்னா துயருடன் சத்தமிட்டு அழுதார்கள் இரு மகன்களும்.
அடிமைகளுக்கு அழும் உரிமை கூட கிடையாதே என்று அம்மாரும் அப்துல்லாவும்.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான்.. இப்படி மக்ஸூம் கூட்டதினரின் சித்திரவதைகளை அனுபவிக்கப் போகிறோம் என்று தாய் தந்தையரின் இரத்தங்களை துடைத்தவாறு கதறினர்.
சொல்ல முடியாத சித்திரவதைகளை அனுபவித்து வரும் இந்த இரு தள்ளாத வயதினரின் குற்றம்தான் என்ன? ஏன் அவர்களது இரு மகன்களும் தன் பெற்றோர்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஒன்றும் செய்ய முடியாதவர்களாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்ககின்றனர்?
ஏக இறைவனை.. கடவுளாகவும்.. முஹம்மது (சல்) அவர்களை இறைத்தூதராகவும் இஸ்லாத்தை வாழ்வுமுறையாக ஏற்றுக் கொண்டதுதான் அவர்களது குற்றம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அடிமையில்லை என்ற கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அடிமை வாழ்க்கையிலிருந்து வெளியேற முனைந்ததுதான் அவர்களின் குற்றம். இவை எல்லாவற்றையும் கடந்து சிந்திக்கும் உரிமைகூட இல்லாத ஒரு அடிமை குடும்பத்திற்கு சீரிய கொள்கைகளா? வெகுண்டெழுந்த இறை நிராகரிப்பாளர்கள் கேட்க நாதியற்றவர்களை கொடுரமாக தண்டித்தால்தான் நபியை பின்பற்ற நினைக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கையாக இருக்கும் என்ற கொடூர சிந்தனையில் விளைந்ததுதான் யாசிர் குடும்பத்தின் இந்த அவல நிலை.
'மகன்களே.. நிச்சயமாக.. ஒரு நாள்.. நீங்கள் இருவரும் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள். இறைத்தூதர் முஹம்மது கொண்டுவந்த அந்த செய்தி உண்மையானது.. இறைவன் பெரியவன். இறைவன் இந்த கொடுமைகளுக்கு பகரமாக உங்களின் எதிர் காலத்தை நன்மையாக்கி வைப்பான். இந்த அடிமைச் சங்கிலியிலிருந்து உங்களுக்கு உரிமைக் கிடைத்துவிடும்' என்று பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லியவாறு.. தனது குடிலை நோக்கி நால்வரும் நடக்கத் தொடங்கினர்.
சுமையா பிந்த் ஹயாட் என்ற அந்த பெண்மணி அபூ ஹுதைஃபாவிடம் அடிமையாக வேலை செய்து கொண்டிருந்தார். ஏமன் நாட்டிலிருந்து காணமல் பொன தன் சகொதரனைத் தேடி மக்கா வந்த யாசிர் அங்கெயே தங்கிவிடவே அபூ ஹுதைஃபா யாசிரை சுமையாவிற்கு கணவனாக மணம் முடித்து இருவரையும் தனக்கு அடிமையாக வைத்துக் கொண்டார். யாசிரும் சுமையாவும் ஏமன் நாட்டைச் சேர்ந்த மதாயிஷ் எனும் வலுவற்ற ஓர் கீழ்நிலை குலத்தை சேர்ர்ந்தவர்கள். மற்ற குலத்தினர் இவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவதும், அவர்களின் ஆண் பெண்களை பிடித்துச் சென்று அடிமைகளாக சந்தைகளில் விற்றுவிடுவதும் வழக்கமாக இருந்தது. அவ்வாறு அடிமையாக விற்கப்பட்டவள்தான் சுமையா பிந்த் ஹயாட்.

அடிமையாக இருந்த சுமையாவை மணமுடித்த
காரணத்தால் யாசிர் பின் மாலிக்கும் அபு ஹுதைஃபவிடம் அடிமையாக மாறிப் போனார்.
இருவருக்கும் பிறந்தவர்கள்தான் அப்துல்லாஹ் மற்றும் அம்மார் எனும் ஆண்மக்கள். அபு
ஹுதைஃபாவின் மரணத்திற்குப்பின் யாசிரும், சுமையாவும் அபு ஹுதைஃபாவின் வாரிசுகளுக்கு
அடிமையாக பணி செய்து கொண்டிருந்தனர்.
அம்மாரும் இறைத்தூதர் முஹம்மதுவும்
நண்பர்கள். இறைத்தூதர் கொண்டு வந்த ஓரிறை மற்றும் இஸ்லாத்தில் அடிமை வாழ்க்கை
இல்லை என்ற கொள்கைகளை அறிந்து யாசிரின் குடும்பம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது.
அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற யார்தான் விரும்ப மாட்டார்கள்?
முகம்மதின் 'தூதுத்தவத்தை ஏற்றுக் கொண்டு... லாயிலாஹா.. இல்லல்லாஹ்' வணங்குவதற்கு உரியவன்.. அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்று மொழிந்த ஒரே காரணத்திற்காக தினம் தினம் உயிர் போகும் சித்திரவதை அனுபவித்து வந்தார்கள் யாசிரும் சுமையாவும். அடிமைகளுக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமைகள் எதுவும் இல்லாத நிலையில், அதுவும் முஹம்மதின் கொள்கையை வேரருக்கும் வேளையில், யாசிர் குடும்பத்தின் செயல் மக்ஸூம் கூட்டத்தினருக்கு பெருத்த அவமானத்தை உருவாக்கிவிட்டது. யாசிரும் சுமையாவும் புதிய இறைக் கொள்கையை கைவிடச் சொல்லி கொடுமைப் படுத்தப் பட்டார்கள். ஆனால், உயிரே போனாலும் சரி, எங்களின் இறை நம்பிக்கையை கைவிட மாட்டோம் என்று உறுதியாக மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருந்தனர்.
இஸ்லாம் மீண்டும் இம்மண்ணில் முளையிடத் தொடங்கிய காலம். நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்து ஏறக்குறைய ஐந்து வருடம். இக்காலச் சூழலில் வெளிப்படையாக தன்னை முஸ்லீம் என்று அறிவிப்பு செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே. ஒரு சிலர் ரகசியமாகவும் வேறு சிலர் வெளிப்படையாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லீம்களாக மாறிக் கொண்டிருந்த காலம். முஹம்மது நபியவர்கள் தொடங்கி முஸ்லீம்களாக மாறிய அனைவரும் இறை மறுப்பாளர்கள் மற்றும் சிலைவணங்கும் கூட்டத்தினரால் பல்வேறு இன்னல்களும், சித்திரவதைகளும் அனுபவித்துக் கொண்டிருந்த காலச் சூழல். இறைத்தூதரின் உயிருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த மோசமான நிலை. தன்னையும் தன்னை பின்பற்றுபவர்களையும் காப்பாற்ற கடினமாக போரடிக் கொண்டிருக்கும் வேளையில் யாசிர் குடும்பத்தின் அவலத்தை நினைத்து இறைவனிடம் கையேந்தி அழுதார்கள் நபியவர்கள்.
தினமும் இதே நிலைதான். யாசிரும் சுமையாவும் படும் சித்திரவதைகளுக்கு முடிவேயில்லாமல் போனது. அவ்வழியெ வந்த முஹ்ம்மது (சல்) அவர்கள் அந்த கொடுமையைத் தடுக்க முடியாமலும் பனு மக்ஸூம் கூட்டத்தினரை தட்டி கேட்க முடியாமலும், கண்ணீர் விட்டவாறு.. 'யாசிரின் குடும்பத்தினரே... பொறுமையுடன் இருங்கள்.. உங்களுக்கு சுவர்க்கம் வாக்களிக்கப் பட்டிருக்கிறது' என்று சொல்லவும், அவர்களுக்காக பிரார்த்தனை மட்டுமே செய்ய முடிந்தவர்களாக இருந்தார்கள்.
என்ன ஒரு கையறு நிலை என்ன ஒரு பலவீனமானச்
சூழல். இறைவன் ஒருவனே, அவன் மட்டுமெ வணக்கத்திற்குரியவன் என்ற ஒரு சத்தியம்
எப்படியெல்லாம் நசுக்கப்படுகிறது. யாசிர் குடும்பத்தினரின் மீதான கொடுமைகள்
கொஞ்சம் கொஞ்சமாக அதிமாகி, கேட்க ஆளில்லை என்பதால் அவர்களது பிள்ளைகள் அப்துல்லவும் அம்மாரும்
சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
மற்றொருமுறை முஹம்மது நபியவர்கள் அவர்களின் கொடுமைகளை கண்ணுற்றபோது 'யாசிரின் குடும்பத்தினரே, பொறுமையுடன் இருங்கள்' என்று கூறிவிட்டு.. 'இறைவா.. யாசிரின் குடும்ப்பத்தினருக்கு மன்னிப்பு வழங்குவாயாக' என்று பிரார்த்தித்து அழுதார்கள்.

நபியவர்களே தனது உயிரை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில் யாசிர் சுமையா போன்ற சாமனியர்களுக்கு
பெரும்பாதகமான சூழலாக இருந்தது. அபூ ஜஹல், அபூ லஹப் போன்ற
குரைஷி தலைவர்கள்.. முகம்மதை நேரடியாக தாக்க இயலாத
காரணத்தால்.. அவரின் கொள்கைகளை பின் பற்றுபவர்களை கொடுமையாக தாக்கி
வந்தார்கள். நபியை பின்பற்றி நடப்பவர்களை கொடுமைப் படுத்துதல், கொலை செய்தல் போன்ற
செயல்களால் முகம்மதின் உறுதியை குலைக்க எண்ணி படுபாதக செயல்களில் ஈடுபட்டார்கள்.
ஒரு நாள்... மாலை நேரத்தில் யாசிர், சுமையா, அப்துல்லாஹ் மற்றும் அம்மாரின் வருகைக்காக காத்திருந்தான் குரைஷிகளின் தலைவன், முகம்மது நபிகளாரின் எதிரி அபூஜஹல்.
பகல் முழுவதும் துன்பங்களை சகித்து இரவிலாவது நிம்மதியாக இருக்கலாம் என்று வீட்டிற்கு வந்த சுமையா, வாசலில் அபூஜஹல் காத்திருப்பதைக் கண்டு கலங்கி தன் இரு மக்களின் கைகளை பிடித்தவாறு.. தள்ளாடி நின்றாள்.
ஓரிறை கொள்கைப்பிடிப்பும் முகம்மது அவர்களின் மேல் இருந்த உண்மையான அபிமானமும் அவர் சொன்ன செய்திகளில்... ஏக இறைவனின்.. உன்னதமான இறைச் செய்தியை சுவைத்த அனுபவமும் சுமையாவிற்கு.. போதுமான உளத்திறனை கொடுத்தது. தான் ஏற்றுக் கொண்ட இந்த கொள்கையால் நிச்சயம் ஒரு நாள் இந்த பூமியில் பெருத்த மாற்றம் வர இருக்கிறது.. இந்த கொடுமைகளிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும்.. இந்த பூமி விடுபட இருக்கிறது. காலம் காலமாக அனுபவித்து வந்த அவமானங்கள், கேவலமான வாழ்க்கை முறைகள், ஒழுக்கக் கேடுகள் எல்லாவற்றிலிமிருந்தும் விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற சத்தியப்பிடிப்பு அவரை இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியிலலும் இன்னும் உயிர் வாழ வைத்தது. அது மட்டுமல்லாமல்.. தனது இந்த நம்பிக்கையால்.. நிச்சயம் தனது இரு ஆண் மகவுகளும் இந்த அடிமைச் சங்கிலியிலிருந்து விரைவில் விடுபடுவார்கள் என்ற ஆழ்ந்த எதிர்பார்ப்பும் நிறையவே இருந்தது. விழிகளில் நீரும், உதடுகளில் பிரார்த்தனையுமாக வீட்டை நெருங்கினார்கள் நால்வரும்.
இப்பாதுகாப்பற்ற சூழலில் மக்ஸூம் கூட்டதினரையும் அவர்களது உறவினர்களையும் காணும் போதெல்லாம் சுமையாவின் உள்ளம் மட்டுமல்ல உடலும் நடுங்கியது. தனது வீட்டு வாசலில் அபூஜஹல் நிற்பதை கண்ட சுமையாவின் முதல் பயம் பகல் முழுவதும் கொடுமைகளை அனுபவித்து விட்டு இப்போதுதான் திரும்பி வரும் வேளையில் தனது பிள்ளைகளை அந்த பாதகன் இன்னும் அதிக கொடுமைப் படுத்துவானோ என்ற பீதி அவளைப் பற்றிக் கொண்டது.
'வா.. சுமையா.. அடிமையான உனக்கு.. எத்தனை தைரியமிருந்தால் நீ... இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வாய்' என்று கோபத்துடன் அந்த பெண்மணியை தாக்கத் தொடங்கினான்.
அன்னை தாக்கப்படுவதை அப்துல்லாவும், அம்மாரும் தடுக்க முயன்றும், அபூ ஜஹல் தனது ஈட்டியால் இருவரையும் திருப்பித் தாக்கினான். கண்மூடித்தனமான அபூ ஜஹலின் தாக்குதலை அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. போராடும் திறனும் உடல் பலுவும் அவர்களிடத்தில் இல்லையென்றாலும் இரு மகன்மகளும் அபூ ஜஹலை விடுவதாக இல்லை.
மிகுந்த போராட்டதிற்குப்பின் அபூ ஜஹல் தனது ஈட்டியால் அடிவயிற்றில் பெண்குறியில் குத்த சுமையா நடுத்தெருவில் சாய்ந்தாள். உயிருடன் வாழும் அடிமைகளுக்கே பரிந்து கேட்க ஆளில்லா சமூகத்தில் உயிரற்ற சுமையாவிற்கு யார் வந்து நிற்கப் போகிறார்கள்? எக்காளமிட்டு முழங்கிய அபூ ஜஹலின் வீரதீர பராக்கிரமத்தை பார்த்து கைகொட்டி ஆர்ப்பரித்த கூட்டத்தின் மத்தியில் சுமையா என்ற சொர்க்கத்தின் ஆன்மா கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருந்தது. இஸ்லாமிய சமூக கட்டமைப்பின் அடித்தளமான ஓரிறைக் கொள்கையை மனதில் தூக்கி சுமந்த ஓர் உன்னதப் பெண் இதுநாள்வரை தனது உறுதியை தன் குருதியின் மூலம் உலகிற்கு எடுத்துரைத்த ஓர் அடிமைத்தாய் இறுதியாக கண்ணுயர்ந்தாள். இஸ்லாமிய தியாகங்களின் அடித்தளத்தில் தன்னுயிரை கொடுத்த முதல் பெண் சுமையா என்ற வீரமங்கை.

சத்தியம் சிந்திய ரத்தங்களின் முதல்
அத்தியாயம் மக்காவின் தெருவில் சுமையா என்ற ஒரு பெண்ணால் தொடங்கிவைக்கப் படுகிறது
(தொடரும்)
குறிப்புகள்:
குறிப்புகள்:
1)
கணவர் யாசிரும் சில நாட்களில் பனு மக்ஸூம் கூட்டத்தினரின் சித்திரவதைகள்
தாங்கமுடியாமல் மரணமடைகிறார்.
2)
அப்துல்லாவும், அம்மாரும் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள்.
3)
அப்துல்லாஹ் அபூஜஹலால் கொல்லப்படுகிறார். .
4)
பனு மக்ஸூம் கூட்டத்தாரின் சித்திரவதைகள் தாங்க முடியாமல் அம்மார் இஸ்லாத்தை
விட்டுவிடுவதாகவும், நபியவர்களை வெறுப்பதாகவும் சொல்லி அவர்களிடமிருந்து தப்பித்து
வெளியேறுகிறார்.
5)
நடந்ததை நபியவர்களிடம் சொல்லி அம்மார் அழும்போது இறக்கப்பட்ட குர்ஆன் வசனம் 16:106
(எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம்
இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதிக் கொண்டிருக்கும் நிலையில் யார்
நிர்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர)
6)
நபியவர்கள் அம்மார் மற்றும் இன்னும் சில நண்பர்களை எதியோப்பியா அரசரிடம் புகலிடம்
கேட்டு அனுப்பி வைக்கிறார்கள்.
7)
கலீபா உமர் (ரலி) காலத்தில் அம்மார் இப்ன் யாசிர் ஈராக்கின் கவர்னராக
நியமிக்கப் படுகிறார்.
8)
அம்மார் தனது 90வது வயதில் சிரியாவில் நடந்த சிஃபின் யுத்தத்தில் வீர மரணம்
அடைகிறார்கள்.
ஒரு குடும்பமே இஸ்லாத்திற்க்காக தம் இன்னுயிரை தியாகம்
செய்த வரலாறு முஸ்லீம்களால் ஒருபோதும் மறக்கமுடியாது.Thursday, June 02, 2005
முஸ்லீம்களின் சமுதாயப் பார்வை
இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக நிலை அவர்களது சமூகப் பார்வையை பொருத்தே அமைகிறது. இந்திய சமூகக் கூட்டமைப்பு என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியதே. ஆனால், முஸ்லீம்கள் இந்த கூட்டமைப்பினுள் இருக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.
இந்திய முஸ்லீம்கள் தனக்குத்தானெ ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொண்டு அதைவிட்டு வெளிவராமல் தனது இயலாமைக்குக் காரணம் மற்றவர்கள்தான் என்று குற்றம் சுமத்தி வருவதும் ஏற்புடையதல்ல. மாற்றார்களின் அரசியல் அரங்கில் எத்தனை நாளைக்குத்தான் முஸ்லீம்கள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் குருட்டுத் தனமாக வாழமுடியும். எந்த அரசும் அல்லது எந்த மாற்றார்களின் சமூகமும் முஸ்லீம்களை கைதூக்கிவிட வராது என்பதை எப்போதுதான் இந்த சமூகம் புரிந்துக் கொள்ளப்போகிறதோ தெரியவில்லை. முஸ்லீம்களின் சமூகப்பார்வை மாறாத வரை எந்த மற்றமும் வாராது. இறைவன் குரானில் சொல்வது போல் 'முஸ்லீம்கள் தானாக மாறாதவரை இறைவனும் உதவி செய்ய மாட்டான்' என்பதை முழுவதும் மறந்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
முஸ்லீம்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு தலைவனிடம் தங்களது தலைவிதியை ஒப்படைத்துவிட்டு 'எல்லாம் அந்த தலைவர் பார்த்துக் கொள்வார்' என்ற சோம்பேறித்தனமான சிந்தனையில் உழன்று கொண்டிருக்கிறோம். தலைமைக்கு கட்டுப்படுவதென்பது வேண்டியதே, அதற்காக தகுதியற்றவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுத்து அவர்களிடம் முஸ்லீம் சமுதாயத்தை அடகு வைத்துவிட்டோம். அப்படிப்பட்ட தலைவர்களும் ஆளுங்கட்சிகளிடம் புகலிடம் தேடி தங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்களே தவிர்த்து இந்த முஸ்லீம் சமுதாயத்திற்கு ஒரு சரியான சமூக அரசியல் கொள்கையை உருவாக்கியதாகவோ அல்லது கல்வி மேம்பாட்டிற்கு உழைத்ததாக தெரியவில்லை. இடைப்பட்ட காலத்தில் தோன்றிய தலமைகள் எல்லாம் குழப்பத்தில் வாழ்ந்தும் வழி காட்டிக் கொண்டும் இருக்கின்றார்களே தவிர்த்து திடமான ஒரு வாழ்வியல் திட்டத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது உருவாக்கவோ இயலாமல் இருக்கிறார்கள்.
பொதுவாகவே இந்தியாவில் முன்னேற்றம் என்பது இயற்கையாகவே ஏற்படக்கூடிய ஒரு வளர்ச்சிதானே தவிர்த்து அரசியல் தலைவர்களால் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களால் நடத்திச் செல்லப்படுவதல்ல. முன்னேற்றம் என்பது ஒரு பரிமான வளர்ச்சியே தவிர்த்து ஒரு நெறியாள்கைக்கு உட்பட்டு நடக்கக் கூடிய ஒன்றாக இதுவரை இல்லை.
ஏதோ மழை பெய்கிறது, அதில் ஏதோ முளைத்து செடியாகி, மரமாகி எதையோ கொடுக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அதை அனுபவித்துக் கொள்கின்றார்கள். இப்படித்தான் இந்த GDP வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறதே தவிர்த்து ஒன்றும் பிரமாதமான திட்டத்துடன் செயல்பட்டதாக தெரியவில்லை. அவ்வப்போது ஒரு சில அரசியல் நல்லவர்கள் அங்கங்கே கொஞ்சம் நீரூற்றி, வேலி கட்டி ஏதாவது ஒரு பாதுகாப்பை செய்துவிட்டு செல்வார்கள், அதை காலமெல்லாம் சொல்லிக் கொண்டு பின்னால் வருபவர்கள் பெருமை தேடிக் கொள்வார்கள்.
இந்த பொதுவான விதியில் கூட முஸ்லீம்கள் பின் தங்கியிருப்பது வருத்தமான நிலை. வெறும் புல் பூண்டுகளாக முளைத்து தனக்கும் பிரயோசனமில்லாமல், தன்னால் பிறருக்கும் பயனில்லாமல் வாழ்ந்துவருவது ஒரு இஸ்லாமிய வாழ்க்கையே இல்லை.
முஸ்லீம்களிடம் புரையோடிக்கிடக்கின்ற பிரச்சனைகளை பட்டியலிட்டால் இந்த சமூகம் எப்படியெல்லாம் உள்ளும் புறத்திலும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வரும். ஒரு புறத்தில் ஆளும் வர்க்கத்தின் மாற்றந்தாய் அணுகுமுறைகளும், இன்னொரு புறத்தில் தகுதியற்ற தலைவர்களிடம் அகப்பட்ட பகடைக்காய்கள் போலவும் வெறும் சுமை தாங்கிகளாக அடிமட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.
இதை நன்குணர்ந்த நல்ல மனிதர்கள் முஸ்லீம்களிடத்திலே பலர் உள்ளனர். அவர்களை வளரவிடாமல், வாய்ப்பு கொடுக்காமல் முளையிலேயே கிள்ளும் வேலைகளில் முஸ்லீம் ஆளும் வர்க்கமும், மாற்றார்களின் அரசியல் விற்பன்னர்களும் கைக்கோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.
தனக்குத்தானெ உதவி செய்துகொள்ள முடியாத ஒரு சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தின் சமூகப் பார்வை எப்படி ஒரு கூட்டமைப்பில் வாழும் சமூகப் பார்வையாக இருக்க முடியும்? இது முஸ்லீம் சமுதாயத்தின் முன்னல் இருக்கக்கூடிய முதன்மையான சவால். ஆனால் இந்த சவால்கள் வெல்லக் கூடியதே.
முஸ்லீம் தலைவர்களுக்கு சமூக அங்கீகாரம் என்பது இரண்டு விதங்களில் கிடைக்க வேண்டியிருக்கிறது. ஒன்று முஸ்லீம் சமுதாயத்தில், இன்னொன்று இந்திய கூட்டமைப்பு சமுதாயத்தில். ஒன்றில் அங்கீகாரம் இருந்தால் இன்னொன்றில் இருக்காது. இது போன்ற அவல நிலை வேறு சமுதாயத்திலலும் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இந்த இரண்டிலும் அங்கீகாரம் பெறும் தலைவர்களால்தான் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்ல வழிகாட்டுதல்கள் கொடுக்க முடியும். இந்த அவலச் சூழலுக்கு அடிப்படைக் காரணம் கல்வியை, மார்க்க கல்வி என்றும் உலகக் கல்வி என்றும் தேவையில்லாமல் பிரித்து ஒரு பெரிய பிளவையே இந்த சமுதாயத்தில் ஏற்படுத்திவிட்டார்கள். மார்க்க கல்வி கற்றவர்கள் உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் எதார்த்தமே இல்லாமல் சமூகத்தை நடத்தி செல்கிறார்கள். மறு பிரிவினர் வெறும் தொழுகை, நோன்பு என்று தனது ஆன்மீகத்தேவைகளை ஒரு கட்டுக்குள் நிறுத்திவிட்டு உலக ஆதாயங்களில் ஆழ்ந்து போய்விடுகிறார்கள். இந்த பிளவு தொடர்ந்து இருக்க வேண்டியது மாற்றார்களுக்கு அவசியமாகிவிடுகிறது. இதனாலேயே, இந்தியாவின் ஆளும் கூட்டனிகள் தேவைக்கேற்ப இந்த இரு பிரிவின் தலைவர்களையும் வைத்து பொம்மலாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த பிரிவுகளை சமாளித்து, இரண்டிலும் அங்கீகாரம் பெற்று பிறகு இந்திய கூட்டமைப்பில் மரியாதைக்குரிய இடத்தை பெற வேண்டிய கட்டாயச் சூழலில் முஸ்லீம் இளைஞர் சமுதாயம் போராடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அவ்வப்போது சமுதாயத்திற்கு தீவிரவாதம் பட்டம் கட்டி கிடைக்கும் ஒன்றிரண்டு முன்னேற்றத்தையும் அல்லது வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி நிற்கிறது இளைஞர் சமுதாயம். இப்படி சொந்த வீட்டையே சரி செய்ய இயலாமல் நிற்கும் இந்தக் கூட்டம் எப்படி இந்திய கூட்டமைப்பில் நின்று சிந்திக்கக் கூடிய மனிதர்களாக மாறுவார்கள்?
இப்படிப்பட்ட குழப்பமான சமுதாயப் பார்வைகள்தான் தற்போது முஸ்லீம்களிடத்தில் இருக்கிறது. இதை மாற்றி, ஓரளவாவது ஒரு தெளிவான பாதையில் கால் வைக்கும்போதுதான் முஸ்லீம்களின் நாடு தழுவிய சமுதாயப் பார்வையில் மாற்றம் வரும். அப்படி வந்தால்தான் முஸ்லீம்களின் வாழ்விலும் ஒரு மறுமலர்ச்சி வரும்.
இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு முஸ்லீம் இளைஞர் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது. அதற்கவர்கள் முதலில் அரசியலில் முஸ்லீம்களுக்கு என்ன அங்கீகாரம் இருக்கிறது, எத்தனை ஒதுக்கீடுகள் கிடைக்கும் என்று தனது முழு சக்தியையும் அரசியல் உயற்விற்காக வீணடிக்காமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
முஸ்லீமகளின் சமயம் சாராத சமுதாயப் பார்வைகள் அவர்களது கல்வியில் ஏற்படும் (மார்க்கம் மற்றும் உலகம்) முன்னேற்றத்தை பொருத்தே இருக்கிறது.

உலக வங்கியின் உலகம்
இன்றைக்கு இந்தியாவிலிருந்தும் இன்னும் பிற வளரும் நாடுகளிலிருந்தும் ஏராளமாக இளைஞர்கள் ஐரோப்பாவிற்கும், அமேரிக்காவிற்கும் வேலை தேடிச் செல்வதும், குடிபெயர்ந்து செல்வதும் ஒரு சாதாரண காட்சியாக இருக்கிறது. Brain Drainage என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளரும் நாடுகளின் சிறந்த மனித வளங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு குடிபெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. Brain Drainage ஒருபக்கம் நடந்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கத்தில் வளரும் நாடுகளின் பெருளாதாரமும் குடிபெயர்ந்து சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் குடிபெயருகிறதா? கேள்வி எழலாம். அதற்காக பதில்தான் இந்த உலக வங்கியின் உலகம் என்ற ஆய்வுக் கட்டுரை.
இரண்டாம் உலகப்போரில் நேர்ந்த ஐரோப்பிய நாடுகளின் சீரழிவுகளை சரி செய்ய, புனரமைக்க அமேரிக்காவும் பணக்கார ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து ஏற்படுத்திய வர்த்தக நிறுவனமான உலக வங்கி 1943ம் ஆண்டு ஹாரி டெக்ஸ்டர் ஒயிட் என்னும் அமேரிக்கா பொருளாதார வல்லுநர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. அது மட்டுமால்லாமல் IMF என்ற சர்வதேச நிதி கண்கானிப்பு அமைப்பையும் அவர்தான் உருவாக்க காரணமாக இருந்தார்.
இந்த உலக வங்கியில் அதிகமான முதலீடு செய்து அதன் தலைமைப் பொறுப்பை தக்க வைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் அதில் அதிக ஓட்டுரிமையையும் பெற்றுக் கொண்டதன் மூலம் அமேரிக்கா உலகப் பொருளாதாரத்தை ஆள்வதற்கான அடிப்படையை அமைத்துக் கொண்டது.
உலக வங்கி என்றதும் அது ஏதோ உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அமைத்த ஒரு நிதி வங்கி என்றும் அது ஏழை நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்படும் ஒரு நிறுவனம் என்ற எண்ணமும் தோன்றும். ஒரு சில மாதங்களுக்கு முன்பாக பால் ஓல்பிட்ச் எனும் அமேரிக்கரை தலைவராக நியமித்தபோது ஊடகங்களிலும், ஒரு சில நாடுகளிலும் இவரை ஏன் நியமிக்கிறார்கள் என்று கூப்பாடு போடப்பட்டது.
ஒரு நிறுவனத்தின் முதலாளி யாரை வேண்டுமானலும் அந்த நிறுவனத்தின் மேலாளராக நியமிக்க உரிமை இருக்கும்போது எதற்கு இந்த தேவையற்ற அதிருப்திகள் என்று எனக்குத் தோன்றியது. அப்போதுதான் புரிந்தது இந்த உலக வங்கியைப் பற்றிய ஏழை நாடுகளிடம் இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகள் என்னவென்று. ஏழை நாடுகளின் எதிர்பார்ப்புகள் நியாயம்தான் என்றாலும், உலகப் பொருளாதரத்தை சுரண்டும் நோக்குடன் செயல்படும் உலக வங்கியின் கொள்கைகளை யாரலும் மாற்ற முடியாது என்பதே உண்மை.
அமேரிக்க டாலரின் உலக ஆளுமை ஏற்படுவதற்கு அடிகோலியவர் இந்த ஒயிட் என்பவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் இந்த உலக வங்கி அமேரிக்காவின் கையில் இருக்கக் கூடிய ஒரு குரூர கருவியாக மாறிவிடும் என்று யாரும் ஒருபோதும் நினைத்ததில்லை.
நிறைய பேர் இந்த உலக வங்கி என்பது பிரிட்டனின் பொருளாதார வல்லுநர் ஜான் மைனர்ட் கெய்னஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது என்ற தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இந்த உலக வங்கியின் அமைப்பிற்கு அதிகம் எதிர்ப்பு தெரிவித்தவர்களில் இவரும் ஒருவர் என்பதையும் இங்கே தெரிந்துக் கொள்வது நல்லது.
ஐரோப்பாவின் கட்டுமானப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கி, காலப்போக்கில் இந்த வங்கியின் பங்குதாரர்களுக்கு லாபம் ஈட்டும் கருவியாக மாறிப்போனது. 1950ல் மார்ஷல் பிளேன் என்ற திட்டத்தின் மூலமாக இந்த உலக வங்கியின் பார்வை, அதாவது முதலீடுகள் வளரும் நாடுகளின் பக்கம் திரும்பியது. இனி ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்ய ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டவுடன் உலக வங்கியில் குவிந்துக் கிடக்கும் பணத்தை வைத்து எப்படி பணம் செய்வது என்ற முயற்சியினால் உருவானதுதான் இந்த மார்ஷல் பிளேன்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் அமேரிக்காவினால் அதிகம் நேசிக்கப்பட்ட மெக்னமார என்ற முன்னாள் உலக வங்கித் தலைவர். உலக வங்கியின் முதலீடுகளில் பெரும்பகுதியை அணைகள் கட்டவும், சாலைகள் போடவும் இன்னும் விமான நிலையங்கள் நிர்மானிக்கும் பணிகளுக்கு மாற்றிய பெருமை இவரையேச் சேரும். சுகாதார, கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான முதலீடுகளை நிறுத்தியதும் இவர்தான்.
நில சீர்திருத்தம், நிலப் பங்கீடு போன்ற முதலீடுகளால் உலக வங்கிக்கு லாபம் கிடைக்காது என்றதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட முதலீடுகளால் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வரும் மேட்டுக்குடி சமூகத்தின் அதிகாரத்தை பாழ்படுத்தும் என்று வழக்காடியவர் இந்த மெக்னமாரதான். அதற்கு பதிலாக புதிய நிலங்களை உருவாக்க வேண்டும் அதற்கு ஒரே வழி இருக்கின்ற காடுகளை அழிப்பதும், ஈர நிலங்களை வற்ற வைப்பதுமான பல்வேறு நாசகர வேலைகளுக்கு தூபம் இட்டவரும் இவர்தான்.
இந்தோனேஷியாவிலும் அமஜோன் காடுகளிலும் அழிக்கப்பட்ட மனித உயிர்கள் எல்லாம் இந்த உலக வங்கியின் நயவஞ்சக முதலீடுகளினால்தான்.
எந்தெந்த ஏழை நாடுகளில் இந்த உலக வங்கி முதலீடு செய்ததோ அந்த நாடுகள் எல்லாம் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு கடன்சுமையிலும், ஏழ்மையிலும் உழன்று கொண்டிருக்கின்றன. உலகவங்கியின் முதலீட்டிற்கு தடங்களாக இருக்கும் நாடுகளில் ஆட்சிமாற்றம் செய்து அமேரிக்காவின் எடுபிடிகளை சர்வாதிகார ஆட்சியாளாராக அமர்த்தி தனது முதலீடுகளில் லாபம் ஈட்டிக் கொண்டது. உதாரணம் இந்தோனேஷியாவன் சுகார்தோ.
பால் வோல்பிட்ச் தலைவராக நியமிக்கப்பட்ட அன்று உலக வங்கி லாவோஸ் நாட்டில் அணை கட்டுவதற்கு முதலீடு செய்ய முடிவெடுத்தது. அதன் மூலம் 6000க்கு மேற்பட்ட மக்கள் தனது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்கள். 120,000 மேற்பட்ட கால்நடைகள் அழிய இருக்கிறது. அந்த நாட்டின் ecosystem அழிய இருக்கிறது. இவை அனைத்தும் மின்சாரம் தயாரிப்பதற்காகவும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மின்சாரம் லாவொஸ் நாட்டிற்கு அல்ல. பக்கத்தில் இருக்கக் கூடிய தாய்லாந்து நாட்டிற்காக.
இந்த உலக வங்கியின் கோரத்தாண்டவத்தினால், அநியாயமான முதலீட்டினால் என்னென்ன கொடுமைகள் ஏற்பட்டுள்ளன என்பதை பட்டியலிட்டால் இந்தக் கட்டுரையில் எழுத முடியாது. ஜாம்பியா நாட்டில் மூடப்பட்ட பள்ளிக்கூடங்களும் அரசாங்கத்தை பணிய வைத்து அந்த நாட்டில் மக்களுக்கு கிடைத்து வந்த சுகாதார சலுகைகளை எல்லாம் நிறுத்திய பெருமை இந்த உலக வங்கிக்குத்தான் சேரும். அந்த நாட்டு மக்களின் life expentancy 54 லிருந்து 40 ஆக குறைந்தது எத்தனை பேருக்கு வருத்தத்தை அளித்தது, அல்லது எத்தனை பேருக்குத் தெரியும். இதில் இந்த உலக வங்கியின் பங்கு கனிசமானது.
பொலிவியா நாட்டின் முக்கியமான விவசாயத் தொழிலான கொக்கோவா பயிர்களை 'war on drugs' என்ற பெயரில் அதை அழித்து 5 மில்லியன் பொலிவியா ஏழை விவசாயிகளை இன்னும் மோசமாக வாழ்க்கை நிலைக்கு பின் தள்ளியது இந்த உலக வங்கிதான். அத்தோடு இல்லாமல் பொலிவியாவின் குடிநீர் வளங்களை அமேரிக்காவின் பெக்தல் நிறுவனத்திற்கு விற்க வைத்ததும் இந்த உலக வங்கியே. பெக்தல் நிறுவனம் பொலிவியாவின் குடிநீர் விநியோகத்தை கையில் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 200% விலையைக் கூட்டியது. எத்தனையோ குழந்தைகள் நல்ல குடிநீர் கிடைக்காமல் அந்த நாட்டில் திண்டாட பெக்தல் போன்ற கம்பேனிகள் வரிச்சலுகையை அனுபவித்து வந்தன. பன்னாட்டு நிறுவனங்கள் பொலிவியாவில் உள்நாட்டு நிறுவனங்களைவிட 50% குறைவாகவே வரிகள் செலுத்தி வருகின்றன. (பொறுத்தது போதும் பொங்கி எழு மக்களே என்று அந்நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் பெயரில் ஆர்பாட்டத்தில் இறங்க அந்நாட்டு ஜனாதிபதி கரோலஸ் மெசா ராஜினாம செய்ய நேர்ந்தது இன்னொரு கதை).
தற்போதைய உலக வங்கியின் முதலீடுகளில் 94% ஆயில் மற்றும் நிலக் கனிமங்களில்தான் செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான முதலீடுகளின் மூலமாக 82% ஆயில் மற்றும் நில கனிமங்கள் ஐரோப்பிய மற்றும் அமேரிக்கா நாடுகளுக்கு நேரடியாக கொண்டு செல்லப்படுகிறது.
எப்படி கிழக்கிந்திய கம்பேனி இந்தியாவின் நில வளங்களை சுரண்டி பிரிட்டனை வளப்படுத்தியதோ அதே போன்று இப்போது உலக வங்கியும், IMF ம் ஏனைய உலக நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டி அமேரிக்கவையும் ஐரோப்பாவையும் வளப்படுத்தி வருகின்றது.
நாமும் கொஞ்சம் கொஞ்சமாக நமது வளங்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களிடமே கூலி வேலை செய்ய விசா கேட்டு அந்நாட்டு தூதரங்களில் காத்துக் கிடக்கிறோம்.

Wednesday, June 01, 2005
உரிமையே உன் நிலை என்ன?
'எனது சுதந்திரம் என் மூக்கின் நுனிவரைதான்' என்ற தனி மனித உரிமைக்கான விளக்கம் தற்போது தடம் மாறி, தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் நான் எது வேண்டுமானலும் செய்வேன் அது எனது உரிமை என்று ஒழுக்க மீறல்களும், வரம்பு மீறல்களும் மற்றும் உரிமை மீறல்களும் இன்று பரவலாக நடைபெற்று வருகின்றன.
உரிமைக்காக போராடிய காலம் போய், கிடைத்த உரிமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய காலமும் முடிந்து தற்போது உரிமை மீறல்களிலிருந்து தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற கால கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
உரிமையை செயல்படுத்தத்தான் சுதந்திரமே தவிர்த்து, சுதந்திரத்திற்கு புது அர்த்தங்கள் கண்டு பிடித்து தனிப்பட்ட, அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய அரங்குகளில் அதை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலை சுதந்திரம் என்ற பெயரால் செய்யப்படும் உரிமை மீறல்கள். உரிமை மீறல்கள் காலப்போக்கில் வரம்பு மீறுவதில் தவறில்லை என்ற மனோநிலையை தோற்றுவித்து அதை தொடர்ந்து ஒழுக்க மீறல்கள்களில் போய் நின்று விடுகின்றது.
தனிமனித உரிமை மீறல்கள், ஒரு கூட்டாக மாறும்போது அது ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தின் மீது தொடுக்கும் அடக்குமுறைகளாகவோ அல்லது அநீதமாகவோ மாறிவிடுகின்றது. ஒரு புறத்தில் ஒரு சாரார் உரிமையற்றவர்களாகவும், இன்னொரு புறம் மறு சாரார் அளவுக்கதிகமான உரிமைகள் பெற்றவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். வளர்ந்து வரும் நாடுகள், அதிலும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் உரிமைகள் குறைவாகவும் அல்லது இல்லாததாகவும் இருப்பதைப் பார்க்கிறோம். உலகின் இன்னொரு பக்கமான ஐரோப்பிய அமேரிக்க நாடுகளில் உரிமைகள் என்ற பெயரில் சுதந்திர சுரண்டல்கள் எல்லா நிலைகளிலும் நடந்து வருகின்றது.
மதங்களின் பெயர் சொல்லி மக்களின் நியாயமான உரிமைகளை தட்டிப் பறிக்கும் ஒரு கூட்டம் மத போதனைகள் என்ற பெயரில் தனது மன போதனைகளை விற்றுக் கொண்டிருக்கிறது. இன்னொரு கூட்டமோ மதமாவது, பூதமாவது என்று கடவுள் கொள்கைகளை கடை நிலைக் கொள்கைகளாக மாற்றி வைத்துவிட்டு சுதந்திரம் என்ற பெயரால் அபரிதமான உரிமை மீறல்களை நிகழ்த்தி வருகிறது. இரண்டுமே எதிர் எதிர் முனைகளில் உலகத்தை இழுத்துக் கொண்டிருக்கின்றன. மதங்களின் பெயர் சொல்லி அதை ஒரு சுமையாக மனிதர்களின் மேல் சுமத்திவிட்டு வேடிக்கைப் பார்க்கும் அதே தருணத்தில் உரிமைக்கும் ஒழுக்க மீறலுக்கும் வேறுபாடு இல்லாமல் உலகை சின்ன பின்னா படுத்தும் இரு கலாச்சார முற்றுகைகள்தான் இன்றைக்கு உலகை எதிர் நோக்கி இருக்கும் இரு பெரும் பிரச்சனைகள்.
மதத்தின் பெயர் சொல்லி மனித வெடிகுண்டுகளையும், சுதந்திரத்தின் பெயர் சொல்லி விமான ஏவுகனைகளையும் கொண்டு அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள். இரண்டிற்கும் இடையிலே அனாதையாக செத்து மடிகிறது 'தனி மனித உரிமைகள்'. இரண்டு கூட்டங்களும் பயன் படுத்தும் நூதன முறைகள் இறுதியாக சித்திரவதைகளை outsource செய்யக்கூடிய அளவிற்கு தனது தேவைகளை globalization வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றன.
இந்த போரட்டத்தில் அதிகதிமாக பாதிக்கப்படுவது பெண்னினம் மட்டுமே. பெண்களின் நிலையை அந்த பெண் வர்க்கங்கள் கூட சரியாக புரிந்து வைத்திருகிறார்களா என்றால் அதுவும் சந்தேகமே!
பெண்கள் இரண்டு விதத்திலும் அதாவது மேலே சொல்லப்பட்ட இரண்டு கூட்டத்தினராலும் ஏமாற்றப்படுகிறார்கள். அதாவது 'காலாச்சாரத் தூண்கள்' என்று ஆண்களுக்கு பிடிக்காத அல்லது ஆண்களால் சுமக்க இயலாத அத்தனை சுமைகளையும் மதம், இனம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் பெயரால் பெண்களின் மேல் சுமத்திவிட்டு ஆண் வர்க்கங்கள் மகிழ்ச்சியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கூட்டமோ பெண் சுதந்திரம் என்ற பெயரில் அவர்களது ஆடைகளுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு அவர்களது பலவீனங்களை சந்தைகளில் விற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் ஆடைக் குறைப்பைப் பொறுத்து அந்த பெண்ணுடைய சுதந்திரத்தன்மையை எடை போடும் அளவிற்கு சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது.
பெண்கள் எல்லா நிலைகளிலும் வஞ்சிக்கப் படுகிறார்கள். குறிப்பாக முஸ்லீம் பெண்கள். அவர்களுக்கு உரிமைகளும் கிடையாது, அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் அதை அனுபவிக்கும் சுதந்திரமும் கிடையாது. 1400 வருடங்களுக்கு முன்பே, உலகின் எல்லா பாகங்களிலும், பெண்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களா என்று ஆரய்ச்சி செய்து கொண்டிருந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு உரிமையளித்து அவர்களுக்கு சமுதாயத்தில் உன்னத நிலை அளித்தது நாங்கள்தான் என்று முஸ்லீம்கள் மார் தட்டிக் கொண்டால் மட்டும் போதாது. பெண்களின் உரிமைகள் எவ்வாறு இருக்க வேண்டும், அவர்களின் சமுதாயப் பங்களிப்பு பிற சமுதாயத்திற்கு எப்படி உதாரணமாக இருக்க வேண்டும் என்று முன்னிலையில் இருக்க வேண்டிய இந்த முஸ்லீம் சமுதாயம் கடந்த போன வரலாற்றை பெருமையாக பேசி இன்னும் பாதாளத்தில்தான் வாசம் செய்து கொண்டிருக்கிறது. நபிகாளாரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபிகளாரின் தோழர்கள் கூட சென்று மத, மார்க்க சம்பந்தமான ஆலோசனைகள் கேட்டிருக்கிறார்கள். இன்றைக்கு எத்தனை முஸ்லீம் பெண் அறிஞர்கள் இந்த முஸ்லீம் சமுதாயத்தில் உருவாகி இருக்கின்றார்கள்?
எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், பொதுவாகவே பெண்களின் நூற்றாண்டு கால அடக்கு முறைகளுக்கு மிகப் பெரும் காரணம், ஆண்களின் இயற்கையான 'ஆளுமை சக்தியும்' அதை தனது சுய நலத்திற்கு மட்டும் பயன்படுத்தும் குரூர மனப்பான்மையுமே.
பெண்களின் உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் பெண்கள் ஒரு தவறான அளவுகோலை பயன்படுத்தி வருகிறர்கள். அந்த அளவுகோல், ஆண்களுடன் தன்னை 'ஒப்பீடு' செய்வதே. ஆண்கள் செய்வதை தாங்களும் செய்வதுதான் உரிமைக்கும் சுதந்திரத்திற்குக் அடையாளம் என்ற தவறான ஒப்பீட்டு முறையே. பெண்கள் ஆண்கள் செய்யக் கூடியதை தானும் சாதிக்கும்போது அத்துடன் தனது லட்சியம் பூர்த்தியடைந்ததுபோல் தனது வளர்ச்சியை அல்லது சிந்தனை வளர்ச்சியை அத்தோடு நிறுத்திக் கொள்கிறார்கள். பெண்களும் ஆண்களும் இறவன் முன்னால் சமமானவர்களே! இன்னும் சொல்லப் போனால் தாயின் காலடியில்தான் சொர்க்கம் நபிகளார் உள்ளடக்கி எத்தனையோ பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். யாரும் தந்தையின் காலடியில் சொர்க்கம் இருப்பதாக சொல்லியதில்லை. ஆனால் பெண்கள் இயற்கையிலேயே தங்களிடம் உள்ள பொறுமை மற்றும் மன்னிக்கும் தன்மையை தங்களை அடக்கி ஆண்டு கொண்டிருக்கும் ஆண்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தி வருகிறார்களே தவிர்த்து அவ்விரு குணங்களால், ஆண்களின் ஆளுமை சக்தியை தோற்கடிக்க முடியும் என்று செயல்படுத்தியதில்லை. அங்கங்கே ஏதாவது ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.
பெண்கள் இரண்டு கூட்டத்திலிருந்தும் விடுபட்டாக வேண்டும். அதற்கு மிக முக்கியமானது அவர்களின் மன நிலையில் மாற்றம் வேண்டும். வெறும் cat walk செய்வதிலும், பேஷன் மாடல்களிலும், அடுப்பறையில் வெந்து புழுகுவதிலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. இரு கூட்டத்திலும் அகப்பட்டு திண்டாடும் மனித சமுதாயத்தை மாற்றவல்ல அடிப்படை காரனிகள் இந்த பெண்களே. அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களில் ஆண்களின் ஆளுமை சக்திக்கு தன்னை அடகு வைத்துவிடாமல், பொறுமையையும், மன்னிப்பையும் நேர்மறையாக பயன் படுத்தினால் தன்னை மட்டுமல்லாமல், ஆண் வர்க்கத்தையும் மாற்றிவிடலாம். இல்லையெனில் இன்றைய குரூர போராட்டத்தில் ஆண்கள் முதல் பலியாக பயன்படுத்தப் போவதும் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பெண்களையே.
உரிமைகளை வெல்ல பெண்களை விலையாக கொடுக்க வேண்டுமெனில் அப்படிப்பட்ட உரிமைகள் இந்த ஆண் சமுதாயத்திற்கு அவசியமா?

Tuesday, May 31, 2005
ஏன் & எப்படி
மழைக்காலத்தின் மெல்லிய தூறல்கள் சிந்தும் கருத்த ஒரு காலைப் பொழுதில் ஒரு சிறுவன் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, "அப்பா, மழை ஏன் பொழிகிறது?" என்று ஆவலுடன் கேட்டான். சில்லென்று சிதறி விழும் மழைத் துளிகளை கையில் பிடிக்க முயற்சித்தவாறு தந்தை பதில் சொல்லத் தொடங்கினார்.
"மகனே, கடலிலும், ஆறுகளிலும், ஏரிகளிலும் தேங்கி நிற்கும் தண்ணீர் சூரியனின் வெப்பத்தில் ஆவியாகி, பின்னர் மேகங்களாகி வானிலே அங்கங்கே முற்றுகை இட்டு வைக்கப்பட்டுள்ளது, பின்னர் அந்த மேகங்கள் கரைந்து, மழையாக மாறி பூமிக்கு திரும்பவும் வந்து சேருகிறது.. இதுதான் மழை மற்றும் இந்த சுழலுக்குப் பெயர்தான்.. வாட்டர் சைக்கிள் என்பது" என்று விளக்கமளிக்கவே, சிறுவன் வானத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்த்து ஆச்சர்யப்பட்டான்.
"சரி அப்பா, இடியும் மின்னலும் ஏன் வருகிறது?" என்று வினா எழுப்பவே, தந்தைக்கு சொல்ல முடியாத ஆனந்தம். மகன் எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறான் பார்... என்று. "மகனே! மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதால் இடியும் அதிலிருந்து உருவாகும் எலக்ரோ மேக்னடிக் அலைகளால் மின்னலும் உருவாகின்றன" என்று அறிவியல் கண்டுபிடிப்புகளை எடுத்துச் சொல்ல மகனுக்கு தன் தந்தை எல்லாம் தெரிந்தவர் என்று பெருமையுடன் பார்த்தான்.
அழகான கேள்விகள், பதில்களும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இந்த பதில்கள் அந்த சிறுவன் கேட்டக் கேள்விகளுக்கான சரியான பதில்களா?
சிறுவன் எல்லாவற்றையும் ஏன் வருகிறது என்று கேட்டான். தந்தையோ எல்லாவற்றிற்கும் எப்படி வருகிறது என்று பதில் சொன்னார். இது நம் வாழ்வில் அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்வுகள்.
ஏன் என்ற கேள்விக்கு எப்படி என்ற பதில்கள்.
அறிவியல் எத்தனையோ விஷயங்களை நமக்கு தெளிவுபடுத்தியிருக்கிறது. பல புரியாத விந்தகைளை நமக்கு புரிய வைத்திருக்கிறது. ஏன் என்றும், எப்படி என்றும் பல்வேறு தெளிவுகளை அளித்துள்ளது. ஆனால் அறிவியல் "ஏன்" என்ற எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துள்ளதா?
பூகம்பம் ஏன் வந்தது / வருகிறது என்று யாராவது சொல்வார்களா? யாரும் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஏன் வருகிறது என்ற கேள்விக்கு எப்படி வருகிறது என்று பதில் சொல்வார்கள். பர்மா பிளெட் மேலெ வந்து இந்திய பிளேட் கீழே போனாதால் சுமத்ராவில் பூகம்பம் உண்டாகி அதானால் சுனாமி வந்தது என்று நிகழ்ந்ததை நமக்கு சொல்லிக் காட்டுவார்கள். அதைக் கேட்டுவிட்டு நமது உண்மையான கேள்வியை நாமே மறந்துவிட்டு தலையை ஆட்டிக் கொண்டு சென்று விடுவோம்.
மழை ஏன் வருகிறது என்று யாரவது சொல்வார்களா? எப்படி வருகிறது என்று சொல்வதைத்தான் ஏன் வருகிறது என்பதற்கு பதிலாக எடுத்துக் கொள்கிறோம்.
நாம் எல்லோரும் "ஏன்" என்ற கேள்விக்கு "எப்படி" என்ற பதிலைக் கேட்டு கேட்டு ஏன் என்ற கேள்விக்கு எப்படி என்ற பதிலில் சமாதானம் அடைந்துவிடுவது வழக்காமாகிவிட்டது, பழகியும் விட்டது. நம்மில் எத்தனை பேர் ஏன் என்ற கேள்விக்கு எப்படி என்ற பதில் கிடைக்கும்போது.. அய்யா போதும் நிறுத்து நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் சொல் என்று கேட்கிறோம்.
எத்தனையோ கேள்விகளுக்கு நமக்கு சரியான பதில்கள் கிடைப்பதில்லை. என்றாலும் கிடைத்த பதிலை வைத்துக் கொண்டு சமாதானமடைந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதன் மூலம் நமது சிந்தனைகளும் அதன் விதமும் வெகுவாக பாதிக்கப்படுவது பெரும்பாலான நேரங்களில் நமக்குத் தெரிவதேயில்லை. இந்த மனித பலவீனத்தைப் பயன்படுத்தி வளர்ந்தவிட்ட வர்க்கங்கள் வளரும் வர்க்கத்தை அடக்கி வைத்திருப்பதும் பலருக்குத் தெரிவதில்லை. இந்த சிந்தனை, அதாவது ஏன் என்ற கேள்விக்கு எப்படி என்ற பதில் சொல்லி மக்களை வாயடைத்து வைத்திருக்கும் கலையை தற்போது ஊடகங்களிலும் அதிகமாக பார்க்கலாம். ஊடகங்கள் ஒரு காலத்தில் இதை உடைத்தெரிய முற்பட்டன என்பது உண்மையே. ஆனால் போகப் போக ஆளும் வர்க்கத்தின், அதிகாரக் கூட்டங்களின் கைகளுக்குள் தங்களை முடக்கிக் கொண்டு இந்த "எப்படி" என்ற பதிலைக் கொண்டு சாமனிய மனிதர்களை சமாதனப் படுத்தி வருகிறது. எதையோ கேட்கப் போய் எதற்கோ பதில் கிடைத்து பிறகு நாமும் குழம்பிப் போய், சரி விட்டுத் தொலை என்று மறந்துவிட்டு அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்துவதென்பது நமக்கு பழக்கமாகிவிட்டது.
முன்பெல்லாம் மருத்துவரிடத்தில் சென்றால், வியாதி இதனால்தான் உண்டானது, இனிமேல் கவனமாக இருந்து கொள் என்று ஒரு லெக்ட்சரே கொடுத்துவிடுவார், நாமும் அதை கவனமாகக் கொண்டு செயல்படுவோம். ஆனால் இப்போதெல்லாம் மருந்துகளை சாப்பிடு சரியாகிவிடும் என்று இருக்கிற பார்மசியை நம் தலைமேல் சுமத்தி அனுப்பிவிடுவார்கள், நாமும் சரியாகிவிடும் என்று வந்துவிடுவோம். அட நோயாளிதான் கேட்கவில்லை, நாமவது சொல்லி அனுப்பிவைப்போமே என்றெல்லாம் நினைக்கும் மருத்துவர்கள் குறைந்துவிட்டார்கள். என்ன காரணம்? வியாபார நோக்கம் என்பது வாழ்வில் எல்லா நிலைகளிலும் ஊடுருவிக் கொண்டதுதான் காரணம். அதே காரணம்தான் இந்த ஏன் & எப்படி என்ற விதிக் குழப்பங்களும் அதைப் பயன்படுத்தி நமது சிந்தனைகளை திசை திருப்புவதும். We are conditioned to accept the answers of "how" instead of "why".
ஏன் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் போகலாம், அதில் தவறில்லை. ஆனால் அதற்கு எப்படி என்ற பதிலை சொல்லும்போது தவறான செய்திகள் மனிதர்களை சென்றடைவதும் அதன் மூலம் பல பிரச்சனைகள் உருவாகுவதும் இயல்பாகிவிட்டது.
பகுத்தறிவு என்பது எல்லா விஷயங்களிலும் சாத்தியமல்ல என்ற உண்மையை எத்தனை பேர் ஏற்றுக் கொள்கிறார்கள்? பகுத்தறிவு என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றுவிடுகிறது. உதாரணத்திற்கு மனிதன் ஏன் பிறக்கிறான்? என்ற கேள்விக்கு ஆண் பெண் விந்துக்கள் ஒன்றாக சேரும்போது உருவாகிற கருத்தோற்றத்தினால் பிறக்கிறான் என்ற "எவ்வாறு பிறக்கிறான்" விளக்கத்தைத்தான் பகுத்தறிவு கொடுக்கிறதெ தவிர்த்து ஏன் பிறக்கிறான் என்று பகுத்தறிவு விளக்குவதில்லை.
ஏன் இந்த செயற்கை ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. இந்த சேர்க்கை யாரால் நிர்ணயிக்கப் பட்டது அல்லது நிர்ணயிக்கப் படுகிறது, இது ஏன் காலம் காலமாக நடந்து வருகிறது, யார் எழுதியது இந்த அழியா "நிரலியை". இந்த நிரலி ஏன் (எப்படி) வெறும் சாதாரண இரு விந்துக்களிலிருந்து தொடர்ந்து "transfer" ஆகிக் கொண்டிருக்கிறது. மனித உடலில் உள்ள குரோமோசோம்ஸ் எனப்படும் இந்த நுண்ணிய செல் வகைகள் ஏன் (எப்படி) இந்த மனித பழக்க வழக்கங்களை சுமந்து செல்கிறது என்ற கெள்விகள் எல்லாம் புதிராகவே இருக்கிறது.
நானும் எத்தனையோ மனிதர்களைப் போல் "நான் ஏன் பிறந்தேன்" என்ற கேள்வியுடன் தான் வாழ்க்கையின் அர்த்தம் தேடி அலைந்தேன். அதைத் தேடும் படலத்தின் ஒரு பாகமாக பல்வேறு வேத நூல்களையும், தத்துவ விளக்கங்களையும் அறிய முற்பட்டபோது, என் கண்ணில் தென்பட்டது மனிதன் எவ்வாறு பிறந்தான் என்று சொல்லும் குரானின் வாசகங்கள். மனித உருவாக்கத்தைப் பற்றி இறைவன் சொல்லும்போது, இவ்வாறு கூறுகின்றான்.
நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம்; பின்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசத்துண்டாக படைத்தோம்; பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம்; பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர், நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம்; (அல் மு·மினூன் 12-14, அல் குரான்).
மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்று அல்லாஹ் தான் வழங்கிய வேதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடுவது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அறிவியலுடன் அழகாக ஒத்துப் போகும் இந்த வசனங்களில் நான் ஆச்சர்யப்பட்டாலும், எனது கேள்வி ஏன் படைக்கப்பட்டான் என்பதனால், அதற்கான விளக்கம் தேடி எனது பயணம் தொடர்ந்தது. அதே வேதத்தில் மனிதன் ஏன் படைக்கப்பட்டான் என்பதையும் குறிப்பிடுகின்றான். குரானை விளங்கிப் படித்தவர்களுக்கு அது புரியலாம்.
உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், ஜீவியத்தையும் அவன் படைத்திருக்கின்றான். (அல் முல்க், வசனம் 2, அல் குரான்)
இந்த இரண்டு வரி வசனங்கள் மனிதர்கள் ஏன் படைக்கப்பட்டார்கள் என்பதை சாதரணமாக சொல்லிவிட்டது. வேறு பல வேதப் புத்தகங்களிலும் இப்படிப்பட்ட கருத்துக்கள் நிறைந்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் இதில் புதைந்துக் கிடக்கும் தத்துவ விளக்கங்களை, உண்மையின் தேடல்களை அனுபவத்தில்தான் புரிந்துக் கொள்ளமுடியும் என்பதை விளங்கிக் கொள்ள எனக்கு பல காலம் பிடித்தது.
ஏன், எப்படி என்ற கேள்விகளுக்கு எல்லா நேரங்களிலும் பதில் இல்லை என்றாலும், ஏன் என்ற கேள்விக்கு எப்படி என்ற பதிலைக் கேட்டு சமாதானம் ஆகாமல் ஏன் என்ற கேள்விக்கான விடை தேட முற்பட்டோமானால் பல தெளிவுகள் நமக்கு கிடைக்கும். அதைத்தான் இறைவனும் விரும்புகிறான். "சிந்திக்க மாட்டீர்களா" என்று மனித வர்க்கத்தைப் பார்த்து இறைவன் கேட்பதும் இதைத்தான்.
அறிவியலின் "எவ்வாறு" என்ற விளக்கமும் ஆன்மீகத்தின் "ஏன்" என்ற தத்துவார்த்த வினாக்களும்தான் இந்த உலகை இயக்கிச் செல்லும் அறிவுக் காரணிகள். இதைச் வயிற்றுப் பிழைப்புக்காக பயன்படுத்தும் போதுதான் அதனுடைய நோக்கம் மாசுபட்டு தேவையில்லாத குழப்பங்களெல்லாம் உருவாகின்றன.
இந்தக் குழப்பங்களை தீர்க்க வேண்டுமெனில் சிந்தனைகளில் மாற்றம் வர வேண்டும். அந்த சிந்தனை மாற்றங்கள் வராதவரை சீர்திருத்தங்கள் எதுவும் நிகழாது. எல்லாம் வெறும் வெற்றுக் காகிதங்களும் வார்த்தைகளுமாகத்தான் இருக்கும்.
Mere acquirement of knowledge is not the end. People often satisfied with acquirement of knowledge only and very few of them apply in their practical life. Application of mind (knowledge) is the key to understand the world.

Sunday, May 29, 2005
நான் யார்?
இலக்கணத்தில் உலகமைத்து
இலக்கியத்தில் மறையளித்த
இறைவனுக்கே எல்லா புகழும்
தமிழ்மணத்தின் தாரகைககள் மத்தியிலே
இன்று நான் இவ்வார நட்சத்திரம்.
நான் யார் என்ற கேள்விக்கு
இப்படியும் ஒரு பதில் உண்டோ?
தாயின் கைகளில் தவழ்ந்த போது
என்னை நான் யார் என்று கேட்டதில்லை
தந்தையின் விரல் பிடித்து நடை பயின்றபோது
என்னை நான் யார் என்று கேட்டதில்லை
ஆசிரியன் அறிவுப் பட்டறையில்
என்னை நான் யார் என்று கேட்டதில்லை
மங்கையின் விழி மின்னல்களில்
என்னை நான் யார் என்று தேடினேன்
மாந்தர்களின் மதி இன்னல்களில்
என்னை நான் யார் என்று தேடினேன்
உண்மையில் நான் யார்?
விழுதுகளை சுற்றிவந்த நான்
வீணே அதை மரம் என்றெண்ணி
ஆணி வேர்களைத் தேடி
மண்ணுக்குள் என்னை மறந்துவிட்டேன்
உச்சிவான் கூரைக்குள்ளே
உறைந்து நிற்கும் மேக விளிம்புகளில் நின்று
உலகைப் பார்க்க எண்ணி
கற்பனைக்குள் என்னை கறைத்துவிட்டேன்
இளமையின் சலனத்தில்
இருளின் மையத்தில்
விடியாத பொழுதைத் தேடி
விளக்குகளின் திரியைத் தீர்த்துவிட்டேன்
உண்மையில் நான் யார்?
விடியலைப் பார்த்துக் கேட்டேன்
விதியின் விளையாட்டில் விளைந்த
வித்தகன் நீ என்றது
ஓலியைப் பார்த்துக் கேட்டேன்
ஓங்கார நாதம் கமழும்
ஓலியின் ஓர் அங்கம் என்றது
கவியைப் பார்த்துக் கேட்டேன்
கலைஞனின் பட்டறையில் வார்த்த
ஒர்கவிதையின் சிதறல் என்றது
ஓளியைப் பார்த்துக் கேட்டேன்
ஓரிறை அரசாட்சியின்
நாடகப் பாத்திரம் என்றது
உண்மையில் நான் யார்?
உன்னிலிருந்து உன்னைத் தேடு
என்றான் என் நண்பன்
என்னிலிருந்தும் என்னை வழிகாட்டும்
என் இறைவனிடம் தேடுகின்றேன்
என்னைச் சுற்றி நிற்கும் ஒளியில் தேடுகின்றேன்
என்னை மறைக்கத் துடிக்கும் இருளில் தேடுகின்றேன்
என்னால் பிறர் சிரிப்பதில் என்னைத் தேடுகின்றேன்
என் அழுகையில் என்னைத் தேடுகின்றேன்
என் அனைப்பில் மயங்கும் மங்கையில் தேடுகின்றேன்
என் கைப்பிடித்து நடக்கும் என் மழலையில் தேடுகின்றேன்
என் தோள் தொட்டு நடக்கும் என் நண்பணிடம் தேடுகின்றேன்
என்னை மறந்து என்னைத் தேடுகின்றேன்
தேடுகின்றேன், மரணம் என்னைத் தேடும் வரை.

Subscribe to:
Posts (Atom)